ஒரு கலப்பிரிவின் ஆரம்பத்திற்கும் அடுத்த கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும் இடையில் கலத்தில் இடம்பெறும் சகல தொடரான நிகழ்வுகள்.
இக் கலவட்டத்தில் இரு பிரதான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
1. கலவளர்ச்சி
2. கலப்பிரிவு
இவ்விரு பிரதான நிகழ்வுகளையும் உள்ளடக்கி கலவட்டம் 5 அவத்தைகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1. G1 அவத்தை (Primary Growth Phase)
2. S – தொகுப்பு அவத்தை
3. G2 அவத்தை – இரண்டாவது வளர்ச்சி அவத்தை
4. M – இழையுருப் பிரிவு
5. C – குழியவுரு பிரிவு
இழையுரு பிரிவு மேலும் 04 உபஅவத்தைகளைக் கொண்டது.
1. முன்னவத்தை
2. அனு அவத்தை
3. மேன்முக அவத்தை
4. ஈற்றவத்தை
G1 அவத்தை
கலப்புன்னங்கங்கள் தொகுக்கப்படும்.
கலத்தில் புரதம் தொகுக்கப்படும்.
கல வளர்ச்சி நிகழும்
கலம் உயர் அனுசேபம் கொண்டதாக அமையும்
S அவத்தை
Histone புரதங்கள் தொகுக்கப்படும்.
DNA இரட்டிப்படையும்.
Histone புரதங்கள் DNA யில் படலிடப்பட்டு / போர்வையிடப்பட்டு நிறமூர்த்தம் இரட்டிப்படையும் ஆனால் இரட்டிப்படைந்த நிறமூர்த்தங்கள் மையப்பாத்தில் இணைந்து காணப்படும்.
இரட்டிப்பு அடைந்த நிலைமையை இவ் அவத்தையில் நுணுக்குக்காட்டியின் ஊடாக அவதானிக்கமுடியாது. இவ் அவத்தையில் நிறமூர்த்தங்கள் யாவும் சேர்ந்த வலையமைப்பு குரோமற்றின் வலையமைப்பாகக் காணப்படும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்