Please Login to view full dashboard.

ஒருசீர்த்திடநிலை

Author : Admin

10  
Topic updated on 02/14/2019 06:50am
  • ஒரு அங்கியை சூழ்ந்து காணப்படும் சூழல் அதாவது அங்கி வாழும் சூழல் அங்கியின் ” புறச் சூழல் ” எனப்படும்.
  • அங்கி தனது நீடித்து நிலைத்திருப்பிற்கு அப் புறச்சூழலுடன் இடைத்தாக்கமடைகிறது.
    (உ – ம்) :  மனிதனின் புறச்சூழல் – வளிமண்டலம்
    மீனின் புறச்சூழல் – நீர்
  • உடற் கலங்களை சூழ்ந்த காணப்படும்  சூழல் / கலங்கள் வாழும் சூழல் அங்கியின்   “அகச்சூழல் ” எனப்படும். Please Login to view the Question
  • கலங்கள் அகச்சூழலுடன் பதார்த்த பரிமாற்றத்தில் ஈடுபடும்.
  • ஒரு விலங்கின் அகச்சூழல் இழையப் பாய்பொருள் ஆகும்.
  • ஒரு விலங்கின் அகச்சூழல் ; கலங்களின் புறச்சூழல் ஆகும்.
  • விலங்கொன்றின் அகச்சூழலானது பல இரசாயன, பௌதீக காரணிகளை உடையது.
  • இரசாயன காரணிகளாவன;  குளுக்கோசு,  நீர்,  அயன்கள், CO2,  O2,  pH / H+
  • பௌதீக காரணிகளாவன; வெப்பநிலை, பிரசாரண அமுக்கம்.
  • இக் காரணிகள் தமக்குரிய தனித்துவமான நியம அளவு / நியம நிலையைக் கொண்டுள்ளன. இக் காரணிகள் இவ் நியம நிலையில் பேணப்படுவது கலங்களின் தொழிற்பாட்டு வினைத்திறனை கூட்டும்.
  • அங்கியின் அகச்சூழல் மாறாது பேணப்படுதல் ” ஒருசீர்திடநிலை ” எனப்படும். அதாவது, அகச்சூழலான இழையப் பாய்பொருளில் உள்ள பௌதீக, இரசாயனக் காரணிகள் அவற்றுக்குரிய நியம நிலையில் பேணப்படுதல் ஒருசீர்திடநிலை ஆகும்.
  • மனிதனின் அகச்சூழலில் ஒருசீர்திடநிலையில் பேண வேண்டிய பிரதான காரணிகளாவன;
    ♦ இரசாயனக் கூறுகளின் செறிவு
    (உ+ம்) : Glucose, Ions
    ♦ நீர், கரையம் என்பவற்றின் அளவு
    ♦ வெப்பநிலை
  • ஒருசீர்திடநிலையை பேண உதவும் கட்டுப்பாட்டு முறை எதிர் பின்னூட்டல் ஆகும்.

D - 1

  • உயிர்தொகுதியில் இரு வகையான பின்னூட்டல் பொறிமுறை உள்ளது.
    • எதிர் பின்னூட்டல்
    • நேர்ப் பின்னூட்டல்

எதிர் பின்னூட்டல்   

  • ஒருசீர்த்திடநிலை பேணும் பரிகாரப் பொறிமுறை  தொகுதியினை  நிரோதிக்கும்  செயற்பாடு எதிர்ப்பின்னூட்டல் எனப்படும்.  அதாவது,  திரும்பியதும் பரிகாரப் பொறிமுறை தொகுதி தொழிற்பாடு  நிரோதிக்கப்படுதலாகும்.
  • எனவே, எதிர் பின்னூட்டல் ஒருசீர்த்திடநிலையை  பேணுவதில்  பிரதான பங்கு வகுக்கிறது. அதாவது,  உயிரியல்  தொகுதியின்  உறுதி நிலையை  பேணுவதில் பிரதான பங்கு வகிக்கிறது.

நேர்ப் பின்னூட்டல் 

  • ஒருசீர்த்திடநிலை பரிகாரத் தொகுதியின் தொழிற்பாட்டை அதிகரிக்கும் செயன்முறை நேர்ப் பின்னூட்டல் எனப்படும்.  எனவே குழப்பமடைந்த காரணி மேலும் குழப்படையச் செய்யப்படும்.
  • எனவே நேர்ப்பின்னூட்டல் ஒருசீர்த்திடநிலை பேணலில் பங்கு கொள்ளாது.
  • மனிதனில் நேர்ப்பின்னூட்டலுக்கு,
    (உ+ம்): மகப்பேறின் போது கபச்சுரப்பியின் பிற்சோணையிலிருந்து Oxitosin சுரக்கப்படுதல்.
உடல் வெப்பநிலைச் சீராக்கம்
  • மனிதனின் நியம நிலைக்குரிய உடல் வெப்பநிலை 36.9ºc / 98.4ºF  ஆகும்.  Please Login to view the QuestionPlease Login to view the Question
  • மனிதனில் வெப்ப சீராக்கம் எதிர் பின்னூட்டல் பொறிமுறையால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • வெப்ப சீராக்கத்திற்கு பின்வருவன அவசியமாகின்றன.
    • வெப்ப உற்பத்திப் பொறிமுறைகள்
    • வெப்ப இழப்புப் பொறிமுறைகள்
    • வெப்ப வாங்கிகள்
    • வெப்ப ஒழுங்காக்கு மையம்
  • உடல் வெப்பநிலை நியம நிலையை விட அதிகரிக்கும் போது தோலிலுள்ள வெப்ப வாங்கிகள், சுயாதீன நரம்பு முடிவிடங்கள், இரபினியன் அங்கம், பரிவகக்கீழிலுள்ள வெப்ப ஒழுங்காக்கு மையம் என்பன வாங்கிகளாக தொழிற்படுகின்றன.
  • தோலிலுள்ள வெப்ப வாங்கிகள் வெளிபுற மேற்பரப்பின் வெப்ப மாற்றத்தையும் பரிவகக்கீழிலுள்ள வாங்கி உடலினுள் ஏற்படும் வெப்பமாற்றத்தையும் உணருகின்றன. இவை பரிவகக்கீழிலுள்ள வெப்ப இழப்பு மையத்திற்கு நரம்பு மூலம் கணத்தாக்கத்தை அனுப்புகின்றன.
  • பின்பு இச் செய்தியானது அங்கிருந்து நரம்பு மூலமும் ஓமோன் மூலமும் விளைவு காட்டிகளுக்கு அனுப்பப்பட்டு வெப்ப இழப்புப் பொறிமுறைகள் ஆரம்பிக்கப்படும். வெப்ப உற்பத்திப் பொறிமுறைகள் நிரோதிக்கப்படும்.
  • வியர்வை சுரப்பியில் வியர்வை சுரத்தல் அதிகரிக்கப்பட்டு இவ் வியர்வை உடலிலிருந்து வெப்பத்தை அகத்துறிஞ்சி ஆவியாவதால் உடல் வெப்பநிலை குறைக்கப்படும்.
  • உடலில் தோலுக்குரிய புன்னாடிகள் / மேற்பரப்புக்குரிய புன்னாடிகள் விரிவடைவதால் உடல் மேற்பரப்புக்கு அதிகளவு குருதி ஓட்டம்  கொண்டு வரப்பட்டு அதிலிருந்து வெப்பம் கதிர் வீசலால் இழக்கப்படுவதால் உடல் வெப்பநிலை குறைக்கப்படும்.
  • அதிரினலின், தைரொக்சின் சுரப்புகள் குறைக்கப்படுவதால் கலங்களில் அனுசேப வீதம் குறைக்கப்பட்டு வெப்ப உற்பத்தி  குறைக்கப்படும்.
  • மேற்கூறிய துலங்கல்களால் உடல் வெப்பநிலை படிப்படியாக குறைக்கப்பட்டு நியம நிலையை அடையும்.
  • எதிர் பின்னூட்டல் பொறிமுறையினால் பரிகாரப் பொறிமுறைகள் நிரோதிக்கப்பட்டு வெப்ப இழப்பு மையத்தின் தொழிற்பாடு நிறுத்தப்படும்
  • உடல் வெப்பநிலை நியம நிலையை விட குறையும் போது தோலிலுள்ள குளிர் வாங்கிகளான குரூஸின் குமிழ் முனை, சுயாதீன நரம்பு முடிவிடங்கள், பரிவகக்கீழிலுள்ள வெப்ப ஒழுங்காக்கு மையம் என்பன வாங்கிகளாக தொழிற்படும்.
  • இதிலிருந்து  நரம்புக் கணத்தாக்கம் பரிவகக்கீழிலுள்ள வெப்ப உற்பத்தி மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து நரம்பு, ஓமோன்களுக்கூடாக விளைவு காட்டிகளுக்கு செய்தி அனுப்பப்படும்.
  • வெப்ப உற்பத்திப் பொறிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டு வெப்ப இழப்புப் பொறிமுறைகள் நிரோதிக்கப்படும்.
  • தோலுக்குரிய புன்னாடிகள் சுருக்கமடையும். தோலுக்குரிய குருதியோட்டம் குறைவடையும். கதிர் வீசலால் இழக்கப்படும் வெப்ப  இழப்பு குறைக்கப்படும்.
  • வியர்வைச் சுரப்பியினால் சுரக்கப்படும் வியர்வையின் அளவு குறைக்கப்படும். எனவே ஆவியாதலுக்கு உடலிருந்து இழக்கப்படும் வெப்ப அளவு குறைக்கப்படும்.
  • வன்கூட்டுத் தசைகள் அருட்டப்படுவதால் நடுக்கம் ஏற்படுத்தப்படும். இதன்போது அதிகளவு வெப்பப் பிறப்பிக்கப்படும்.
  • மயிர் நிறுத்தித் தசை சுருக்கமடையும். இதனால் வெப்ப உற்பத்தி அதிகரிக்கும்.
  • அதிரினலின், தைரொக்சின் சுரப்புகள் அதிகரிக்கப்பட்டு கல அனுசேபச் செயற்பாடுகள் அதிகரிக்கப்படும். பிறப்பிக்கப்படும்  வெப்பத்தின் அளவு அதிகரிக்கப்படும்.
  • மேற்கூறிய துலங்களால் உடல் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து நியம நிலையை அடையும்.
  • பரிகாரப் பொறிமுறைகள் எதிர் பின்னூட்டலால் நிரோதிக்கப்பட்டு வெப்ப உற்பத்தி மையத்தின் தொழிற்பாடு நிறுத்தப்படும்.
  • மேற்கூறிய சகல பொறிமுறைகளும் இச்சையின்றியவை ஆகும்.
  • இச்சைக்குரிய முறையிலும் சில பரிகாரப்  பொறிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • வெப்பநிலை நியம நிலையைவிட அதிகரிக்கும் போது இச்சை வழி பரிகாரப்  பொறிமுறைகளாக  விசிறியை போடுதல், குளிர்ச்சியான இடங்களில் தங்கியிருத்தல் என்பன மேற்கொள்ளப்படும்.
  • உடல் வெப்பநிலை நியம நிலையை விட குறையும் போது இச்சை வழி பரிகாரப்  பொறிமுறைகளாக   சூடான இடங்களில் தங்கிருத்தல்,  சூடு தரக்கூடிய உடைகளை அணிதல்  என்பன மேற்கொள்ளப்படும்.
குருதியில் குளுக்கோசு சீராக்கம்
  • மனிதனின் அகச்சூழலில் குளுக்கோசு சீராக்கம் எதிர்ப்பின்னூட்டல் பொறிமுறையால் மேற்கொள்ளப்படுகின்றது. Please Login to view the QuestionPlease Login to view the Question
  • குளுக்கோசின் நியமம் 80 – 120 mg /100 ml ஆகும்.
  • குளுக்கோசின் அளவு நியம நிலையை விட அதிகரிக்கும் போது சதையி வாங்கியாகவும் ஒழுங்காக்கியாகவும் தொழிற்படும்.
  • இதன் இலங்ககான் சிறுதீவிலுள்ள  β  கலத்தால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கப்படும்.  α  கலத்தால் குளுக்ககோன் சுரப்பு நிரோதிக்கப்படும்.
  • இன்சுலின் முதலில் குருதியிலுள்ள மேலதிகமான குளுக்கோசை உடற்கலங்களுக்குள் செலுத்தும். அதாவது, உடற்கலங்களில் குளுக்கோசு ஊடுபுகவிடும் இயல்பைக் கூட்டும்.
  • இன்சுலினின் இலக்கு அங்கம் / விளைவு காட்டிகளாவன ஈரல், கொழுப்பிழையம், தசையிழையம், ( ஏனைய உடற்கலங்கள்)  என்பன காணப்படும்.
  • ஈரலில் குளுக்கோசு கிளைக்கோஜனாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.
  • ஈரலில் கலங்களின் காற்றிற் சுவாசத்தின் மூலம் குளுக்கோசு உடைக்கப்பட்டு  CO2, O2 ஆக மாற்றப்படும்.
  • ஈரலில் குளுக்கோசு கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.
  • கொழுப்பிழையத்தில் குளுக்கோசு கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.
  • தசையிழையத்தில் குளுக்கோசு காற்றிற் சுவாசத்தின் மூலம் உடைக்கப்பட்டு CO2, O2 ஆக மாற்றப்படும்.
  • குளுக்கோசு கிளைக்கோஜனாக மாற்றப்படும்.
  • ஏனைய உடற்கலங்களிலும் குளுக்கோசானது  CO2, Oஆக உடைக்கப்படும்.
  • மேலுள்ள விளைவுகளால் குருதியில் குளுக்கோசின் அளவு படிப்படியாக குறைந்து நியம நிலையை அடையும்.
  • குருதியில் குளுக்கோசின் அளவு நியம நிலையை அடைந்ததும் எதிர் பின்னூட்டல் முறை மூலம் பரிகாரத் தொழிற்பாடு நிரோதிக்கப்படும்.
  • குளுக்கோசின் அளவு நியம நிலையை விட குறையும் போது சதையி, அதிரினல் சுரப்பி, பரிவகக்கீழ் என்பன வாங்கி, ஒழுங்காக்கிகளாக தொழிற்படுகின்றன.
  • சதையியின் இலங்ககான் சிறுதீவிலுள்ள  α கலத்தால் குளுக்ககோன் சுரத்தல் அதிகரிக்கப்படும்.  β கலத்தால் இன்சுலின் சுரத்தல் நிரோதிக்கப்படும்.
  • அதிரினலின், தைரொட்சின், கோட்டிசோல், வளர்ச்சி ஓமோன் ஆகியவற்றின் சுரப்பு  அதிகரிக்கப்படும்.
  • அவ் ஓமோன்களின் இலக்கு அங்கங்களாக ஈரல், கொழுப்பிழையம், தசையிழையம் என்பன காணப்படும்.
  • ஈரலில் கிளைக்கோஜன், புரதம் என்பன குளுக்கோசாக மாற்றப்படும்.
  • கொழுப்பிழையத்தில் கொழுப்பானது குளுக்கோசாக மாற்றப்படும்.
  • மேற்கூறிய விளைவுகளால் குருதியில் குளுக்கோசின் அளவு படிப்படியாக அதிகரித்து நியம நிலையை அடையும்.
  • குருதியில் குளுக்கோசின் அளவு நியம நிலையை அடைந்ததும் எதிப்பின்னூட்டலால் முறை மூலம் பரிகாரப் பொறிமுறை நிரோதிக்கப்படும்.
பிரசாரண சீராக்கம்
  • குருதித் திரவவிழையத்தின் மொத்தக்கனவளவு, திரவவிழையம் என்பவற்றில் கரைந்துள்ள கூறுகளின் செறிவு என்பவற்றை மாறாது பேணுதலே பிரசாரண சீராக்கம் எனப்படும். Please Login to view the Question
  • மனிதனில் பிரசாரண சீராக்கம் உறுதிப்படுத்துகின்றது.
  • இது இரண்டு வழிகளில் நிறைவேற்றப்படுகின்றது.
    1. நீரினளவைக் கட்டுப்படுத்தல்
    2. உடலால் வெளிவிடப்படும், உள்ளெடுக்கப்படும் உப்பினளவைக் கட்டுப்படுத்தல்
  • ஒரு மனிதனில் நாளாந்த உள்ளீட்டு, வெளியீட்டு நீர், உப்பு என்பவற்றைப் பகுப்பாய்வு செய்தபோது சிறுநீர் உற்பத்தியானது நீர், உப்பு என்பவற்றின் இழப்பில் முக்கிய பங்கெடுப்பதைக் காட்டியுள்ளது.
  • பிரசாரண சீராக்கப் பொறிமுறை ADH ஓமோனின் உதவியால் சிறுநீரகத்தால் மேற்கொள்ளப்படும்.

ஒருசீர்த்திடநிலையில்  ஈரலின்  பங்களிப்பு

பௌதிகக் கட்டமைப்பையும் இரசாயனக் கூறுகளையும்
சீராக்குவதில் ஈரல் பங்களிப்புச் செய்கின்றது.

  • குளுக்கோஸ் மட்டம் சீராக்கப்படல்
  • இலிப்பிட்டு உள்ளடக்கம் சீராக்கப்படல்
  • அத்தியாவசியமற்ற அமனோவமிலங்களின் தொகுப்பு
  • நச்சுநீக்கல்
  • வெப்பச்சீராக்கலுக்கு உறுதுணையாக வெப்ப உற்பத்தி
  • இலிங்க ஓமோன்களின் வெளியேற்றம்
  • ஈமோகுளோபின் உடைத்தலும் வெளியேற்றமும்
  • குருதிச் சேமிப்பு
  • விற்றமின் (A, D, E, K) சேமிப்பு
  • குருதிப்புரதத் தொகுப்பு
  • கொலஸ்திரோல் தொகுப்பு
  • யூரியா உற்பத்தி
RATE CONTENT 0, 0
QBANK (10 QUESTIONS)

இளஞ்சூடான ஒரு சூழலிலிருந்து ஒருவர் குளிரான ஒரு குழலைப்போய் அடைந்தால்

Review Topic
QID: 3901
Hide Comments(0)

Leave a Reply

வியர்வைச் சுரப்பியைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 3900
Hide Comments(0)

Leave a Reply

எதிர்க்கும் அல்லது தப்பியோடும்” தூண்டற்பேறென அதிரினலின் பிறப்பிக்கும் தூண்டற்பேறு கூறப்படுவது நாம் அறிந்த உண்மை. கீழ்காண்பவற்றில் அதிரினலின் தூண்டிய விளைவல்லாதது எது?

Review Topic
QID: 3895
Hide Comments(0)

Leave a Reply

உடல் நலமான நிலையில் உள்ள ஒருவர் குளுக்கோசு சேர்ந்த நீர் உட்கொண்டு ஏறத்தாழ ஐந்து நிமிடங்களுக்குள் அதிகரிப்பு ஏற்படுவது,

Review Topic
QID: 3922

3 Answers correct(1/3/4)

Hide Comments(0)

Leave a Reply

இளஞ்சூடான ஒரு சூழலிலிருந்து ஒருவர் குளிரான ஒரு குழலைப்போய் அடைந்தால்

Review Topic
QID: 3901

வியர்வைச் சுரப்பியைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 3900

எதிர்க்கும் அல்லது தப்பியோடும்” தூண்டற்பேறென அதிரினலின் பிறப்பிக்கும் தூண்டற்பேறு கூறப்படுவது நாம் அறிந்த உண்மை. கீழ்காண்பவற்றில் அதிரினலின் தூண்டிய விளைவல்லாதது எது?

Review Topic
QID: 3895

உடல் நலமான நிலையில் உள்ள ஒருவர் குளுக்கோசு சேர்ந்த நீர் உட்கொண்டு ஏறத்தாழ ஐந்து நிமிடங்களுக்குள் அதிகரிப்பு ஏற்படுவது,

Review Topic
QID: 3922

3 Answers correct(1/3/4)

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank