Please Login to view full dashboard.

தலையோடு

Author : Admin

11  
Topic updated on 02/14/2019 10:28am

தலையோடு (Skull)  Image Tipflat_bones_in_skull_-_animation Please Login to view the QuestionPlease Login to view the Question    

தலையோடு அச்சுவன்கூட்டின் ஒருபகுதி.

  • தலையோட்டில் இரு பிரதான பகுதிகளுண்டு.
    1. மண்டையோடு (Cronium)
    2. முகம் (Face)
  • தலையோட்டில் மொத்தமாக 22 என்புகள் உண்டு.
  • முள்ளந்தண்டு கம்பத்தின் உச்சியில் தலையோடு சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.

 

மண்டையோடு
  • இதில் 8 என்புகளுண்டு Image Tipcranial_bones_en_v2Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question      
  • இது தட்டையான, ஒழுங்கற்ற என்புகளாலானது
    1. நுதல் என்பு (1)
    2. சுவர் என்புகள் (2)
    3. பிடர் என்பு (1)
    4. கடைநுதல் என்புகள் (2)
    5. ஆப்புப்போலி என்பு (1)
    6. நெய்யரி என்பு (1)
      • மொத்த என்புகள் (08)

 

  • மண்டையோட்டு என்புகள் யாவும் அசையா மூட்டுக்களால் மூடப்பட்டுள்ளன. இங்கு என்புகளுக்கிடையிலான பொருதுதல்கள் தெளிவானவை.

 

  1. முடிப் பொருந்து – சுவரென்புக்கும் நுதல் என்புக்கும் இடையில்
  2. செதில் பொருத்து – சுவரென்புக்கும் கடைநுதல் என்புக்கும் இடையில்
  3. இலாமிடாப் போலிப் பொருந்து – சுவரென்புக்கும் பிடரென்புக்கும் இடையில்
  4. நீள்பக்கப்பொருத்து – இரு சுவரென்புகளுக்கிடையில்

 

  • மண்டையோட்டின் கனவளவு ஏறத்தாழ 1.5ட ஆகும்.
  • மண்டையோட்டின் மேற்பகுதி கவிகையுருவானது
  • இதன் வெளி மேற்பரப்பு அழுத்தமானது.
  • மண்டையோட்டு என்புகளில் நரம்புகள் குருதிக்கலன்கள் நிணநீர்க் கான்கள் செய்வதற்கான பல குடயங்களுண்டு.
  • நுதல் என்பு வெற்றிப்பகுதியில் என்பாக அமைகின்றது. நுகதல் என்பினுள் வளி நிரம்பிய இரு குடாக்கள் உண்டும்.
  • கடைநுதல் என்பில் தசைகள் பொருந்துவதற்கான பல முளைகளுண்டு.

 

(A) முலையுருமுளைகள்

  • இவை காதிற்கு பின்புறமாக காணலாம். குறுகியவை, தடித்தவை, தசைகள் பொருந்தும் பரப்பை வழங்கல்.

(B) தம்பவுரு முளைகள்

  • இவை உவையுரு என்பை தாங்குகின்றன. மெல்லியன நீண்டவை. தசைகள் பொருந்தும் பரப்பை வழங்குகின்றன.

(C) நுகவுரு முளைகள்

  • இவை கடைநுதல் என்புகளிலிருந்து உருவாக்கப்பட்டு நுகவுரு என்பின் கடைநுதல் முளையுடன் இணைக்கின்றன. இதன் மூலம் நுகவுருவில் ஆக்கப்படும் தசைகள் பொருந்தும் பரப்பை வழங்குகின்றன.

 

  • மண்டையோட்டின் அடியிலுள்ள பிடரென்பில் ஒரு பெரும் குடயம் உண்டு.
  • பெருங்கிடையம். முண்ணான் செல்வதற்கான பாதையாக அமையும்.
  • பிடரென்பின் பெருங்குடையத்தின் இருபக்கங்களிலும் இரண்டு அழுத்தமான வட்டக்குமிழ்கள் / பிடரென்புக் குமிழ்கள் காணலாம்.
  • பிடரென்புக்குமிழ்கள் 1ஆம் முள்ளந்தண்டு என்பான Atlas என்புடன் மூட்டுகொண்டு தலையின் மேல், கீழ் அசைவிற்கு இடமளிக்கின்றன.
  • பிறப்பின் போது குழந்தைகளின் உச்சிக் குழிவுகள் (Fontanelles) மென்மையான மெல்லிய மென்சவ்வுத் தன்மையாக காணலாம். இதன் பகுதிகள் ஓரளவு அசைவை அனுமதிக்கின்றன.
  • இவ் உச்சிக்குழிகள் பிறப்புச்சையன்முறைக்கு (ஈணுதல்) உதவும் வகையில் சிறிய அமுக்கங்களை தாங்க இடமளிக்கின்றன. இவை பிறப்பின் பின் 1 – 2 வருடங்களில் என்பால் பிரதியிடப்படும்.

 

  • மண்டையோட்டில் 4 உச்சிக் குழிவுகளுண்டு.
    1. முன் உச்சிக் குழிவு
    2. பின் உச்சிக்குழிவு
    3. வலது பக்க உச்சிக்குழிவு
    4. இடதுபக்க உச்சிக்குழிவு
  • பின் உச்சிக்குழிவு பிறப்பின் 2, 3 மாதங்களில் என்பால் பிரதியிடப்படும்.
    முன் உச்சிக்குழிவு பிறப்பின்பின் 12, 18 மாதங்களில் என்பால் பிரதியிடப்படும்.

 

  • மண்டையோட்டின் தொழில்கள்
    1. மூளையை உள்ளடக்கி வைத்து பாதுகாத்தல்.
    2. நடுக்காது, உட்காது, மணநுகர்ச்சி அங்கங்கள், கண்கள் என்பவற்றை பாதுகாத்தல்.
    3. பிரரென்பின் பெரங்குடையம் முண்ணான் செல்லும் பாதையை வழங்கும்.
    4. பிடரென்புக்குமிழ்கள் Atlas உடன் மூட்டுக்கொண்டு தலையின் மேல், கீழ்  அசைவிற்கு இடமளிக்கும்.
    5. குடாக்களை கொண்டிருப்பதால் தலையோட்டின் பாறத்தைப் குறைத்தல்.

 

முகம்
  • இது மண்டையோட்டுக்கு கீழ்புறமானது. Please Login to view the Question  
  • 14 என்புகளாலானது
    1. முக்கென்புகள் (2)
    2. மூக்குச்சுருள் என்புகள் (2)
    3. ஏர்க்கால் என்பு (1)
    4. கண்ணீர் என்புகள் (2)
    5. நுகவுரு என்புகள் (2)
    6. அன்ன என்புகள் (2)
    7. அனு என்புகள் (2)
    8. சிபுக என்பு (1)
      • மொத்த என்புகள் (14)

 

  • மேல்தாடை மண்டையோட்டுடன். இணைந்துள்ளது.
  • கீழ்தாடை அசையக்கூடியது. இது மண்டையொட்டுடன் மூட்டுக்கொள்கின்றது. (கடைநுதல் என்புடன்)
  • நுகவுருவில் கீழ்தாடையை அசைக்கும் தசைகள் பொருந்துவதற்கான தானத்தை வழங்கும்.
  • வல் அன்னம் என்பாலானது. மெல் அன்னம் கசியிழையத்தாலானது.
  • அன்னம் வாய்க்குழியை மூக்குக்குழியிலிருந்து பிரிக்கின்றது.
  • முகம் தெளிவானது. நிலைக்குத்தானது.
  • முகத்தில் தட்டையான நெற்றியும் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு சோடி கட்குழிகளும் ஏறத்தாழ சமனான பருமன் உள்ள மேல், கீழ் தாடைகளும் காணலாம்.
  • தலையோட்டில் அசையக்கூடிய என்பு சிபுக என்பு மட்டுமே ஆகும்.
  • சிபுக என்பின் மேல்பகுதி இரண்டு மூட்டு முளைகளை Image Tiplkjhgfds-14592c90d2030a2d606 கொண்டுள்ளது.

 

மூட்டுக்குமிழ் முளைகள்

  • இவை கடைநுதல் என்புடன் பொருந்தி கடைநுதல் – சிபுக மூட்டை ஆக்குகின்றன.

 

முடிப்போலி முளைகள்

  • இவை தசைகளும் இணையங்களும் பொருந்துவதற்கான தானமாக அமையும்.
  • மேல், கீழ் தாடை என்புகளின் (அனுஎன்பு, சிபுக என்பு) குழிகளில் பல்லினப் பற்கள் காணப்படுகின்றன.
  • இப்பற்கள் இரு முறை முளைக்கும் தன்மையுடையவை.
  • சிபுக என்பு முனைப்பான நாடியை கொண்டுள்ளது.
  • கட்குழியில் நுதல் என்பு, நுகவுரு என்பு, அணு என்பு, நெய்யரி என்பு, ஆப்புப்போலி என்பு, கண்ணீர் என்பு என்பன காணலாம்.
  • உவையுரு என்பு குரல்வளைக்கு சற்று மேலாகவும் சிபுகத்திற்கு கீழாகவும் அமைந்துள்ளது. இவ் என்பு வேறு எந்த என்புடனும் மூட்டுக்கொள்ள மாட்டாது. ஆனால், தம்பவுரு முளைடன் இணையத்தால் இணைகின்றது.
  • உவையுரு என்புடன் நாக்கின் அடி இணைகின்றது.
  • இவ் என்பு குரல் வளையை தாங்குகின்றது.

 

குடாக்கள் (Sinuses) Image Tipsinuses

  • குடாக்கள் வளி கொண்டுள்ளன. இக்குடாக்கள் பின்வரும் தலையோட்டு என்புகளில் காணப்படுகின்றன.
  • நுதல் என்பு
  • அணு என்பு
  • ஆப்புப்போலி என்பு
  • நெய்யரி என்பு
  • இக்குடாக்கள் மூக்குக்குழி / நாசிக்குழியுடன் தொடர்புற்று காணலாம்.
  • இக்குடாக்களின் உள் மேற்பரப்பு பிசிர் கொண்ட சீத மேலணியால் படலிடப்பட்டுள்ளது.
  • பின் உச்சிக்குழிவு பிறப்பின் 2 – 3 மாதங்களில் என்பால் பிரதியிடப்படும்.
  • முன் உச்சிக்குழிவு பிறப்பின்பின் 12 – 18 மாதங்களில் என்பால் பிரதியிடப்படும்.

 

  • குடாக்களின் தொழில்கள்
    1. குரலுக்கு பரிவு உருவாவதில் உதவுதல்.
    2. மண்டையோடு, முகம் என்பவற்றின் என்புகளின் (தலையோடுள்ள என்புகள்) பாரத்தை குறைக்க உதவும்.
    3. முன்ளந்தண்டு கம்பத்தின் மேல் முனையில் தலையை சமநிலைப்படுத்த உதவும். (இலகுவாக்கும்)

 

  • தலையோட்டின் தொழில்கள்
    1. மூளையை உள்ளடக்கி வைத்து பாதுகாத்தல்.
    2. நடுக்காது, உட்காது, மணநுகர்ச்சி அங்கங்கள், கண்கள் என்பவற்றை பாதுகாத்தல்.
    3. பிரரென்பின் பெரங்குடையம் முண்ணான் செல்லும் பாதையை வழங்கும்.
    4. பிடரென்புக்குமிழ்கள் Atlas உடன் மூட்டுக்கொண்டு தலையின் மேல், கீழ்  அசைவிற்கு இடமளிக்கும்.
    5. குடாக்களை கொண்டிருப்பதால் தலையோட்டின் பாறத்தைப் குறைத்தல்.
    6. மூச்சுவிடலில் உதவுதல்
    7. அனு என்பு, சிபுக என்பு பல்லினப் பற்களை தாங்கி வைத்துள்ளன.
    8. உணவு மெல்லப்படுவதற்கு உதவுதல்.
    9. குரல் உருவாக்கத்தில் உதவுதல்
    10. துணை அன்னத்தால் வாய்க்குழியில் உணவு மெல்லப்படும் போது மூச்சுவிடலில் பாதிப்பு ஏற்படாது.
    11. குடாக்கள் இருப்பதால் குரலுக்கு பரிவு உருவாவதில் உதவுதல்.
  • மனிதத் தலையோட்டிலுள்ள மனிதனுக்கான சிறப்பியல்புகள்
    1. தட்டையான நிலைக்குத்தான நெற்றி காணலாம்.
    2. பிடரென்புக்குமிழ்கள் மண்டையோட்டின் அடியில் நடுப்பகுதியில் அமைந்திருக்கும்.
    3. மண்டையோட்டின் மேல் மேற்பரப்பு அழுத்தமானது.
    4. கட்புருவம் ஒடுக்கமடைந்திருத்தல்.
    5. முலையுரு முளை நன்கு விருத்தியடைந்திருத்தல். Please Login to view the Question  
RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

மனிதனது தலையோட்டின் நெற்றிப் பகுதியை அமைப்பது,

Review Topic
QID: 6487
Hide Comments(0)

Leave a Reply

நிறையுடலி மனிதனின் தலையோடு தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?

Review Topic
QID: 6588
Hide Comments(0)

Leave a Reply

நிறையுடலி மனிதத் தலையோடு தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 6592
Hide Comments(0)

Leave a Reply

சாதாரண வயது வந்த மனிதனின் தலையோடு தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 6745

 

 

Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் கண்கள் தலையில் இரு பக்கங்களில் இருக்குமெனின், பின்வரும் செயற்பாடுகளில் எதனைச் செய்து
முடித்தல் மிகக் கடினமானதாக இருக்கும் ?

Review Topic
QID: 6576
Hide Comments(0)

Leave a Reply

மனிதனது தலையோட்டின் நெற்றிப் பகுதியை அமைப்பது,

Review Topic
QID: 6487

நிறையுடலி மனிதனின் தலையோடு தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?

Review Topic
QID: 6588

நிறையுடலி மனிதத் தலையோடு தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 6592

சாதாரண வயது வந்த மனிதனின் தலையோடு தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 6745

 

 

மனிதனின் கண்கள் தலையில் இரு பக்கங்களில் இருக்குமெனின், பின்வரும் செயற்பாடுகளில் எதனைச் செய்து
முடித்தல் மிகக் கடினமானதாக இருக்கும் ?

Review Topic
QID: 6576
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank