வகையான முள்ளந்தண்டு அற்றதில் நரம்பு ஒழுங்கமைப்பு
(Annelida, Mollusca, Arthropoda)
வகையான முள்ளந்தண்டு அற்றவையின் நரம்பு தொகுதியில் பின்வரும் அம்சம் உள்ளது.
1. தலையில் சோடி மூளையத்திரட்டு
2. வயிற்றுபுறமான திண்ம திரட்டுகளை கொண்ட இரட்டை நரம்பு நாண்
3. துண்டத்திற்குரிய வயிற்றுப்புற திரட்டு
4. திரட்டிலிருந்து எழும் சுற்றயல் நரம்புகள்
5. கண்கள், புலன்கலம் வாங்கியாக விருத்தி அடைந்திருக்கும்
PLATYHELNINTHES
PLATYHELNINTHES இன் நரம்பு தொகுதி ஒழுங்கமைப்பில் பின்வரும் கட்டமைப்புள்ளது.
1. ஓரளவு விருத்தியடைந்த தலைப் பகுதியில் அதாவது முற்புறமாக கோடி மூளையத் திரட்டு
2. மூளையத் திரட்டிலிருந்து சோடி முதுகுப்புறத் திரட்டு { சோடி நரம்பு வளையம் எழுகிற திண்ம பக்கப்புறமான 1 – 3 நீள்பக்க நரம்பு நாண்கள்
3. நரம்பு நாணில் அமைந்துள்ள நரம்பு திரட்டு
4. திரட்டிலிருந்து வெளியேறுகிற உடற்பகுதிக்கு செல்கிற சுற்றயல் நரம்புகள்
மொத்தத்தில் ஏணி உருவான நரம்பு ஒழுங்கமைப்பு.
வாங்கி விளைவு காட்டி விருத்தியடைந்துள்ளது.
ஒளிவாங்கியாக கட்புள்ளி விருத்தியடைந்துள்ளது.
.Annelida,Arthropoda,Mollusca இல் (விட்டம் கூடியது) இராட்சத நரம்பு நார்கள் உள்ளது. இதனால் இவற்றில் கணத்தாக்கää வேகம் கூடுகிறது. 100 அள-1 கணத்தாக்க வேகம்.
Echinodemata களில் நரம்பு ஒழுங்கமைப்பில் பின்வரும் கட்டமைப்பு உள்ளது.
1. நரம்பு வளையம்
CHORDATA
நன்கு விருத்தியடைந்த நரம்பு தொகுதி chordata இல் உள்ளத. அதில் பின்வரும் கட்டமைப்புள்ளது.
1. தனியான / ஒற்றை நரம்பு நாண்
2. முதுகுப்புறத்திலமைந்த நரம்பு நாண் – அமைவிடம் சார்ந்த
3. கோரை/ குழாயுருவான நரம்பு நாண்
4. திரட்டுகள் அற்ற நரம்பு நாண்
நரம்பு தொகுதி படிப்படியாக சிக்கல் தன்மை கூடி Mammalia இல் அதி உயர் சிக்கல் தன்மை உள்ளது.
சிக்கல் தன்மையின் போது நரம்பு நாணின் முற்புறம் மூளையாகவும் பின்புறம் – முண்ணானாகவும் விருத்தியடையும்.
2005
முள்ளந்தண்டு அற்ற விலங்கின் வகையான நரம்பு நாணுக்கும் முள்ளந்தண்டு உள்ள விலங்கின் நரம்பு நாணைக்கும் இடை யியான கட்டமைப்பு வேறுபாடுகள்.
வகையான முள்ளந்தண்டு அற்ற நரம்பு நாண் . | .முள்ளந்தண்டுகளின் நரம்பு நாண் |
---|---|
.திரட்டுகள் உண்டு | . திரட்டுகள் இல்லை |
.திண்ம நரம்பு நாண். | . கோரையான { குழாயுரு நரம்பு நாண் |
. இரட்டை நரம்பு நாண் | . தனி நரம்பு நாண் |
தாக்க அழுத்தத்தின் பின்வரும் பண்புகளில் எது ஒரு நரம்பு கணத்தாக்க மீள் கடத்துகையைத் தடுக்கும்?
Review Topicதாக்க அழுத்தத்தின் பின்வரும் பண்புகளில் எது ஒரு நரம்பு கணத்தாக்க மீள் கடத்துகையைத் தடுக்கும்?
Review Topic