விலங்குகளில் காணப்படும் சுற்றோட்டத் தொகுதி வகைகள்
விலங்குகளில் இருவகையான சுற்றோட்டத் தொகுதிகள் காணப்படுகின்றன.
1. நிணநீர் சுற்றோட்டத் தொகுதி
2. குருதி சுற்றோட்டத் தொகுதி
சுற்றோட்டத் தொகுதி எனப்படுவது குழாய்கள் போன்ற கலங்களினூடாக பாயி { திரவம் கடத்தப்படுதல் ஆகும்.
நிணநீர் சுற்றோட்டத்தில் நிணநீர் எனும் பாய்மம் நிணநீர் கலங்களினூடாக கடத்தப்படும். குருதிச் சுற்றோட்டத் தொகுதியில் குருதி எனும் பாயம் குருதி கலங்களுக்கூடாக கடத்தப்படும்.
நிணநீர் சுற்றோட்டம் ஒரு பூரண சுற்றோட்டமாக காணப்படுவதில்லை. அதாவது இழையங்களிலிருந்து நிணநீர் கலங்களுக்குள் உள்வாங்கப்பட்டு பின்பு குருதியில் சேர்க்கப்படும். ஆனால் குருதிச் சுற்றோட்டம் ஒரு பூரண சுற்றோட்டம் ஆகும். ஆரம்பிக்கும் இடத்தில் மீண்டும் முடிவடையும்.
குருதிச் சுற்றோட்டத் தொகுதி விருத்தியடைய வேண்டியதன் அவசியம்
எளிய விலங்குகளில் அதாவது COelentereta, Platyhelmenthes,Nematoda வில் குருதிச் சுற்றோட்டத் தொகுதி விருத்தி யடைவதில்லை. இவற்றில் மேற்பரப்பு கனவளவு விதிதம் 1 இலும் அதிகம். எனவே உடல் மேற்பரப்பினூடான பரவல் முறையிலான பதார்த்தக் கொண்டு செல்லல் போதுமானது ஆகும்.
விலங்குகள் பருமனிலும் சிக்கல். தன்மையிலும் அதிகரிக்கும் போது இவற்றில் பதார்த்த கொண்டு செல்லல் அளவு அதிகரிக்கிறது. அத்துடன் கொண்டு செல்லப்படும். தூரமும் அதிகரிக்கிறது. எனவே பரவல் முறையிலான பதார்த்த கொண்டு செல்லல் போதுமானதன்று. எனவே வினைத்திறனாக உடல் முழுக்க பதார்த்த கொண்டு செல்லலுக்காக குருதி சுற்றோட்டத் தொகுதி விருத்தியடைந்துள்ளது
.
1. முதலில் குருதிச் சுற்றோட்டத் தொகுதி விருத்தியடைந்த கணம்Annelida
2. குருதி சுற்றோட்டத் தொகுதியின் மொத்த தொழில் : பதார்த்த கொண்டு செல்லல்.
சகல Arthropoda களிலும் cephalopodaதவிர்ந்த ஏனைய Mollusca களிலும் திற சுற்றோ கணப்படுகின்றது.
Cephalopoda களில் மூடி. சுற்.
திறந்த சுற்றோட்டம் எனப்படுவது இதயத்திலிருந்து குருதி பம்பப்பட்டு குருதிக்கலன் { நாடியினுள் செலுத்தப்பட்டு அது புன்னாடிகளாக பிரிந்து குருதிக் குழியினுள் குருதியை விடுவித்து மீண்டும் இதயத்திலுள்ள வாயுருக்களினூடாக இதயத்தை அடைதலாகும்.
குருதி குறைந்த அமுக்கத்துடன் மந்தமாக அசையும்.
குருதிக் குழியுடன் இழையங்கள் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் பதார்த்த பரிமாற்றம் கட்டுப்பாடும் இன்றியது நேரடியாக நிகழும்.
மூடிய குருதிச் சுற்றோட்டம்
மூடிய சுற்றோட்டத்தொகுதி எனப்படுவது இதயத்திலிருந்து குருதி நாடிகளுள் பம்பப்பட்டு குருதிமயிர்கலன்களினூடாக பின்பு நாளங்களினூடு மீண்டும் குரதி இதயத்தை அடையும் சுற்றோட்டமாகும்.
பின்வரும் கணங்களில் இவ்வகையான சுற்றோட்டம் காணப்படுகிறது.
1. கணம்Mollusca (Cephalopoda)
2. கணம்Annelida
3. கணம் Echinodermata
4. கணம் Chordata
குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் அடிப்படையான இயல்புகள்
ஒரு குருதிச் சுற்றோட்டத் தொகுதி அடிப்படையாக 3 இயல்புகளை கொண்டிருத்தல் வேண்டும்.
1. சுற்றி ஓடும் திரவமான குருதி இழையம்
2. சுருங்கத்தக்க சுருங்கித் தரைக் கூடிய இதயம் பம்பியாக தொழிற்படும் இதயம் திரவடைந்த குருதிக் கலன்
3. திரவம் சுற்றி ஓடுவதற்கான குருதிக் கலன்கள் குழாய்கள்
குருதிச் சுற்றோட்ட வகைகள்
திறந்த குருதிச் சுற்றோட்டம்
பின்வரும் கணங்களில் இவ்வகையான சுற்றோட்டம் காணப்படுகிறது.
1.கணம்Mollusca (Cephalopoda)
2. .கணம் Arthropoda
இச் சுற்றோட்டத்தில் குருதி குருதிக்கலன்களுக்குள் காணப்படும் உயர் அமுக்கத்துடன் விரைவாக பாயும். பதார்த்தப் பரிமாற்றம் மயிர்கலங்களினூடாக பரவல் முறையினால் நிகழும். எனவே பதார்த்தப்பரிமாற்றம் கட்டுப்பாட்டுக்குரியது.
மூடிய குருதிச் சுற்றோட்டம் இடையிலான பிரதான வேறுபாடு 2 தருக.
திறந்த குருதிச் சுற்றோட்டம் | மூடிய குருதிச் சுற்றோட்டம் |
குருதி குருதிக்குழியில் தங்கி நிற்கும் | குருதிக் கலன்களில் தங்கி நிற்கும் |
பதார்த்த பரிமாற்றம் நேரடியாக நிகழும் | குருதி மயிர்க்கல சுவரினூடாக நிகழும் |
ஒற்றை சுற்றோட்டம்
ஒற்றை குருதிச் சுற்றோட்டம் எனப்படுவது ஒரு பூரண சுற்றோட்டத்திற்கு போது இதயத்திற்கூடாக குருதி ஒரு தடவை பாயும் சுற்றோட்டம் ஆகும்.
இச் சுற்றோட்டத்தின் போது இதயத்திலிருந்து குருதி (நாடி) கலன்களினூடாக சுவாச கட்டமைப்பை அடைந்து பின் அங்கிருந்து குருதிக் கலனினூடாக உடற்பகுதியை அடைந்து மீண்டும் குருதிக் கலனினூடாக இதயத்தை அடைதல் ஆகும்.
இச் சுற்றோட்டத்தில் குருதி மிக குருதியமுக்கத்துடன் உடற் பகுதிக்கு செல்லும்
Eg : கணம் A
. கணம் Chordata
கணம்Annelida
இரட்டை சுற்றோட்டம்
இரட்டை சுற்றோட்டம் எனப்படுவது ஒரு பூரண சுற்றோட்டத்தின் போது இதயத்திற்கூடாக குருதி இரு தடவை பாயும் சுற்றோட்டம் ஆகும். இதில் 2 வகை உண்டு.
பூரணமற்ற இரட்டை குருதிச் சுற்றோட்டம்
பூரணமற்ற இரட்டை குருதிச் சுற்றோட்டம் எனப்படுவது பூரண சுற்றோட்டத்தின் போது இதயத்திற்கு குருதியின் ஒரு பகுதி 2 தடவை இதயத்தினூடு பாய்தல்.
இச் சுற்றோட்டம்
1. வகுப்பு Amphibia
2. வகுப்பு Reptelia
Reptelia வில் முதலை விதிவிலக்கானது. இதில் இதயம் 4 அறைகளை கொண்டது. எனவே பூரணமான இரட்டை சுற்றோட்டம்.
இச் சுற்றோட்டத்தின் பிரதிகூலம் ஒட்சியேற்றப்பட்ட குருதியும் ஒட்சியிறக்கப்பட்ட குருதியும் கலக்கின்றன. எனவே உடல் பகுதிக்கு 100% ஒட்சியேற்றப்பட்ட குருதி வழங்கப்பட முடியாது.
பூரணமான இரட்டை குருதிச் சுற்றோட்டம்
பூரணமான இரட்டை குருதிச் சுற்றோட்டம் எனப்படுவது ஒரு பூரண குருதி சுற்றோட்டத்தின் போது இதயத்திற்கூடாக முழுக் குருதியும் இரண்டு தடவை பாயும் சுற்றோட்டம் ஆகும்.
இச்சுற்றோட்டம் கணம் Chordata வில் வகுப்பு Aves , mammelia விலும் Reptelia வில் முதலையில் மட்டும் காணப்படும்.
இச் சுற்றோட்டத்தில் ஒட்சியேற்றப்பட்ட ஒட்சியிறக்கப்பட்ட குருதி முற்றாக வேறாக்கப்படுகின்றன. அத்துடன் உட லுக்கு குருதி மிக விரைவாக வழங்கப்படுகின்றது.
பறவைகள் பாலூட்டிகளில் பூரணமான இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் விருத்தியடைந்ததன் நோக்கம் இவை உயர் அனுசேபத்தை கொண்டவை. அத்துடன் இளம் சூட்டு மாறா வெப்பநிலை உடையவை. எனவே பூரணமான இரட்டைக் குருதிச் சுற்றோட்டம் காணப்படும்.
இவ் அடிப்படை நாடி சுற்றோட்ட தொகுதி எல்லா முள்ளந்தண்டு விலங்குகளின்ல் முளைய நிலையில் காணப்படு கின்றது.
இத் திட்டத்தில் வயிற்றுப் புறமான இதயச் தசையிழையத்தால் ஆன இதயம் நாளங்களில் இருந்து குருதியை பெற்றுக் கொள்ளும்.
1 சோணையறை 1 இதயவறை இதயம் கொண்டது.
சோணையறைக்கூடாக குருதியை பெற்று இதயவறைக் கூடாக குருதியை வெளிநோக்கி வயிற்றுப்புற தொகுதி பெருநாடியினூடாக செல்லும்.
வயிற்றுப்புற தொகுதி பெருநாடி 6 பக்கத்துக்குரிய பெருநாடி விற்களாக பிரியும். பின்பு பக்கப் பெருநாடி விற்கள் இணைந்து உடலின் பக்கப்புறமாக பக்க தொகுதி நெருநாடியை உருவாக்கும்.
இவை பின்புறமாக இணைந்து தனியான நடுக்கோட்டுக்குரிய முதுகுப்புற பெருநாடியை உருவாக்கும். இது உடலுக்கு குருதியை கொண்டு செல்லும்.
விருத்தி நிகழும் போது இவ் அடிப்படை திட்டத்திலிருந்து வேறுபாடு ஏற்படுகிறது.
மீன்களில் நிறையுடலிகளிலும் இத்திட்டம் காணப்படுகிறது.
1. Amphibian, Reptelia களில்
1, 2, 5 வது பக்கத் தொகுதி பெருநாடி விற்கள் இழக்கப்படுகின்றன.
இதயம் 3 அறைகொண்டதாக மாற்றப்படும். 2 சோணையறைää 1 இதய அறை
3 வது சோடி விற்கள் சிரசு நாடியாக மாற்றப்படுகின்றது.
4 வது சோடி விற்கள் தொகுதிப் பெருநாடியாக மாறும்.
6 வது சோடி விற்கள் சுவாசப்பை நாடிகளாக மாறும்.
2. Avea இல்
1, 2, 5 வது நாடி விற்கள் இழக்கப்படுகின்றன.
இதயம் 4 அறைகொண்டதாக மாறும். 2 சோணையறைää 2 இதய அறை
3 வது சோடி விற்கள் சிரசு நாடியாக மாற்றம்.
4 வது சோடி விற்களில் இடதுபுறம் இழக்கப்பட்டு வலதுபுறம் தனித்த தொகுதிப் பெருநாடியாக மாறும்.
6 வது நாடி விற்களில் சுவாசப்பை நாடி தோன்றும்.
3.Mammalia களில்
1, 2, 5 வது பக்கநாடி விற்கள் இழக்கப்படும்
3 ஆவது சோடி சிரசு நாடியாக மாறும்.
4 வது சோடி விற்களில் வலதுபுறம் மறைந்து இடதுபுறம் தனியான தொகுதிப் பெருநாடியாக மாறும்.
6 வது சோடி விற்களில் சுவாசப்பை நாடி தோன்றும்.
குருதிக் கலன்கள் 3 வகைப்படும்.
1. நாடி
2. நாளம்
3. மயிர்க்கலம்
நாடி | நாளம் | மயிர்க்கலன் |
இதயத்திலிருந்து குருதியை வெளி நோக்கி கொண்டு செல்லும் | இதயத்தை நோக்கி | புன்னாடி புன்னாளத்தை இணைத்து பதார்த்த பரிமாற்றம் நிகழும் இடம் |
நடுப்படை தடித்தது | நடுப்படை மெல்லியது | |
உள்ளிடம் சிறியது எனவே குருதி கனவளவு குறைவு | உள்ளிடம் பெரியது குருதி கனவளவு கூட – | |
நாடியினுள் வால்வுகள் இல்லை | நாளத்தினுள் வால்வுகள் காணப்படும் | வால்வுகள் இல்லை |
குருதி விரைவாக பாயும் | ஆறுதலாக | ஆறுதலாக |
பொதுவாக ஒட்சியேற்றப்பட்ட குருதி எடுத்துச் செல்லப்படும். விதிவிலக்கு : சுவாசப்பை நாடி |
பொதுவாக ஒட்சியேற்றப்பட்ட குருதி எடுத்துச் செல்லப்படும். விதிவிலக்கு : சுவாசப்பை நாடி |
நாடி நாளங்களுக்கிடையிலான வேறுபாடு
நாடி | நாளம் |
சுவர் தடித்தடி | சுவர் மெல்லியது |
நாடியினுள் வால்வுகள் இல்லை | . நாளத்தினுள் வால்வுகள் உண்டு |
உள்ளிடம் சிறியது | உள்ளிடம் பெரியது |
மீள்தன்மை கொண்ட சுவர் | மீள்தன்மை அற்ற சுவர் |
விலங்குகளிடையே காணப்படும் குருதிச்சுற்றோட்டத் தொகுதிகள் பின்வருவனவாகும்.
A – திறந்த சுற்றோட்டத் தொகுதி
B – மூடிய ஒற்றைச் சுற்றோட்டத் தொகுதி
C – மூடிய இரட்டைச் சுற்றோட்டத் தொகுதி
A,B,C என மேலே குறிப்பிட்டுள்ள சுற்றோட்டத் தொகுதிகளைக் கொண்ட விலங்குகளை சரியான ஒழுங்கில் குறிப்பிடுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇவ்வினா பின்வரும் விலங்குகளின் குருதிச்சுற்றோட்டத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டது.
a. கடலாமை
b. கூடில்லா நத்தை
c. Icthyophis
d. கரப்பான்
e. ஒக்றோபஸ் (Octopus)
f. சிலந்தி
g. Nereis
மேற்குறித்த விலங்குகளுள் திறந்த குருதிச் சுற்றோட்டத் தொகுதியைக் கொண்டவை எவை?
Review Topicமுலையூட்டிகளின் குருதிச்சுற்றோட்டத் தொகுதியின் அடிப்படைத் திட்டம் தொடர்பான சில கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – முதுகுப்புற பெருநாடி அடிப்படைத் திட்டத்தின் 4 ஆவது சோடி பெருநாடி வில்லுகளிலிருந்து உருவாகின்றது.
B – சிரசு நாடிகள் அடிப்படைத் திட்டத்தின் 2 ஆவது சோடி பெருநாடி வில்லுகளிலிருந்து உருவாகின்றது.
C – அடிப்படைத் திட்டத்தின் 3 ஆவது மற்றும் 5 ஆவது பெருநாடி வில்லுகள் இழக்கப்படுகின்றன.
D – அடிப்படைத் திட்டத்தின் 6 ஆவது சோடி பெருநாடி வில்லுகள் சுவாசப்பை நாடிகளாக உருவாகும்.
மேற்குறிப்பிட்ட கூற்றுகள் சரியானது / சரியானவை எது / எவை?
Review Topicவிலங்குகளிடையே காணப்படும் குருதிச்சுற்றோட்டத் தொகுதிகள் பின்வருவனவாகும்.
A – திறந்த சுற்றோட்டத் தொகுதி
B – மூடிய ஒற்றைச் சுற்றோட்டத் தொகுதி
C – மூடிய இரட்டைச் சுற்றோட்டத் தொகுதி
A,B,C என மேலே குறிப்பிட்டுள்ள சுற்றோட்டத் தொகுதிகளைக் கொண்ட விலங்குகளை சரியான ஒழுங்கில் குறிப்பிடுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇவ்வினா பின்வரும் விலங்குகளின் குருதிச்சுற்றோட்டத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டது.
a. கடலாமை
b. கூடில்லா நத்தை
c. Icthyophis
d. கரப்பான்
e. ஒக்றோபஸ் (Octopus)
f. சிலந்தி
g. Nereis
மேற்குறித்த விலங்குகளுள் திறந்த குருதிச் சுற்றோட்டத் தொகுதியைக் கொண்டவை எவை?
Review TopicAnswer: All Answers
முலையூட்டிகளின் குருதிச்சுற்றோட்டத் தொகுதியின் அடிப்படைத் திட்டம் தொடர்பான சில கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – முதுகுப்புற பெருநாடி அடிப்படைத் திட்டத்தின் 4 ஆவது சோடி பெருநாடி வில்லுகளிலிருந்து உருவாகின்றது.
B – சிரசு நாடிகள் அடிப்படைத் திட்டத்தின் 2 ஆவது சோடி பெருநாடி வில்லுகளிலிருந்து உருவாகின்றது.
C – அடிப்படைத் திட்டத்தின் 3 ஆவது மற்றும் 5 ஆவது பெருநாடி வில்லுகள் இழக்கப்படுகின்றன.
D – அடிப்படைத் திட்டத்தின் 6 ஆவது சோடி பெருநாடி வில்லுகள் சுவாசப்பை நாடிகளாக உருவாகும்.
மேற்குறிப்பிட்ட கூற்றுகள் சரியானது / சரியானவை எது / எவை?
Review Topic
முளைய நிலையில் காணப்படும் நாளக்குடா வலது சோணையறையாக வியத்தமடையும். வினாவில் இது முதுகுப் புறமாகக் கொள்ளப்படுகிறது
நாளக்குடா எங்கே காணப்படும்?