உடல் பகுதியுடன் 3வது – 7 வது சோடி விலாஎன்புகள் இணைகின்றன.
மார்புப்பட்டையின் என்புமச்சையிலிருந்து செங்குழியங்கள் பிரதானமாக உற்பத்தியாகின்றன
தொழில்கள் :
சிறுசாவிகள், விலாஎன்புகள், தசைகள் என்பன இணைய இடமளிக்கின்றது.
உட்பகுதி அங்கங்களை பாதுகாக்கின்றது.
காற்றூட்டல் தொழிலை மேற்கொள்ளும்.
நெஞ்சறைக்கூட்டை தோற்றுவிக்க உதவும்.
வாழ்நாள் முழுவதும் குருதிக் கலங்களின் உற்பத்தியில் பங்கெடுக்கும்.
விலா என்புகள்
12 சோடி விலாஎன்புகள் உண்டு.
1 வது – 7வது சோடி விலாஎன்புகள் உண்மையான விலா என்புகளாகும். இவை மார்புப்பட்டையுடன் நேரடியாக இணைகின்றன.
8 வது – 10 வது சோடி விலாஎன்புகள் போலியான விலாஎன்புகள் ஆகும். இவை மறைமுகமாக மார்புப்பட்டையுடன் இணைகின்றன. இவை ஒவ்வொன்றும் தமக்கு மேலுள்ள விலாஎன்புடன் நேரடியாக இணைகின்றன.
1வது – 10வது சோடி விலாஎன்புகள் பளிங்குரு கசியிழையத்தின் மூலம் மார்புப்பட்டையுடன் / தமக்கு மேலுள்ள விலாஎன்புடன் இணைகின்றன.
11வது, 12 வது சோடி விலாஎன்புகள் மிதக்கும் விலாஎன்புகள் ஆகும் . இவை மார்புப்பட்டையுடன் இணையாது சுயாதீனமான முற்புற முனையை கொண்டிருக்கும்.
எல்லா விலாஎன்புகளும் பிற்புறமாக முள்ளந்தண்டு கம்பத்தில் நெஞ்சறை முள்ளென்புடன் மூட்டுக்கொள்கின்றன.
1வது சோடி விலா என்புகள் அசையும் ஆற்றல் அற்றவை. அவை சுவாச அசைவில் பங்கெடுப்பதில்லை. இவற்றை ஆதாரமாகக் கொண்டே ஏனைய விலாஎன்பு பழுவிடைத்தசைகளுக்கூடாக அசைகின்றன.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்