Please Login to view full dashboard.

நுணுக்குக்காட்டி

Author : Admin

25  
Topic updated on 02/14/2019 07:35am
  • கலங்கள், கல ஒழுங்கமைப்பு ஆகியன பற்றிய அறிவின் விருத்தியில் நுணுக்குக்காட்டியின் பங்களிப்பு
  • வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாத, தெளிவாக புலப்படாத பொருட்களை உருப்பெருத்துக் காட்டும் உபகரணம் நுணுக்குக்காட்டி எனப்படும்.
  • இவ் நுணுக்குக் காட்டி பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.

n-5

கூட்டு நுணுக்குக்காட்டி Image Tip Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question  

  • கூட்டு நுணுக்குக்காட்டியின் பகுதிகளும் அவற்றின் தொழில்களும்
பகுதி தொழில்
பார்வைத்துண்டு (கண் வில்லை) உருப்பெருக்கம்
பொருளி / பொருள் வில்லை உருப்பெருக்கம்
உடற் குழாய் பார்வைத்துண்டு, மூக்குத்துண்டைத் தாங்கல்
மூக்குத்துண்டு பொருள் வில்லைகளைத் தாங்குதல்
 பரும்படிச் செப்பமாக்கி உடற்குழாயை அசைப்பதன் மூலம் விம்பத்தைப் பெறல்
நுண் செப்பமாக்கி
புயம், பாதம் நுணுக்குக் காட்டியை கொண்டு செல்லலில் பங்குகொள்ளும் பகுதி 

 

 

மேடை வழுக்கியைத் தாங்குதல்

மேடையிலுள்ள துவாரம் ஒளிவரும் பாதை
கவ்வி வழுக்கியை அசையாது கவ்வுதல்
ஒடுக்கிவில்லை ஒளிக்கதிர்களைப் பொருள் நோக்கி குவித்தல்
பிரிமென்தகடு பொருள் நோக்கி வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தல்
ஆடி (தளவாடி ஒருபுறமும், மறுபுறம் குழிவாடி கொண்டது) 

 

 

ஒளிச் செறிவு அதிகமாக உள்ளபோது தளவாடி குறைவாக உள்ளபோது குழிவாடியும் பயன்படுத்தப்படும்

ஒளிக்கதிர்களைச் சேகரித்துப் பொருள் நோக்கி செலுத்துதல்

கூட்டு நுணுக்குக்காட்டி செப்பம் செய்தல்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question   

  1. நுணுக்குக் காட்டியை ஒளி உள்ள இடத்தில் ஒப்பமான தளத்தில் உடற்குழாய் முன்நோக்கி இருக்கத்தக்கவாறு வைத்தல்.
  2. தாழ்வலுப் பொருள்வில்லையை பார்வைத்துண்டுக்கு நேராகக் கொண்டு வருதல்.
  3. பரும்படிச் செப்பமாக்கியைப் பயன்படுத்தி உடற்குழாயை மேல் நோக்கி அசைத்தல்.
  4. ஆடியையும், பிரிமென்தகட்டையும் பயன்படுத்தி பார்வைப் புலத்தை ஒளியூட்டல்.
  5. வழுக்கியை மேடையின் மீது வைத்து பரும்படிச் செப்பமாக்கியை பயன்படுத்தி தாழ்வலு பொருளியை மெதுவாக கீழ்நோக்கி அசைத்து விம்பத்தைப் பெறுதல்.
  6. நுண் செப்பமாக்கியைப் பயன்படுத்தி தெளிவான விம்பத்தைப் பெறல்.
  7. பின்பு நடுவலு, உயர்வலுக்களைப் பார்வைத் துண்டுக்கு நேராகக் கொண்டுவந்து அவ்வலுக்களின் கீழ் விம்பத்தை அவதானித்தல்

ஒளி நுணுக்குக்காட்டியின் பயன்பாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்Please Login to view the Question

  1. பயன்படுத்தப்படாத போது பெட்டியினுள் வைக்க வேண்டும்.
  2. உடற்குழாய் எப்பொழுதும் பொருளை அவதானிக்கும் போது கீழ் நோக்கி அசைக்கப்பட வேண்டும்.
  3. வழுக்கியின் ஒரங்களில் பிடித்தல் வேண்டும்.
  4. நுணுக்குக்காட்டியைக் கொண்டு செல்லும்போது, புயம், பாதம் பயன்படுத்தப்பட வேண்டும்.
  5. பாவித்து முடித்த பின் வில்லைகள் அதற்குரிய துணியினால் துடைக்கப்பட்டு பெட்டியினுள் வைக்க வேண்டும்.
  • நுணுக்கு காட்டியுடன் தொடர்புடைய இரு எண்ணக்கருக்கள்
    அவ் எண்ணக்கருக்களாவன
  1. உருப்பெருக்கம்
  2. பிரிவலு

உருப்பெருக்கம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question      


  • எனவே உருப்பெருக்கம் எனப்படுவது விம்பத்தின் பருமனுக்கும் பொருளின் பருமனுக்கும் இடையிலான விகிதம் ஆகும்.
  • உ – ம் ஒரு பொருளின் பருமன் 0.1mm ஆகவும் அதன் விம்பத்தின் பருமன் 0.9mm ஆகவும் காணப்படின் உருப்பெருக்கம்

microscope-eq-1

  • ஆய்வுகூடத்தில் பயன்படுத்தப்படும் கூட்டுநுணுக்குக்காட்டியின்

உருப்பெருக்கம் = பொருள் வில்லையின் உருப்பெருக்கம் × பார்வைத்துண்டின் உருப்பெருக்கம்

வலு வகை பொருள்வில்லையின் உருப்பெருக்கம் பார்வைத்துண்டின் உருப்பெருக்கம் மொத்த உருப்பெருக்கம்
தாழ்வலு × 4 × 10 × 40
நடுவலு × 10 × 10 × 100
உயர்வலு × 40 × 10 × 400
  • உருப்பெருக்கம் அதிகரிக்கும் போது அவதானிக்கப்படும் கலங்களின் எண்ணிக்கை குறையும். ஆனால், கலத்தின் பருமன் அதிகரிக்கும்.
  • கூட்டு நுணுக்குக்காட்டியின் உயர் உருபெருக்கம் × 1500 / × 2000
  • இலத்திரன் நுணுக்குக் காட்டியின் உயர் உருபெருக்கம் × 500 000
  • உருப்பெருக்கத்தைப் பாதிக்கும் பிரதான காரணி 

     

    1. பயன்படுத்தும் கதிரின் அலைநீளம்
    2. பயன்படுத்தும் வில்லைகளின் தன்மை

பிரிவலுPlease Login to view the Question

  • இரு புள்ளிகளை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தி அறியக் கூடியதாய் இருக்கும் ஆகக் குறைந்த தூரம் பிரிவலு எனப்படும்.
  • மனித வெற்றுக்கண்ணின் பிரிவலு 0.1mm
  • கூட்டு நுணுக்குக்காட்டியின் பிரிவலு 200mm
  • இலத்திரன் நுணுக்குக்காட்டியின் பிரிவலு 0.2mm
  • இலத்திரன் நுணுக்குக்காட்டி மிகவும் உயர்ந்த பிரிவலுவை கொண்டது.
  • பிரிவலுவை தீர்மானிக்கும் முக்கிய காரணி பயன்படுத்தும் கதிரின் அலைநீளம் ஆகும். அலைநீளம் குறையும் போது பிரிவலு அதிகரிக்கும்.

இலத்திரன் நுணுக்குக்காட்டி

  1. இலத்திரன் நுணுக்குகாட்டியின் சிறப்பியல்புகள்
  2. en கற்றைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  3. வில்லைகள் மின்காந்த வில்லைகள் ஆகும்.
  4. இரண்டு சோடி மின்காந்த வில்லைகள் உருப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
  5. ஒரு சோடி மின்காந்த வில்லைகள் ஒடுக்கி வில்லையாக பயன்படுத்தப்படும்.
  6. மாதிரிப் பொருள் செப்புத் தகட்டின் மீது வெற்றிடத்தில் வைக்கப்படும்.
  7. உயிரற்ற பொருட்களை மட்டும் அவதானிக்கலாம்.
  8. விம்பம் புளோரசன் திரையில் பெறப்படும். வெள்ளை, கறுப்பு நிறத்தில் பெறப்படும்.

 

கூட்டு நுணுக்குக்காட்டிக்கும் இலத்திரன் நுணுக்குக்காட்டிக்கும் இடையிலான வேறுபாடுகள்

இயல்பு நுணுக்குக்காட்டி இலத்திரன் நுணுக்குக்காட்டி
பயன்படுத்தும் கதிர் வகை ஒளிக்கற்றைகள் இலத்திரன் கற்றை
உயர்ந்த உருபெருக்கம் × 1500 – × 2000 × 500 000
உயர் பிரிவலு 200nm 0.2nm
பயன்படுத்தும் கதிரின் அலை நீளம் 400 – 700nm 0.005nm
பயன்படுத்தப்படும் வில்லை கண்ணாடி வில்லை மின்காந்த வில்லை
மாதிரிப்பொருள் உயிருள்ளது, உயிரற்றது அவதானிக்கலாம் 

 

 

மேடையில் வழுக்கியில் வைத்து வளித் தொடர்புடன் அவதானிக்கலாம்

உயிரற்றது மாத்திரம் அவதானிக்கப்படும் 

 

 

மெல்லிய செப்பு தகட்டில் வெற்றிடத்தில் வைத்து அவதானித்தல்

விம்பம் நேரடியாக அவதானிக்கப்படும் 

 

 

பொதுவாக நிறமுள்ளது அவதானிக்கப்படும்

திரையில் அவதானிக்கப்படும் 

 

 

கறுப்பு வெள்ளை நிற விம்பம் அவதானிக்கப்படும்

 

 

  • கூட்டு நுணுக்குக்காட்டியின் அனுகூலங்கள்
  1. இதற்கான மாதிரிப்பொருளைத் தயாரித்தல் விரைவானதும் சுலபமானதுமான முறையாகும்.
  2. கருவியைக் கையாளுதல் சுலபம்.
  3. உயிருள்ளவற்றை அவதானிக்கலாம்.
  4. மலிவானது.
  5. காந்தப்புலத்தினால் பாதிக்கப்படாது.
  • பிரதிகூலங்கள்
  1. குறைந்த உருப்பெருக்கம்
  2. குறைந்த பிரிவலு
  • இலத்திரன் நுணுக்குக்காட்டியின் அனுகூலங்கள்
  1. மிக உயர்ந்த உருப்பெருக்கம்
  2. உயர்ந்த பிரிவலு
  • பிரதிகூலங்கள்
  1. கையாளுதல் கடினம்
  2. விலை அதிகமானது
  3. இறந்த பொருட்களை மாத்திரம் பார்க்கலாம்.
  4. விம்பம் கறுப்பு வெள்ளையில் பெறப்படல்.
  5. காந்தப்புலத்தால் பாதிப்படைதல்.
  6. இதற்குரிய மாதிரிப்பொருளைத் தயாரிக்க அதிக நேரம் செலவிடப்படும்.
  • இலத்திரன்நுணுக்குக்காட்டி வகை
  1. Transmission EM Image Tip
  2. Scanning EM Image Tip
  • TEM இல் en கற்றைகள் மாதிரிப் பொருளின் ஊடாக ஊடுருவி அதன் அகக் கட்டமைப்புகளைத் தெளிவாக புலப்படுத்தும். இதுவே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட en நுணுக்குகாட்டி வகை.
  • SEM இல் en கற்றைகள் மாதிரிப் பொருளின் மேற்பரப்பில் பட்டுத் தெறிப்படைந்து அதன் மேற்பரப்புத் தோற்றத்தை அதாவது முப்பரிமான தோற்றத்தைப் புலப்படுத்தும்.

 

RATE CONTENT 5, 1
QBANK (25 QUESTIONS)

கள்ளின் ஒரு மாதிரியில் உள்ள நுண்ணங்கிகளின் எளிதான சாயமூட்டற் செயன்முறையின் வெவ்வேறு  படிகள் பிழையான தொடரியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

A–  ஒரு வழுக்கியில் ஒரு மெல்லிய பூச்சு (மெல்லிய படலம்) தயாரித்தல்
B –  பூச்சை வெப்பத்தினால் பதித்தல்
C –  மெதிலீன் நீலம் சேர்க்கப்பட்டு 30 செக்கன்களுக்கு வைத்திருத்தல்
D –  பூச்சைக் காற்று மூலம் உலர்த்தல்
E –  பூச்சைக் குழாய் நீரினால் கழுவி உலர்த்தி நுணுக்குக் காட்டியின் மூலம் பரீட்சித்தல் எளிய சாயமிடற் செயன்முறையின் படிகளின் சரியான ஒழுங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3303
Hide Comments(0)

Leave a Reply

ஒளி நுணுக்குக் காட்டியின் உயர்வலுவின் கீழ் சாயமிடாத் தயாரிப்புகளில் பற்றீரியா, மதுவம் ஆகிய இரண்டும் உண்டு என்பவற்றினை தெளிவாக காட்டும் மாதிரி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3315
Hide Comments(0)

Leave a Reply

ஓர் ஒளி நுணுக்குக் காட்டியில் பின்வரும் பார்வைத் துண்டு × பொருளிச் சேர்மானங்களில் கள்ளின் ஒரு மாதிரியில் உள்ள மதுவக் கலங்களின் இழிவு எண்ணிக்கையைப் பார்ப்பதற்கு ஏதுவானது எது?

Review Topic
QID: 3354
Hide Comments(0)

Leave a Reply

ஒரு இலையின் இலைவாய்களைத் தெளிவாக அவதானிப்பதற்குப் பின்வரும் பார்வைத் துண்டு × பொருளிவில்லைச் சேர்மானங்களில் மிகச் சிறந்தது எது?

Review Topic
QID: 3559
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அளவீட்டு அலகுகளில் எது வைரஸின் பருமனைக் குறிப்பிடுவதற்கு வழமையாகப் பயன்படுத்தப்படுகின்றது?

Review Topic
QID: 3560
Hide Comments(0)

Leave a Reply

ஒளி நுணுக்குக் காட்டியில் பெறத்தக்க அதி உயர் உருப்பெருக்கத்தில் மிகச் சிறியதாகத் தோன்றுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3594
Hide Comments(0)

Leave a Reply

ஒளி நுணுக்குக்காட்டியினூடாகப் பார்க்க முடியாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3630
Hide Comments(0)

Leave a Reply

இவ் இலத்திரன் நுணுக்குக் காட்டியூடான படமாவது

Review Topic
QID: 3780
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதை ஒளி நுணுக்குக் காட்டியின் கீழ் தெளிவாக அவதானிக்க முடியாது ?

Review Topic
QID: 937

. (2)

(3)
(4)
(5)

Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் எக்கட்டமைப்பின் தயார் செய்யப்பட்ட வழுக்கியில் கலங்களின் துரிதமான இழையுருப்பிரிவை மிகச் சிறந்த விதத்தில் அவதானிக்கலாம்?

Review Topic
QID: 3371
Hide Comments(0)

Leave a Reply

கள்ளின் ஒரு மாதிரியில் உள்ள நுண்ணங்கிகளின் எளிதான சாயமூட்டற் செயன்முறையின் வெவ்வேறு  படிகள் பிழையான தொடரியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

A–  ஒரு வழுக்கியில் ஒரு மெல்லிய பூச்சு (மெல்லிய படலம்) தயாரித்தல்
B –  பூச்சை வெப்பத்தினால் பதித்தல்
C –  மெதிலீன் நீலம் சேர்க்கப்பட்டு 30 செக்கன்களுக்கு வைத்திருத்தல்
D –  பூச்சைக் காற்று மூலம் உலர்த்தல்
E –  பூச்சைக் குழாய் நீரினால் கழுவி உலர்த்தி நுணுக்குக் காட்டியின் மூலம் பரீட்சித்தல் எளிய சாயமிடற் செயன்முறையின் படிகளின் சரியான ஒழுங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3303

ஒளி நுணுக்குக் காட்டியின் உயர்வலுவின் கீழ் சாயமிடாத் தயாரிப்புகளில் பற்றீரியா, மதுவம் ஆகிய இரண்டும் உண்டு என்பவற்றினை தெளிவாக காட்டும் மாதிரி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3315

ஓர் ஒளி நுணுக்குக் காட்டியில் பின்வரும் பார்வைத் துண்டு × பொருளிச் சேர்மானங்களில் கள்ளின் ஒரு மாதிரியில் உள்ள மதுவக் கலங்களின் இழிவு எண்ணிக்கையைப் பார்ப்பதற்கு ஏதுவானது எது?

Review Topic
QID: 3354

ஒரு இலையின் இலைவாய்களைத் தெளிவாக அவதானிப்பதற்குப் பின்வரும் பார்வைத் துண்டு × பொருளிவில்லைச் சேர்மானங்களில் மிகச் சிறந்தது எது?

Review Topic
QID: 3559

பின்வரும் அளவீட்டு அலகுகளில் எது வைரஸின் பருமனைக் குறிப்பிடுவதற்கு வழமையாகப் பயன்படுத்தப்படுகின்றது?

Review Topic
QID: 3560

ஒளி நுணுக்குக் காட்டியில் பெறத்தக்க அதி உயர் உருப்பெருக்கத்தில் மிகச் சிறியதாகத் தோன்றுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3594

ஒளி நுணுக்குக்காட்டியினூடாகப் பார்க்க முடியாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3630

இவ் இலத்திரன் நுணுக்குக் காட்டியூடான படமாவது

Review Topic
QID: 3780

பின்வருவனவற்றுள் எதை ஒளி நுணுக்குக் காட்டியின் கீழ் தெளிவாக அவதானிக்க முடியாது ?

Review Topic
QID: 937

. (2)

(3)
(4)
(5)

பின்வரும் எக்கட்டமைப்பின் தயார் செய்யப்பட்ட வழுக்கியில் கலங்களின் துரிதமான இழையுருப்பிரிவை மிகச் சிறந்த விதத்தில் அவதானிக்கலாம்?

Review Topic
QID: 3371
Comments Hide Comments(3)
Abdhul Nijamudeen
abdhul nijamudeen commented at 20:21 pm on 27/06/2020
thelivaana,payanlla thohpp
Vinoth Premkumar commented at 08:55 am on 04/01/2017
சிறப்பான பதிவு
Admin Admin
Admin Vinoth commented at 03:22 am on 03/01/2017
சிறப்பான பதிவு. நுணுக்குக்காட்டி தொடர்பான தெளிவான தொகுப்பு.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank