Please Login to view full dashboard.

வித்து

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 08:43am

வித்து
கருக்கட்டப்பட்ட சூல்வித்து வித்தாக விருத்தியடைகின்றது. வித்து என்பது | வித்துத் தாவரங்களின் பரம்பல் அலகாகும். ஒரு வித்து பின்வரும் பாகங்களை கொண்டிருக்கும்.
1. வித்துறை
2. வித்தகவிழையம்
3. மூளையம்

 

வினைத்திறனான பரம்பலுக்காக வித்து கொண்டுள்ள சிறப்பியல்புகள்
1. வித்துறையை கொண்டிருத்தல் – சூழல் தாக்கங்களிலிருந்து முளையத்தை பாதுகாத்தல்.
2. வித்தகவிழையத்தை கொண்டிருத்தல் – இதில் உணவு சேமிக்கப்பட்டுள்ளது. வித்து முளைக்கும் போது வளரும் முளையம் இவ்வுணவை அகத்துறிஞ்சிக் கொள்ளும்.
3. முளையத்தை கொண்டிருத்தல் – வித்து முளைக்கும் போது முளையம் வளர்ச்சியடைந்து வித்தித் தாவரம் தோற்று விக்கப்படும்.
4. உறங்கு நிலையை கொண்டிருத்தல் – தகாத கலத்தை கழிக்க பயன்படும் : வரட்சிää வெள்ளம்
5. வித்துறை மயிர்கள்ää இறகுகள் போன்ற கட்டமைப்புகள் காணப்படல். இவை காற்றால் வினைத்திறனாக பரம்பலடைய பயன்படும்.

வித்து முளைத்தலை தாக்கும் காரணிகள்
அகக் காரணிகள்
1. வித்தின் வாழ்தகவு
2. வித்தின் உறங்குநிலை

புறக்காரணிகள்
1. ஒட்சிசன்
2. நீர்
3. தகுந்த வெப்பநிலை

  • வாழ்தகவுள்ள வித்து உறங்குநிலை குறைந்த நிலையில் முளைத்தலுக்கு அவசியமான சூழற்காரணிகளான நீர்ää ழு2இ தகுந்த வெப்பநிலை என்பன கிடைக்கப் பெற்றதும் முளைக்க ஆரம்பிக்கின்றது.
  • வித்தின் உறங்குநிலை
  •  பழத்தினுள் வித்துக்கள் முளைப்பதை தடுப்பதற்காக இயற்கையாகவே வித்துக்கள் முதிர்ச்சியடைந்த ஒரு நிலையில் வித்தினுள் முளையம் விருத்தியடைதல் நிரோதிக்கப்படும்.
  •  அனேகமான வித்துக்கள் திருப்திகரமான சூழல் நிபந்தனைகள் கிடைக்கும் வரை வித்து முளைத்தலை நிரோதிக்கும் பொறிமுறைகளை மேற்கொண்டு உறங்குநிலையில் காணலாம்.
  • சில வித்துக்கள் ழு2இ நீர்ää தகுந்த வெப்பநிலை என்பன கிடைக்கப் பெற்றும் உறங்குநிலையில் காணலாம்.

வித்துக்களின் உறங்கு நிலைக்கான காரணிகள்
1. தடித்த { கடினமான வித்துறை
2. நீரை உட்புகவிடாத வித்துறை
3. வித்துமுளைத்தலை நிரோதிக்கும் இரசாயன பதார்த்தங்கள் தொழிற்படல் – யுடிளஉளைiஉ யஉனை
4. வித்து முளைத்தலை தூண்டும் இரசாயனப் பதார்த்தங்கள் தொழிற்படாதிருத்தல் – புiடிடிநசநடடin
5. வித்தின் முளையம் முதிர்ச்சியடையாதிருத்தல்

 

  • வித்தின் உறங்கு நிலையின் அனுகூலங்கள்
    1. தகாத காலத்தை கழித்தல்
    2. வித்துப் பரம்பலுக்கு சந்தர்ப்பம் ஏற்படல்.
    மேற்படி இரு காரணங்களினாலும் குறித்த தாவர இனம் புவியில் நிலைத்திருக்க உதவுகின்றது.

வித்து முளைக்கும் போது நடைபெறும் மாற்றங்கள்
வித்துறையால் உட்கொள்ளுகை மூலம் நீர் அகத்துறிஞ்சப்படும். தொடர்ந்து பிரசாரணம்ää பரவல் மூலம் வித்தினுள் நீர் அசையும் வித்தினுள் அகத்துறிஞ்சிய நீர் அங்கு பல்வேறு தொழிற்பாடுகளில் பங்கெடுக்கும்.
1. தாக்கியாக செயற்படல்
2. ஊடகமாக செயற்படல்
3. கரைப்பானாக செயற்படல்
4. நொதியங்களை ஏவுதல்
தொழிற்பாடற்ற நீர்பகுப்பு நொதியங்கள் நீரினால் ஏவப்பட்டு தொழிற்படுநிலைக்கு மாற்றப்படும். நீர்பகுப்பு நொதியங் களின் ஊக்குவிப்பால் சேமிப்பாக உள்ள சிக்கலான சேதன உணவுகள் கரையக் கூடிய எளியக் கூறுகளாக மாற்றப்படும்.
 அமைலேசு நொதிய ஊக்குவிப்பால் சேமிப்பு மாப்பொருள் நீர்பகுப்படைந்த மோல்ற்றோசாக மாற்றப்படும்.
 Protease நொதிய ஊக்குவிப்பால் சேமிப்பு புரதம் நீர்ப்பகுப்படைந்து அமினோவமிலங்களாக மாற்றப்படும்.
 Lipase நொதிய ஊக்குவிப்பால் இலிப்பிட்டு / கொழும்பு நீர்பகுப்படைந்து கிளிசரோல்ää கொழுப்பமிலங்களாக மாற்றப்படும்.
 Moltase நொதிய ஊக்குவிப்பால் மோற்றோசு நீர்பகுப்படைந்து குளுக்கோசாக மாற்றப்படும்.

 

விளைவாக்கப்படும் எளிய கூறுகள் நீரில் கரைந்து அசையும் ஆற்றலை கொண்டிருக்கும். முளையம் இவ் எளிய உணவுகளை அகத்துறிஞ்சும் கலச்சுவாச வீதம் கூடும். பெருமளவு ATP உற்பத்தியாக்கப்படும். முளையத்தில் (பெருமளவு). விரைவான வளர்ச்சி செயன்முறை நடைபெறும்.
இதன்போது கலமட்டத்தில் கலப்பிரிவுää கலவிரிவுää கலவியத்தம் என்பன நடைபெறும்.
முளையத்தின் கனவளவு கூடும். வித்துறை வெடிக்கும் வித்துறையினூடாக முதலில் முளைவேர் வெளிவரும். அதனைத் தொடர்ந்து முளைதண்டு வெளிவரும். இளம் நாற்று தோற்றுவிக்கப்படும். முளைவேர் நேர் புவித்திருப்ப அசைவை காட்டும். முளைதண்டு எதிர்புவித்திருப்ப அசைவை காட்டும்.

The InfoVisual.info site uses images to explain objects.

வித்து தோன்றுவதற்காக தாவரங்கள் கொண்டுள்ள சிறப்பியல்புகள்
1. பல்லின வித்தி உண்மையை கொண்டிருத்தல்
ஒரு தாவரத்தின் வா { வட்டத்தில் பருமனில் பெரிய மாவித்தியும் பருமனில் சிறிய நுண்வித்தியும் தோன்றல்.
2. ஒரு மாவித்திக் கலுனுக்குள் இரு மடியமான ஒரு மாவித்தி தாய்க்கலம் மட்டும் தோன்றல்.
3. மாவித்தி தாய்க்கலம் ஒடுக்கற் பிரிவுக்குள்ளாகி தோன்றும் 4 மாவித்திகளில் ஒன்று மட்டும் வளமானதாக காணப்படல்.
4. வளமான மாவித்தி வெளியேற்றப்படாது மாவித்தி கலனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு பெண்புணரித் தாவரமாக விருத்தியடைதல்.
5. மாவித்திக்கலன் கவசத்தால் சூழப்பட்டு சூல்வித்து தோன்றல் சூல்வித்து தோன்றல் சூல்வித்துக்கள் சூல்வித்திலையால் மூடப்பட்டிருத்தல்.
6. சூல்வித்து கருக்கட்டப்பட்டு வித்து தோன்றல்.
7. பழம் தோன்றி அதனுள் வித்துக்கள் பாதகாக்கப்படும்.
8. வித்துக்கள்ää பழங்கள் விலங்குகளால் / காற்றால் / நீரால் பரம்பலடையக் கூடிய இசைவாக்கங்களை கொண்டிருத்தல்

 

 Selaginalla  Cycas  Anthrophyta
 கூம்பி  கூம்பு   பூ
 2. நுண்வித்தியிலை  நுண்வித்தியிலை   கேசரம்
 3. மாவித்தியிலை   மாவித்தியிலை சூல்வித்திலை
4. நுண்வித்திக்கலன் நுண்வித்திக்கலன்   மகரந்தப்பை
 5. நுண்வித்தி தாய்கலம்  நுண்வித்திதாய்கலம்   மகரந்ததாய்க்கலம்
 6. மாவித்திக்கலன்  மாவித்திக்கலன் or  மூலவுருப்பையகம்  மூலவுருப்பையகம்
 7. மாவித்திதாய்கலம்   மாவித்தி தாய்கலம்  மாவித்தி தாய்கலம்
 8. நுண்வித்தி  நுண்வித்தி or மகரந்தமணி  மகரந்தமணி
9. மாவித்தி   மாவித்தி   மாவித்தி
 10. –  சூல்வித்தி   சூல்வித்து
 11. ஆண்புணரித் தாவரம்  ஆண்புணரித்தாவரம்  ஆண்புணரித்தாவரம்
 12. பெண்புணரித்தாவரம்  பெண்புணரித்தாவரம்   முளையப்பை
 13. ஆண்கலவாக்கி   ஆண்கலவாக்கிக்கலம்   –
 14. பெண்கலச்சனனி   பெண்கலச்சனனி   –
 15. –  நிர்வாணவித்து   பழத்தினுள் அமைந்த வித்து
 16. –  வித்திகவிழையம் (இருமடியம்)   வித்தகவிழையம் (மும்மடியம்)
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank