Please Login to view full dashboard.

காப்புறுதி

Author : Admin

38  
Topic updated on 02/15/2019 06:50pm

காப்புறுதி (INSURANCE)Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

‘’மனித ஆயுளிற்கும் சொத்துக்களிற்கும் நிச்சயமான or தற்செயலான சம்பவங்களினால் ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு ஆயுள் or சொத்துடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்’’

அபாயங்கள் or இடர்கள்

காப்புறுதி செய்யப்படுகின்ற ஆயுள் or சொத்துக்களின் மீது இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு காரணியும் அபாயம் ஆகும்.

காப்புறுதி செய்ய முடியாத அபாயங்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

• இயற்கைத் தன்மை காரணங்களால் தோன்றும் வணிக இடர்கள்.
• தனிநபர் இயலுமைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இடர்கள்.
• பிழையான முகாமைத் தீர்மானங்களால் ஏற்படும் வணிக இடர்கள்.

காப்புறுதி செய்ய முடிந்த அபாயங்கள்

  • நிச்சயமான அபாயம்

1. ஆயுள் அபாயம்

  • தற்செயலான அபாயம்

1. தீ அபாயம் – தீ அபாயக் காப்புறுதி
2. கடல் அபாயம் – கடல் அபாயக் காப்புறுதி
3. விபத்து அபாயம் – விபத்து அபாயக் காப்புறுதி

காப்புறுதி செய்ய முடிந்த அபாயமொன்றின் சிறப்பு பண்புகள்

• எதிர்வு கூறக்கூடியதாக இருத்தல்.
• நட்டம் or பணரீதியான இழப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருத்தல்.
• இழப்பினை உறுதிப்படுத்தக்கூடியதாக இருத்தல்.
• வேறு அபாயங்களுடன் தொடர்பற்ற வகையில் காணப்படல்.

காப்புறுதி ஒப்பந்தத்துடன் தொடர்புறும் கட்சியினர்.

1. காப்புறுதி செய்வோன்-ஆயுள், சொத்துடைமையாளன்
2. காப்புறுதி அளிப்போன்- காப்புறுதி நிறுவனம்
3. 3ம் கட்சி – பொது மக்கள், பொதுச்சொத்துக்கள்

காப்புறுதியின் சட்டத்தேவைப்பாடுகள்

• சட்ட ரீதியான தொடர்பொன்றை உருவாக்கிக்கொள்ளும் எண்ணம்
• முன்மொழிவுகள் or பிரேரித்தல்
• ஏற்புடைமை
• சட்ட ரீதியான தன்மை
• ஒவ்வொரு பிரிவினர்களுக்கிடையில் சட்ட ரீதியான உடன்பாட்டை உருவாக்கிக்கொள்ளும் இயலுமை

                                                                       காப்புறுதித் தத்துவங்கள்

1. காப்புறுத்தும் உரிமை– ஒரு உடமை இருப்பதனால் நன்மை பயன் இலாபம் அனுபவிக்கக்கூடிய நிலையில் இருந்து இவ்வுடைமை சேதமடைந்தால் நன்மை பெற முடியாத நிலையில் உள்ளவர் அவ்வுடைமையை காப்புறுதி செய்யலாம்.

ஆயுளை காப்புறுதி செய்ய உரிமை உடையவர்கள்

  • கணவனின் ஆயுளை மனைவியும் , மனைவியின் ஆயுளை கணவனும் காப்புறுதி செய்தல்.
  • பெற்றோர் – பிள்ளை
  •  கடன்பட்டவரின் ஆயுளை கடன் கொடுத்தவர் காப்புறுதி செய்தல்.
  • ஒருவர் தனது சொந்த ஆயுளை காப்புறுதி செய்தல்.
  • சொத்தினை காப்புறுதி செய்ய உரிமை உடையவர்கள்.
  •  சொத்தில் சட்டரீதியாக உரிமையைக் கொண்டவர்கள்.
  •  சொத்துக்களை குத்தகைக்கு எடுத்தவர் (வாடகைக்கு எடுத்தவரால் இயலாது)
  •  காரணி முகவர் முதல்வருடைய பொருட்களை காப்புறுதி செய்தல்.

ஆயுள் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – ஒப்பந்தம் செய்யும் போதும். கடல் அபாயக் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – இழப்பு ஏற்படும் போதும். தீ விபத்து அபாயக் காப்புறுதியை பொருத்தவரையில் உரிமை – இழப்பு ஏற்படும் போதும். ஒப்பந்தம் செய்யும் போதும் காணப்பட வேண்டும்.

2. அதியுயர் நம்பிக்கை – காப்புறுதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் போது காப்புறுதியாளன் காப்புறுத்துவோருக்கு உண்மையான தகவல்களை வழங்க வேண்டும். காப்புறுத்துவோரும் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.
மீறப்படும் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள்

  • ஒப்பந்தத்தை இரத்து செய்தல்.
  • கோரிக்கை விடும் போது மறுத்தல்.
  • இழப்பீட்டை கொடுக்க மறுத்தல்.
  • பணத்தை மீளப்பெற சட்ட நடவடிக்கை எடுத்தல்.

3. இழப்பீட்டுத் தத்துவம்– காப்புறுதி செய்யப்பட்ட குறித்த சொத்துக்கு நட்டம் ஏற்படும் போது அதனை பழைய நிலைக்கு கொண்டு வர போதிய காப்புறுதி ஒப்பந்தத்தின் பெறுமானத்திற்கு சார்பாக விகிதாசாரத்துக்கு அமைய இழப்பீடு வழங்குதல் ஆகும்.
இதன் துணைத்தத்துவங்களாக
1. பங்களிப்புத் தத்துவம் – சொத்தொன்று பல காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த சொத்துக்கு இழப்பு ஏற்பட்டால் காப்புறுதி நிறுவனங்களின் பெறுமான விகிதாசாரத்துக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும்.
2. பதிலாள் வைப்புத் தத்துவம்- காப்புறுத்துவோர் காப்புறுதியாளருக்கு ஏற்பட்ட இழப்பை வழங்கிய பின்னர் அவ்விழப்புச் சார்பாக  ஏதேனும் வசூலிப்பு, நயங்கள் இருந்தால் அதனை காப்புறுத்துவோர் பெறலாம்.
3. அண்மைக்காரணத் தத்துவம் – உடமை எந்த ஆபத்துக்கு எதிராக காப்புறுத்தப்பட்டதோ அக்காரணங்களால் ஏற்படுகின்ற இழப்புக்களுக்கு மட்டுமே காப்புறுதி நிறுவனத்தினால் இழப்பீடு வழங்கப்படும்.

இரட்டை காப்புறுதி – ஒரு சொத்து or ஆயுள் இரு காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி செய்யப்படுவது ஆகும்.
மறு காப்புறுதி – காப்புறுதி நிறுவனம் ஒன்று தான் காப்புறுதி செய்த காப்புறுதியினை மீண்டும் பிறிதொரு காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்தல் ஆகும்.
மிகை காப்புறுதி – ஒரு சொத்தின் உண்மைப் பெறுமதியை விட கூடுதலான பெறுமதிக்கு காப்புறுதி செய்தல் ஆகும்.
குறை காப்புறுதி– ஒரு சொத்தின் உண்மைப்  பெறுமதியை விட குறைவான பெறுமதிக்கு காப்புறுதி செய்தல் ஆகும்.

சராசரிச்சரத்து = (காப்புறுதி ஒப்பந்தப் பெறுமதி / சொத்தின் உண்மைப்பெறுமதி) x இழப்பு

ஆயுள் காப்புறுதி அபாயக்காப்புறுதி
மனிதஆயுளிற்கு நிச்சயமாக ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு ஆயுள் உடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்.

வகைகள்-
1. முழு ஆயுள் காப்புறுதி
2. கூட்டு ஆயுள் காப்புறுதி
3. காலம் குறித்த ஆயுள் காப்புறுதி ஆயுள் காப்புறுதி கட்டணத்தை தீர்மானிக்கும் காரணிகள்

1. ஆபத்தின்தன்மை
2. வயது
3. ஒப்பந்தக்காலம்
4. ஒப்பந்தத்தொகை

ஆயுள் காப்புறுதி கட்டணத்தை செலுத்த முடியாதவர் எடுக்கக்கூடிய மாற்று வழிகள்
1.ஓப்படைப்புப்பெறுமானம்- காப்புறுதி செய்தவர் இது வரையில் செலுத்தியுள்ள தவணைக்கட்டணத்தில் ஓர் குறிப்பிட்ட வீதத்தினை கழிவாக கொடுத்து மீதியை பெறும் நடவடிக்கை. இதன் போது ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும்.

2.இறுத்தப்பூட்கையாக மாற்றல்- இது வரை செலுத்தப்பட்ட தொகையை காப்புறுதி தொகையாக மாற்றியமைத்து முன்னைய ஒப்பந்த முடிவு காலத்தில் அத்தொகையை மீளப்பெறக்கூடியவாறு ஒப்பந்தத்தின் ஆரம்பப்பெறுமதியை மாற்றியமைத்தல் ஆகும்.

கருணைக்கொடுப்பனவு – ஒரு ஆயுள் காப்புறுதியாளனுக்கு சட்டப்படி நட்டஈடு வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் அக் காப்புறுதியாளனின் தங்கிவாழ்வோரின் வறுமை பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் காப்புறுதி நிறுவனம் ஒப்பந்தத்தொகையினை விட குறைவான தொகையை தங்கிவாழ்வோருக்கு வழங்கல் ஆகும்.

கடன்பெறுமானம்– ஆயுள் காப்புறுதியாளர் குறித்த ஆண்டுகள் வரையும் காப்புறுதி கட்டணத்ததை செலுத்திய பின்னர் அக்காப்புறுதி பத்திரத்தை பிணையாக வைத்து வங்கியில் காப்புறுதி ஸ்தாபனங்களில் கடனாக பெற அனுமதிக்கப்பட்ட தொகை ஆகும்.

இதன் பண்புகள்
• இழப்பீட்டுத்தத்துவம் பொருந்தாது
• பங்குலாபம வழங்கப்படும்.
• நீண்டகால தன்மை
• கருணைக்கொடுப்பனவு முறை உண்டு
• சேமிப்பாக கருத முடியும்
• மிகை , குறை காப்புறுதி பொருந்தாது

மனித சொத்துக்களிற்கு தற்செயலான சம்பவங்களினால் ஏற்படக்கூடிய இழப்புக்களை பண ரீதியான அடிப்படையில் ஈடு செய்து கொள்ளும் பொருட்டு சொத்துடைமையாளனால் காப்புறுதி நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தம் or துணைச்சேவை காப்புறுதி ஆகும்.

வகைகள்
1. விபத்து அபாயக் காப்புறுதி
2. தீ அபாயக் காப்புறுதி
3. கடல் அபாயக் காப்புறுதி

விபத்து அபாயக் காப்புறுதியின் வகைகள்

1. மோட்டார் வாகன காப்புறுதி
2. பொறுப்பு காப்புறுதி
3. களவபாயக் காப்புறுதி

மோட்டார்வாகன காப்பறுதி
மோட்டார் வாகனங்களுக்கும் அவற்றில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அதனால் இழப்புக்கள் நிகழ்ந்துள்ள வெளிக்கட்சியினருக்கும் இழப்பீடு பெறுவதற்கான காப்புறுதி ஒப்பந்தமாகும்.

இதன் வகைகள்-
1. அகல் விரிவான காப்புறுதி
2.பகுதியளவான மோட்டார் வாகன காப்புறுதி
3. மூன்றாம் நபர் காப்புறுதி

ஈடுகோராத மிகை ஊதியம்– எதிர்வரும் ஆண்டில் குறைந்த காப்புறுதி கட்டணத்தை செலுத்தலாம் அல்லது கழிவைப் பெறலாம்.

பொறுப்புக்காப்புறுதி– ஒருநிறுவனம் or நபரின் ஏதேனும் நடவடிக்கைகள் காரணமாக பொது மக்களுக்கும் பொது ஆதனங்களுக்கும் ஏதேனும் இழப்புக்கள் வருமிடத்து அவ் இழப்புக்களை ஈடுசெய்து கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் ஆகும்.

1.குறைந்தபட்ச மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்புறுதி
2.தொழிலாளர் விபத்து காப்புறுதி
3.பிணை பொறுப்பு காப்புறுதி
4.பொதுசன பொறுப்பு காப்புறுதி

தீயபாயக்காப்புறுதி– குறித்த சொத்துக்களுக்கு தீ அபாயத்தினால் ஏற்படும் இழப்புக்களுக்கு நட்டஈட்டினை பெறுவதற்கான காப்புறுதி ஆகும்.
அபாயங்கள்-

  • விமான விபத்து
  • புயல்
  • சூறாவளி
  • மின்னல்
  • இனக்கலவரம்

கடலபாயக் காப்புறுதி – கடல் அபாயம் காரணமாக கப்பலுக்கும் , கப்பலில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் இழப்புக்களுக்கு நட்டஈட்டினை பெறுவதற்கான காப்புறுதி ஆகும்.
வகைகள்-
1.பிரயாணம் குறித்த கடலபாயக்காப்புறுதி
2.காலம் குறித்த கடலபாயக்காப்புறுதி
3.கலப்பு கடலபாயக்காப்புறுதி
4.மிதக்கும் கடலபாயக்காப்புறுதி

இதன் பண்புகள்
• இழப்பீட்டுத்தத்துவம் பொருந்தும்
• பங்குலாபம் வழங்கப்படாது
• குறுங்காலகால தன்மை
• ஈடுகோராதமிகை ஊதியம் உண்டு
• சேமிப்பாக கருத முடியாது
• மிகை, குறை காப்புறுதி பொருந்தும்

இலங்கை காப்புறுதிச்சபை

காப்புறுதித்தொழிலை விருத்தி செய்தல் ஒழுங்குபடுத்தல் பணிகளில் ஈடுபடுகின்றது.இதன் பணிகள்

  • ஆலோசனை வழங்கல்
  • தனியார் காப்புறுதி கம்பனிகளை பதிவு செய்தல்
  • பதிவினை இரத்து செய்தல்
  • நட்ட ஈடு வழங்கல்
  • காப்புறுதி பூட்கைக்கு அனுமதி வழங்கல்
  • CESS வரியை அறவிடல்
  • முதலீட்டு பரப்பு எல்லைகளை தீர்மானித்தல்

இலங்கையில் உள்ள தனியார் காப்புறுதி கம்பனிகள்

  • சிலின்கோ காப்புறுதி கம்பனி
  • ஈகிள் காப்புறுதி கம்பனி
  • ஜனசக்தி காப்புறுதி கம்பனி லிமிடெட்
  • யூனியன் அஸ்யூரன்ஸ் காப்புறுதி கம்பனி
  • வரையறுத்த இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்

RATE CONTENT 0, 0
QBANK (38 QUESTIONS)

பூரண மோட்டார் வாகனக் காப்புறுதியின் கீழ் ஊறுகளுக்கான கோரிக்கையை விடுவிக்கக் கூடியவர் :

Review Topic
QID: 19258
Hide Comments(0)

Leave a Reply

ஆயுட் காப்புறுதி உட்பட சகல காப்புறுதிகளுக்கும் பிரயோகிக்கப்படத்தக்க காப்புறுதித் தத்துவங்களைக் கொண்ட தொகுதியைத் தெரிவு செய்க :

Review Topic
QID: 19260
Hide Comments(0)

Leave a Reply

ஒரு வணிகத்தினால் புறக் கட்சியினருக்கு விளைவிக்கப்படும் சேதங்கள் எதனைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஈடு செய்யப்படும்?

Review Topic
QID: 19262
Hide Comments(0)

Leave a Reply

ஒப்படைப்புப் பெறுமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான உரித்தினைக் கொண்ட காப்புறுதி எது?

Review Topic
QID: 19264
Hide Comments(0)

Leave a Reply

காப்புறுதிக் கம்பனியொன்று சொத்தொன்றுக்கான காப்புறுதிப் பொறுப்பை ஏற்றுள்ளது எனக் கருதுக. இக்கம்பனி பிறிதொரு கம்பனியிடமிருந்து அதே சொத்துக்கான ஒரு காப்புறுதியைப் பெற்றுக் கொண்டது. இதற்கு வழங்கும் பெயர்.

Review Topic
QID: 19266
Hide Comments(0)

Leave a Reply

காப்புறுதி செய்பவர் வெளிக் கட்சியினரிடமிருந்து இழப்பீட்டைப் பெறும் தனது உரிமையைக் காப்புறுத்துவோருக்கு மாற்ற வேண்டும் எனும் தத்துவம் எது?

Review Topic
QID: 19268
Hide Comments(0)

Leave a Reply

அதியுயர் பெறுமானங்கொண்ட சொத்தொன்றிற்கான நட்டத்தினைக் காப்புறுதிக் கம்பனிகள் பல ஏற்றுக் கொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?

Review Topic
QID: 19270
Hide Comments(0)

Leave a Reply

காப்புறுதி செய்வோரால் காப்புறுதி அளிப்போருக்குச் சகல பொருத்தமான தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டுமென்பதைக் குறிப்பிடும் காப்புறுதித் தத்துவம்?

Review Topic
QID: 19272
Hide Comments(0)

Leave a Reply

குறித்தவொரு ஆதனத்துக்கு இரட்டைக் காப்புறுதியைச் செய்துள்ள போதும் அவ்வாதனத்தின் பெறுமதிக்கும் மேலாக நட்டஈட்டைப் பெறுவதனைத் தடுக்கின்ற காப்புறுதித் தத்துவம்?

Review Topic
QID: 19274
Hide Comments(0)

Leave a Reply

சதீஸ் என்பவர் ரூ. 1 000 000 பெறுமதியில் தனது மோட்டார் வாகனத்துக்கு அகல்விரிவான காப்புறுதிப் பத்திரம் ஒன்றைப் பெற்றுள்ளார். இம்மோட் டார் வாகனத்தின் சந்தைப் பெறுமதி ரூ. 2 000 000 ஆகும். மோட்டார் வாகனமானது விபத்தைச் சந்தித்த போது அதற்கு ஏற்பட்ட சேதம் ரூ. 400 000 ஆக மதிப்பிடப்பட்டது. காப்புறுதிக் கம்பனியால் சதீஸ் என்பவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு?

Review Topic
QID: 19275
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19277
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் காப்புறுதியுடன் தொடர்புபட்ட வகையில் ஒரு கூற்று தவறானதாகும். தவறான கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19280
Hide Comments(0)

Leave a Reply

சிவா என்பவர் தான் வசிக்கும் வீட்டிற்காக ரூபா 200 000 இற்கு x கம்பனியிடமிருந்து காப்புறுதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொண்டதுடன்,ரூபா 400 000 இற்கு y கம்பனியிடமிருந்து மற்றுமோர் காப்புறுதிப் பத்திரத்தையும் பெற்றுள்ளார். வீடு தீயினால் சேதமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூபா. 300 000 ஆகக் கணிப்பிடப்பட்டது.பங்களிப்புத் தத்துவத்தின் பிரகாரம் முறையே x மற்றும் y கம்பனிகளால் செலுத்தப்படும் இழப்பீடுகள் யாவை?

Review Topic
QID: 19283
Hide Comments(0)

Leave a Reply

குமரன் தனது காரை ரூபா 3 மில்லியனுக்கு காப்புறுதி செய்துள்ளார். அவரது கார் அடையாளம் தெரியாத நபரொருவரால் திருடப்பட்டது. காப்புறுதி நிறுவனம் ரூபா 3 மில்லியனை குமரனுக்கு நட்டஈடாகச் செலுத்தியது. சில நாட்களின் பின்னர், காப்புறுதி நிறுவனத்தால் கார் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது ரூபா. 3.5 மில்லியன் சந்தைப் பெறுமதிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. (ஏல விற்பனைக் கட்டணம் ரூபா 150 000) அதன் பின்னர் காப்புறுதி நிறுவனம்
செய்ய வேண்டியது?

Review Topic
QID: 19285
Hide Comments(0)

Leave a Reply

காப்புறுதித் தத்துவங்கள் சில கீழே தரப்படுகின்றன.
A– இழப்பீடு              B – பதிலாள் வைப்பு             C – பங்களிப்பு                     D – மிக்குயர் நன்நம்பிக்கை
மேலே தரப்பட்டுள்ளவற்றுள் ஆயுட் காப்புறுதிக்குப் பொருந்தக் கூடிய தத்துவத்தைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19287
Hide Comments(0)

Leave a Reply

காப்புறுதி செய்யத்தக்க இடர்கள் மற்றும் காப்புறுதி செய்யத்தகாத இடர்கள் சில கீழே தரப்படுகின்றன
A– மோட்டார் வாகனங்களின் தேய்வு           B – ஒரு பாடகரின் குரல்                    C – இறப்பு                           D – வயதாதல்                                                              E – ஊழியர் விலகிச் செல்லல்
மேலே தரப்பட்டவற்றுள் காப்புறுதி செய்யத்தகாத இடர்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க

Review Topic
QID: 19290

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank