Please Login to view full dashboard.

நொதியங்கள்

Author : Admin

22  
Topic updated on 02/16/2019 03:24am

நொதியத்தின் இயல்புகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நொதியங்கள் உயிர் உள்ள கலங்களில் உற்பத்தி செய்யப்படும் கோளப்புரதங்கள் ஆகும். ஆனால் உயிருள்ள, உயிரற்ற ஊடகங்களில் தொழிற்படக் கூடியது.
  • இவை உயிர் இரசாயன ஊக்கிகள் எனப்படும் அல்லது உயிர்க் கலங்களில் அனுசேப தாக்கங்களுக்கு ஊக்கியாக தொழிற்படுகின்றன.
  • இவை அனுசேபத் தாக்கங்களின் ஏவல் சக்தியைக் குறைத்து தாக்கவேகத்தை விரைவுபடுத்துகின்றது.
  • நொதியங்கள் மிகவும் வினைத்திறனானவை அல்லது ஒரு சிறிய அளவு நொதியம் அதிகளவு கீழ்ப்படையை மாற்றத்திற்கு உள்ளாக்கும்.
  • இவை புரதம் ஆக இருப்பதால் உயர் வெப்பநிலையில் அமைப்பழிவிற்குட்பட்டு தொழிற்பாடு இழக்கப்படும்.
  • இவற்றின் தாக்கம் தனித்துவமானது அல்லது ஒவ்வொரு நொதியமும் தனித்துவமான முப்பரிமாண அமைப்புடைய 3 – 12 அமினோ அமிலங்களைக் கொண்ட உயிர்ப்புமையத்தைக் கொண்டது. இதனுடன் அதற்குரிய தனித்துவமான கீழ்ப்படை இணையும் உயிர்ப்புமையத்தின் வடிவமும் கீழ்ப்படையின் வடிவமும் நிரப்புகின்ற தன்மை கொண்டவை.
  • பொதுவாக நொதிய ஊக்குவிப்புத் தாக்கங்கள் மீளும் தன்மை வாய்ந்தவை.
  • நொதிய ஊக்குவிப்புத் தாக்கங்கள் நீர்ப்பகுப்புத் தாக்கங்கள் ஆகும் அல்லது நீர் ஊடகத்தில் இவை நிகழ்கின்றன. கீழ்ப்படையுடன் நீர்மூலக்கூறு ஒன்று சேர்க்கப்படுகின்றது.
  • நொதியத் தொழிற்பாடு பின்வரும் காரணிகளால் பாதிப்படைகின்றது.
  1. வெப்பநிலை
  2. PH
  3. நொதியச் செறிவு
  4. கீழ்படைச் செறிவு
  5. நிரோதிகள்
  6. துணைக்காரணிகள்
  • உயிரியல் அனுசேபத் தாக்கங்களை ஊக்குவிக்கின்ற கோளப்புரதங்கள் நொதியங்கள் எனப்படும்.

தாக்கம் ஒன்றின் ஏவல் சக்தி Please Login to view the Question

evatsakthi

  • ஒரு புறவெப்பத் தாக்கமோ அகவெப்பத் தாக்கமோ நிகழ்வதற்கு சக்தி வழங்கப்பட வேண்டும்.
  • ஒரு இரசாயனத் தாக்கத்தை தொடங்குவதற்கு / ஆரம்பிப்பதற்கு தேவையான மேலதிக சக்தி ஏவற்சக்தி எனலாம்.
  • தாக்கத்தின் போது நொதியங்கள் இவ் ஏவற்சக்தியைக் குறைந்து தாக்கத்தை விரைவுபடுத்துகின்றன.
  • நொதியத் தொழிற்பாட்டுப் பொறிமுறை இரு பொறிமுறைகளால் விளக்கப்படுகின்றது.
    1. பூட்டுத் திறப்புப் பொறிமுறை – Fischer (1890)
    2. தூண்டப்பட்ட பொருந்தும் கருதுகோள் – Koshland (1959)

பூட்டுத் திறப்புக் கருதுகோள்Please Login to view the QuestionPlease Login to view the Question

07aa

  • இப்பொறிமுறையின்படி நொதியத்தின் உயிர்ப்புமையம் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது.
  • அத்துடன் திருத்தமான முறையில் இணையக்கூடியவாறு அதற்குரிய கீழ்ப்படை வடிவத்தைக் கொண்டிருக்கும்.
  • கீழ்ப்படை நொதியத்தின் உயிர்ப்புமையத்திற்கு நிரப்புகின்ற முறையில் வடிவத்தைக் கொண்டிருக்கும்.
  • நொதியங்கள் கீழ்ப்படையுடன் ஒப்பிடும்போது பருமனில் பெரியதாகயால் அது பூட்டிற்கு கீழ்ப்படை திறப்பிற்கும் ஒப்பிடப்படும்.
  • இத்தாக்கத்தின் போது உயிர்ப்பு மையத்தில் 3 – 12 அமினோ அமிலங்கள் காணலாம். மிகுதி அமினோ அமிலங்கள் நொதியத்தின் கோள அமைப்பைப் பேணுவதில் பங்கு கொள்ளும்.
  • மத்தியில் பெரிய புன்வெற்றிடம் கொண்டது. எனவே சுற்றயலுக்குரிய கரு, குழியவுரு காணப்படும்.
  • நொதியமும் கீழ்ப்படையும் பொருந்தி முதலில் நொதிய கீழ்ப்படைச் சிக்கலையும் தொடர்ந்து நொதிய விளைவுச் சிக்கல் உருவாக்கப்பட்டு பின்பு விளைவுகள் நொதியத்திலிருந்து வெளியேறும்.
  • இந்நொதிய மூலக்கூறு மீண்டும் இன்னொரு கீழ்ப்படையுடன் தாக்கத்தில் ஈடுபடும்.

தூண்டப்பட்ட பொருந்தும் பொறிமுறை

  • இது பூட்டுத் திறப்புப் பொறிமுறையின் மாறுபட்ட வடிவமாகும்.
  • இப்பொறிமுறையின்படி நொதியமும் அதன் உயிர்ப்புமையமும் மிகவும் நெகிழ்வுத் தன்மையானவை.
  • நொதியத்தின் உயிர்ப்புமையத்தின் வடிவத்திற்கு ஓரளவு நிரம்புகின்ற வடிவத்தை அதன் கீழ்ப்படை கொண்டிருக்கும்.
  • நொதியத்தின் கீழ்ப்படை உயிர்ப்புத் தானத்தில் அண்ணளவாக பொருந்தி அப்பொருந்துகை தூண்டுதலாக அமைந்து நொதியத்தின் உயிர்ப்புமைய வடிவத்துடன் கீழ்ப்படை சரியாக இறுக்கமாக பொருந்தக் கூடியவாறு மாற்றப்படுகின்றது.
  • தொடர்ந்து நொதியக் கீழ்ப்படைச் சிக்கல் உருவாக்கப்படுகின்றது. பின் நொதிய விளைவுச்சிக்கல் உருவாக்கப்படுகின்றது. பின்பு விளைவுகள் உயிர்ப்பு மையத்தை விட்டு வெளியேறுகின்றது.
  • விளைவுகள் வெளியேறியதும் உயிர்ப்பு மையத்தின் வடிவம் பழைய நிலையை அடையும்.
  • நொதியத் தொழிற்பாட்டைப் பாதிக்கும் காரணிகள்

வெப்பநிலை

  • temperature5°C இலிருந்து அண்ணளவாக 37ºC வரை வெப்பநிலையை அதிகரிக்கும்போது நொதியத் தாக்கவீதம் ஒவ்வொரு 10ºC இற்கும்  2 மடங்காக அதிகரிக்கும்.
  • 37ºC இல் நொதியத் தாக்கவீதம் உயர்வாக இருக்கும். இது சிறப்பு வெப்பநிலை எனப்படும்.
  • இதன் பின்பு வெப்பநிலை அதிகரிக்கும் போது நொதியத் தாக்கவீதம் மிகக் குறைவு / நிகழ்வதில்லை.ற்ற
  • 5ºC இற்குக் குறைவான வெப்பநிலையில் குறைவாக உள்ளபோது மூலக்கூறுகளின் இயக்க சக்தி மிகக் குறைவாகக் காணப்பட்டு மூலக்கூறுகளின் மோதுகை நிகழாது. எனவே, நொதியம் உயிர்ப்பற்ற / தொழிற்பாடு அற்ற நிலையில் காணப்படும்.
  • 37ºC வரை வெப்பநிலை அதிகரிக்கும்போது மூலக்கூறுகளின் இயக்க சக்தி அதிகரித்து மோதுகை மடங்காக அதிகரிக்கும்.
  • 37ºC இன் பின்பு நொதியங்கள் புரதங்கள் ஆகையால் அமைப்பழியத் தொடங்கும். எனவே, தாக்கவீதம் குறைந்து 60ºC யில் முற்றாக நிறுத்தப்படும்.

PH

ph

  • நொதியங்கள் பொதுவாக PH 4 – 10 வரை தொழிற்படுகின்றன.
  • சிறப்பு PH ஆக 7 காணப்படுகின்றது. காரணம் வன்னமிலம், வன்காரம் நொதியம் புரதம் ஆகையால் அமைப்பழிவை ஏற்படுத்துகின்றது. எனவே, தொழிற்பாடு இழக்கப்படுகின்றது.
  • சில விதி விலக்கான நொதியங்களும் காணப்படுகின்றன.
நொதியம் சிறப்பு PH
பெப்சின் 2
சுக்குரோஸ் 4.5 – 8.5
இலிப்பேஸ் 9
Catalase 7.6

கீழ்ப்படைச் செறிவு

keelpadaicherivu

  • கீழ்ப்படைச் செறிவை அதிகரிக்கும் போது ஒரு குறித்த கீழ்ப்படை செறிவு வரை நொதியத் தாக்கவீதம் அதிகரிக்கும். பின்பு மாறாது இருக்கும். காரணம் கீழ்ப்படைச் செறிவை அதிகரிக்கும் போது அங்குள்ள நொதிய மூலக்கூறுகளின் உயிர்ப்புமையங்கள் நிரம்பலடையும் வரை தாக்கவீதம் அதிகரிக்கும். பின்பு மாறாது இருக்கும்.

நொதியச் செறிவு 

  • நொதியச் செறிவை அதிகரிக்கும் போது தாக்க வீதம் அதிகரிக்கும். காரணம் கீழ்ப்படைச் செறிவு தாக்கத்தை எல்லைப்படுத்துவதில்லை. நொதியச் செறிவுடன் nothiyacherivuஒப்பிடும்போது கீழ்ப்படைச் செறிவு மிகையாகக் காணப்படும்.

நிரோதிகள்

  • இரசாயனப் பதார்த்தம் ஒன்று நொதியத்துடன் இணைந்து அதன் தாக்கவீதத்தை நிரோதிக்குமாயின் (குறைக்குமாயின்) அவ் இரசாயனப் பதார்த்தம் நிரோதிகள் எனப்படும்.
  • இவ் நிரோதிகள் இரு முறைகளில் தொழிற்படுகின்றன.
    1. போட்டியுள்ள நிரோதித்தல் (போட்டியுள்ள நிரோதி)
    2. போட்டியற்ற நிரோதித்தல் (போட்டியற்ற நிரோதி)

போட்டியுள்ள நிரோதித்தல்Please Login to view the Question

  • இவ்வகை நிரோதித்தலில் ஈடுபடும் நிரோதி கீழ்ப்படையின் வடிவத்தை ஒத்ததாக இருக்கும். எனவே, நொதியத்தின் உயிர்ப்புமையத்துடன் இணைவதற்கு அதன் கீழ்ப்படையுடன் போட்டியிடும்.
  • உயிர்ப்புமையத்துடன் இந் நிரோதி இணைந்து கீழ்ப்படை இணைவதைத் தடைசெய்யும்.
  • நிரோதியின் செறிவு அதிகரிக்கும் போது நொதியத்தின் தாக்கவீதம் படிப்படியாகக் குறைக்கப்படும்.
  • Eg – சல்பனோமைட் (Sulphanomide)
    மலோனேட் (Malonate)
  • போட்டியுள்ள நிரோதிகள் யாவும் மீளும் தன்மை வாய்ந்தவை.

போட்டியற்ற நிரோதித்தல்

  • இவ்வகை நிரோதித்தலில் ஈடுபடும் நிரோதி கீழ்ப்படையின் அமைப்பை ஒத்து இருப்பதில்லை. எனவே, உயிர்ப்புமையத்துடன் இணைவதற்கு கீழ்ப்படையுடன் போட்டியிடுவதில்லை. ஆனால், உயிர்ப்புமையம் தவிர்ந்த நொதியத்தின் ஏனைய பகுதியுடன் இணைந்து உயிர்ப்புமையத்தின் தனித்துவமான வடிவத்தை மாற்றுகின்றது. எனவே, கீழ்ப்படை உயிர்ப்புமையத்துடன் இணைய முடியாது. நொதியத் தாக்கம் நிறுத்தப்படும்.
  • இவ்வகை நிரோதிப்பு இரு வகையில் காணப்படுகின்றது.
    1. மீளும் முறை
    2. மீளா முறை
  • மீளும் முறையில் நிரோதி நொதியத்துடன் தற்காலிகமாக இணைந்து தாக்கத்தை நிறுத்துகின்றது.
    சயனைட் – போட்டியற்ற மீளும் நிரோதி
  • மீளா முறையில் நிரோதி நொதியத்துடன் தற்காலிகமாக இணைந்து தாக்கத்தை நிறுத்துகின்றது.
    பார உலோகங்கள் – Hg2+,Ag+,As+,Cd (போட்டியற்ற மீளா நிரோதி)
  • இப்பார உலோகங்கள் நொதியத்தில் – SH கூட்டத்துடன் இணைந்து நிரோதிக்கின்றன.

துணைக் காரணிகள்

  • (சில) நொதியங்களின் வினைத்திறனான தொழிற்பாட்டிற்குத் தேவையான புரதம் அல்லாத இரசாயனப் பதார்த்தம் துணைக் காரணி எனப்படும்.
  • இத்துணைக் காரணிகள் எளிய அயன்களிலிருந்து சிக்கலான சேதனச் சேர்வை வரை காணப்படுகின்றன.
  • இவை உயர் வெப்பநிலைக்கு உறுதியானவை.
  • தொழிற்படும் முறையைக் கொண்டு 3 வகைப்படும்.
    1. துணை நொதியம்
    2. சங்கலிதக் கூட்டம்
    3. அசேதன அயன்கள்

துணை நொதியம்

  • இது சேதனச் சேர்வையாகும்.
  • தாக்கத்தின் போது நொதியத்துடன் தளர்வாக சேர்ந்திருக்கும்.
  • இவை en/H வாங்கியாகத் தொழிற்பட்டு நொதியத் தாக்கத்தை வினைத்திறனாக்கும்.
  • இவை விற்றமின் D யிலிருந்து வருவிக்கப்படுகின்றது.
  • Eg – NAD,NADP துணைநொதியம் A,ATP
  • சில நொதியங்களின் தாக்கத்தின் போது தளர்வாக இணைந்து நொதியத் தாக்கத்தை வினைதிறனாக்கும் புரதமல்லாத சேதனச் சேர்வை துணைநொதியமாகும்.

சங்கலித கூட்டம்

  • இவை புரதமல்லாத சேதனச் சேர்வைகள்.
  • நொதியத்துடன் நிரந்தரமாக நெருக்கமாக இணைந்திருக்கும்.
  • en/H வாங்கியாகத் தொழிற்பட்டு நொதியத் தாக்கத்தை வினைத்திறனாக்கும்.
  • Eg – FAD,Biotin,Haem
  • சில நொதியங்களுடன் நிரந்தரமாக இறுக்கமாக இணைந்து காணப்பட்டு தாக்கத்தை வினைத்திறனாக்கும் புரதமல்லாத சேதனச் சேர்வைகளாகும். இவை சங்கலிதக் கூட்டம் எனப்படும்.

அசேதன அயன்கள்

  • இவை எளிய அயன்களாகும். எனவே, அசேதனச் சேர்வைகள்.
  • தாக்கத்தின் போது இவை நொதியத்தினது / கீழ்ப்படையினது வடிவத்தை மாற்றி வினைத்திறனாக நொதியக் கீழ்ப்படைச்சிக்கல் உருவாவதற்கு தூண்டி நொதியத் தாக்க வீதத்தை அதிகரிக்கின்றது.
  • Eg –  Cl – உமிழ் நீருக்குரிய அமைலேஸ்
    Zn2+ – காபொக்சி பெப்திடேஸ்
    Ca2+ – துரேம்போகைனேஸ்
RATE CONTENT 4, 1
QBANK (22 QUESTIONS)

நொதியத் தொழிற்பாட்டின் வீதத்தில் வெப்பநிலையின் தாக்கத்தைத் திறமையாக எடுத்துக்காட்டும் வரைபு மேற் காண்பவற்றுள் எது? (X அச்சு = வெப்பநிலை : Y அச்சு = நொதியத் தொழிற்பாட்டின் வீதம்)

Review Topic
QID: 3778
Hide Comments(0)

Leave a Reply

387 ஆம் 388 ஆம் வினாக்கள் பின்வரும் (A – E) வரையுள்ள வரைபுகளை அடிப்படையாகக் கொண்டவை. நொதியத் தாக்க வீதத்திற்கு (நிலைக்குத்து அச்சில்) ஒத்ததாய் பெய ரிடப்படாத காரணி (கிடை அச்சில்) குறிக்கப்பட்டுள்ள மையை இவை காட்டுகின்றன.
ஒரு நொதியத்தின் தாக்க வீதத்துக்கும் pH க்கும் இடையில் உள்ள தொடர்பினைக் காட்டும் வரைபு மேலுள்ளவற்றுள் எது?

Review Topic
QID: 3775
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நொதியத்தின் தாக்க வீதத்துக்கும் கீழ்ப்படையின் செறிவுக்கும் இடையில் உள்ள தொடர்பினைக் காட்டும் வரைபு மேலுள்ளவற்றுள் எது?

Review Topic
QID: 3776
Hide Comments(0)

Leave a Reply

இவ்வரைபுகளுள் (1-5) எது ஆவியுயிர்ப்பு வீதத்தின் மீதான சார் ஈரப்பதன் விளைவை மிகச் சிறந்த வகையில் குறித்துக் காட்டுகிறது?
(x அச்சின் மீது சார் ஈரப்பதனும் y அச்சின் மீது ஆவியுயிர்ப்பு வீதமும்)

Review Topic
QID: 3768
Hide Comments(0)

Leave a Reply

  • வினாக்கள் 175 உம் 176 உம் பின்வரும் வரைபுகளை அடிப்படையாகக் கொண்டவை.

இவ்வரைபுகளுள் (1-5) எது கீழ்ப்படைச் செறிவுக்கும் நொதியத் தாக்கவீதத்துக்குமிடையிலான தொடர்பை மிகச் சிறந்த வகையில் குறித்துக் காட்டுகிறது? (x அச்சின் மீது கீழ்ப்படைச் செறிவும் y அச்சின் மீது எதிர்த் தாக்க வீதமும்)

Review Topic
QID: 3767
Hide Comments(0)

Leave a Reply

மேற்காணப்படும் வரைபிலிருந்து நொதியத்தின் தொழிற்பாடு தொடர்பாக கீழே காண்பிக்கப்பட்ட உய்தறியக்கூடிய கூற்றுக்களுள் எக்கூற்று பொருத்தமாகும்?

Review Topic
QID: 3774
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களில் வழக்கமான சுவாசக்கீழ்ப்படை மேற்காண்பவற்றுள் எது?

Review Topic
QID: 3288
Hide Comments(0)

Leave a Reply

  • 100 முதல் 102 வரையிலான வினாக்கள் பின்வரும் படங்களை அடிப்படையாகக் கொண்டவை.

(10° – 60°) வெப்பநிலைக்கு எதிரே நொதியத்தின் தாக்க வீதம்

 

Review Topic
QID: 3747
Hide Comments(0)

Leave a Reply

x அச்சை ஆதாரப் படையின் செறிவு எனவும் y அச்சைத் தாக்கவீதம் எனவும் கருதினால், ஆதாரப்படையின் செறிவுக்கும் நொதியத் தாக்கத்தின் வீதத்துக்கும் இடையிலான தொடர்பை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் வரைபு எது?

Review Topic
QID: 3757
Hide Comments(0)

Leave a Reply

நொதியத் தொழிற்பாட்டின் வீதத்தில் வெப்பநிலையின் தாக்கத்தைத் திறமையாக எடுத்துக்காட்டும் வரைபு மேற் காண்பவற்றுள் எது? (X அச்சு = வெப்பநிலை : Y அச்சு = நொதியத் தொழிற்பாட்டின் வீதம்)

Review Topic
QID: 3778

387 ஆம் 388 ஆம் வினாக்கள் பின்வரும் (A – E) வரையுள்ள வரைபுகளை அடிப்படையாகக் கொண்டவை. நொதியத் தாக்க வீதத்திற்கு (நிலைக்குத்து அச்சில்) ஒத்ததாய் பெய ரிடப்படாத காரணி (கிடை அச்சில்) குறிக்கப்பட்டுள்ள மையை இவை காட்டுகின்றன.
ஒரு நொதியத்தின் தாக்க வீதத்துக்கும் pH க்கும் இடையில் உள்ள தொடர்பினைக் காட்டும் வரைபு மேலுள்ளவற்றுள் எது?

Review Topic
QID: 3775

ஒரு நொதியத்தின் தாக்க வீதத்துக்கும் கீழ்ப்படையின் செறிவுக்கும் இடையில் உள்ள தொடர்பினைக் காட்டும் வரைபு மேலுள்ளவற்றுள் எது?

Review Topic
QID: 3776

இவ்வரைபுகளுள் (1-5) எது ஆவியுயிர்ப்பு வீதத்தின் மீதான சார் ஈரப்பதன் விளைவை மிகச் சிறந்த வகையில் குறித்துக் காட்டுகிறது?
(x அச்சின் மீது சார் ஈரப்பதனும் y அச்சின் மீது ஆவியுயிர்ப்பு வீதமும்)

Review Topic
QID: 3768
  • வினாக்கள் 175 உம் 176 உம் பின்வரும் வரைபுகளை அடிப்படையாகக் கொண்டவை.

இவ்வரைபுகளுள் (1-5) எது கீழ்ப்படைச் செறிவுக்கும் நொதியத் தாக்கவீதத்துக்குமிடையிலான தொடர்பை மிகச் சிறந்த வகையில் குறித்துக் காட்டுகிறது? (x அச்சின் மீது கீழ்ப்படைச் செறிவும் y அச்சின் மீது எதிர்த் தாக்க வீதமும்)

Review Topic
QID: 3767

மேற்காணப்படும் வரைபிலிருந்து நொதியத்தின் தொழிற்பாடு தொடர்பாக கீழே காண்பிக்கப்பட்ட உய்தறியக்கூடிய கூற்றுக்களுள் எக்கூற்று பொருத்தமாகும்?

Review Topic
QID: 3774

தாவரங்களில் வழக்கமான சுவாசக்கீழ்ப்படை மேற்காண்பவற்றுள் எது?

Review Topic
QID: 3288
  • 100 முதல் 102 வரையிலான வினாக்கள் பின்வரும் படங்களை அடிப்படையாகக் கொண்டவை.

(10° – 60°) வெப்பநிலைக்கு எதிரே நொதியத்தின் தாக்க வீதம்

 

Review Topic
QID: 3747

x அச்சை ஆதாரப் படையின் செறிவு எனவும் y அச்சைத் தாக்கவீதம் எனவும் கருதினால், ஆதாரப்படையின் செறிவுக்கும் நொதியத் தாக்கத்தின் வீதத்துக்கும் இடையிலான தொடர்பை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் வரைபு எது?

Review Topic
QID: 3757
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank