Please Login to view full dashboard.

தாவர வாயுப்பரிமாற்றம்.

Author : Admin

15  
Topic updated on 02/14/2019 07:09am

காவற்கலத்தின் அமைப்பும் தொழிலும்Please Login to view the Question

 இலை தண்டில் திரிபடைந்த/ சிறத்தலடைந்த மேற்றோல் கலங்கள் காவற்கலங்கள் எனப்படும்.
 காவற்கலங்களுக்கு இடையில் காணப்படும் நுண்துளை இலைவாய் எனப்படும்.
 இலைவாய் ஒவ்வொன்றும் இரு காவற்கலங்களால் சூழ்ந்து காணப்படும்.
 இதன் இலைவாய் திறந்து மூடுதலில் காவற்கலத்தின் வீக்க அமுக்க வேறுபாடு பங்குகொள்கிறது.
 இலைவாயின் பிரதான தொழில்களாவன
01. தாவரத்திற்லிருந்து நீர் இழுப்பை கட்டுப்படுத்துதல்
02. ஒளித் தொகுப்பு சுவாச செயன்முறைக்கான வாயுப்பரிமாற்றத்தை மேற்கொள்ளல்
இருவித்திலை ஒரு வித்திலை தாவர இழைகளின் மேற்றோல் உரிப்புகள் …

 

 

 காவற்கலமானது இலைவாய் திறந்து மூடலுடன் தொடர்புபட்ட கட்டமைப்பாகும். இதற்காக பின்வரும் கட்டமைப்பு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.
01. காவற்கலத்தின் வயிற்று சுவர்/ உட்சுவரானது / வெளிச்சுவரிலும் தடித்தது
02. செலுலோசு நார்கள் ஆரைக்குரிய முறையில் வயிற்றுப்புற சுவரிலிடுத்து முதுகுப்புற சுவர் நோக்கிய ஆரைக்குரிய முறையில் காணப்படல்.
03. இரு காவற்கலங்களும் முனைக்கு முனை இணைக்கப்பட்டிருத்தல்.
04. அதன் குழியவுருவில் பச்சையவுருமணிகள் காணப்படல்.  Please Login to view the Question

இலைவாய் திறந்து மூடல் காவற்கலத்தில் ஏற்படும் வீக்க அமக்க வேறுபாட்டால் நிகழ்கின்றது. அதாவது காவற் கலத்தினுள் நீர் உட்சென்று காவற்கலத்தின் வீக்க அமுக்கம் கூடும்போது இலைவாய் திறக்கும்.
காவற்கலத்திலிருந்து நீர் வெளியேறி வீக்க அமுக்கம் குறையும் போது இலைவாய் மூடும்.
 காவற்கலத்தினுள் நீர் உட்செல்லும் போது கலத்தில் விரிவு நீளப்பாட்டில் ஏற்படுகிறது.Please Login to view the Question

.
 அரைக்குரிய முறையில் விரிவு ஏற்படுதலை cellulose நார்கள் தடுக்கின்றன.Please Login to view the Question
முனைக்கு முனை காவற்கலங்கள் இணைக்கப்பட்டிருப்பதால் அத்துடன் வயிற்றுப்புற சுவர் தடிப்பாக காணப்படுவதால் கலத்தின் விரிவால் தடித்த வயிற்றுப்புற சுவர்கள் ஒவ்வொன்றும் அரைவட்ட வடிவத்தை பெறுகின்றன.Please Login to view the Question
இலைவாய் திறக்கின்றது.
 காவற் கலத்திலிருந்து நீர் வெளியேறுவதால் கலத்தின் விரிவு நீனப்பாட்டில் குறைவதால் தடித்த வயிற்றுப்புற சுவர்கள் பழைய நிலையை அடையும் இலைவாய் மூடும்.
இலைவாய் திறந்து மூடலை விளக்கும் பொறிமுறைகள்Please Login to view the Question

.
01. மாப்பொருள் – வெல்ல மாற்று பொறிமுறை
02. பொற்றாசியம் அயன் உள்ளெடுத்தல் பொறிமுறை
03. ஒளித்தொகுப்பு பொறிமுறை

01. மாப்பொருள் – வெல்ல மாற்ற பொறிமுறை
பகலில் காவற்கலத்தினுள் ஒளித்தொகுப்பு நிகழ்வதால் CO2 பயன்படுத்தப்படும். எனவே அங்கு கரைந்துள்ள காபோனிக் அமிலத்தின் அளவு குறையும். pH உயர்வாக காணப்படும்.
இவ் உயர் pH காவற்கலத்திலுள்ள சேமிப்பான மாப்பொருளினை வெல்லமாக மாற்ற தூண்டும்.
இதனால் காவற்கலத்தில் கரையச் செறிவு அதிகரிக்கும். இதனால் நீர் அழுத்தம் குறையும். மேற்றோல் கலங்களை விட காவற் கலங்களில் நீர் அழுத்தம் குறைவதால் நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப மேற்றோல் கலங்களிலிருந்து காவற்கலங்களிற்கு நீர் உட்செல்லும். இலைவாய் தளப்பாட்டில் 40 இற்கு ½ வட்ட முறையில் நிறப்பப்படும். இதனால் இலைவாய் திறக்கும்.

.
இரவில் காவற்கலத்தினுள்ள ஊழு2 காணப்படுவதால் அணு நீரில் கரைந்து காபோனிக் அமிலமாக மாற்றப்படும். எனவே pH குறைவாக காணப்படும்.
இவ் pH குறைவு காவற் கலத்திலுள்ள வெல்லத்தினை மீண்டும் மாப்பொருளாக மாற்ற தூண்டும்.
இதனால் காவற்கலத்தில் கரையச் செறிவு குறையும். இதனால் நீர் அழுத்தம் கூடும். மேற்றோல் கலங்களை விட காவற் கலங்களில் நீர் அழுத்தம் கூடுவதனால் நிர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப காவற்கலத்திற்கு மேற்றோல் கலத்திற்கு நீர் செல்லும். எனவே இலைவாய் மூடப்படும்.

02. K+உள்ளடுத்தல் பொறிமுறைPlease Login to view the Question
 பகல் வேளையில் மு10 அயன்கள் உயிர்ப்பான முறையில் அயல் மேற்றோல் கலங்களிலிருந்து காவற் கலத்தினுள் பம்பப்படுகின்றன. இதறற்கான காரணங்கள் அறியப்படவில்லை. K+நீரில் கரைவதால் கரையச் செறிவு அதிகரிக்கும். அகவே கரையழுத்தமும் கூடும். இதனால் மேற்றோல் கலங்களை விட காவற்கலங்களில் நீர் அழுத்தம் குறையும். ஆகவே நிர் அழுத்தப்பட்டித்திறனுக்கு ஏற்ப மேற்றோல் கலங்களிலிருந்து காவற் கலத்தினுள் நீர் பிரசாரணம் மூலம் செல்லும். எனவே காவற் கலத்தின் தடிப்பு நீளப்பாட்டில் கூடும். கலமானது அரைவட்ட முறையில் வடிவம் பெறும். எனவே இலைவாய் திறக்கும்.

.
 இரவு வேளையில் K+அயன்கள் உயிர்ப்பற்ற முறையில் காவற் கலத்திலிருந்து அயல் மேற்றோல் கலத்தினுள் செல்கின்றன. K+ அயல் மேற்றோல் கலங்களிலுள்ள நீரின் கரைவதனால் இங்கு கரையச் செறிவு கூடும். இதனால் நீரழுத்தப் படித்திறன் காவற்கலை விட குறையும். ஃ நீர் காவற்கலங்களிந்து மேற்றோல் கலங்களுக்குள் செல்லும். நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப இலைவாய் மூடும்.
சில கலங்களில் பகல் வேளையில் K+ அயன் உள்ளெடுத்தலுடன் Cl-அயன் உள்ளெடுத்தலுடன் K+ அயன் வெளியேறலம் நிகழ்கிறது.

3. ஒளித்தொகுப்பு பொறிமுறைPlease Login to view the Question

  • பகல் வேளையில் காவற்கலங்களினுள் பச்சையவுருமணிகள் காணப்படுவதால் ஒளித்தொகுப்பு நிகழும். இதனால் உருவாகும் வெல்லம் நீரில் கரைந்து கரையச் செறிவு கூடும். இதனால் கரையழுத்தம் கூடும். எனவே நீர் அழுத்தம் குறையும். மேற்றோல் கலங்களை விட காவற்கலங்களில் நீர் அழுத்தம் குறைவதனால் நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப காவற்கலத்தினுள் நிர் உட்செல்லும். எனவே காவற்கலத்தின் தடிப்பு நீள்பக்கபாட்டில் தடிக்கும். எனவே காவற்கலம் ½ வட்ட வடிவம் பெறும். இலைவாய் திறக்கும்.
  • .இரவு வேளைகளில் ஒளித்தொகுப்பு நிகழாததால் வெல்லச் செறிவு குறையும். இதனால் காவற்கலத்தின் கரையச் செறிவு குறைவடையும். ஃ அயல் மேற்றோல் கலங்களை விட காவற்கலங்களில் நீர் அழுத்தம் கூடும். எனவே நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப நீர் மேற்றோல் கலங்களுக்குள் செல்லும். நீள்பக்கமாட்டில் காவற்கலத்தின் தடிப்பு குறையும். ஃ இலைவாய் மூடும்.Please Login to view the Question
RATE CONTENT 0, 0
QBANK (15 QUESTIONS)

இலைவாயசைவுக்கு அதிகுறைந்தளவு விளைவையுண்டு பண்ணக்கூடிய காரணி?

Review Topic
QID: 5122
Hide Comments(0)

Leave a Reply

மிகப்பல இடைக்கால நிலைத்தாவரங்களில் இலைவாய்கள் திறப்பதற்கு ஆதரவளிக்காத நிபந்தனை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5568
Hide Comments(0)

Leave a Reply

இலைவாய் திறப்பதில் பங்களிக்கும் நிலைமை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5578
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 5825
Hide Comments(0)

Leave a Reply

மந்தமான செயற்பாடாக கருதப்படக்கூடியது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5577
Hide Comments(0)

Leave a Reply

தாவர இலைகளை ஒளிபடுமாறு வைக்கும்போது இலை வாய்கள் திறக்கும். இலைவாய்கள் திறக்கும்போது காவற்கலங்களில் பின்வருவனவற்றில் எது
நடைபெறுவதில்லை?

Review Topic
QID: 5830
Hide Comments(0)

Leave a Reply

இலைவாய்களின் திறத்தலுடன் சம்பந்தமற்றது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6090
Hide Comments(0)

Leave a Reply

இலைவாயசைவுக்கு அதிகுறைந்தளவு விளைவையுண்டு பண்ணக்கூடிய காரணி?

Review Topic
QID: 5122

மிகப்பல இடைக்கால நிலைத்தாவரங்களில் இலைவாய்கள் திறப்பதற்கு ஆதரவளிக்காத நிபந்தனை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5568

இலைவாய் திறப்பதில் பங்களிக்கும் நிலைமை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5578

பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 5825

மந்தமான செயற்பாடாக கருதப்படக்கூடியது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5577

தாவர இலைகளை ஒளிபடுமாறு வைக்கும்போது இலை வாய்கள் திறக்கும். இலைவாய்கள் திறக்கும்போது காவற்கலங்களில் பின்வருவனவற்றில் எது
நடைபெறுவதில்லை?

Review Topic
QID: 5830

இலைவாய்களின் திறத்தலுடன் சம்பந்தமற்றது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6090
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank