Please Login to view full dashboard.

மனிதனில் சமிபாடு

Author : Admin

11  
Topic updated on 02/14/2019 06:00am
  • மனிதனின் உணவுக்கால்வாயினுள் உள்ளெடுக்கப்படும் உணவு உணவுக் கால்வாயின் வெவ்வேறு பகுதிகளில் பௌதீக, இரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • வாய்க்குழியினுள் பற்களின் மூலம் உணவு பௌதிக மாற்றத்திற்கு உட்படுகிறது. வெட்டும் பல், வேட்டைப் பல், கடவாய்ப்பல் மூலம் முறையே உணவு வெட்டப்பட்டு, கிழிக்கப்பட்டு, அரைக்கப்பட்டு சிறு துகள்களாக மாறுகிறது.
  • உணவு உமிழ் நீருடன் கலக்கப்படுகிறது. இதன் மூலம் உணவின் pH நிலை 5.8 – 7.4 (6.8) இற்கு கொண்டுவரப்படுகிறது.
  • சீதத்தின் மூலம் உணவு வழுவழுப்பாக்கப்படுகிறது.
  • இலைசோசோமினால் உணவு தூய்மையாக்கப்படுகிறது.
  • உமிழ் நீருக்குரிய அமைலேசின் மூலம் சமைத்த உணவிலுள்ள மாப்பொருள் மோல்ற்றோசாக மாற்றப்படும். அதாவது இரசாயன மாற்றத்திற்குள்ளாகும்.
  • உணவு தொண்டையினுள் செலுத்தப்பட்டு விழுங்கல் செயற்பாட்டுக்கு உட்படுகிறது. உணவு திரளையாக இச்சையின்றிய செயற்பாட்டின் மூலம் விழுங்கப்படுகிறது.
  • களத்தில் உணவு சுற்றச்சுருக்கு அசைவு மூலம் இரைப்பை நோக்கி கடத்தப்படும். இங்கு உணவு பௌதிக மாற்றத்திற்கு மட்டும் உட்படும். சீதம் மூலம் உணவு மேலும் வழுவழுப்பாக்கப்படும்.
  • இரைப்பையில் கடைதல் அசைவின் மூலம் பௌதீக சமிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
  • உணவுடன் உதரச்சாறு / இரைப்பைச்சாறு கலக்கப்பட்டு உணவு அமிலத் தன்மையாக மாற்றப்படும். வழுவழுப்பு தன்மை அதிகரிக்கப்படும்.
  • பெப்சினோஜன், முதல் ரெனின் என்பன HCl இனால் உயிர்ப்பு நிலையான பெப்சின், ரெனின் ஆக மாற்றப்படும்.
  • உணவின் திரளை அமைப்பு நீக்கப்பட்டு உணவு இரைப்பைபாகு நிலைக்கு மாற்றப்படும்.
  • உணவு சிறுகுடலிற்கு கடத்தப்படும் சிறுகுடலில் பித்தச்சாறு, சதையச்சாறு, குடற்சாறு, புரூணரின் சுரப்பு என்பவற்றுடன் கலக்கப்படும்.
  • பித்தத்திலுள்ள பித்த உப்புக்களின் மூலம் இலிப்பிட்டு சிறு சிறு கோளங்களாக்கப்படும். அதாவது இலிப்பிட்டின் குழம்பாக்கல் நடைபெறும்.
  • இச்சாறுகளிலுள்ள  HCO3  இன்  மூலம் உணவின்  pH = 8 க்கு கொண்டுவரப்படும். (கார ஊடகம்)
  • நொதியங்களின் மூலம் இரசாயன சமிபாடு மேற்கொள்ளப்படும்.

சதையச்சாறிலுள்ள நொதியங்கள் Please Login to view the QuestionPlease Login to view the Question

  • என்ரோகைனேஸ்
    • திருச்சினோஜன் →  திருச்சின்
    • கைமோதிருச்சின் →  கைமோதிருச்சினோஜன்
  • அமைலேசு
    • மாப்பொருள் → மோல்ற்றோசு
  • கைமோதிருச்சின்
    • புரதம் →  இருபெப்டைட்டு + அமினோவமிலம்
  • இலிப்பேசு
    • இலிப்பிட்டு →  கொழுப்பமிலம் + கிளிசரோல்
  • நியூக்கிளியேசு
    • நியூக்கிளிக்கமிலம் →  நியூக்கிளியோடைட்டு

குடற்சாறிலுள்ள நொதியங்கள் Please Login to view the Question

  • மோல்றேசு
    • மோல்ற்றோசு  →  குளுக்கோசு
  • சுக்குரேசு
    • சுக்குரோசு →  குளுக்கோசு +  பிரக்ரோசு
  • இலக்ரேசு
    • இலக்ரோசு → குளுக்கோசு + கலக்ரோசு
  • அமைனோபெப்திடேசு
    • சிறிய பொலிபெப்டைட்டு → அமினோவமிலம் + இருபெப்டைட்டு
  • இருபெப்திடேசு
    •  புரதம் →  இருபெப்டைட்டு
  •  நியூக்கிளியோடைட்டேசு
    • நியூக்கிளிக்கமிலம் →  நியூக்கிளியோடைட்டு
  • சிறுகுடலில் சமிபாடு முற்றுப்பெரும். சமிபாட்டின் விளைவாக காபோவைதரேற்று எளிய ஒருசக்கரைட்டுக்களாகவும் புரதம் எளிய அமினோவமிலங்களாகவும் இலிப்பிட்டு எளிய கொழுப்பமிலம், கிளிசரோலாகவும் மாற்றப்படும்.
  • சமிபாட்டின் விளைவால் உருவாக்கப்பட்டவை யாவும் எளிய அகத்துறிஞ்சலுக்குரிய நிலைகளாகும்.
  • மனிதனில் பிரதான சமிபாடு கலப்புறச் சமிபாடாகும். உணவுக் கால்வாயின் உள்ளிடத்தில் நிகழ்கிறது. ஒரு சிறிதளவு சமிபாடு கலத்தக சமிபாடாகும்.
  • சில இருசக்கரைட்டுக்கள், பொலிபெப்டைட்டுக்கள், இருபெப்டைட்டுக்கள் சிறுகுடலின் மேலணிக் கலத்தினுள் உள்ளெடுக்கப்பட்டு அங்கு காணப்படும் நொதியங்களின் மூலம் கலத்தக சமிபாட்டிற்கு உட்படுகின்றன.
  • கலத்தக சமிபாடு நிகழும் கலம்  என்ரோகுழியம் / குடற்குழியம் எனப்படும். இதனுள் காணப்படும் நொதியங்களாவன மோல்றேசு, சுக்குரேசு, இலக்ரேசு, அமைனோபெப்திடேசு, இருபெப்திடேசு, என்ரோகைனேஸ் என்பனவாகும்.
மனிதனில் அகத்துறிஞ்சல்

உணவு அகத்துறிஞ்சல் எனப்படுவது சமிபாட்டின் விளைவான  எளிய கூறுகள் உணவுக் கால்வாயின் உள்ளிடத்திலிருந்து சிறுகுடலின் மேலணிக் கலங்கள் ஊடாக குருதிமயிர்க்கலன், பாற்கலனினுள் உள்ளெடுக்கப்படுதலாகும்.

  • உணவு அகத்துறிஞ்சலுக்காக சிறுகுடல் பின்வரும் கட்டமைப்பு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
    • நீண்ட குழாய் கட்டமைப்பு,.
    • வட்ட மடிப்புகளை கொண்டிருத்தல்.
    • சடைமுளைகளை கொண்டிருத்தல்.
    • சடைமுளையிலுள்ள மேலணிக் கலங்கள் நுண்சடைமுளைகளை கொண்டிருத்தல்.
    • ஒவ்வொரு சடைமுளையினுள்ளும் குருதி மயிர்ப்பின்னல் காணப்படல்.
    • ஒவ்வொரு சடைமுளையினுள்ளும் பாற்கலன் காணப்படல்.
  • சமிபாட்டின் விளைப்பொருட்களான எளிய கூறுகளான ஒருசக்கரைட்டுக்கள், அமினோவமிலங்கள், கொழுப்பமிலம், கிளிசரோல் என்பன பரவல், காவிப்புரதம், உயிர்ப்பான கொண்டுசெல்லல், பிரசாரணம் மூலம் உணவுக் கால்வாயின் உள்ளிடத்திலிருந்து மேலணிக் கலத்தினுள் செல்கின்றன.
  • ஒருசக்கரைட்டுக்கள், அமினோவமிலங்கள் மேலணிக் கலத்திலிருந்து குருதி மயிர்க்கலன்களை அடைகின்றன.
  • குருதி மயிர்க்கலன்கள் இவற்றை எடுத்துச் சென்று பின்பு இணைந்து ஈரல் வாயிநாளத்தை ஆக்கி ஈரலுக்கு கொண்டு செல்கின்றன.
  • அங்கு மேலதிக ஒருசக்கரைட்டுக்கள் பிரதானமாக குளுக்கோசு, கிளைக்கோஜனாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.
  • மேலதிக அமினோவமிலங்கள் அமைகைற்றலுக்கு உட்பட்டு யூரியா ஆக்கப்படுவதுடன் புதிய அமினோவமில தொகுப்புக்கும் பயன்படும்.
  • தேவையான அளவுக்குரிய குளுக்கோசு,அமினோவமிலங்கள் ஈரல்நாளத்தினூடாக குருதி சுற்றோட்டத்துக்கு கொண்டு செல்லப் பட்டு கலங்களால் தன்மயமாக்கப்படும்.
    ♦  குளுக்கோசு – கலச்சுவாசம், பதார்த்த தொகுப்பு
    ♦  புரதம் – வளர்ச்சி, பதார்த்த தொகுப்பு
  • கொழுப்பமிலம், கிளிசரோல் மேலணிக்கலத்தினால் மீண்டும் இலிப்பிட்டாக மாற்றப்படும்.
  • இவ் இலிப்பிட்டு சிறு கோளங்கள் ஒவ்வொன்றையும் சூழ புரதம் படரிடப்பட்டு இலிப்போ புரத சிறு கோளங்களாக மாற்றப்படும். இவை புறக்குழியமாதல் முறை மூலம் பாற்கலங்களில் செல்லும்.
  • பாற்கலணினூடாக நிணநீர் கலனினுள் எடுத்து செல்லப்பட்டு குருதியில் விடுவிக்கப்படும். குருதியில் மீண்டும் இலிப்பிட்டு கிளிசரோல், கொழுப்பமிலங்களாக மாற்றப்படும். குருதியினூடாக கலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலங்களில் தன்மயமாக்கப்படும்.
  • மேலதிக இலிப்பிட்டானது ஈரல், நடுமடிப்பு, தோலுக்கு கீழாக கொழுப்பானது கொழுப்பிழையத்தில் சேமிக்கப்படும்
  • கனியுப்புக்கள், விற்றமின்கள் சிறுகுடலினால் அகத்துறிஞ்சப்படும். விற்றமின்கள் இரப்பை, பெருங்குடலினாலும் அகத்துறிஞ்சலுக்கு உட்படும்.
  • நீர் இரப்பை, சிறுகுடல், பெருங்குடல், நேர்குடல் பகுதிகளில் அகத்துறிஞ்சப்படும். ஆனால் சிறுகுடலிலே பெருமளவு நீர் அகத்துறிஞ்சப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

வினாக்கள் 81 உம் 82 உம் பின்வரும் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வட்டவணையில் மனிதனில் காணப்படும் 3 சமிபாட்டு நொதியங்கள் நிரல் 1 இல் கொடுக்கப்பட்டுள்ளன. அவை உற்பத்தியாகும் பிரதான இடங்கள் நிரல் 2 இலும் அந்நொதியங்கள் தாக்கக்கூடிய கீழ்ப்படைகள் நிரல் 3 இலும் கொடுக்கப்பட்டுள்ளன.

1

நொதியங்கள் A,B,C என்பன உற்பத்தியாகும் பிரதான இடங்களைச் சரியான ஒழுங்கில் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4117
Hide Comments(0)

Leave a Reply

A,B,C என்னும் நொதியங்களின் கீழ்ப்படைகளைக் காட் டும் சரியான ஒழுங்கு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4120
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் சமிபாட்டு நொதியங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 4124
Hide Comments(0)

Leave a Reply

மனிதச் சமிபாட்டு நொதியங்கள் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 4131
Hide Comments(0)

Leave a Reply

அதன் தொழிலை வேறெந்த நொதியத்தினாலும் பிரதியீடு செய்ய முடியாத நொதியம் பின்வரும் மனித நொதியங்களுள் எது?

Review Topic
QID: 4148
Hide Comments(0)

Leave a Reply

வினாக்கள் 81 உம் 82 உம் பின்வரும் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வட்டவணையில் மனிதனில் காணப்படும் 3 சமிபாட்டு நொதியங்கள் நிரல் 1 இல் கொடுக்கப்பட்டுள்ளன. அவை உற்பத்தியாகும் பிரதான இடங்கள் நிரல் 2 இலும் அந்நொதியங்கள் தாக்கக்கூடிய கீழ்ப்படைகள் நிரல் 3 இலும் கொடுக்கப்பட்டுள்ளன.

1

நொதியங்கள் A,B,C என்பன உற்பத்தியாகும் பிரதான இடங்களைச் சரியான ஒழுங்கில் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4117

A,B,C என்னும் நொதியங்களின் கீழ்ப்படைகளைக் காட் டும் சரியான ஒழுங்கு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4120

மனிதனின் சமிபாட்டு நொதியங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 4124

மனிதச் சமிபாட்டு நொதியங்கள் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 4131

அதன் தொழிலை வேறெந்த நொதியத்தினாலும் பிரதியீடு செய்ய முடியாத நொதியம் பின்வரும் மனித நொதியங்களுள் எது?

Review Topic
QID: 4148
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank