Please Login to view full dashboard.

தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 09:44am

தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள்
தாவரத்தின் ஒரு பகுதியில் உற்பத்தியாக்கப்பட்டு இன்னொரு பகுதிக்கு கடத்தப்பட்டு மிகவும் குறைந்த செறிவில் தொழிற்பட்டு தாவரத்தின் உடல் கட்டமைப்பு உடற் தொழிற்பாட்டு ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சேதன இரசாயனப் பதார்த்தம் தாவர வளர்ச்சி பதார்த்தம் எனப்படும்.
இப்பதார்த்தம் தூண்டியாக / நிரோதியாக தொழிற்படுகின்றது.

தாவர வளர்ச்சி பதார்த்தங்களின் வகைகள்
1. இயற்கையான ஒட்சிசன் (Auxin) – CHON
2. இயற்கையான சைற்றோகைனின் (cytokinin) – CHON
3. ஜிபரலின் { ஜிபரலிக்கமிலம் (GA) (Giberelin) – CHO
4. அப்சிசிக்கமிலம் (Abscisic acid) – CHO
5. எதிலீன் (Ethelene) – CH

இயற்கையான ஒட்சின்
 இதுவே முதன்முதலில் அறியப்பட்ட தாவரவளர்ச்சி பதார்த்தமாகும்.
 இதன் இரசாயனப் பெயர் Indole-3-Acetic acid

 உற்பத்தி : 1. தண்டுநுனி
2. இளம் இலை
 கடத்தல் : புடைக்கலவிழையக் கலங்களினூடாக கடத்தப்படும். (ஒருதிசை வழியே)
 தொழில் : 1. கலங்களின் நீட்சி
2. உச்சி ஆட்சியை பேணல்
3. திருப்ப அசைவுகளை சீராக்கல்
4. இலைகளில் வெட்டுபடை தோன்றலை நிரோதிக்கும்
5. மாறிழைய தொழிற்பாட்டை தூண்டல்
6. வேரின் வளர்ச்சியை தூண்டல்
7. பழங்களின் வளர்ச்சியை தூண்டல்
இயற்கையான சைற்றோகைனின்
 இது Adininநெ ஐ சார்ந்த சேர்வைகள்
 உற்பத்தி : வேருச்சி பல இழையங்களின் பிரிவடையும் கலங்கள்
 கடத்தல் : காழினூடாக கடத்தப்படும்
 இயற்கையான தொழில்கள் :
1. அங்குர வளர்ச்சியை அதிகரித்தல்
2. உச்சி ஆட்சியை நிரோதித்தல்
3. இலைகள் மூப்படைதலை தாமதித்தல்
4. ஒட்சினுடன் இடைவினை ஆற்றி (தாக்கமடைந்து) கலப்பிரிவை தூண்டல்

ஜிப்ரலின் /ஜிபரலிக்கசிட்
 இவ்வளர்ச்சிப் பதார்த்தம் ஒரு வகை முதன்முதலில் பங்கசிலிருந்து பிரித்தெருக்கப்பட்டது. (Giberella)
 உற்பத்தி : இளம் இலைகள் வேர்கள் முளைக்கும் வித்துக்கள்
 கடத்தல் : புடைக்கலவிழையக் கலங்களுக்கூடாக கடத்தப்படும்
 தொழில்கள் : 1. தண்டுகள் நீட்சியடைதல்
2. வித்துமுளைத்தலின் போது நொதியங்களை உயிர்ப்பூட்டல் (வித்துமுளைத்தலை தூண்டல்)

அப்சீசிக்கமிலம் (Abscicacids)
 உற்பத்தி : வேர்மூடி முதிர்ச்சியடையாத வித்து
 கடத்தல் : வாழினூடாக கொண்டு செல்லப்படும்
 தொழில்கள் :

1. வித்து முளைத்தலை நிரோதித்தல்
2. நீரினளவு குறைவான நிலையில் இலைவாய்கள் மூடுதல்
3. வெப்பவலய நாடுகளில் வளரும் தாவரங்களில் குளிர்காலங்களில் அரும்பு வளர்ச்சியை நிரோதித் தல். அதே தாவரங்களில் குளிர் காலங்களில் மாறிழைய தொழிற்பாட்டை நிரோதித்தல்.

எதிலீன் (Ethelene)
 உற்பத்தி : பழங்கள் பல்வேறு இழையங்களின் புடைக்கலவிழையக்கலங்கள்.
 கடத்தல் : புடைக்கலவிழையக்கலங்கள் உரியம் என்பவற்றுக்கூடாக கடத்தப்படும்.
 தொழில்கள் :

1. தண்டுகள் நீட்சியுறலில் உதவுதல்
2. பழங்கள் பழுப்பதை தூண்டல்.
3. சில தாவரங்களில் பூத்தலை தூண்டல்.
4. இலைகளிலும் பழங்களிலும் வெட்டுபடை தோன்றலை தூண்டும்.

விவசாயத்தில் இயற்கையான செயற்கையான (தொகுப்பட்ட) தாவர வளர்ச்சில் பதார்த்தங்களின் முக்கியத்துவங்கள்
1. தண்டின் வெட்டுத் துண்டங்களில் வேர் உருவாக்கத்தை தூண்டல் -IBA -Indol Butanic Acid
2. பழங்களின் விருத்தியை தூண்டல் – ஒட்சின்
3. கன்னிக் கனியமாதலை தூண்டல் – ஒட்சின்
4. களை கொல்லியாக பயன்படும் – 2, 4 – -D, MCPA
5. வெட்டப்பட்ட இலைகளினதும் பூக்களினதும் செழுமை தோற்றத்தை நீடித்தல் – சைற்றோகைனின்
6. வித்து முளைத்தலை தூண்டல் – Gibberellin
7. பழங்கள் பழுத்தலை தூண்டல் – Ethelene
8. தண்டுகள் நீட்சியடைதலை தூண்டல் – Gibberellin

தாவர வளர்ச்சியும் விருத்தியும்
அங்கியொன்றில் விருத்தி நடைபெறும்போது உலர்திணிவு { கனவளவு { உயரத்தில் ஏற்படும் மீளமுடியாத அதிகரிப்பு ‘வளர்ச்சி” எனப்படும். வளர்ச்சியின் போது கலமட்டத்தில் பல்வேறு செயன்முறைகள் நடைபெறும். இச்செயன்முறைகள் 3 அவத்தைகளை கொண்டது.
1. கலப்பிரிவு : இழையுருப்பிரிவின் மூலம் கலங்கள் பிரிந்து எண்ணிக்கையில் அதிகரித்தல்.
2. கலவிரிவு : கலங்கள் போசணையை பெற்று பருமனில் அதிகரித்தல். (அதிபர் போசணை)
3. கலவியத்தம் : கலங்கள் குறித்த கட்டமைப்பு/ தொழில்களை புரிவதற்காக சிறத்தலடைதல் ஆகும்.

 

 

 தாவர வளர்ச்சி   விலங்கு வளர்ச்சி
உயரத்தில் தொடர்ந்து வளரும் (வரையறுக்கப்படாத வளர்ச்சி) 1. உயரத்தில் குறித்த காலம் மட்டும் வளரும் (வரையறுக்கப்பட்ட வளர்ச்சி)
பிரியிழையப் பகுதியில் மட்டும் வளர்ச்சி நடைபெறும் 2. பெரும்பாலும் விலங்கு உடல் முழுவதிலும் வளர்ச்சி நடைபெறும்
 ஒராண்டு தாவர வளர்ச்சி வரையறுக்கப்பட்ட வளர்ச்சி   பல்லாண்டு தாவர வளர்ச்சி1. வரையறுக்கப்படாத வளர்ச்சி
ஒரு வருடத்துக்குள் வளர்ச்சி முற்றுப்பெறும் 2. பல வருடங்களாக தொடர்ந்து வளரும்
துணைவளர்ச்சி இல்லை 3. துணைவளர்ச்சி உண்டு

வளர்ச்சி வரைபுகள்
வரைபு – 01.
வித்து முளைத்தலிலிருந்து தாவரம் மூப்படைதல் வரையான ஓராண்டு தாவரத்தின் வளர்ச்சி வரைபு

வரைபு – 02.
வித்திலிருந்து ஆரம்பித்து ஓராண்டு தாவரம் முளைத்து வளர்ந்து மூப்படைந்து இறக்கும் வரையான வளர்ச்சி வரைபு

வித்து முளைத்து நாற்றாகுடம் வரையிலான வளர்ச்சி வரைபு.

ab- காலத்துடன் உலர்நிறை சீராக குறைந்து செல்லம் காரணம் | வித்து முளைத்தலின் ஆரம்பத்தில் சுவாசம் மட்டும் நடைபெறும். இதன்போது co2 ஆக cஇழக்கப்படும். ஒளித்தொகுப்பு கனியுப்பு அகத்துறிஞ்சல் இல்லை.bc- உலர் நிலை காலத்துடன் சீரற்றதாக குறைந்து செல்லும் காரணம் | இதன்போது ஒளித்தொகுப்பு கனியுப்பு அகத் துறிஞ்சல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயன்முறைகளால் உலர்நிறை அதிகரிப்பதிலும் பார்க்க கலச்சுவாசத்தால் உலர்நிறை குறைதல் அதிகமாக காணலாம்.

cd- காலத்துடன் உலர்நிறை சீரற்றதாக அதிகரிக்கின்றது. காரணம் | ஒளித்தொகுப்பு கனியுப்பு அகத்துறிஞ்சலால் உலச் சிறை அதிகரித்தல். சுவாசத்தின் போது உலர்நிறை குறைவதிலும் பார்க்க அதிகமாகும்.

 

வரைபு – 04.
தாவரத்தின் ஓர் அங்கத்திற்கான வளர்ச்சி வரைபு.

 

பிரியிழையம்

 

வியத்தமடையாத கலங்கள் தொடர்ச்சியாக இழையுருப்பிரிவின் மூலம் பிரிந்து பெருக்கக் கூடியவை. கலத்திடைவெளிகள் அற்றவை. முனைப்பான கருவையும் செறிந்த குழியவுருவையும் கொண்டது. பெரிய புன்வெற்றிடம் இல்லை. சிலவற்றில் சிறிய புன்வெற்றிடங்கள் காணப்படலாம். உருமணிகள் இல்லை உருவணிப்போலிகள் காணப்படலாம். சேமிப்புகள் கழிவுகளிலில்லை. உயர் அனுசேபத் தொழிற்பாடுடையவை. முதலான துணையான உற்பத்தி { வளர்ச்சியின் போது தோற்றுவிக்கப்படும். கலச்சுவர் மெல்லியது. முதற்சுவர் படிவை மட்டும் கொண்டுள்ளன. இதில் பிரதானம் செலுலோசுää அரைச்செலுலோசு பெக்ரின் ஐ கொண்டுள்ளன.

 

பிரியிழையம்
. 1. உச்சிப் பிரியிழையம்
2. பக்கப் பிரியிழையம்
3. இடைப்புகுந்த பிரியிழையம் என பிரியிழையமானது அமைவிடத்தின் அடிப்பiடையில் 3 வகைப்படும்.
டி. உற்பத்தியின் அடிப்படையில் பிரதானமாக 2 வகைப்படும்.
1. முதலான பிரியிழையம்
2. துணையான பிரியிழையம்

உச்சிப் பிரியிழையம்
அமைவிடம் : தண்டுச்சி வேருச்சி
தொழில் : தண்டு வேரை நீளத்தில் அதிகரிக்கச் செய்தல்
உ – ம் : தண்டுச்சிப்பிரியிழையம் வேருச்சி பிரியிழையம்

பக்கப் பிரியிழையம்
இதில் பல வகைகள் உண்டு.

சிறுதட்டு மாறிழையம்
அமைவிடம் : கலன்கட்டில் முதற்காழுக்கும் முதல் உரியத்திற்கும் இடையில்
தொழில் : உள்நோக்கியும் வெளிநோக்கியும் புதிய கலங்களைத் தோற்றுவிப்பதன் மூலம் துணை வளர்ச்சியில் பங்கெடுத்தல்.

கலன்கட்டுக்களுக்கு இடையிலான மாறிழையம்
அமைவிடம் : கலன்கட்டுகளுக்கிடையில்
தொழில் : உள்நோக்கி துணைக்காழையும் வெளிநோக்கி துணை உரியத்தையும் தோற்றுவிப்பதன் மூலம் தண்டின் விட்டத்தை அதிகரித்தல்

கலன்மாறிழையம்
அமைவிடம் : துணைக்காழ்ää துணை உரியத்திற்கு இடையில்
தொழில் : உள்நோக்கி துணைக்காழையம் வெளிநோக்கி துணை உரியத்தையும் தோற்றுவிப்பதன் மூலம் தண்டின் விட்டம் சுற்றளவில் அதிகரிப்பை ஏற்படல்.

தக்கை மாறிழையம்
அமைவிடம் : துணைமேற்பட்டை தக்கை ஆகியவற்றுக்கு இடையில்
தொழில் : உள்நோக்கி துணை மேற்பட்டையையும் வெளிநோக்கி தக்கையையும் தோற்றுவிப்பதன் மூலம் தண்டு வேரின் விட்டம் சுற்றளவில் அதிகரிப்பை ஏற்படுத்தல்

இடைப்புகுந்த பிரியிழையம்
அமைவிடம் : இலை அடி கணுவிடை அடி.
தொழில் : இலை கணுவிடைகளின் நீளத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தல்

முதலான பிரியிழையம்
முதலான உற்பத்தியில் தோற்றுவிக்கப்படுகின்றது. முதலான இழையங்களைத் தோற்றுவிக்கும் தாவரத்தில் துணைவளர்ச் சியை ஏற்படுத்தும்
உ – ம் : கலன்கட்டிடை மாறிழையம் கலன் மாறிழையம் தக்கைமாறிழையம்.

துளையான பிரியிழையம்
துணையான உற்பத்திக்குரியது. துணையான இழையங்களைத் தோற்றுவிக்கும். தாவரத்தில் துணைவளர்ச்சியை ஏற்படுத்தும்.
உ – ம் : கலன்கட்டிடை மாறிழையம் கலன் மாறிழையம் தக்கை மாறிழையம்

 

 

தண்டுச்சி வேருச்சி
இலைமுதல் உண்டு 1. இலைமுதல் இல்லை
வேர்மூடியில்லை 2. வேர்மூடியுண்டு
இலைமுதலால் உச்சிப் பிரியிழையம் மூடி பாதுகாக்கப்படும் 3. வேர்மூடியால் உச்சிப்பிரியிழையம் மூடி பாதுகாக்கப்படும்
கக்கவரும்பு உண்டு 4. கக்கவரும்பு இல்லை
முதல் மாறிழையம் பட்டிகையாக பல காணலாம் 5. முதல் மாறிழையம் கம்பமாக தனித்து காணலாம்
சிறுகட்டுமாறிழையம் உண்டு 6. சிறுகண்டு மாறிழையமில்லை
கிடை அகன்றது 7. கிடை ஒடுங்கியது
உச்சிப் பிரியிழையத்திலிருந்து புதிய கலங்கள் உள்நோக்கி தோற்றுவிக்கப்படும்
8. உச்சிப் பிரியிழையத்திலிருந்து புதிய கலங்கள் உள்நோக்கி யும் வெளிநோக்கியும் தோற்றுவிக்கப்படும்
இலை உண்டு 9. இலை இல்லை
கணு உண் டு 10. கணு இல்லை

 

    • இளம் இருவித்திலை தாவரத்தண்டின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தில் 3 பிரதான பகுதிகளை காணலாம்.

 

    • 1. மேற்றோல்

 

    • 2. மேற்பட்டை

 

    • 3. கலனிழையம்
    •  தண்டின் அதிவெளிப்புறப்படையாக மேற்றோல் அமைந்துள்ளது. மேற்றோல் திரிபடைந்த புடைக்கலவிழையக் கலங்களாலானது. ஒரு கலப்படையில் கலங்கள் நெருக்கமாக அடுக்கப்பட்டுள்ளது. கலத்திடைவெளி இல்லை. உயிருள்ள கலங்கள். மேற்றோலில் இலைவாய்கள் காணப்படலாம். இது வாயுபரிமாற்றத்தில் ஈடுபடும். மேற்றோலுக்கு வெளியே கியூற்றினாலான புறத்தோலுண்டு. இது ஆவியுயிர்ப்பை குறைக்கின்றது.
    •  சில தண்டில் மேற்றோலின் வெளிவளர்ச்சியாக மேற்றோல் மயிர்கள் காணப்படலாம். மே / மயிர்கள் தனி / பல் கலத்தா லானாவை. மேற்றோலின் தொழில்கள் :

 

    • 1. உள் இழையங்களை பாதுகாத்தல்

 

    • 2. வாயுப்பரிமாற்றம்

 

  • 3. உலர்தலை தடுத்தல் / குறைத்தல்
  •  மேற்றோலையடுத்து உள்ளே மேற்பட்டை காணலாம். மேற்பட்டை பல கலப்படையில் கலங்களை கொண்டுள்ளது. மேற்பட்டையில் இரு பகுதிகளுண்டு.

a. வெளிமேற்பட்டை
இது ஒட்டுக்கலவிழையத்தாலானது. பல கலப்படையில் கலங்களை கொண்டுள்ளது. உயிருள்ள கலம். பொறிமுறை தாங்கலை மேற்கொள்ளும்.

b. உள்மேற்பட்டை
புடைக்கலவிழையத் தாலானது. பல கலப்படையில் கலங்கள் காணலாம். உயிருள்ள கலங்கள். குளோரோபில் காணப் படலாம். குளோரோபில் காணப்படின் உள்மேற்பட்டை பச்சைய இழையம் எனலாம். இது சேமிப்பு, ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும்.

மேற்பட்டையின் தொழில்கள் :
1. சேமிப்பு

2. ஒளித்தொகுப்பு

3. பொறிமுறை தாங்கல்

    •  மேற்பட்டைக்கு அடுத்து உள்ளே அகத்தோல் காணலாம். இது தண்டில் தெளிவு குறைந்தது. திரிபடைந்த புடைக்கல விழையத்தாலானது. ஒரு கலப்படையில் கலங்களை நெருக்கமாக கொண்டது மாப்பொருளை சேமிக்கும்.
    •  அகத்தோலையடுத்து உள்ளே கலனிழையம்/ கம்பம் /மையவிழையம் உண்டு. மையவிழைய சுற்றயல் பகுதியில் வளைய ஒழுங்கில் கலன்கட்டுக்கள் காணப்படும். கலன்கட்டுக்கள் ஏறத்தாழ ஒரே பருமனுடையவை. ஏறத்தாழ 8 – 15 கலன்கட்டுக்கள் காணப்படலாம். கலன்கட்டில் காழ், உரியம் ஒன்றாக காணப்படுகின்றது. எனவேää ‘ஒருங்கமைந்த கலன்கட்டு” எனப்படும். காழுக்கும் உரியத்துக்கும் இடையில் சிறுகட்டு மாறிழையம் காணலாம். இதனால் திறந்த கலன்கட்டு எனலாம்.
    •  சிறுகட்டு மாறிழையம் ஒரு கலப்படையில் கலங்களை கொண்டிருக்கும். இது முதலான பிரியிழையமாகும். இதன் தொழில் தண்டின் உள் வெளிநோக்கி புதிய கலங்களை தோற்றுவித்தல்.
    •  கலன்கட்டில் உள் / கிடைநோக்கி முதற்காழும் உள் / பரிவட்டவுறை நோக்கி முதல் உரியமும் காணலாம். முதற்காழில் மூலக்காழ் உள் / கிடை நோக்கி காணலாம். அனுக்காழ் வெளி / சிறுகட்டு மாறிழையம் நோக்கி காணலாம். மூலக்காழ் உள்நோக்கியிருத்தல் உள்ளாதிகாழ் எனலாம். மூலக்காழ்கலன், அனுக்காழ்கலன் நேர்வரிசையில் காணலாம். காழில் காழ்கலன், குழற்போலி, காழ்புடைக்கலவிழையக்கலம், காழ்நார் என்பன காணலாம்.

காழின் தொழில்கள்

    • 1. நீர், கனியுப்பு கடத்தல் (சாற்றேற்றம்)

 

    • 2. பொறிமுறை தாங்கும் வலு வழங்கல்
    •  உரியத்தில் நெய்யரிக்குழாய், தோழமைக்கலம், உரியப்புடைக்கலவிழையம், உரியநார் என்பன காணலாம்.

தொழில்கள் :

    • 1. சேதன உணவு / சுக்குரோசு கடத்தல்
    •  கலன்கட்டுக்கும் அகத்தோலுக்குமிடையில் பரிவட்டவுறை உண்டு. பரிவட்டவுறை வல்லுருக்கலவிழையத் தாலானது. இறந்த கலங்கள் தொடர்ச்சியற்றது. பல படையில் கலங்களை கொண்டது. பரிவட்டவுறை ஒவ்வொரு கலன்கட்டுக்கும் தொப்பி போல் அமைந்திருக்கும்.

தொழில்கள் :

    • 1. பொறிமுறை தாங்கும் வலு வழங்கல்

 

    • தண்டின் மத்திய பகுதியில் அகன்ற இடை உண்டு. இது புடைக்கலவிழையத் தாலானது. உயிருள்ள கலங்கள்.

 

  • தொழில் : சேமிப்பு
  •  கலன்கட்டுகளுக்கிடையில் முதலான மையவிழையக் கதிர்கள் காணலாம். கதிர்கலங்களில் சில துணைவளர்ச்சியின் போது பிரியிழையமாக தொழிற்படுகின்றன. இது ஆரைத் திசையில் பதார்த்தங்கள் கடத்த உதவும்.

இளம் ஒருவித்திலை தாவரத் தண்டின் குறுக்குவெட்டு முகத் தோற்றம்

 

    • இளம் ஒருவித்திலை தாவரத் தண்டின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தில் 3 பிரதான பகுதிகளுண்டு.

 

    • 1. மேற்றோல்

 

    • 2. கீழ்த்தோல்

 

  • 3. அடியிழையம்
  •  தண்டின் அதிவெளிப்புற படையாக மேற்றோல் அமைந்துள்ளது. மேற்றோல் திரிபடைந்த புடைக்கலவிழையக் கலங் களாலானது. ஒரு கலப்படையில் கலங்கள் நெருக்கமாக அடுக்கப்பட்டள்ளன. கலத்திடைவெளி இல்லை. உயிருள்ள கலங்கள். மேற்;றோலில் இலைவாய்கள் காணப்படலாம். இது வாயுப்பரிமாற்றத்தில் ஈடுபடும் மேற்றோலுக்கு வெளியே கியூற்றினாலான புறத்தோல் உண்டு. இது ஆவியுயிர்ப்பை குறைக்கின்றது.
  •  சில தண்டில் வெளிவளர்ச்சியாக மேற்றோல் மயிர்கள் காணலாம். இது தனி / பல் கலத்தாலானது.

மேற்றோலின் தொழில்கள் :
1. வாயு பரிமாற்றம்
2. உள் இழையங்களை பாதுகாத்தல்
3. உலர்தலை குறைத்தல் / தடுத்தல்

மேற்றொலையடுத்த உள்ளே கீழ்தோல் காணப்படும். வல்லுருக்கலவிழையத் தாலானது. இறந்த கலங்கள்ää பல கலப் படைகளில் கலங்களைக் கொண்டது.
தொழில் :
1. பொறிமுறை தாங்கும் வலு வழங்கல்

    • கீழ்;த்தோலை அடுத்து உள்ளே அடியிழையம் காணலாம். இது புடைக்கலவிழையத்தலானது. உயிருள்ள கலங்கள் பல கலப்படைகளில் கலங்களை கொண்டிருக்கும். இதில் மேற்பட்டைää அகத்தோல், பரிவட்டவுறை எனும் வியத்தம் காணப்படுவதில்லை.
    •  அடிப்படையிழையம் திரிபடைந்த புடைக்கலவிழையத்தாலானது. இதில் உணவு  சேமிக்கப்படுகின்றது.
    •  அடிப்படையிழையத்தில் கலன்கட்டுக்கள் ஒழுங்கின்றி சிதறிக் காணலாம். எண்ணற்ற கலன்கட்டுக்கள் காணலாம். மத்தியில் பருமனில் பெரிய கலன்கட்டுக்களும் சுற்றயலில் பருமனில் சிறிய கலன்கட்டுக்களும் காணலாம். ஒவ்வொரு கலன்கட்டையும் சூழ வல்லுருக்கலவிழையத்தாலான கட்டுமடல் காணலாம்.
    • கலன்கட்டில் காழும், உரியழும் ஒன்றாக காணப்படுகின்றன. இதனால் இவை ஒருங்கமைந்த கலன்கட்டுக்கள்” எனலாம். காழ், உரியத்திற்கிடையில் சிறுகட்டுமாறிழையம் காணப்படாது. எனவே இவை மூடிய கலன்கட்டுக்கள் எனலாம்.
    • கலன்கட்டில் உள்நோக்கி மூலக்காழ்கலனும் முதல் உரியத்தை நோக்கி அனுக்காழ்கலனும் உண்டு. இங்கு அனுக்காழ் கலன். மூலக்காழ்கலன் என்பன ‘v” வடிவில் அமைந்து காணலாம். மூலக்காழ்கலன் உள்நோக்கி காணப்படும். எனவே உள்ளதிக்காழ் எனலாம்.
    •  மூலக்காழ்கலனுக்கு நேர்கீழே கலனழிவுக்குழி உண்டு. இது மூலக்காழ்கலனின் சில கலங்கள் அழிவடைந்து தோற்று விக்கப்படுகின்றது. கலன்கூட்டுக்களுக்கிடையே மையவிழையக் கதிர்நார்கள் இல்லை.

 

    •  காழ் இழையமானது | காழ்ப்புடைக்கலவிழையம்ää காழ்நார்ää காழ்கலன்மூலகம்ää குழற்போலி என்பவற்றாலானது :

தொழில்கள் :

    • 1. நீர், கனியுப்பு கடத்தல் (சாற்றேற்றம்)

 

    • 2. பொறிமுறை தாங்கும் வலு வழங்கல்
    •  உரிய இழையமானது / உரியபுடைக்கலவிழையம் தோழமைக்கலம், உரியநார், நெய்யரிக்குழாய் மூலகம் என்பவற்றா லானது.

 

  • 1. சேதன உணவு / sucrose கடத்தல்.
 இளம் இருவித்திலை தாவரத்தண்டின் கு. வெ. முகம் இளம் ஒருவித்திலை தாவரத்தண்டின் கு.வெ. முகம். இளம் ஒருவித்திலை தாவரத்தண்டின் கு.வெ. முகம்.
 1. மேற்பட்டை உண்டு.   1. மேற்பட்டை இல்லை
 2. ஒட்டுக்கலவிழையம் உண்டு.  2. ஒட்டுக் கலவிழையம் இல்லை
 3. கீழ்தோல் இல்லை  3. கீழ்தோல் உண்டு
 4. அகத்தோல் உண்டு   4. அகத்தோல் இல்லை
 5. பரிவட்டவுறை உண்டு  5. பரிவட்டவுறை இல்லை
 6. இடை உண்டு  6. கிடை இல்லை
 7. அடியிழையம் இல்லை   7. அடியிழையம் உண்டு
 8. மையவிழையக் கதிர்கள் உண்டு  8. மையவிழையக்கதிர்கள் இல்லை
 9. குறைந்த எண்ணிக்கையான கலன்கட்டுக்கள் (6 – 18)  9. எண்ணற்ற கலன்கட்டுக்கள்/ கூடிய எண்ணிக்கையான கலன்கட்டக்கள்
10. கலன்கட்டுக்கள் வளைய ஒழுங்கில் அமைந்துள்ளன   10. ஒழுங்கின்றி சிதறி காணலாம்
 11. ஏறத்தாழ ஒரே பருமனுள்ள கலன்கட்டுக்கள்  11. மத்தியில் பெரிய கலன்கட்டுக்களும் சுற்றயலில் சிறிய கலன்கட்டுக்களும் காணலாம்
 12. சிறுகட்டுமாறிழையம் உண்டு. (ஒரு கலப்படையில் கலங்கள்)  12. சிறுகட்டு மாறிழையம் இல்லை
 13. மூலக்காழ்கலன்ää அனுக்காழ்கலன் நேரியவரிசையில் காணலாம்   13. மூலக்காழ்கலன், அனுக்காழ்கலன் ‘v’ வடிவில் காணலாம்.
 14. கலனழிவுக்குழி இல்லை  14. கலனழிவுக்குழி உண்டு.
 15. கலன்கட்டைச் சூழ வல்லுருக் கலவிழையத்தாலான கட்டுமடல் இல்லை.  15. கலன்கட்டைச் சூழ வல்லுருக் கலவிழையத்தாலான கட்டுமடல் உண்டு.

 

ஒற்றுமைகள்
1. ஒருங்கமைந்த கலன்கட்டுக்கள் காணப்படும்.
2. உள்நாதிக் காழ் காணப்படல்

இளம் இருவித்திலைத் தாவர வேரின் குறுக்குவெட்டு முகத் தோற்றம்

    •  இளம் இருவித்திலைத் தாவர வேரின் கு/ வெ/ மு தோற்றத்தில் 3 பிரதான பகுதிகளை அவதானிக்கலாம்

 

    • 1. மேற்றோல் /மயிர்தாங்குபடை

 

    • 2. மேற்பட்டை

 

  • 3. கலனிழையம்
  • வேரின் அதிவெளிப்புறமாக மேற்றோல் { மயிர்தாங்குபடை உண்டு. இது ஒரு கலப்படையில் நெருக்கமாக கலங்களைக் கொண்டது. இது திரிபடைந்த புடைக்கலவிழையமாகும். உயிருள்ள கலங்கள் சில மேற்றோல் கலங்கள் தனிக்கல வேர்மயிரை தோற்றுவிக்கும். இவ்வேர் மயிர்கள் அகத்துறிஞ்சும் மேற்பரப்பை அதிகரிக்கின்றன. மயிர் தாங்குபடையின் தொழில் நீர்ää கனியுப்புக்களை அகத்துறிஞ்சல்.
  • மயிர் தாங்குபடையை அடுத்து உள்ளே மேற்பட்டை காணலாம். புடைக்கலவிழையங்கலங்களால் ஆனது. பல கலப்படையில் கலங்களை கொண்டுள்ளது.

 

தொழில்

    • 1. சேமிப்பு

 

  • 2. பதார்த்தங்களின் பக்கக்கடத்தல்
  • மேற்பட்டையை அடுத்து உட்பகுதியில் அகத்தோல் உண்டு. இது தெளிவானது. திரிபடைந்த புடைக்கலவிழையத்தால் ஆனது. ஒரு கலப்படையில கலங்களை கொண்டுள்ளது. கலங்கள் கலத்திடைவெளியற்று நெருக்கமாக அடுக்கப்பட் டுள்ளன. அகத்தோல் பொள்ளான உருளை வடிவானது. அகத்தோலின் ஒவ்வொ கலத்தினதும் ஆரை குறுக்குச் சுவர்களில் சுபரினாலான கஸ்பாரியன் பட்டிகையினாலானது.

தொழில் :

1. சேமிப்பு
2. பதார்த்தங்களை சேர்ந்துபுகவிடல். இதன் மூலம் தாவரத்திற்கு ஒரு பாதுகாப்பு இழையமான தொழிற்படல்

அகத்தோலை அடுத்து உள்ளே கம்பம்/ கலனிழையம் உண்டு. கலனிழைத்திற்கும் அகத்தோலுக்கும் இடையே பரிவட்டவுறை உண்டு. பரிவட்டவுறை திரிபடைந்த புடைக்கலவிழையத்தால் ஆனது. உயிருள்ள கலங்கள் ஒன்று /பல படைகளில் நெருக்கமாக கலங்களை கொண்டது தொடர்ச்சியானது.
தொழில்

: 1. துணை வளர்ச்சியின் போது பிழையிழையமான தொழிற்படல்
2. பக்க வேரை தோற்றுவித்தல்

பரிவட்டவுறையை அடுத்து உள்ளே காழ், உரியம் என்பன மாறி மாறி வௌ;வேறு கட்டுக்களில் உள்ளன. இந்நிலை ஆரைக்குரிய கலன்கட்டு எனப்படும். காழில் மூலக்காழ் வெளிநோக்கி காணப்படுகின்றது. இவ்வியல்பு வெளியாதிக்காழ் எனலாம். அனுக்காழ் உள்நோக்கி மையம் நோக்கி காணலாம். காழில் காழ்நார்ää காழ்புடைக்கலவிழையம் குழற் போலிää காழ்கலன் என்பன காணப்படுகின்றன. காழ் நட்சத்திர வடிவில் ஒழுங்கமைந்திருக்கும். வழமையாக நாலாதி காழாக காணலாம். காழில் 2 – 6 கட்டுக்கள் காணப்படலாம்.

தொழில் :

1. சாற்றேற்றம் /நீர்கனியுப்புக்களை கடத்தல்.
2. பொறிமுறை தாங்கும் வலுவை வழங்கல்.

உரியத்தில் நெய்யரிக்குழாய், தோழமைக்கலம், உரியநார், உரியபுடைக்கலவிழையம் என்பன காணப்படும்.
தொழில் :

1. சேதன உணவு கடத்தல் /sucrose கடத்தல்.
 காழுக்கும் உரியத்திற்குமிடையில் இணை புடைக்கலவிழையம் காணப்படும். துணைவளர்ச்சியின் போது இணைப் புடைக்கலவிழையத்தின் சில கலங்கள் பிரியும் ஆற்றல் பெற்று பிரியிழையமாக தொழிற்படக்கூடியது.
 வேரின் மத்தியில் ஒழுங்கிய கிடை காணலாம். சிலவற்றில் கிடை இல்லை.

இளம் ஒரு வித்திலைத் தாவர வேரின் குறுக்குவெட்டு முகத் தோற்றம்


இளம் ஒருவித்திலைத் தாவர வேரின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தில் 3 பிரதான பகுதிகளுண்டு.
1. மேற்றோல்/ மயிர்தாங்குபடை
2. மேற்பட்டை
3. கலனிழையம்

 

  • வேரின் அதிவெளிப்புற படையாக மேற்றோல் / மயிர்தாங்கு படை காணலாம். இது ஒரு கலப்படையில் கலங்களை நெருக்கமாக கொண்டத. இவை திரிபடைந்த புடைக்கலவிழையக் கலங்கள் ஆகும். உயிருள்ள கலங்கள்ää சில மேற்றோல் கலங்கள் தனிக்கல வேர்மயிரை தோற்றுவிக்கும். இவ்வேர்மயிர்கள் அகத்துறிஞ்சும் மேற்பரப்பை அதிகரிக்கின்றன. மயிர்தாங்குபடையின் தொழில் நீர்ää கனியுப்புக்களை அகத்துறிஞ்சலாகும்.
  • மயிர்தாங்குபடையை அடுத்து உள்ளே மேற்பட்டை காணப்படும். புடைக்கலவிழையங்கலங்களால் ஆனது. பல கலப்படையில் கலங்களைக் கொண்டுள்ளது.

தொழில் :

    • 1. சேமிப்பு

 

  • 2. பதார்த்தங்களின் பக்கக் கடத்தல்
  • மேற்பட்டையை அடுத்து உட்பகுதியில் அகத்தோல் உண்டு. இது தெளிவானது. திரிபடைந்த புடைக்கலவிழையத் தாலானது. ஒரு கலப்படையில் கலங்களை கொண்டுள்ளது. கலங்கள் கலத்திடைவெளியற்று நெருக்கமாக அடுக்கப் பட்டுள்ளன. அகத்தோல் பொள்ளான உருளை வடிவானது. அகத்தோலின் ஒவ்வொரு கலத்தினதும் ஆரை, குறுக்குச் சுவர்களில் சுபரினாலான கஸ்பாரியன் பட்டிகையுண்டு.

தொழில் :

1. சேமிப்பு
2. பதார்த்தங்களை தேர்ந்துபுகவிடல். இதன் மூலம் தாவரத்திற்கு ஒரு பாதுகாப்பு இழையமாக தொழிற்படல்.

அகத்தோலை அடுத்து உள்ளே கம்பம் /கலனிழையம் காணலாம். கலனிழையத்திற்கும் அகத்தோலக்கும் இடையெ பரிவட்டவுறை உண்டு. பரிவட்டவுறை திரிபடைந்த புடைக்கலவிழையத்தாலானது. உயிருள்ள கலங்கள். ஒன்று/ பல படைகளில் நெருக்கமான கலங்களை கொண்டது. தொடர்ச்சியானது.
தொழில் :

    • 1. துணைவளர்ச்சியின் போது பிரியிழையமாக தொழிற்படல்

 

  • 2. பக்க வேரை தோற்றுவித்தல்

 பரிவட்டவுறையை அடுத்து உள்ளே காழ், உரியம் என்பன மாறி மாறி வௌ;வேறு கட்டுக்களில் காணப்படும். இந்நிலை ஆரைக்குரிய கலன்கட்டு எனப்படும்.
 காழில் மூலக்காழ் வெளிநோக்கி காணப்படும். இவ்வியல்பு வெளியாதிக்காழ் எனலாம். அனுக்காழ் உள்நோக்கி /மையம் நோக்கி காணப்படும். காழில் | காழ்ப்புடைக் கலவிழையம், காழ்கலன்மூலகம், குழற்போலி ,காழ்நார் என்பன உண்டு. காழ் வளைய வடிவில் ஒழுங்கமைந்திருக்கும். வழமையாக பல்லாதிக்காழாக காணலாம். காழில் 2 – 6 காட்டுக்கள் காணப் படலாம்.
தொழில் :

1. சாற்றேற்றம் / நீர் கனியுப்புக்களை கடத்தல்.
2. பொறிமுறை தாங்கும் வலுவை வழங்கல்.
 உரியத்தில் நெய்யரிக்குழாய், தோழமைக்கலம், உரியபுடைக்கலவிழையம் உரியநார் என்பன காணலாம்.
தொழில் :

1. சேதன உணவு கடத்தல்/sucrose கடத்தல்.
 காழுக்கும் உரியத்திற்கும் இடையே இணை புடைக்கலவிழையம் காணப்படும். துணைவளர்ச்சியின் போது இணைப் புடைக்கலவிழையத்தின் சில கலங்கள் பிரியும் ஆற்றல் பெற்று பிரியிழையமாக தொழிற்படும்.
 வேரின் மத்தியில் அகன்ற கிடை காணப்படும்.

வேற்றுமைகள் :

  இளம் இருவித்திலைத் தாவர வேரின் கு. வெ. மு. தோற்றம் இளம் ஒருவித்திலைத் தாவர வேரின் கு. வெ. மு. தோற்றம்
  1. நாலாதிக் காழ்   1. பல்லாதிக்காழ்
  2. நட்சத்திர வடிவான காழ்.   2. வளைய வடிவான காழ்
  3. இடை ஒருங்கியது/ குடை இல்லை   3. கிடை அகன்றது

 

ஒற்றுமைகள் :
1. வெளியாதிக்காழ்
2. ஆரைக்குரிய கலன்கட்டுக்கள்

துணை வளர்ச்சி/ 2ஆம் புடைப்பு
கலன்மாறிழையம், தக்கை மாறிழையம் போன்ற பக்கப் பிரியிழையங்களின் தொழிற்பாட்டால் தண்டு { வேரின் விட்டம். சுற்றளவில் ஏற்படும் மீள முடியாத அதிகரிப்பு ‘துணைவளர்ச்சி” எனப்படும்.
இருவித்திலை தாவரத் தண்டின் துணை வளர்ச்சி

 

    • இருவித்திலை தாவரத் தண்டின் துணைவளர்ச்சியின் போது முதலில் கலன்கட்டினுள் காணலாம். சிறுகட்டு மாறிழையம் உயிர்ப்பாக தொழிற்பட்டு கலங்களை வெட்டுவதன் மூலம் உள்நோக்கியும் வெளிநோக்கியும் புதிய கலங்கள் தோற்று விக்கப்படும்.
    • கலன்கட்டுகளுக்கு இடையேயுள்ள முதலான மையவிழையக் கதிர்களின் சில கலங்கள் உயிர்ப்பாக தொழிற்பட்டு பிரியிழையமாக தொழிற்படுவதன் மூலம் துணையான உற்பத்தி உடைய கலன்கட்டிடை மாறிழையம் தோற்றுவிக்கப் படும்.

 

    • சிறுகட்டு மாறிழையம் கலன்கட்டிடை மாறிழையமும் சேர்ந்து முதலான – துணையான உற்பத்தியுடைய கலன்மாறிழைய வளையம் தோற்றுவிக்கப்படும்.
    • கலன்மாறிழையம் உயிர்ப்பாக தொழிற்பட்டு கலங்களை வெட்டுவதன் மூலம் உள்நோக்கியும் வெளிநோக்கியும் புதிய கலங்களை தோன்றும். உள்நோக்கியும் அதிகளவில் துணைக்கலாழையம் வெளிநோக்கி குறைந்தளவில் துணை உரியத்தையும் தோன்றும். அத்துடன் துணையான மையவிழையக் கதிர்களும் தோன்றும். இவை துணைக்காழ் துணை உரியத்தில் ஆரைத் திசையில் ஊடுருவிக் காணலாம்.

 

  • கலன் மாறிழைய தொழிற்பாட்டால் உரியம் வெளிநோக்கி தள்ளப்படும். தண்டின் விட்டம் சுற்றளவு கூடும். தண்புன் மேற்பட்டையில் தகைப்பு ஏற்படும் மேற்பட்டையிலுள்ள சில புடைக்கலவிழையக் கலணங்கள் பரியும் ஆற்றல் பெற்று பிரியிழையமாக தொழிற்படுவதன் மூலம் முற்றிலும் துiணாயன உற்பத்தியுடைய தக்கை மாறிழையம் தோன்றும்.
  • தக்கை மாறிழையம் உயிர்ப்பாக தொழிற்பட்டு கலங்களை வெட்டுவதன் மூலம் உள்நோக்கியும் வெளிநோக்கியும் புதிய கலங்களை தோன்றும். உள்நோக்கி உயிருள்ள துணை மேற்பட்டையையும் வெளிநோக்கியும் இறந்த தக்கையையும் தோன்றும். தக்கைமாறிழைய தொழிற்பாட்டால் தண்டின் விட்டத் சுற்றளவு கூடும்.

 

    • தக்கை இறந்த கலங்களை கொண்டிருப்பதால் வாயுப்பரிமாற்றத்துக்காக தக்கை இடையிடையே பிளவடைந்து பட்டைவாய் தோற்றுவிக்கப்படும்.

 

  • பட்டைவாயில் தக்கைமாறியை தொழிற்பாட்டால் நிரம்பிழையம் தோன்றும். நிரப்பிழையக் கலங்கள் இறந்தவை. ஐதாக காணலாம். கலத்திடைவெளிகள் உண்டு. மெல்லிய கலச்சுவருடையவை.

 

  • முதிர்ந்த நிலையில் துணைக்காழ் வைரமாகும்.
  • கலன் மாறிழையத்திற்கு வெளியே காணலாம். பகுதி மரவுரி எனப்படும்.
  • காலநிலை வேறுபாடு ஆண்டுவளையங்களை வைரத்தில் தோற்றுவிக்கும்.

கலச்சுவரில் சுபரின் படிவு இல்லை

 

 

இருவித்திலை தாவர வேரின் துணைவளர்ச்சி

 

  • வேரின் துணைவளர்ச்சியின் போது முதற்காழ், முதல் உரியத்திற்கு இடையிலுள்ள சில இணைப்புடக்கலவிழையக் கலங்களும் மூலக்காழுக்கு எதிரேயுள்ள சில பரிவட்டவுறைக் கலங்களும் பிரியும் ஆற்றல் பெற்று பிரியிழையமாக தொழிற்படுவதன் மூலம் முற்றிலும் துணையான உற்பத்தியான கலன்மாறிழையம் தோற்றுவிக்கப்படும்.
  • கலன் மாறிழையம் உயிர்ப்பாக தொழிற்பட்டு கலங்களை வெட்டுவதன் மூலம் வேரின் உள்நோக்கியும் வெளிநோக்கியும் புதிய கலங்கள் தோன்றும். உள்நோக்கி அதிகளவு துணைக்காழும் வெளிநோக்கி குறைந்தளவு துணை உரியமும் தோன்றும்.
  • அத்துடன் துணைக்காழ் துணை உரியத்திற்குள் ஆரைத் திசையில் ஊடுருவும் துணையான மையவிழையக்கதிர்களும் தோன்றும். கலன்மாறிழைய தொழிற்பாட்டால் வேரின் விட்டம் சுற்றளவு கூடும்.
  • எஞ்சிய பரிவட்டவுறைக் கலங்கள் பிரியும் ஆற்றல் பெற்று பிரியிழையமாக தொழிற்படுவதன் மூலம் முற்றிலும் துணை யான உற்பத்தியுடைய தக்கைமாறிழையம் தோன்றும். தக்கைமாறிழையம் உயிர்ப்பாக தொழிற்பட்டு கலங்களை வெட்டு வதன் மூலம் வேரின் உள்நோக்கியும் வெளிநோக்கியும் புதிய கலங்கள் தோன்றும். உள்நோக்கி துணை மேற்பட்டையும் வெளிநோக்கி இறந்த தக்கையும் தோற்றுவிக்கப்படும்.

தக்கைமாறிழையத் தொழிற்பாட்டால் வேரின் விட்டம், சுற்றளவு அதிகரிக்கும். தக்கை இறந்த கலங்களை கொண்டிருப்பதால் வாயுப்பரிமாற்றத்திற்காக தக்கை இடையிடையே பிளவடைந்து பட்டைவாய் தோன்றும்.

  • பட்டைவாயில் தக்கைமாறிழைய தொழிற்பாட்டால் நிரம்பிழையக் கலங்கள் தோற்றுவிக்கப்படும். இக்கலங்கள் உயிரற்றவை. ஜதாகக் காணலாம். கலத்திடைவெளிகளுண்டு. மெல்லிய கலச்சுவருடையவை.

 

  உள்வைரம்   வெளிவைரம்
  1. துணைக்காழின் உட்பகுதி   1. துணைக்காழின் வெளிப்பகுதி
  2. ஈரலிப்பற்றது   2. ஈரலிப்பானது
  3. முற்றாக இறந்த கலங்கள். உயிருள்ள கலங்களில்லை.   3. பெரும்பாலும் இறந்த கலங்கள். சில உயிருள்ள கலங்கள்
4. உணவு சேமிப்பில்லை   4. உணவு சேமிப்புண்டு
  5. தலையீட்டு குமிழ்கள் உண்டு   5. தலையீட்டுக்குமிழ்கள் இல்லை
  6. தனின் (Tannin) படிவுகள் உண்டு   6. Tannin  படிவு இல்லை
  7. சாற்றேற்றம் நிகழ்த்தாது   7. சாற்றேற்றம் நிகழ்த்தும்
  8. பூச்சிகள் நுண்ணங்கிகளால் இலகுவில் தாக்கப்படாது   . 8. புச்சி நுண்ணங்கிகளால் தாக்கப்படக்கூடியது
 9. வெளிவைரத்திலிருந்து தோற்றுவிக்கப்படும்   9. கலன்மாறிழையத்திலிருந்து தோற்றுவிக்கப்படும்.
 10. தளபாடம் செய்ய சிறந்தது  10. தளபாடம் செய்ய பொருத்தமற்றது

 

  • வளர்ச்சி வளையம்
    துணைவளர்ச்சியின் போது தோன்றும் தாவரத்தின் துணைக்காழில் அடுத்தள்ள ஒரு வசந்தகால வைரமும் இலையுதிர்கால வைரமும் ஒன்றாக ஒரு வளர்ச்சி வளையம் எனலாம்.
  • சூழலில் ஏற்படும் பருவகால வேறுபாட்டால் தாவரத்தின் துணை வளர்ச்சியின் தோன்றும் துணைக்காழின் தன்மையும் வேறுபடுகின்றது. தாவர வளர்ச்சிக்கு சாதகமான காலத்தில் தோன்றும் துணைக்காழ் வசந்தகால வைரம் எனலாம். தாவர வளர்ச்சிக்கு சாதகமற்ற காலத்தில் தோன்றும் துணைக்காழ் இலையுதிர் கால வைரம் எனப்படும்.
  • வசந்தகால வைரம் நிறந்த குறைந்தது. அதிகளவில் தோற்றுவிக்கப்படும். இதில் தோன்றும் காழ்க்கலன்கள் பெரியவை. எண்ணிக்கையில் அதிகமாக காணலாம். கலச்சுவர் தடிப்பு குறைவானவை.
  • இலையுதிர்கால வைரம் நிறம் கூடியது. குறைந்தளவில் தோன்றும். இதில் தோன்றும் காழ்க்கலங்கள் சிறியவை (விட்டம் குறைந்தவை) எண்ணிக்கையில் குறைவாக காணலாம். ஒப்பீட்டளவில் தடிப்பு கூடிய கலச்சுவரை கொண்டவை.
  • அயனமண்டல மலைக்காட்டு மரங்களில் வளர்ச்சி வளையங்கள் தெளிவற்றவை. பருவக்காற்று காட்டு மரங்களில் வ/ வளையங்கள் தெளிவானவை.
    ஒரு வருடத்தில் பல வளர்ச்சி வளையங்கள் தோன்றலாம். ஒரு வருடத்தில் ஒரு வளர்ச்சி வளையம் தோன்றுமெனில் அது ஆண்டு வளையம் எனப்படும்.
  • திட்டவட்டமான காலநிலை வேறுபாடுள்ள பிரதேசங்களில் வளரும் மரங்களில் அண்ட வளையங்கள் தோற்றுவிக்கப்படும். இலங்கையில் திட்டவட்டமான காலநிலை வேறுபாடு இல்லை. எனவே இலங்கையில் உள்ள மரங்களில் ஆண்டு வளையம் தோன்றாது.

 

மரவுரி
கலன்மாறிழையத்திற்கு வெளியேயுள்ள தாவர இழையப்பாகங்கள் யாவும் மரவுரி எனப்படும். இதில் பின்வரும் இழையங்கள் காணப்படும்.
1. துணை உரியம்
2. முதல் உரியம்
3. துணை மேற்பட்டை
4. தக்கை மாறிழையம்
5. தக்கை
6. நிரப்பிழையம்

மரவுரியின் தொழில்கள் :
1. உணவு கடத்தல்
2. சேமிப்பு
3. பாதுகாப்பு – தக்கை
4. வாயுப்பரிமாற்றம்

சுற்றுப்பட்டை
தக்கை மாறிழையமும் அதன் தொழிற்பாட்டால் தோன்றும் இழையங்களும் ஒன்றாக சுற்றுப்பட்டை எனலாம். இது பின்வரும் இழையங்களை கொண்டுள்ளது.
1. துணை மேற்பட்டை
2. தக்கை மாறிழையம்
3. தக்கை
4. நிரப்பிழையம்

சுற்றுப்பட்டையின் தொழில்கள் :
1. சேமிப்பு
2. வாயுப்பரிமாற்றம்
3. பாதுகாப்பு

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank