Please Login to view full dashboard.

திண்ம,திரவங்களின் விரிவு

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 06:15am

திண்மங்களின் விரிவு

  • கோல் அல்லது கம்பி வடிவிலான திண்மங்களை வெப்பமேற்றுகையில் எல்லா திசைகளிலும் விரிவு ஏற்பட்டாலும் கருதத்தக்க அளவுக்குள்ள விரிவு நீள விரிவாகும். ஆகவே, நீள விரிவே கருதப்படும்.
  • l0 நீளமான கோல் Δθ வெப்பநிலை அதிகரிப்புக்கு உட்படுகையில் அதன் புதிய நீளம் – ட,அதன் நீட்சி – e என்க.

ஏகபரிமாண விரிகைத் திறன் (α)

  • திண்மத்தின் வெப்பநிலையை ஓரலகால் உயர்த்தும்போது, அத்திண்மத்தின் நீளத்திலேற்பட்ட பின்ன அதிகரிப்பு ஏகபரிமாண விரிகைத் திறன் ஆகும்.


α அலகு : °C-1 or K-1
l= l0 + (1+αΔθ)

பரப்பு விரிவுக் குணகம் (β)

  • A0 பரப்புள்ள திண்மமொன்று Δ θ வெப்பநிலை அதிகரிப்புக்குட்படுகையில் அதன் புதிய பரப்பு – ΔA, பரப்பில் ஏற்பட்ட அதிகரிப்பு – A என்க.


A= A0+ (1+βΔ θ)

β= 2α

கன விரிகைத் திறன்

  • V0 கனவளவுள்ள திண்மமொன்று Δθ வெப்பநிலை அதிகரிப்புக்குட்படுகையில் அதன் புதிய கனவளவு – V, கனவளவில் ஏற்பட்ட அதிகரிப்பு – ΔV என்க.

திரவங்களின் விரிவு

  • திரவத்துக்கென்றோர் திட்டவட்ட வடிவமில்லை. அது பாத்திர வடிவையே எடுக்கும்.
  • திரவத்திற்கு கன விரிவையே கருத வேண்டும்.
  • திரவமானது ஒரு பாத்திரத்தில் வைத்தே வெப்பமேற்றப்பட வேண்டும். ஆகவே, பாத்திர விரிவையும் கருத வேண்டும்.
  • திரவத்தின் மெய்விரிவு – தோற்ற விரிவு + பாத்திரத்தின் கன விரிவு
  • திரவமொன்றின் மெய் விரிகைத் திறன் (γ)

V – புதிய கனவளவு
V0 – ஆரம்ப கனவளவு
Δθ – வெப்பநிலை அதிகரிப்பு
γ – திரவ மெய் விரிகைத் திறன்

  • திரவத்தின் தோற்ற விரிகைத் திறன் (γa)

பாத்திரத்தின் ஏகபரிமாண விரிகைத் திறன் α எனின்
γ = γα + 3 α

திரவ அடர்த்திக்கும், வெப்பநிலைக்குமிடையிலான தொடர்பு

P – புதிய கனவளவு
P0 – ஆரம்ப கனவளவு
γ – திரவ மெய் விரிகைத் திறன்
Δθ – வெப்பநிலை அதிகரிப்பு

  • திரவமொன்றின் வெப்பநிலை அதிகரிக்கையில், அதன் அடர்த்தி குறையும். ஆனால், நீர் மட்டும் இதற்கு விதி விலக்கு
  • நீரானது 0ºC இலிருந்து வெப்பமேற்றப்பட 4ºC வரை அதன் கனவளவு குறையும். அதாவது, அடர்த்தி விதிவிலக்கு
  • அதன் பின் 4ºC ற்கு மேல் வெப்பநிலை அதிகரிக்க அதன் கனவளவு கூடும். அதாவது, அடர்த்தி குறையும்

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank