Please Login to view full dashboard.

போக்குவரத்து

Author : Admin

21  
Topic updated on 02/14/2019 08:53am

போக்குவரத்து (TRANSPORTATION)Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நேரம் , தூரம் , செலவு என்பவற்றின் அடிப்படையில் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு பண்டங்களும் பயணிகளும் எடுத்து செல்லப்படுகின்ற செயற்பாடு போக்குவரத்து ஆகும்.

போக்குவரத்து அடிப்படைகள்

1. மார்க்கம்/வழி –  போக்குவரத்தானது மேற்கொள்ளப்படுகின்ற மார்க்கத்தினை அடிப்படையாய் கொண்டு பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.

  •  தரைப்போக்குவரத்து (வீதிப் போக்குவரத்து, புகையிரதப் போக்குவரத்து)
  •  கடல் போக்குவரத்து
  •  ஆகாயப் போக்குவரத்து

2. ஊடகம் /சாதனம் –  போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகின்ற ஊடகங்கள்

முறையே வாகனங்கள் , கப்பல்கள் , புகையிரதங்கள் , விமானங்கள் என்பன ஆகும்.

3. தரிப்பிடம் –  போக்குவரத்து ஊடகங்கள் சாலைகள், புகையிரத நிலையங்கள்,

துறைமுகம் ,விமான நிலையங்கள் போன்ற இடங்களில் தரித்து நிறுத்தப்படும்.

4. சக்தி – போக்குவரத்தில் உள்ளீடுகளாக பெற்றோல் , டீசல் , மின்சாரம், மனித வலு , நிலக்கரி என்பன பயன்படுத்தப்படும்.

 

 

வர்த்தகத்தில் போக்குவரத்தின் முக்கியத்துவம்

பயனுறுதிமிக்க போக்குவரத்து முறைமை கைத்தொழிலாளர்களுக்கும் நுகர்வோருக்கும் உபயோகமானதாக காணப்படும்.

கைத்தொழிலாளர்களுக்கு –

1. தொழிற்சாலைக்கான மூலப்பொருட்களை பெற
2. முடிவுப்பொருட்களை சந்தைப்படுத்த
3. தொழிலாளர்களை விரைவாகவும் பாதுகாப்புடனும் பெறலாம்.
4. கரைகடந்த சந்தைகளை கைப்பற்றலாம்.
5. கழிவுப்பொருட்களை பாதுகாப்பாக வெளியேற்றலாம்.

நுகர்வோருக்கு-

1. தரமான பொருட்களை உரிய வேளையில் உடனடியாக வாங்கலாம்.
2. தட்டுப்பாடு குறையும்.
3. விலையேற்றங்கள் தவிர்கப்படும்.
4. கொள்வனவு இலகுவாக்கப்படும்

  • பயணிகள் போக்குவரத்தில் பாதுகாப்பும் பண்டங்கள் போக்குவரத்தில் செலவும் மிக முக்கியமான காரணிகளாக கொள்ளப்படும்.

 

போக்குவரத்து முறைகள்

                                                                           வீதிப் போக்குவரத்து


உள்நாட்டில் வீதிகள் நெடுஞ்சாலைகள் மூலம் பண்டங்களும் பயணிகளும் புலம்பெயர்தல் ஆகும்.

அனுகூலங்கள்-

• தேவைக்கு பொருந்தக்கூடிய முறையில் ஊடகத்தினை தெரிவுசெய்ய முடிதல்.
• நாடு பூராகவும் பரந்து காணப்படல்.
• தேவைப்படும் எவ்வேளையிலும் பெருந்தெருவினை பயன்படுத்த முடிதல்.
• பெரும்பாலும் பயணம் முடியும் வரையிலும் ஒரேவகையான போக்குவரத்து சாதனத்தை பயன்படுத்த முடிதல்.
• குறுகிய தூரப்பயணத்திற்காக வேகமான முறையாயிருத்தல்.

பிரதிகூலங்கள்-

• பெருமளவு பொருட்களை கொண்டு செல்லல் சிரமம்
• பெருந்தெருக்களை பராமரிப்பது சிரமம்
• பயணத்தாமதமும் விபத்துக்கள் அதிகரித்தலும்
• வானிலை தன்மைக்கேற்ப தடைகள் ஏற்படல்.

வீதிப்போக்குவரத்தின் அபிவிருத்தி கருதி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

1. புதிய நவீன நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டமை.
2. சர்வதேச நாடுகளின் உதவியுடன் பாதை அபிவிருத்தி செய்யப்பட்டமை.
3. வாகனங்களின் இறக்குமதிக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டமை.
4. இலங்கைப் போக்குவரத்துச்சபை மக்கள் மயப்படுத்தப்பட்டமை.
5. புதிய மேலதிக வீதிக்குறியீடுகள் அடையாளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டமை.
6. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அமைக்கப்பட்டமை.

                                                                         புகையிரதப் போக்குவரத்து

அனுகூலங்கள்-

• பெருமளவு பொருட்களையும் பயணிகளையும் ஒரேமுறையில் கொண்டு செல்ல முடிதல்.
• தெருப்போக்குவரத்தை விட பாதுகாப்பானது
• பொருட்களின் தன்மைக்கேற்ப பெட்டிகளை பயன்படுத்த முடிதல்.
• கட்டணம் குறைவாயிருத்தல்.
• சிற்றுண்டிச்சாலை உறங்கல் இருக்கைப்பெட்டி வெளிக்காட்சிகளை பார்வையிடக்கூடிய விஷேட பெட்டி போன்ற பல வசதிகளை பெற முடிதல்.

பிரதிகூலங்கள்-

• புகையிரதப்பாதைகள் நாடுபூராகவும் பரந்து காணப்படாமை.
• தேவையான எந்த நேரத்திலும் சேவையினை பெற முடியாமை.
• பயணம் முடியும் வரையில் இதனை பயன்படுத்த முடியாமையால் வேறு போக்குவரத்து முறைமைகளை பயன்படுத்த வேண்டி ஏற்படல்.
• மின்சார சமிக்ஞை தடைப்படல் புகையிரதப்பாதை பழுதடைதல் போன்றவை காரணமாக தாமதம் ஏற்படல்.

புகையிரத போக்குவரத்தின் அபிவிருத்தி கருதி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

• நீண்டதூர பாதைகள் விரிவுப்படுத்தப்பட்டமை.
• புதிய நீண்டதூர பாதைகள் அமைக்கப்பட்டமை.
• புதிய புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட்டமை.
• புகையிரதப்பாதைகள் நிர்மாண வேலைகள் செய்யப்பட்டமை.
• குறுகிய தூரங்களுக்கு அதிக பயணிகளை கொண்டு செல்லத்தக்க இஞ்சின் பெட்டிகளை இறக்குமதி செய்தமை.
• ஆடம்பர இன்டர்சிட்டி கொள்கலன் சேவைகள் அறிமுகமானது.

 

                                                                 கடல் போக்குவரத்து

கடல், கால்வாய்கள் மூலம் பண்டங்களும் பயணிகளும் புலம்பெயர்தல் ஆகும்.
இது இரு வகைப்படும்

  • உள்ளுர்கடல் or கால்வாய் போக்குவரத்து
  • வெளியூர்கடல் or சர்வதேச கடல் போக்குவரத்து

அனுகூலங்கள்-

•சர்வதேச வியாபாரத்துக்கு உதவுதல்
•பெருமளவு பொருட்களை கொண்டு செல்லல் முடிதல்
•பொருட்களின் தன்மைக்கேற்ப மிதவைகளை பயன்படுத்த முடிதல்.

பிரதிகூலங்கள்-

• கப்பல் சேவை இலகுவாக கிடைக்கக்கூடியதல்ல.
• கூடுதலான காலம் எடுத்தல்.

சர்வதேச கடல் போக்குவரத்து சேவையானது சர்வதேச வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபன Co Ltd, வெளிநாட்டு நிறுவனங்கள் என்பவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.

Liner (வழிக்கலன்) Tramp (முறையற்ற கப்பல்)
  • வழிக்கலன்
  •  விளைந்தபடி செல்லும் கப்பல்
  • நேரசூசிகை கப்பல்
  • முறையற்ற கப்பல்
  •  பாதை நிர்ணயிக்கப்பட்ட கப்பல்
  •  பாதை நிர்ணயிக்கப்படாத கப்பல்
  • முறைக்கப்பல் / வழிக்கலன்
  •  நாடோடிக்கலன்

கடல்போக்குவரத்தின் அபிவிருத்தி கருதி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

1. பாரிய கொள்கலன் கப்பல்களை கையாளக்கூடிய வகையில் கொள்கலன் கப்பல் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டமை

  • ஜெயா கொள்கலன் இறங்குதுறை
  • சுமகி கொள்கலன் இறங்குதுறை
  • குயின் எலிசபெத் இறங்குதுறை

2. பாரிய எண்ணெய்க் கப்பல்களை கையாளக்கூடிய வகையில் குழாய் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டமை (தனிவழி மிதவை முறை Single point collections system)
3. புதிய கப்பல் திருத்தும் உலர் துறைமுகம் அமைக்கப்பட்டமை. பொருட்கள் ஏற்றி இறங்கி வருவதற்கான நவீன உபகரணங்கள் கருவிகள் பயன்படுத்தல்.
4.பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான நிர்வாகப்பகுதி, சுங்கப்பகுதி கணணிமயப்படுத்தப்பட்டமை
5. கப்பல் கூட்டுத்தாபனம் இலங்கை கப்பல் போக்குவரத்து கம்பனியாக மாற்றப்பட்டமை.
6. வர்த்தகக்கப்பல் போக்குவரத்து திணைக்களம் அமைக்கப்பட்டது.

 

                                                                  ஆகாயப் போக்குவரத்து

அனுகூலங்கள்

• வேகத்தில் மிகவும் உயர்வாயிருத்தல்.
• விரைவாக அழியக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல முடிதல்.
• பாதை பராமரிப்புச்செலவுகள் இல்லாதிருத்தல்

பிரதிகூலங்கள்-

• பாரிய நிறையில் கூடிய பொருட்களை கொண்டு செல்ல முடியாமை.
• போக்குவசத்துச் செலவு  மிக அதிகம்
• விபத்துக்களுக்கான சந்தர்ப்பம் அதிகம்
• தேவையான நேரத்திற்கு பெற முடிதல்.

விமான போக்குவரத்தின் அபிவிருத்தி கருதி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.

1. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டமை. (அம்பாந்தோட்டை விமான நிலையம்)
2. விமான ஓடு பாதைகள் , விமான நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டமை.
3. பரிசோதனை நடவடிக்கைகள் இலகுவாகுவதன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டமை.
4. நவீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டமை.
5. நாடுகளுக்கிடையே இருதரப்பு விமானப்போக்குவரத்து முறைமை அறிமுகமானது.
6. புதிய விமானங்கள் சேவைகளில் அறிமுகமானது.
7. Srilankan Airlines இல் Emirates international நிறுவனம் இதன் பங்கில் ஒரு பகுதியை கொள்வனவு செய்துள்ளது. (தற்போது இப்பங்குகளின் முழுமையான உடைமை Srilankan Airlines நிறுவனத்திடம் உள்ளது)
இலங்கையில் போக்குவரத்து அமைப்பை முன்னேற்ற எடுக்கக்கூடிய வழிகள்
1. பாதை – புதிய பாதைகளை அமைத்தல் வேண்டும். விரிவாக்கம்
2. தரிப்பிடம் – விரிவாக்கம் (துறைமுகம் விமான நிலையம், புகையிரத நிலையம்)
3. சாதனம் – இயலளவு கூடுதலான சாதனங்களை பயன்படுத்தல்.
4. போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளும் தண்டனைகளும் அதிகளவில் அமுல்படுத்தல்.
5. சக்தி – சிக்கனமான சக்தி பாவனை கொண்ட சாதனங்களை பயன்படுத்தல்.

 

  • GREEN TEST CERTIFICATE – வாகனத்தினால் சூழல் மாசடையாது என்பதை உறுதிப்படுத்தி மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வழங்கப்படும்.
  • வாகன தகுதிச்சான்று ((FITNESS CERTIFICATE) ) – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் வழங்கப்படும்.
  • தேசிய போக்குவரத்து ஆணைக்குழு – இலங்கையில் போக்குவரத்து கொள்கையினை வகுத்த அமுல்படுத்துவதற்காக 1991 இல் ஆரம்பிக்கப்பட்டது. போட்டியான நிலையிலும் பேரூந்து சேவையினை வழங்குதல் இதன் அடிப்படை குறிக்கோள் ஆகும்.

பொருத்தமான போக்குவரத்து முறையொன்றில் இருக்க வேண்டிய பண்புகள்

  • பொருளின் தன்மை
  • தூரம்
  • வேகம்
  • பாதுகாப்பு
  • கிரயம்
  • கொள்வனவு /இயலளவு
  • கிடைப்பனவுத்தன்மை
  • நியமமும் சர்வதேச அங்கீகாரமும்

போக்குவரத்துத்துறையின் நவீன போக்கானது விருத்தியடைந்து வருவதுடன் அவற்றுக்கான உதாரணங்களாக –

  • சுரங்கவழிப் போக்குவரத்து
  • மேம்பாலங்களை அமைத்தல்.
  • அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தல்.
  • கம்பிகளை பயன்படுத்தல்.
  • மின்சார தொடரூர்திகளை பயன்படுத்தல் ( Electric Train)
RATE CONTENT 0, 0
QBANK (21 QUESTIONS)

போக்குவரத்து முறைமையாவது?

Review Topic
QID: 19317
Hide Comments(0)

Leave a Reply

அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பிற்குத் தயிரைக் கொண்டு வருவதற்கு, வணிகர் ஒருவர் பின்வருவனவற்றுள் எதனைக் கருத்திற் கொள்வார்?

Review Topic
QID: 19319
Hide Comments(0)

Leave a Reply

போக்குவரத்து முறைமையின் ஓர் அம்சம் :

Review Topic
QID: 19321
Hide Comments(0)

Leave a Reply

பயணிகள் போக்குவரத்தில் கருதப்படவேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம் :

Review Topic
QID: 19323
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது போக்குவரத்து முறைமையின் ஒரு கூறாக அமையாது?

Review Topic
QID: 19324
Hide Comments(0)

Leave a Reply

வீதிப் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் புகையிரதப் போக்குவரத்தின் பிரதானமான ஒரு பிரதிகூலம் எதனுடன் சம்பந்தப்பட்டது?

Review Topic
QID: 19326
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையானது சில போக்குவரத்து மூலங்களையும், அம்மூலங்களுக்குப் பொருத்தமான உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

 

 மூலங்கள் உதாரணங்கள்
 A. பாதை 1. கப்பல்
 B. ஊடகம் 2. கடல்
 C. சக்தி 3. விமான நிலையம்
 D. தரிப்பிடம் 4. காற்று
5. ஆகாய விமானம்
6. ஆறு (River)
7. துறைமுகம்
8. பெற்றோலியம்

மூலங்கள் மற்றும் உதாரணங்களுக்கான சரியான இணைப்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19327
Hide Comments(0)

Leave a Reply

போக்குவரத்துக்கான ஒரு சமமான அபிவிருத்தி அவசியமாக அமைவது?

Review Topic
QID: 19334
Hide Comments(0)

Leave a Reply

கொழும்பு துறைமுகத்திலிருந்து சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கு மிகப் பொருத்தமான போக்குவரத்து ஊடகங்கள்?

Review Topic
QID: 19337
Hide Comments(0)

Leave a Reply

போக்குவரத்து முறைமையாவது?

Review Topic
QID: 19317

அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பிற்குத் தயிரைக் கொண்டு வருவதற்கு, வணிகர் ஒருவர் பின்வருவனவற்றுள் எதனைக் கருத்திற் கொள்வார்?

Review Topic
QID: 19319

போக்குவரத்து முறைமையின் ஓர் அம்சம் :

Review Topic
QID: 19321

பயணிகள் போக்குவரத்தில் கருதப்படவேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம் :

Review Topic
QID: 19323

பின்வருவனவற்றுள் எது போக்குவரத்து முறைமையின் ஒரு கூறாக அமையாது?

Review Topic
QID: 19324

வீதிப் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் புகையிரதப் போக்குவரத்தின் பிரதானமான ஒரு பிரதிகூலம் எதனுடன் சம்பந்தப்பட்டது?

Review Topic
QID: 19326

பின்வரும் அட்டவணையானது சில போக்குவரத்து மூலங்களையும், அம்மூலங்களுக்குப் பொருத்தமான உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

 

 மூலங்கள் உதாரணங்கள்
 A. பாதை 1. கப்பல்
 B. ஊடகம் 2. கடல்
 C. சக்தி 3. விமான நிலையம்
 D. தரிப்பிடம் 4. காற்று
5. ஆகாய விமானம்
6. ஆறு (River)
7. துறைமுகம்
8. பெற்றோலியம்

மூலங்கள் மற்றும் உதாரணங்களுக்கான சரியான இணைப்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19327

போக்குவரத்துக்கான ஒரு சமமான அபிவிருத்தி அவசியமாக அமைவது?

Review Topic
QID: 19334

கொழும்பு துறைமுகத்திலிருந்து சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கு மிகப் பொருத்தமான போக்குவரத்து ஊடகங்கள்?

Review Topic
QID: 19337
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank