Please Login to view full dashboard.

கண்

Author : Admin

9  
Topic updated on 02/14/2019 06:42am

pic 9

 

  • மனிதனில் ஒளிவாங்கிகள் கண் என்னும் அங்கத்தில் காணப்படுகின்றன. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question        
  • மனிதனில் சோடிக் கண்கள் தலையோட்டின் முகப் பகுதியில் கட்குழிகளினுள் அமைந்துள்ளன.
  • மனிதக் கண் பின்வரும் கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படுகின்றன.
    ♦ கண் மடல்கள்
    ♦ என்பாலான கட்குழி
    ♦ கண்ணீர்
    ♦ கட்குழிக்கும் கண்ணுக்கும் இடையில் காணப்படும் Lipd படை
  • கண்கள் கோளவடிவமானவை.
  • கண்ணின் சுவர் 3 படைகளை கொண்டது. வெளியிருந்து உள்நோக்கி,
    1. நார்ப்படை / வன்கோதுப்படை
    2. கலனிழையப்படை
    3. நரம்பிழையப்படை / விழித்திரை
  • விழிவெண்படலமும் வன்கோதும் நார்ப்படையை ஆக்குகின்றன.  இதன் முற்புறம் விழிவெண்படலம், ஒளிபுகவிடக் கூடியது. மேலணி மென்சவ்வால் ஆக்கப்பட்டது. குருதிக் கலன்கள் காணப்படுவதில்லை. வளைந்த அமைப்பு / குவிவான அமைப்புடையது.
  • தொழில்:
    அவல் / விழித்திரையை நோக்கி ஒளிக்கதிரை முறிவடையச் செய்தல்.
  • நார்ப்படையின்  பிற்புற பகுதி  வன்கோதினாலானது. ஒளிபுகவிடாதது. Collagen நார்களாலாக்கப்பட்டது. மிக வன்மை யான அமைப்பு.
  • தொழில்:
    கண்ணின் உட்பகுதிகளை பாதுகாத்தல்.
    கட்தசைகள் இணைய இடமளித்தல்
    கண்ணின் வடிவத்தை பேணல்.
  • கலன்படை பின்வரும் கூறுகளை கொண்டது.
    தோலுருப்பின்னல், பிசிருடல், கதிராளி, வில்லை, தாங்கிணையம்
  • இப்படையின் பிற்புறம் தோலுருப்பின்னலால் ஆக்கப்பட்டது. குருதி மயிர்க்கலன்களை அதிகளவில் கொண்டது.  Melanin  நிறப்பொருளை அதிகளவில் கொண்டது.
  • தொழில்:
    போசணைக் கூறுகளை வழங்கல்.
    N கழிவுகளை அகற்றல்.
    O2 வழங்கல்.
    கண்ணுக்குள் ஒளித்தெறிப்பை தடுத்தல் / மேலதிக ஒளியை அகத்துறிஞ்சுதல்.
  • வன்கோது, விழிவெண்படலம் சந்திக்கும் சந்தயில் இப்படையில் (கலனிழையப்படை) காணப்படும் தடித்த பகுதி அதாவது தோலுருப்பின்னலின் முற்பகுதி  பிசிருடல் எனப்படும். இதனுள் குருதிக் கலன்கள், பிசிர்த் தசைகள், மேலணி கலங்கள் என்பன காணப்படுகின்றன.
  • பிசிர்தசைகள் மழமழப்பான தசைகள். வட்ட ஒழுங்கில் ஆரைக்குரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.
  • தொழில்:
    கண் வில்லையின் வடிவத்தை மாற்றியமைத்தல் அல்லது கண்ணின் தன்னமைவை ஏற்படுத்தல்.
  • மேலணிக் கலத்தின் தொழில்:
    நிர்மயவுடனீர், கண்ணாடிமயவுடனீரைச் சுரத்தல்.
  • பிசிருடலிலிருந்து முற்புறம் நீட்டப்பட்ட கட்டமைப்பு கதிராளி எனப்படும். இது விழிவெண்படலத்திற்கு பிற்புறமாக வில்லைக்கு முன்புறமாக அமைந்து காணப்படும். Melanin நிறப்பொருளையும் மழமழப்பான தசையையும் கொண்டது. மழமழப்பான தசை வட்ட ஒழுங்கிலும் ஆரைக்குரிய முறையிலும் ஒழுங்குபடுத்தப்பட்டது.
  • தொழில்:
    கண்மணியின் பருமனை மாற்றியமைப்பதன் மூலம் உட்செல்லும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தல்.
  • கதிராளியினுள் உள்ள வைரம் கண்மணி எனப்படும். எல்லா ஒளிக்கதிர்களும் இதனூடாக செல்லும்.
  • கண் வில்லைகள் மீள்தன்மை கொண்டவை. இருகுழிவு வடிவமானவை. கசியிழையத்தாலாக்கப்பட்டது. ஒளிபுகவிடக்கூடியது. கண்மணிக்கு உடன் பிற்புறமாக காணப்படுகின்றது.
  • வில்லை இரு அறைகளினதும் உள்ளிடத்தை பிரிக்கிறது. வில்லையானது தாங்கிணையத்தின் மூலம் பிசிருடலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.  தாங்கிணையம் தொடுப்பிழையத்தால் ஆக்கப்பட்ட கட்டமைப்பு ஆகும்.
  • வில்லையின்  தொழில்:
    விழித்திரை நோக்கி தனிக்கதிரை முறிவடைய / குவிவடையச் செய்தல்.
  • வில்லைக்கு முற்புறமாக காணப்படும் அறையில் உள்ள திரவம்  நீர்மயவுடனீர்  ஆகும். பிற்புறமாக  காணப்படும்  திரவம்  கண்ணாடிமயவுடனீர் ஆகும்.
  • நீர்மயவுடனீர் விழிவெண்படலத்திற்கும் வில்லைக்கும் இடையில் காணப்படும். கண்ணாடிமயவுடனீர் வில்லைக்கும் விழித்திரைக்கும் இடையில் காணப்படும். இத்திரவங்கள்  நீர், உப்புக்கள் கொண்டது. ஒளியை ஊடுபுகவிடக்கூடியன.
  • தொழில்:
    ஈரலிப்பைப் பேணல்.
    கண்ணில் அமுக்கத்தை பேணல். (25 mmHg)
  • கட்சுவரின் உட்புற படையாக நரம்பிழையப்படை காணப்படும்.  முற்புறமாக இப்படை  காணப்படுவதில்லை. பிற்புறமாக விழித்திரையாக காணப்படுகின்றது.  இது ஒரு மெல்லிய அமைப்பு.  இதில் ஒளிவரும் திசையிலிருந்து வெளிநோக்கி திரட்டு நரம்புக்கலப்படை, இருமுனைவு நரம்புக்கலப்படை, ஒளிவாங்கி கலப்படை, நிறப்பொருள் படை என்பன காணப்படுகின்றன.
  • ஒளிவாங்கி கலங்களாக கோல், கூம்புக்  கலங்கள் காணப்படுகின்றன.
  • விழித்திரையின் நடுப்புள்ளி மஞ்சள் பொட்டு எனப்படும். இது சற்று உட்குழிந்தது.
  • கூம்புக் கலங்களை மட்டும் கொண்ட பரப்பு அவல் எனப்படும்.
  • விழித்திரையில் ஒளிவாங்கி கலங்கள் காணப்படாத பகுதி குருட்டிடம் எனப்படும். இதிலிருந்தே பார்வை நரம்புகள் வெளியேறுகிறன.
  • அவல் தவிர்ந்த ஏனைய விழித்திரைப் பிரதேசத்தில் கோல், கூம்புக் கலங்கள் பரவிக் காணப்படும்.
  • விழித்திரையின் தொழில்:
    குறைந்த, கூடிய ஒளிச்செறிவிலும் பார்வையை ஏற்படுத்தல் அதாவது; பகல், இரவுப் பார்வையை ஏற்படுத்தல்.
    நிறப்பார்வையை ஏற்படுத்தல்.
    ஒளித்தெறிப்பை தடுத்தல்.
    விம்பத்தை தோற்றுவித்தல்.
  • விழித்திரையிலிருந்து  வெளியேறும் நரம்புக் கட்டு  பார்வை நரம்பு எனப்படும். இது நரம்புக் கணத்தாக்கத்தை மூளையின் பார்வை சோணைக்கு எடுத்துச் செல்கிறது.
  • தொழில்:
    கண்ணின் அசைவை கட்டுப்படுத்தல்.
  • கட்சுவரின் வன்கோதுடன் இணைந்து 3 சோடி கட்தசைகள் காணப்படுகின்றன. இரு சோடி நேரிய  தசைகளும் 1 சோடி சரிவுத் தசையும் ஆகும்.
ஒளி வாங்கிகள்

மனித கண்ணின் விழித்துரையில் இரு வகையான ஒளி வாங்கிகளுள்ளன.
1. கோல் கலம்
2. கூம்புக் கலம்

கோல் கலம்  கூம்புக் கலம் 
 கம்ப வடிவம் / கோளுரு வடிவம்  கூம்பு வடிவம்
 அதிக எண்ணிக்கையில் காணப்படும் (120 million)  குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் (6 million)
 அவல், குருட்டிடத்தில் காணப்படுவதில்லை   அவலில் செறிவாக  காணப்படும்.  விழித்திரையின் ஏனைய பகுதிகளில் சீராக பரவி காணப்படும்.
 Rodopsin (பார்வை ஊதா) நிறப்பொருள் உடையது  Iodopsin / Photopsin நிறப்பொருள் உடையது
 குறைந்த ஒளிச் செறிவிலும் தாக்க அழுத்தத்தை உருவாக்க கூடியது  குறைந்த ஒளிச் செறிவில் தாக்க அழுத்தத்தை உருவாக்காது
 இரவுப் பார்வைக்கு பொறுப்பானது  பகல் பார்வைக்கு பொறுப்பானது
 கறுப்பு, வெள்ளை பார்வையை  ஏற்படுத்தும்  நிறப்பார்வையை  ஏற்படுத்தும் (சிவப்பு, பச்சை, நீல நிறங்களை வாங்கக்கூடிய 3  வகையான கூம்புக் கலங்கள் காணப்படுகின்றன)

♦ கோல் கலத்தின் நிறப்பொருளான  Rodopsin இன் உற்பத்திக்கு Vitamin – A  அவசியம். எனவே  Vitamin – A  குறைப்பட்டால் கோல் கலங்களின் தொழிற்பாடு குறைவடையும். குறைந்த ஒளிச்செறிவில் பார்வை ஏற்படுத்தப்படாது.

கண்ணின் உடற்றொழிலியல்

கண்ணின் உடற்றொழிலியல் தொழிற்பாட்டில் இரு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. கண்மணியினூடாக உட்செல்லும் ஒளியினளவு கட்டுப்படுத்தப்படல்
2. பொருளின் தூரத்திற்கேற்ப வில்லையின் பருமன் மாற்றியமைக்கப்படல் – கண்ணின் தன்னமைவு.

கண்மணியினூடாக உட்செல்லும் ஒளியினளவு கட்டுப்படுத்தப்படல் 

  • கதிராளியிலுள்ள வட்டத்தசைகள் சுருங்க ஆரைத்தசை தளரும். இதனால் கண்மணியின் விட்டம் குறைவடையும். உட்செல்லும் ஒளியின் அளவு குறைக்கப்பட்டு ஒளியினளவு கட்டுப்படுத்தப்படும்.
  • கதிராளியிலுள்ள வட்டத்தசைகள் தளர ஆரைத்தசை சுருங்கும். இதனால் கண்மணியின் விட்டம் அதிகரிக்கும். உட்செல்லும் ஒளியின் அளவு கூட்டப்பட்டு ஒளியினளவு கட்டுப்படுத்தப்படும்.

கண்ணின் தன்னமைவு 

  • தூரவுள்ள பொருளிலிருந்து வரும்  சமாந்தர ஒளிக்கதிர்கள் விழிவெண்படலத்தை  அடைந்து வில்லையை நோக்கி முறிக்கப்படும்.
  • இவ் ஒளிக்கதிர்கள் தூண்டலாக அமைந்து பிசிர்த்  தசையிலுள்ள வட்டத்தசையை தளரவும் ஆரைத்தசையை   சுருங்கவும் செய்யும். அதாவது, பிசிர்த்தசை தளர்ந்த நிலையில் காணப்படும்.
  • இதன் விளைவாக தாங்கிணையம் இழுவைக்கு உட்படுவதால், வில்லைகள் இழுவைக்கு உட்பட்டு மெல்லியதாக மாற்றப்படும். வளைவு குறைக்கப்படும். விழிவெண்படலத்தால் முறிக்கப்பட்டு வரும் கதிர் இவ்வில்லையில் பட்டு அவல் நோக்கி குவிக்கப்படும்.  தூரவுள்ள பொருள் பார்க்கப்படும்.

 

  • அண்மையிலுள்ள பொருளிலிருந்து விரிகற்றைகள் விழிவெண்படலத்தை அடைந்து வில்லை நோக்கி குவிக்கப்படும்.
  • இக்கதிர்கள் தூண்டலாக அமைந்து  பிசிர்த்தசையிலுள்ள    வட்டத்தசையை சுருங்கவும் ஆரைத்தசையை தளரவும் செய்யும். அதாவது,  பிசிர்த்தசை சுருங்கும்.
  • இதன் விளைவாக தாங்கிணைய இழுவை நீக்கப்படும். வில்லையில் இழுவை நீக்கப்பட்டு தடித்த வில்லையாக மாற்றப்படும். வளைவு  கூட்டப்படடும். விழிவெண்படலத்தால் முறிக்கப்பட்டு வரும் கதிர் இவ்வில்லையில்  பட்டு அவல் நோக்கி குவிக்கப்படும். அண்மையிலுள்ள பொருள் பார்க்கப்படும்.
பார்வைக் குறைபாடு

குறும்பார்வை 

  • pic 13அண்மையிலுள்ள பொருட்கள் தெளிவாகவும் சேய்மையிலுள்ள பொருட்கள் தெளிவற்றதாகவும் தெரிதல்   ” குறும்பார்வை ” எனப்படும்.
  • இது கட்கோளம் பெரிதாதல், வில்லையின் வளைவு அதிகரித்தல் போன்ற காரணங்களினால் ஏற்படுகின்றது.
  • குழிவு வில்லை கொண்ட மூக்குக்கண்ணாடியை அணிவதன் மூலம் இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படும்.

நீள்பார்வை  

  • pic 10அண்மையிலுள்ள பொருட்கள் தெளிவற்றதாகவும் சேய்மையிலுள்ள பொருட்கள் தெளிவாகவும் தெரிதல் “நீள்பார்வை ” எனப்படும். இது கட்கோளம் சிறியதாதல்,
  • வில்லையின் வளைவு குறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுகின்றது.
  • குவிவு வில்லை கொண்ட மூக்குக்கண்ணாடியை அணிவதன் மூலம் இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படும்.
இருவிழிப்பார்வை
  • இரு கண்களினதும் பார்வை புலம் மேற்பொருந்துவதால் ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இரு கண்களினதும் விழித்திரையில் குவித்தலை ” இருவிழிப்பார்வை ” எனப்படும். Please Login to view the Question  
  • இரு கண்களும் முகத்தில் முன்னோக்கி அமைந்திருப்பதால் இப்பார்வை ஏற்படுத்தப்படுகிறது.
  • மனிதன் தவிர்ந்த பறவை, விலங்குகளிலும் உள்ளது.
    (உ+ம்): ஆந்தை, குரங்கு, பூனைக் குடும்பம், தேவாங்கு
    அனுகூலம்:
  • ஒரு பொருளின் சரியான தூரம், ஆழம் என்பவ்றறை அறிந்து கொள்ளலாம்.
  • முப்பரிமாணத் தோற்றத்தை அறிந்து கொள்ளலாம்.
  • அசையும் பொருளின் வேகத்தை சரியாக மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
RATE CONTENT 0, 0
QBANK (9 QUESTIONS)

மனிதனின் கண்ணின் கீழ்க்காணும் கட்டமைப்புகளில் எது தனது முறிவுவலுவை மாற்றிக்கொள்ளும் ஆற்றலுடையதாகும்?

Review Topic
QID: 3913
Hide Comments(0)

Leave a Reply

முள்ளந்தண்டுப் பிராணியின் கண்கள் நிறப்புலனைக்
கொண்டிருப்பதற்கு அவைக்கு வேண்டியது

Review Topic
QID: 3869
Hide Comments(0)

Leave a Reply

அவலைப் (Fovea) பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பிழையானது எது?

Review Topic
QID: 3880
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் கண்ணின் கீழ்க்காணும் கட்டமைப்புகளில் எது தனது முறிவுவலுவை மாற்றிக்கொள்ளும் ஆற்றலுடையதாகும்?

Review Topic
QID: 3913

முள்ளந்தண்டுப் பிராணியின் கண்கள் நிறப்புலனைக்
கொண்டிருப்பதற்கு அவைக்கு வேண்டியது

Review Topic
QID: 3869

அவலைப் (Fovea) பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பிழையானது எது?

Review Topic
QID: 3880
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank