Please Login to view full dashboard.

முதலுரு மென்சவ்வு

Author : Admin

13  
Topic updated on 02/14/2019 11:26am

அமைவிடம்
சகல கலங்களிலும் முதலுருவை எல்லைப்படுத்தி / சூழக் காணப்படும் கட்டமைப்பு ஆகும்.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
அமைப்பு :

  1. பொஸ்போ இலிப்பிட்டு இருபடை
  2. பொஸ்போ இலிப்பிட்டின் தலைப்பகுதி
  3. பொஸ்போ இலிப்பிட்டின் வால் பகுதி
  4. ஊடுருவிய கோளப்புரதம்
  5. புரத நுண்கால்வாய்
  6. மேற்பரப்பு / சுற்றயலுருக்குரிய புரதம்
  7. கொலஸ்திரோல்
  8. கிளைக்கோ இலிப்பிட்டு (காபோவைதரேற்றுடன் இலிப்பிட்டு இணைந்துள்ளது)
  9. கிளைக்கோ புரதம்
  • கல மென்சவ்வு இலிப்பிட்டு, புரதம், காபோவைதரேற்று ஆகிய உயிரியல் மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டது.
  • இவற்றுள் இலிப்பிட்டு, புரதம் அதிகளவிலும், காபோவைதரேற்று மிகக் குறைந்தளவிலும் காணப்படும்
  • சராசரி தடிப்பு 7 – 8nm
  • இங்கு அதிகளவில் காணப்படும் இலிப்பிட்டு வகை பொஸ்போ இலிப்பிட்டு ஆகும்.
  • ஒவ்வொரு பொஸ்போ இலிப்பிட்டும் முனைவாக்கமுடைய / நீர் விருப்புடைய தலைப்பகுதியையும் முனைவாக்கமற்ற / நீர் வெறுப்புடைய வால் பகுதியையும் அல்லது 2 ஐதரோகாபன் சங்கிலியையும் கொண்டு காணப்படும்.
  • பொஸ்போ இலிப்பிட்டு இரு படைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வால்பகுதிகள் உள்நோக்கியும் தலைப்பகுதி வெளிநோக்கியும் காணப்படும்.
  • கலமென்சவ்வின் அடிப்படைக் கட்டமைப்பாக பொஸ்போ இலிப்பிட்டு காணப்படும். இது தொடர்ச்சியாக காணப்படும்.
  • இம் மூலக்கூறுகள் பக்கவாட்டில் விரைவாக அசையக் கூடியன.
  • பொஸ்போ இலிப்பிட்டின் பக்கவாட்டான அசைவு கல மென்சவ்விற்கு பாயி அமைப்பை வழங்குகின்றது.
  • விலங்குக் கலமென்சவ்வில் பொஸ்போ இலிப்பிட்டிற்கு மேலதிகமாக கொலஸ்திரோல் காணப்படுகின்றது. இது பொஸ்போ இலிப்பிட்டுகளுக்கிடையில் காணப்பட்டு அதன் அசைவை குறைக்கின்றன. எனவே, குறைந்த பாயித் தன்மையைக் கொண்டது.
  • மென்சவ்வில் காணப்படும் புரத வகை கோளப்புரதங்கள் ஆகும். தொடர்ச்சியற்று பொஸ்போ இலிப்பிட்டிற்குள் அமிழ்ந்து காணலாம்.
  • புரதங்கள் இரு வகை
    1. ஊடுருவிய புரதங்கள்
    2. சுற்றயலுக்குரிய புரதங்கள்
  • சுற்றயலுக்குரிய புரதங்கள் அமிழ்ந்து காணப்படாமல் கலமென்சவ்வின் உட்புறம், வெளிப்புறம் காணப்படுகின்றது.
  • ஊடுருவிய புரதங்கள் பகுதியாக ஊடுருவி / முழுமையாக ஊடுருவி காணப்படும்.
  • உட்புறமான புரதம் குழியவன்கூட்டுடன் இணைந்து காணப்படும்.
  • கலமென்சவ்வில் புரதம் தொடர்ச்சியற்று சிதறி காணப்படும் அமைப்பு சித்திர வடிவை வழங்குகின்றது.
  • எனவே கலமென்சவ்வின் அமைப்பு பாயி சித்திர மாதிரி எனப்படும்
  • இம்மாதிரியை முன்வைத்த விஞ்ஞானிகள் Singer & Nicholsenகாபோவைதரேற்றுகள் வெளிப்புற மேற்பரப்பில் மட்டும் காணப்படும்.
  • சிறிய கிளைத்த சங்கிலியாக காணப்படுகின்றது.
  • புரதத்துடன் இணைந்து காணப்படின் கிளைக்கோபுரதம் எனவும் இலிப்பிட்டுடன் இணைந்து காணப்படின் கிளைக்கோ இலிப்பிட்டு எனவும் அழைக்கப்படும்.
  • கிளைக்கோ புரதமே அதிகளவில் காணப்படுகின்றது.
  • இது ஒரு தேர்ந்து புகவிடும் மென்சவ்வு / ஒருபங்குபுகவிடும் மென்சவ்வு எனலாம்.

 

முதலுருமென்சவ்வு கூறு
பொஸ்போ இலிப்பிட்டு
  • கலமென்சவ்விற்கு அடிப்படை அமைப்பு வழங்கல்
  • பதார்த்த பரிமாற்றம்
  • திரவ அமைப்பு வழங்கல்
புரதம்
  • பதார்த்த பரிமாற்றம்
  • நொதியமாகத் தொழிற்படல்
  • வாங்கியாகத் தொழிற்படல்
  • கலம் அடையாளம் காணல் (கிளைக்கோபுரதம்)
  • குழியவன்கூட்டுடன் இணைந்து உறுதி வழங்கல்

கலமென்சவ்வின் தொழில்கள்  Image Tipn-6Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  1. கலத்தின் இயக்கத்திற்குரிய எல்லையாகத் தொழிற்படல்
  2. நீர், அயன்கள், சேதன மூலக்கூறுகளை ஊடுசெல்ல அனுமதித்தல்
  3. கழிவுப் பதார்த்தங்கள் வெளியேற்றப்படலை சீராக்கல்
  4. கலத்தின் பிரசாரண சமநிலையைப் பேணுதல்
  5. வாங்கியின் ஊடாகத் தகவல்களைப் பெற்று கலங்களுக்கிடையேயான செயற்பாடுகளை இயைபாக்க சமிஞ்ஞைகளைக் கடத்துதல்

 

பரவல் 

  • செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்கு செறிவுப் படித்திறனுக்கு ஏற்ப கலமென்சவ்வின் ஊடான பதார்த்த பரிமாற்றம் பரவல் எனப்படும்.
  • இது கல மென்சவ்வின் பொஸ்போ இலிப்பிட்டு படையினூடாக நடைபெறும்.
  • நேரடியான பதாரத்த பரிமாற்றம்
  • விரைவாக நிகழ்கின்றது
    (உ – ம்) சுவாச வாயுக்களான O2, CO2 பரிமாற்றம்

பிரசாரணம்

  • நீர் செறிவு கூடிய இடத்திலிருந்து / நீர் அழுத்தம் கூடிய இடத்திலிருந்து நீர் செறிவு குறைந்த இடத்திற்கு  நீர் மூலக்கூறுகள் ஒருபங்குபுகவிடும் மென்சவ்வின் ஊடாக கொண்டு செல்லப்படுதல் பிரசாரணம் எனப்படும். (உ-ம்) : நீர்

தூண்டப்பட்ட பரவல்

  • செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்கு மூலக்கூறுகள் கலமென்சவ்வில் உள்ள புரதங்களின் உதவியுடன் பரிமாற்றப்படுதல் ஆகும்.
  • இது கால்வாய்ப் புரதங்களின் ஊடாகவும், காவிப் புரதங்களின் ஊடாகவும் நிகழ்கின்றது.
  • கால்வாய்ப் புரதத்தில் புரதம் நிலையான வடிவத்தைக் கொண்டிருக்கும் காவிப்புரத்தின் ஊடான பரிமாற்றத்தில் புரதத்தின் வடிவம் மாற்றத்திற்கு உள்ளாகும்.
  • (உ-ம்) – காவிபுரதம் → குளுக்கோஸ், அமினோவமிலம்
    கால்வாய்ப் புரதம் → அயன்கள்

உயிர்ப்பான கொண்டுசெல்லல்

  • குறைந்த செறிவு உள்ள இடத்திலிருந்து கூடிய செறிவுள்ள இடத்திற்கு செறிவுப் படித்திறனுக்கு எதிராக சக்தி பயன்படுத்தி கலமென்சவ்வில் உள்ள காவிப் புரதத்தின் ஊடாக பதார்த்தம் பரிமாற்றப்படுதல் உயிர்ப்பான கொண்டுசெல்லல் எனலாம்.
  • இங்கு காவிப் புரதம் பம்பி எனலாம்.
  • (உ – ம்) : சிறுகுடல் கலங்களில் → குளுக்கோசு, அமினோ அமிலம்
    நரம்பு கலம் → Na+, K+
    தலைகலம் → Ca2+
    சிறுநீரகத்தி கலம் → தாவரங்களில் வேர்மயிர் ஊடான கனியுப்பு அகத்துறிஞ்சல்

குழியமாதல்

  • கலமென்சவ்வு புடகமாகி சக்தி செலவீட்டுடன் தொகையாகப் பதார்த்தங்கள் பரிமாற்றப்படுதல் குழியமாதல் எணலாம்.
  • இக் குழியமாதல் இரு வகைப்படும்.
    1. புறக்குழியமாதல்
    2. அகக்குழியமாதல்
  • புறக்குழியமாதலின் போது கலமென்சவ்வு புடகமாகி கழிவுப் பதார்த்தங்களில் சுரப்பு பதார்த்தங்கள் கலத்திலிருந்து வெளிநோக்கி வெளியேற்றப்படும்.
  • அக குழியமாதல் எனப்படுவது கலமென்சவ்வு புடகமாகி பதார்த்தங்கள் உள்ளே எடுக்கப்படுதல் ஆகும்.
  • இது இரு நிலைகளில் உள்ளெடுக்கப்படுகின்றது.
    1. தின்குழியமாதல் → திண்ம நிலையில் உள்ளெடுக்கப்படுதல்.
      (உ – ம்) : WBC கலங்களால் பற்றீரியாக்கள் உள்ளெடுக்கப்படுதல்.
    2. குடிக்குழியமாதல் → திரவத் துளிகளாக உள்ளெடுக்கப்படும்
      (உ – ம்) : புரதங்கள்

கலப்புறக்கூறு / கலக்கவசம்

  • கலமென்சவ்விற்கு வெளிப்புறமாக காணப்படும் கட்டமைப்புகள் கலப் புறக்கூறுகள் / கலக்கவசம் எனப்படும்.
  • இது உயிருள்ள கலத்தினால் முதலுரு மென்சவ்விற்கு வெளிப்புறமாக சுரக்கப்படுகின்றது.
  • இயூக்கரியோற்றாத் தாவரக்கலங்களில் இது கலச்சுவராகக் காணப்படுகிறது. விலங்குக் கலங்களில் இது கலப்புறத் தாயம் என அழைக்கப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (13 QUESTIONS)

பெரிய புரத மூலக்கூறு முதலுரு மென்சவ்வினூடாக கலத்தினுட் புகத்தக்கதாக இருப்பது,

Review Topic
QID: 3241
Hide Comments(0)

Leave a Reply

உயிரினவியற் மென்சவ்வுகள் தொடர்பாக பின்வருவனவற்றுள் எது தவறானது?

Review Topic
QID: 3277
Hide Comments(0)

Leave a Reply

கல மென்சவ்வுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் எது /  எவை உண்மையானது / உண்மையானவை?

Review Topic
QID: 3419
Hide Comments(0)

Leave a Reply

விலங்குக் கலங்களின் முதலுரு மென்சவ்வு பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது பொய்யானது?

Review Topic
QID: 3042
Hide Comments(0)

Leave a Reply

விலங்குக் கலத்தில் உள்ள புன்னங்கமானது கல மென்சவ்வினால்/ மென்சவ்வுகளினால் வரைப்புற்ற உபகலக் கட்டமைப்பென வரையறுக்கப்படுமெனின், பின்வரும் கட்டமைப்புக்களில் எதனைப் புன்னங்கமாகக் கருத முடியாது?

Review Topic
QID: 3121
Hide Comments(0)

Leave a Reply

பெரிய புரத மூலக்கூறு முதலுரு மென்சவ்வினூடாக கலத்தினுட் புகத்தக்கதாக இருப்பது,

Review Topic
QID: 3241

உயிரினவியற் மென்சவ்வுகள் தொடர்பாக பின்வருவனவற்றுள் எது தவறானது?

Review Topic
QID: 3277

கல மென்சவ்வுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் எது /  எவை உண்மையானது / உண்மையானவை?

Review Topic
QID: 3419

விலங்குக் கலங்களின் முதலுரு மென்சவ்வு பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது பொய்யானது?

Review Topic
QID: 3042

விலங்குக் கலத்தில் உள்ள புன்னங்கமானது கல மென்சவ்வினால்/ மென்சவ்வுகளினால் வரைப்புற்ற உபகலக் கட்டமைப்பென வரையறுக்கப்படுமெனின், பின்வரும் கட்டமைப்புக்களில் எதனைப் புன்னங்கமாகக் கருத முடியாது?

Review Topic
QID: 3121
Comments Hide Comments(1)
Mohamed Sajeeth
mohamed sajeeth commented at 22:59 pm on 17/01/2019
hi
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank