மயலின் ஏற்றப்படாத மயலின் நாரினூடான கணத்தாக்கக் கடத்தல்
நரம்பு நாரினூடாக கணத்தாக்கம் / நரம்பு தூண்டல் மின் முறையினால் கடத்தப்படுகிறது.
மயலின் கவசமற்ற நரம்பு நாரினூடாக தொடர்ச்சியாக கடத்தப்படுகிறது.
ஓய்வு நிலையில் கணதாக்கம் கடத்தப்படாத நிலையில் நரம்பு நாரின் மென்சவ்விற்கு குறுக்காக ஓர் அழுத்த வேறுபாடு காணலாம். இது ஓய்வு மென்சவ்வு அழுத்தம் எனலாம். இதன் பெறுமானம் – 70mvஆகும்.
இந்நிலையில் மென்சவ்வு முனைவாக்கப்பட்டது எனப்படும்.
ஓய்வு மென்சவ்வு அழுத்தம் 3 காரணிகளில் தங்கியுள்ளது. இக் காரணிகளால் ஓய்வு அழுத்தம் பேணப்படுகிறது.
1. கலத்திற்கு புறம்பான திரவத்துடன் ஒப்பிடுகையில் கலத்தினுள் காணலாம். அயனிலும் செறிவிலுள்ள வித்தியாசம் (உட்புறமாக எதிரேற்றப்பட்ட அயன்கள் அதிகளவு காணப்படுகிறது.)
2. Na+, K+ முதலுரு மென்சவ்வில் தேர்ந்து உப்புகவிடும் தன்மை (உயிர்ப்பற்ற முறை)
3. முதலுரு மென்சவ்வில்Na ஓய்வு நிலையில் கலத்தினுள் K+அதிகளவிலும் கலப்புற தாயத்தில் Na+அதிகளவிலும் காணலாம்.
தூண்டல் வழங்கப்படும் போது அது குறித்த அழுத்த வேறுபாட்டை உருவாக்குமாயின் (-55 mv) அத்தூண்டல் தாங்கள் கொள்ளளவை எனப்படும். (இழிவுத் தூண்டல்). இத் தூண்டலே நரம்பு நாரீன் ஊடாக கடத்தப்படும். காரணம் இதுவே தாக்க அழுத்தத்தை உருவாக்கும்.
தாங்கள் கொள்ளளளவை தூண்டல் வழங்கப்படும் போது மென்சவ்வின் Na ஊடுபுகவிடும் தன்மை அதிகரிக்கப்பட்டு கலப்புற தாயங்களில் இருந்து Na 10ns வாயிலூடாக கலமுதலுருவை அடையும். (உயிர்ப்பற்ற முறையில்)
இதனால் அப்பிரதேச மென்சவ்வின் ஓய்வு அழுத்தம் மாற்றப்பட்டு -70 இலிருந்து+40 ஐ அடையும் மென்சவ்வு முனைவழிக்கப்பட்ட நிலை எனலாம். இதன் போது மென்சவ்வின் உட்புறம் நேரேற்றமும் வெளிப்புறம் எதிரேற்றமும் உருவாக்கப்படும்.
மென்சவ்வின் தூண்டலால் பெறப்பட்ட நேரேற்றத்திற்கும் அடுத்துள்ள எதிரேற்ற பிரதேசத்திற்குமிடையில் சிறு மின்சுற்று உருவாக்கப்படும்.
மின்சுற்று பூர்த்தியாக்கப்பட்டதும் நேரேற்ற பெற்ற பிரதேசம் மீண்டும் எதிரேற்றமாக மாற்றமடையும். அடுத்துள்ள பிரதேசம் நேரேற்றமாக மாற்றடையும். எனவே தூண்டல் புதிய பிரதேசத்திற்கு கடத்தப்பட்டுள்ளது.
தூண்டலின் போது ஓய்வு அழுத்தம் உயர்வாக +40 ஐ அடையும். -70mv இலிருந்து +40mv ற்கு ஏற்படும் மாற்றம் தாக்க அழுத்தம் எனப்படும். உச்சதாக்க அழுத்த பெறுமானம் +40mv
தூண்டலின் போது மென்சவ்விற்கு குறுக்கான அழுத்த வேறுபாட்டின் ஏற்படும் மாற்றம் தாக்க அழுத்தம் எனப்படும்.
மென்சவ்வின் முனைவழித்தல் செயற்பாடு / மென்சவ்வின் எதிர் முனைவாக்க செயற்பாடு.
தாக்க அழுத்தம் + 40 ஐ அடைந்ததும் Na வாயில்கள் மூடப்பட்டு மு10 வாயில்கள் திறக்கப்படும்
.
திறக்கப்பட்ட மு வாயில்கள் ஊடாக K உயிர்ப்பற்ற முறையில் கலத்திலிருந்து கலப்புற பாயத்தை அடையும். இதனால் மென்சவ்வு மீண்டும் முனைவாக்கப்படும். அதாவது பழைய நிலையை அடைய தொடங்கும். மீண்டும் உட்புறம் எதிரேற்றத்தையும் வெளிப்புறம் நேரேற்றத்தையும் பெறும்.
மிகையான K வெளியேற்றத்தால் மென்சவ்வு அதீத முனைவாக்கலக்கு உட்படும் எனவே மீண்டும். ஓய்வு அழுத் தத்தை பேண Na, K பம்பியின் ஊடாக உயிர்ப்பான முறையில் K ions வெளிநோக்கியும் K ions உள்நோக்கியும் பம்ப்ப்படும்.
மென்சவ்வு மீண்டும் பழைய நிலையை அடையும் அதாவது ஓய்வு அழுத்தத்தில் காணலாம்.
ஒருபிரதேசத்தில் தாக்க அழுத்தம் உருவாகி அடுத்த தாக்க அழுத்தம் உருவாவதற்கு எடுக்கும் காலம் வெப்பமழிக்காக் காலம் எனப்படும்.
இது 2ms எடுக்கும் ஒரு தாக்க அழுத்தம் உருவாகி அடுத்த தாக்க அழுத்தம் உருவாவதற்கு 2 ms எடுக்கப்படும். அக் காலத்தினுள் தூண்டல் வழங்கப்படின் இது கடத்தப்படமாட்டாது.
வெப்பமழிக்காக்காலம் காணப்படுவதால் பின்முகமாக கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. அதாவது ஒரு திசையில் கணத்தாக்க கடத்தலில் 3 அவத்தைகள் காணப்படும்.
1. முனைவழித்தல்
2. மீள் முழுவாக்கல்
3. அதி முனைவாக்கல்
ஓய்வு அழுத்தம் நரம்பு நாரினூடாக கடத்தப்படுவதில்லை.
தாக்க அழுத்தம் நரம்பு நாரினூடாக சுயமாக கடத்தப்படும்
.
மயலின் கவசமுள்ள நரம்பு நாரினூடான கணத்தாக்க கடத்தல்
மயலின் கவசம் எனப்படுவது Phospolipid இனால் ஆன சுவானின் கலத்தால் சுரக்கப்படும் நரம்பு நாரை தொடர்ச்சி யற்று சூழ்ந்து காணலாம் கட்டமைப்பு.
நரம்பு நாரில் இது காணப்படாத பிரதேசம் இரண்வியரின் கணு எனலாம்.
மயலின் கவசம் மின் காவலியாக தொழிற்படுவதால் அதனூடாக Na,K பரிமாற்றம் நிகழமாட்டாது.
தாக்க அழுத்தம் அது உள்ள பிரதேசத்தில் கடத்தப்படமாட்டாது. எனவே இரண்வியரின் கணுப் பிரதேசத்தில் தாக்க அழுத்தம் உருவாக்கப்படும். அப்பிரதேசங்களுக்கிடையிலேயே மின்சுற்று பூர்த்தியாக்கப்படும்.
அப்பிரதேசங்களுக்கிடையிலேயே மின்சுற்று பூர்த்தியாக்கப்படும். எனவே தாக்க அழுத்தம் ஒரு குரண்வியரின் கணுப் பிரதேசத்திலிருந்து அடுத்த இரண்வியரின் கணுப் பிரதேசத்திற்கு பாய்ந்து செல்லும்.
இது பாய்ச்சலுக்குரிய கணத்தாக்க கடத்தல் எனப்படும். இதனால் கணத்தாக்கம் விரைவாக செல்லும்.
முள்ளந்தண்டு விலங்குகளின் மயிலின் கவசமுள்ள நரம்பு நாரின் ஊடான கணத்தாக்க கடத்தல் வேகம் 120 ms_1
நரம்பு நாரினூடான கணத்தாக்க வேகத்தை பாதிக்கும் காரணிகள்
நரம்பு நார்களின் விட்டம் கூடும் போது கணத்தாக்கம் கடத்தலுக்கான அகத்தடை குறைவாக காணப்பட்டு கணத்தாக்க வேகம் அதிகரிக்கப்படும்.
முள்ளந்தண்டற்ற விலங்குகளின் Arthropoda, mollusca இல் இராட்சத நரம்பு நாருண்டு.
இவற்றில் மயலின் கவசம் காணப்படுவது இல்லை. ஆனால் கணத்தாக்க வேகம் 100ms-1
நிரம்பிணைப்புகளின் எண்ணிக்கை கூடும் போது கணத்தாக்கம் விரைவுபடுத்தப்படும்.
400c மட்டும் கணத்தாக்க வேகம் கூடும். அதன் பின் கணத்தாக்க வேகம் குறையும்.
நரம்பிணைப்பு
இரு அருட்டப்படக்கூடிய கலங்களுக்கிடையில் காணலாம். தொழிற்பாட்டு சந்தி (பரப்பு) நரம்பிணைப்பு எனலாம். இச்சந்தியில் இரு கலங்களினதும் முதலுரு தொடர்பு இல்லை.
மனித உடலில் அருட்டப்படக் கூடிய கலங்களாவனää வாங்கிக்கலம்ää தசைக்கலம், நரம்புக்கலம்.
இவற்றின் அடிப்படையில் நரம்பிணைப்பு 3 வகைப்படும்.
1. வாங்கி – நரம்புக்கல நரம்பிணைப்பு
2. நரம்புகல – நரம்புக்கல நரம்பிணைப்பு
3. நரம்புக்கல – தசைக்கல நரம்பிணைப்பு
நரம்புக்கல – நரம்புக்கல நரம்பிணைப்பில் நரம்பிணைப்பின் முன்னான மென்சவ்வாக நரம்பிணைப்பு குமிழின் மென்சவ்வும்ää பின்னான மென்சவ்வாக நரம்புக்கலத்தின் உட்காவு நரம்பு கல மென்சவ்வும் தொழிற்படும். இவவ்றுக்கிடையில் 20nm இடைவெளி காணலாம். இவ் இடைவெளி நரம்பிணைப்பு பிளவு எனப்படும். இதனை கலத்திடை பாய்பொருள் காணப்படும்.
நரம்பிணைப்பு குமிழினுள் அனேக இழை மகள் காணலாம். அத்துடன் நரம்புச் செலுத்தி பதார்த்தத்தை கொண்ட பல நரம்புச் செலுத்தி புடகம் காணலாம்.
பின்னான மென்சவ்வில் நரம்பு செலுத்தி பதார்த்தம் வாங்கும் புரதங்களும் நரம்பு செலுத்தி பதார்த்தத்தில் நீர்ப்பகுப்படையச் செய்யும் நொதியமான Acetyl choline esterase காணப்படுகிறது.
நரம்பிணைப்பின் ஊடான கணத்தாக்க கடத்தல் பொறிமுறை 2009
நரம்பு நாரினூடாக கணத்தாக்கமானது நரம்பிணைப்பின் முன்னான மென்சவ்வை வந்தடையும் அங்கு தாக்க அமுத்தம் உருவாகும். இது மின் முறையினால் கடத்தப்படுகிறது.
இதன் போது ca அயனின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரிக்கப்பட்டு ca2+ வாயில்கள் திறக்கப்பட நரம்பிணைப்பிளவின் கலத்தின் பாய்பொருளிலிருந்து ca2+ அயன்கள் நரம்பிணைப்பு கும்மனு குழியவுருவை வந்தடையும்.
இவ் ஒவ்வொரு ca2+ அயன்கள் நரம்பு இணைப்பு குமிழிலுள்ள குழியவுருவினுள் காணப்படும் each நரம்பு செலுத்தி புடகத்துடன் இணைந்து அதனை நரம்பிணைப்பின் முன்னான மென்சவ்வு நோக்கி கொண்டு வந்து அதனை நரம்பு இணைப்பு முன்னான மென்சவ்வுடன் இணைக்கும்.
புறக்குழிய மாதல் முளையினால் நரம்பு செலுத்தி புடகத்தினுள் காணப்படும் Acetyl choline enzyme இனை நரம்பிணைப்பு பிளவினுள் வெளியேற்றும். இது பரவ் முறையினால் நரம்பிணைப்பு பிளவினூடாக சென்று நரம்பிணைப்பின் பின்னான மென்சவ்விலுள்ள புரத வாங்கிகளால் வாங்கப்பட்டு Acetyl கோலின் வாங்கி சிக்கலை உருவாக்கும்.
அப்போது Naஅயன்களின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரிக்கப்பட்டுNa gates திறக்கப்பட பின்னான மென்சவ்வில் தாக்க அழுத்தம் உருவாகி யே அயன்கள் உட்செல்லும்
.
அதேவேளை நரம்பிணைப்பின் பின்னான மென்சவ்வில் உள்ள Acetyl choline Esterase enzyme in புரத வாங்கி சிக்கல் நீர்க்கப்பகுக்கப்பட்டு Acetyl +choline ஆக மாற்றப்படும். பின்பு இது மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படும். எனவே முன்னான மென்சவ்விலிருந்து நரம்பு செலுத்திப் பதார்த்தமூடு பின்னான மென்சவ்வை கணத்தாக்கம் கடத்தப்பட்டுள்ளது. (இரசாயன முறை)
Acetyl choline Esterase enzyme ஆல் Ach- வாங்கி சிக்கல் உடைக்கப்படுவதால் நரம்பிணைப்பினூடு கணத்தாக்கம் ஒரு திசையில் கடத்தப்படும்.
நரம்புச் செலுத்தி பதார்த்தம்
நரம்பிணைப்பினூ;டாக கணத்தாக்கத்தை கடத்துகின்ற இரசாயன பதார்த்தம் நரம்பு செலுத்தி பதார்த்தம் எனப்படும்.
Mainly இவை 3 வகையுள்ளன.
1.Acetyl cholin
2. Adrenaline/epinephrine
3. Norepinephrine/Noradrenaline
Note:
இயக்க நரம்பு கலத்திலிருந்து வெளிவிடப்படும். நரம்பு கணத்தாக்க கடத்தி Acetylcholine எனலாம்.
தெறிவினை எனப்படுவது தன்னிச்சையான விரைவான குறித்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தூண்டலுக்கு காட்டப் படுகிற எளிய தூண்டற்பேறு நரம்பு தொகுதியின் தொழிற்பாட்டலகும். தெறிவினை செல்லும் நரம்பு தொகுதியின் பாதை தெறிவில் எனப்படும்.
மனித உடலில் அநேகமான செயற்பாடுகள் தெறிவினை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தெறிவில்லின் 3 நரம்பு கலம் தொடர்புறும்.
1. புலன் நரம்பு கலம்
2. இயக்க நரம்பு கலம்
3. இடைத்தூது நரம்பு கலம்
புலன் நரம்புக் கலம் வாங்கியிலிருந்து நரம்பு தூண்டலை முண்ணானுக்கு எடுத்துச் செல்லும். இதன் தலவுடல் முண்ணானுக்கு அருகில் முதுகுப்புற திரட்டில் காணலாம். எனவே புலன் நரம்பு கலம் முண்ணானின் முதுகுப் புற வேரினூடாக உட்செல்லும்.
இடைத்தூது நரம்புகலம் முண்ணானினுள் அமைந்துள்ள புலன் நரம்புக் கலத்திலிருந்து விளைவு காட்டிக்கு செய்தியை வழங்கும். இயக்க நரம்புக் கலத்தின் கலவுடல் முண்ணானினுள் அமைந்து காணலாம்.
இதன் வெளிக்காவு நரம்பு நார் முண்ணானின் வயிற்றுப்புற வேரூடாக வெளியேறும்.
தெறிவினையின் வகைகள்
இரு வகைப்படும்
1. உடற் தெறிவினை
2. உடலகத் தெறிவினை
இயல்பு | உடல் தெறிவினை | உடலகத் தெறிவி னை |
தூண்டல் வகை | புறத் தூண்டல் | அகத் தூண்டல் |
விளைவுகாட்டி வகை | வன்கூட்டுத் தசை | மழமழப்பான தசை. சுரப்பிகள் ,இதயத் தசை |
வழங்கப்படும் நரம்பு வகை | உடல் / இச்சைவழி நரம்புகள் / மைய நரம்புத் தொகுதி நரம்பு | தன்னாட்சி நரம்புகள் |
சம்பந்தப்பட்டுள்ள இயக்க நரம்பு கலங்களின் எண்ணிக்கை | 1 | 2 |
example | ஊசி குத்தியவுடன் கையை அசைத்தல் | உணவை காணும் போது ஊமிழ்நீர் சுரத்தல் |
தெறிவினையின் முக்கியத்துவம்
புறச்சூழலில் ஏற்படும் மாற்றத்திற்கு உடலை தயார்ப்படுத்தல்
பாதுகாப்பு
அகச் சூழலை மாறாது பேண உதவுகிறது
ஓர்சீர்திடனிலை
சுற்றயல் நரம்புத் தொகுதிக்குரிய ஒரு வெளிக்காவு நரம்பு முளையின் புறக் கோடியான உறையைக் கீழ்க்காண்பவற்றுள் எது ஆக்கும்?
Review Topicநரம்புக்கலம் ஒன்றின் தாக்க அழுத்தம் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
Review Topicஒரு நரம்புக் கணத்தாக்கம் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
Review TopicAll answers correct.
சுற்றயல் நரம்புத் தொகுதிக்குரிய ஒரு வெளிக்காவு நரம்பு முளையின் புறக் கோடியான உறையைக் கீழ்க்காண்பவற்றுள் எது ஆக்கும்?
Review Topicஒரு நரம்புக் கணத்தாக்கத்தின் நிகழ்ச்சிக் காலமானது ஏறத்தாழ,
Review TopicAll answers correct.
நரம்புக்கலம் ஒன்றின் தாக்க அழுத்தம் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
Review Topic