Please Login to view full dashboard.

காது

Author : Admin

8  
Topic updated on 02/14/2019 03:00am

pic 14

  • மனிதனின் காதானது இரு தொழில்களை ஆற்ற சிறத்தலடைந்துள்ளது. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question      
    1. கேட்டல்
    2. சமநிலை
  • மனித காதானது தெளிவாக பிரிக்கக்கூடிய 3 பகுதிகளைக் கொண்டது.
    1. வெளிக்காது
    2. நடுக்காது
    3. உட்காது
  • வெளிக்காது வெளிக்காதுச் சோணை, செவி நடுக்கால்வாயை கொண்டது. வெளிக்காதுச் சோணை தலையில் இரு புறமும் விரிவாக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. மஞ்சள் நார் கசியிழையத்தால் வலுவாக்கப்பட்ட தோலினால் போர்வையிடப்பட்டுள்ளது.
  • செவிநடுக்கால்வாய் வளைந்த ‘s’ உருவான குழாய் கட்டமைப்பு செவிப்பறை மென்சவ்வுடன் தொடர்புபட்டது. துவாரத்திற்கு அண்மையாக அனேக மயிர்களையும் மெழுகுச் சுரப்பியையும் கொண்டது.
  • வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கும் சுவரில் காணப்படும் மென்சவ்வு அமைப்பு செவிப்பறை மென்சவ்வு எனப்படும். நீள்வட்ட வடிவமானது. நார் இழையத்தையும் சீத மென்சவ்வையும் கொண்டது.
  • நடுக்காது ஒழுங்கற்ற வடிவத்தையுடைய வளியால் நிரப்பப்பட்ட குழியாகும்.
    நடுக்காதில் 3 செவிச்சிற்றென்புகள் குறுக்காக அமைந்து காணப்படும். அவையாவன; சம்மட்டியுரு, பட்டையுரு, ஏந்தியுரு
  • சம்மட்டியுரு செவிப்பறை மென்சவ்வுடன் பட்டையுருவுடனும் இணைக்கப்பட்டது.
  • பட்டையுரு சம்மட்டியுருவுடனும் ஏந்தியுருவுடனும் இணைக்கப்பட்டது.
  • ஏந்தியுரு பட்டையுருவுடனும் நீள்வட்டப்பலகணியுடனும் இணைக்கப்பட்டது.
  • இச் சிற்றென்புகள் ஒவ்வொன்றும் மற்றையதுடன் அசையக் கூடிய மூட்டுகளைக் கொண்டது.
  • நடுக்காதுக்குழி தொண்டையுடன் ஊத்தேக்கியாவின் கால்வாயுடன் இணைக்கப்பட்டது.
  • நடுக்காதையும் உட்காதையும் பிரிக்கும் சுவரில் ஜன்னல் போன்று இரு மென்சவ்வு பகுதி காணப்படும்ம்.
    ♦ நீள்வட்டப்பலகணி
    ♦ வட்டப்பலகணி
  • உட்காது ஒரே வடிவத்தையுடைய என்புச் சிக்கல் வழியையும் மென்சவ்வு சிக்கல் வழியையும் உடையது.
  • என்புச் சிக்கல் வழி எனப்படுவது சுற்று நிணநீரை கொண்ட கடை நுதல் என்பில் காணப்படும் மென்சவ்வு சிக்கல் வழியை தாங்குகின்ற குழியாகும். மென்சவ்வு சிக்கல் வழியை விட பருமனில் பெரியது. இதனுள் மென்சவ்வு சிக்கல் வழி வைக்கப்படும். எனவே என்புச் சிக்கல் வழிக்கும் மென்சவ்வு சிக்கல் வழிக்கும் இடையே சுற்று நிணநீர் காணப்படும்.
  • என்புச் சிக்கல் வழி 3 பகுதியை உடையது.
    ♦ அரைவட்டக் கால்வாய்
    ♦ தலைவாயில்
    ♦ என்பு நத்தை சுருள்
  • மென்சவ்வு சிக்கல் வழி மென்சவ்வால் சூழப்பட்ட அகத்தே அகநிணநீரை கொண்ட அமைப்பாகும். இது 4 பகுதிகளை கொண்டது.
    ♦ அரைவட்டக் கால்வாய்
    ♦ தோற்பை
    ♦ சிறுபை
    ♦ மென்சவ்வு நத்தை சுருள்
  • மென்சவ்வு சிக்கல் வழியின் அரைவட்டக் கால்வாய்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக 3 வெவ்வேறு தளங்களில் அமைந்து காணப்படும்.
  • தோற்பை பையுருவான அமைப்பு கீழ்ப்புறமாக சிறுடையுடன் தொடர்பு கொள்ளும். மேற்புறமாக அரைவட்டக் கால்வாய்கள் இதனுள் திறக்கும்.
  • சிறுபை பையுருவான அமைப்பு. மேற்புறம் தோற்பையுடனும் மறுபுறம் மென்சவ்வு நத்தை சுருளுடனும் தொடர்பு கொள்ளும்.
  • தோற்பை, சிறுபை ஒருமித்து தலைவாயில் எனப்படும்.
  • தோற்பை, சிறுபை, அரைவட்டக் கால்வாய் என்பன ஒருமித்து தலைவாயில் உபகரணம் எனப்படும்.
  • சமநிலை வாங்கிகள் தோற்பை, சிறுபையின் மென்சவ்வுகளினது உட்சுவரிலும் அரைவட்டக் கால்வாயின் விரிமுனை பகுதிகளிலும் காணப்படும்.
  • நத்தைச் சுருள் (என்புச் சிக்கல் வழி, மென்சவ்வு சிக்கல் வழி இரண்டும்) சுருண்ட குழாய் கட்டமைப்பு. நடுக்காதுடன் இணைக்கப்பட்டு காணப்படும்.
  • இது நீளப்பாடாக 3 அறைகளை கொண்டது. அவையாவன;
    ♦ தலைவாயில் ஏணிக் கால்வாய்
    ♦ இடையேணிக் கால்வாய்
    ♦ செவிப்பறையேணிக் கால்வாய்
  • தலைவாயில் ஏணிக் கால்வாய் சுற்று நிணநீரையுடையது.  இடையேணிக் கால்வாய்                 அக நிணநீரையுடையது.
  • இடையேணிக் கால்வாய் தலையேணிக் கால்வாயிலிருந்து  இரசுணரின் மென்சவ்வால் பிரிக்கப்பட்டது.
  • இடையேணிக் கால்வாய் செவிப்பறையேணிக் கால்வாயிலிருந்து அடிமென்சவ்வால் பிரிக்கப்பட்டது.
  • அடிமென்சவ்வு புலன் மயிர் கலங்களை தாங்குகிறது.
  • இக் கலங்களிலிருந்து ஆரம்பிக்கும் நரம்புகள் ஒன்றாக இணைந்து கேட்டல் நரம்பை ஆக்குகிறது.
  • புலன் மயிர் கலங்கள் போர்வை மென்சவ்வுடன் தொடுகையில் காணப்படும்.
  • போர்வை மென்சவ்வு, புலன் மயிர் கலம், அடிமென்சவ்வு ஒருமித்து கோட்டியின் அங்கம் எனப்படும்.
பகுதி  தொழில் 
 வெளிக்காதுச் சோணை  ஒலி அலைகளை சேகரித்தலும் செவி நடுக்கால்வாயை நோக்கி அனுப்புதல்
 செவி நடுக்கால்வாய்  செவிப்பறை மென்சவ்வை நோக்கி ஒலி அலைகளை கடத்தல், வளியை வடித்தல்
 செவிப்பறை மென்சவ்வு  அதிர்வுகளை உருவாக்கல்
 செவிச் சிற்றென்புகள்  அதிர்வை நீள்வட்ட பலகணிக்கு கடத்தி பெருப்பித்தல்
  ஊத்தேக்கியாவின் கால்வாய்   நடுக்காதின் அமுக்கத்தை வளிமண்டல அமுக்கத்தில் பேணல்
 நீள்வட்டப் பலகணி  ஏந்தியுருவிலிருந்து அதிர்வை தலைவாயில் ஏணிக்கால்வாயின்  சுற்று நிணநீருக்கு கடத்தல்
 வட்டப்பலகணி  செவிப்பறை ஏணிக்கால்வாயின்  சுற்று நிணநீரிலிருந்து அதிர்வை நடுக்காதுக்குழி / அறைக்கு கடத்தல்
 புலன் மயிர்க்கலம்  தாக்க அழுத்தத்தை உருவாக்கல் / அத்திசை நரம்பு கணத்தாக்கமாக மாற்றும்
 தோற்பை, சிறுபை, அரைவட்டக் கால்வாய்  சமநிலை பேணல்
 இரசுணின் மென்சவ்வு  தலைவாயில் ஏணிக் கால்வாயின் சுற்று நிணநீரிலிருந்து அதிர்வை  இடையேணிக் கால்வாயின் அக நிணநீருக்கு கடத்தல்
 கேட்டல் நரம்பு  கேட்டலுக்குரிய நரம்புக் கணத்தாக்கமாக மாற்றி கேட்டல் பரப்பிற்கு அனுப்புதல்
காதின் உடற்றொழிலியல்

கேட்டல் Please Login to view the Question

  • மனிதனின் காதுக்கு உணர்திறனுடைய மீடிறன் 20 – 20000 Hz ஆகும்.
  • ஒலி அலைகள் வெளிக்காதுச் சோணையினால் செவிநடுக்கால்வாய் நோக்கி வழிநடத்தப்பட்டு செவிப்பறை மென்சவ்வை அவை அடைந்து அதனை அதிரச் செய்யும்.
  • இவ் அதிர்வு செவிச்சிற்றென்புகளுடாக தொடர்ச்சியாக கடத்தப்பட்டு நீள்வட்டப் பலகணிக்கு கடத்தப்படும்.
  • நீள்வட்டப் பலகணி அதிர்ந்து அவ் அதிர்வு தலைவாயில் ஏணிக் கால்வாயிலுள்ள சுற்று நிணநீரை அதிரச் செய்யும்.
  • இவ் அதிர்வு இரசுனரின் மென்சவ்வுக்கு ஊடாக கடத்தப்பட்டு இடையேணிக் கால்வாயின் அக நிணநீரை அதிரச் செய்யும்.
  • பின்பு இவ் அதிர்வு அடி மென்சவ்வுக்கு கடத்தப்பட்டு, அவ் அதிர்வின் மூலம் அடிமென்சவ்விலுள்ள போர்வை மென்சவ்வுடன் தொடுகையில் உள்ள கேட்டலுக்குரிய புலன் மயிர் கலங்களின்  மயிர்கள் வளைந்து தூண்டலை பெறும்.
  • இவை அதிர்வை நரம்பு கணத்தாக்கமாக / தாக்க அழுத்தமாக மாற்றி கேட்டலுக்குரிய நரம்பினூடாக மூளையத்தின் கடை நுதல் சோணையிலுள்ள கேட்டல் பரப்பிற் கொண்டு செல்லப்படும். அங்கு கேட்டலுக்குரிய புலன் பரப்பினால் வாங்கப்பட்டு ஈட்டப்பரப்பில் தரம் பிரிக்கப்படும்.கேட்டல் உணரப்படும்.
  • அடிமென்சவ்வின் அதிர்வு செவிப்பறை ஏணிக் கால்வாயிலுள்ள சுற்று நிணநீரை அதிரச் செய்யும். பின்பு இவ் அதிர்வு வட்டப் பலகணியின் அதிர்வினூடாக நடுக்காதுக்கு கடத்தப்பட்டு அதிர்வு நிறுத்தப்படும். Image Tippic 17

 

 

சமநிலை Please Login to view the Question  

  • சமனிலைக்குரிய வாங்கிக் கலங்கள் உட்காதின் தலைவாயில் உபகரணத்தில் அமைந்துள்ளன. அதாவது அரைவட்டக் கால்வாயின் விரிமுனைப் பகுதி, தோற்பை சிறுபையின் சுவர்களில் காணப்படுகின்றன.
  • இச் சமநிலை வாங்கிகள் இரு வகையான சமநிலைகளை உணர்கின்றன.
    1. நிலையியற் சமநிலை
    2. இயக்கச் சமநிலை
  • நிலையியற் சமநிலைக்குரிய வாங்கிகள் தோற்பை, சிறுபை சுவர்களில் அமைந்துள்ளன. அவை அமைந்துள்ள ஸ்தானம் பொட்டு எனப்படும்.
  • பொட்டில் புலன் மயிர்க் கலங்களும் ஆதாரக் கலங்களும் CaCO3 சிறுமணிகள் கொண்ட Gelatine திணிவில் அமைந்துள்ளன.
  • CaCO3 கொண்ட Gelatine திணிவு செவிக் கற்கள் எனப்படும்.
  • தோற்பையானது கிடைத்தளத்தில் புவியீர்ப்பு சார்பாக தலையின் நிலையை உணரக் கூடியது.
  • சிறுபை நிலைக்குத்து தளத்தில் புவியீர்ப்பு சார்பாக தலையின் நிலையை உணரக் கூடியது.
  • புவியீர்ப்பு சார்பாக தலையின் நிலைகள் மாறும்போது அகநிணநீரில் அசைவு ஏற்பட்டு புலன் மயிர்க் கலங்களில் வளைவு ஏற்பட்டு தாக்க அழுத்தம் உருவாக்கப்பட்டு தலைவாயில் நரம்பினூடாக மூளிக்கு கடத்தப்பட்டு உடற் சமநிலை பேணப்படும்.
  • இயக்கச் சமநிலைக்குரிய வாங்கிகள் விரிமுனைப் பகுதியில் கூம்புருவான Gelatine திணிவில் அமிழ்ந்து காணப்படுகின்றன. இக் கூம்புருவான பிரதேசம் தொட்டி ஆகும்.  இவை தலையின் சுழற்சி அசைவில் நிலையை வாங்கக் கூடியவை.
  • தலை சுழற்றப்படும் போது விரிமுனைப் பகுதியிலுள்ள அகநிணநீர் அதிர்வுக்கு உள்ளாக வாங்கி கலங்களின் மயிர்கள் வளைக்கப்பட்டு தாக்க அழுத்தம் உருவாகி தலைவாயில் நரம்பினூடாக மூளிக்கு கடத்தப்பட்டு சமநிலை பேணப்படும்.
  • அரைவட்ட கால்வாய்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக 3 தளங்களிலிருப்பதால் வெவ்வேறு தளத்தில் தலையின் அசைவு, வேகத்தை உணரக் கூடியவையாக உள்ளன.
Image Tippic 16

 

 

 

 

 

RATE CONTENT 0, 0
QBANK (8 QUESTIONS)

மனிதனின் நடுச்செவியை நிரப்பும் பொருளாவது,

Review Topic
QID: 3911
Hide Comments(0)

Leave a Reply

முதுகெலும்புப் பிராணிகளில் சமநிலைப்புலன் அரை
வட்டக் கால்வாய்களிற் தங்கியதாகும். இப்பிராணிகளில்
முப்பரிமாண மதிப்பீட்டிற்கு பெரும்பாலும் பொறுப்
பான அம்சம்

Review Topic
QID: 3867
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் செவி உபகரணத்தில் திரும்புவதற்குரிய அசைவுகளை உணரும் பகுதியாவது,

Review Topic
QID: 3886
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் நடுச்செவியை நிரப்பும் பொருளாவது,

Review Topic
QID: 3911

முதுகெலும்புப் பிராணிகளில் சமநிலைப்புலன் அரை
வட்டக் கால்வாய்களிற் தங்கியதாகும். இப்பிராணிகளில்
முப்பரிமாண மதிப்பீட்டிற்கு பெரும்பாலும் பொறுப்
பான அம்சம்

Review Topic
QID: 3867

மனிதனின் செவி உபகரணத்தில் திரும்புவதற்குரிய அசைவுகளை உணரும் பகுதியாவது,

Review Topic
QID: 3886
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank