இயூக்கரியோற்றா தாவர கலங்களில் முதலுரு மென்சவ்விற்கு வெளிப்புறமாகக் காணப்படும் கட்டமைப்பு கலச்சுவர் எனப்படும்.
இது உயிருள்ள கலங்களினால் சுரக்கப்படும் சுரப்புப் பதார்த்தம் ஆகும்.
முதலுரு மென்சவ்விலும் தடித்தது.
இக்கலச்சுவர் இரு வகைப்படும்.
முதற்சுவர்
துணைச்சுவர்
முதற்சுவர் கலப்பிரிவின் போது சுரக்கப்படுகின்றது. சகல தாவரக் கலங்களிலும் காணப்படுகின்றது. ஒப்பீட்டளவில் மெல்லியது. நெகிழும் தன்மை கொண்டது. இது பிரதானம் செலிலோசாலானது மேலும் அரைச்செலிலோசு, பெக்ரின் ஆகியவற்றையும் கொண்டது.
துணைச்சுவர் சில கலங்களில் விருத்தியின் போது சுரக்கப்படுகின்றது. முதலுரு மென்சவ்விற்கும் முதற்சுவருக்கும் இடையில் காணப்படுகின்றது. பிரதான இரசாயனப் பதார்த்தமாக இலிக்னினைக் கொண்டது. சில சுபரினைக் கொண்டது.
முதற்சுவரை மட்டும் கொண்ட கலங்களாவன
புடைக்கல் விழையம்
ஒட்டுக்கலவிழையம்
முதற்சுவருடன் துணைச் சுவரையும் கொண்ட கலங்களாவன
வல்லுருக்கலவிழையம்
காழ்கலன்கள்
குழற்போலி
துணைச்சுவரைக் கொண்ட கலங்கள் இறந்த கலங்களாக மாற்றப்படும்
அடுத்துள்ள இரு தாவரக் கலங்களின் முதற்சுவருக்கிடையில் நடுமென்தட்டு காணப்படும். இது கல்சியம் பெக்ரேற்று, மக்னீசியம் பெக்ரேற்றைக் கொண்டது. இது அடுத்துள்ள இரு கலங்களை இணைத்து வைத்துள்ளது.
கலச்சுவர் நீரேற்றப்பட்டது. 60 – 70% நீர் காணலாம். கலச்சுவரின். நீர் சுயாதீனமாக அசையக்கூடியது.
தக்கைக் கலத்தின் கலச்சுவர் சுபரினால் ஆனது.
அடுத்துள்ள இரு தாவரக் கலங்களின் கலச்சுவருக்கூடாகக் காணப்படும் முதலுருத் தொடர்பு முதலுரு இணைப்பு எனப்படும்.
முதலுரு இணைப்பு கலமென்சவ்வினால் படலிடப்பட்டது.
முதலுரு இணைப்பு தாவரக் கலத்தில் காணப்படும் கலச்சந்தி வகையாகும்.
கலச்சுவரின் தொழில்கள்
கலத்திற்குப் பாதுகாப்பு வழங்கல்.
கலத்தின் வடிவத்தைப் பேணுதல்.
Apoplast பாதை வழங்கல்.
தாவரக் கலத்தினுள் மேலதிகமாக நீர் உள்ளெடுக்கப்படுவதைத் தடுத்தல்.
பதார்த்தங்கள் பரிமாற்றம் முதலுரு இணைப்பு
கலப்புறத் தாயம்
இது கிளைக்கோ புரதத்தினால் ஆக்கப்பட்டது.
இதில் காணப்படும் பிரதான புரத நார்கள் Collagen ஆகும்.
இக் Collagen நார்கள் காபோவைதரேற்றில் அமிழ்ந்து காணப்படும்.
தொழில்
கலத்திற்கு விறைப்பு தன்மை வழங்கி கலத்தின் வடிவத்தைப் பேணுதல்
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்