இயூகரியோற்றா கலத்தில் (தாவர, விலங்கு) காணப்படும் கலப்புன்னங்கம்.
அமைப்பு : தனிமென்சவ்வால் சூழப்பட்ட நீர்ப்பகுப்பு நொதியங்கள் / சமிபாட்டு நொதியங்களைக் கொண்ட கோளப்புடகம் ஆகும்.
இதனுள் காணப்படும் நொதியங்களாவன காபோவைதரேற்றுகள், புரத்தியேசுகள், நியூக்கிளியேஸ், இலிப்பேஸ்கள், பொஸ்படேசுகள் இவை முறையே காபோவைதரேற்று, புரதம், நியூக்கிளிக்கமிலம், இலிப்பிட்டு, பொஸ்பேற்றுகளை சமிபாடு அடையச் செய்கின்றன / நீர்ப்பகுப்பு அடையச் செய்கின்றன.
இதன் உள்ளிடம் அமிலத் தன்மையானது. இதனுள் காணப்படும். நொதியங்கள் அமில ஊடகத்தில் தொழிற்படுகின்றன.
கொல்கிப்புடகங்களிலிருந்து இவை உருவாக்கப்படுகின்றன.
பிரதானமாக இரு வகை
கலப்புறச்சமிபாடு – இலைசோசோம் இருக்கும் கலத்திற்கு வெளியே சமிபாடு நிகழும்.
Eg விந்தில் இருக்கும் இலைசோசோம் முட்டையின் வெளிப்புறத்தை சமிபாடு அடையச் செய்தல்.
கலத்தகச்சமிபாடு – இலைசோசோம் உள்ள கலத்தினுள் சமிபாடு நிகழ்தல்.
இது 3 முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
தின்குழியச் செயற்பாட்டின் போது உள்ளெடுக்கப்படும் பற்றீரியாக்கள் / உணவுப் பொருட்கள் இலைசோசோமினால் சமிபாடு செய்யப்பட்டு அதில் உருவாகும் கழிவுப் பொருட்கள் புறக்குழியமாதல் மூலம் வெளியேற்றப்படல்.
கலத்தினுள் காணப்படும் வயதான, பாதிக்கப்பட்ட கலப்புன்னங்கங்களை இலைசோசோம் சமிபாடடையச் செய்து புதிய கலப்புன்னங்கம் உருவாக வழிவகுக்கும். இதன்போது இலைசோசோம் சமிபாட்டின் எளியகூறுகள் புதிய கலப்புன்னங்க ஆக்கத்தில் பங்கு கொள்கின்றன. எனவே கலத்தினுள் பதார்த்த மீள்சுழற்சியில் இலைசோசோம் பங்கு கொள்கின்றன.
தான் உள்ள கலத்தையே இலைசோசோம் அழித்தல். அதாவது தற்கொலைப் பையாகத் தொழிற்படல். இதன் மூலம் கல இறப்பு ஏற்படுத்தப்படும்.
இலைசோசோமின் பிரதான தொழில் கலத்தகச்சமிபாடு ஆகும்.
வெண்குழியத்தின் நடுநிலை நாடி, ஒற்றைக் குழியத்தில் அதிகளவு காணப்படும்.
இறைபோசோம்
புரோகரியோற்றா, இயூக்கரியோற்றா கலங்களில் காணப்படும் கலப்புன்னங்கங்கள்.
ஒரு கலத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படும்
குழியவுருவில் முழு இடமும் பரவிக் காணப்படும்
குழியவுருவில் சுயாதீனமாக, Polysome ஆக மென்சவ்வில் இணைக்கப்பட்டு / கலப்புன்னங்கங்களுள் காணப்படும்.
மிகவும் சிறிய கலப்புன்னங்கம் ஆகும்.
மென்சவ்வால் சூழப்படாதது.
ஒவ்வொரு Ribosome உம் இரு உபஅலகுகளைக் கொண்டது. ஒன்று பெரியது, மற்றையது சிறியது –
ஒவ்வொரு உப அலகும் rRNA,Ribosome க்குரிய புரதத்தால் ஆக்கப்பட்டது.
இரு வகையான Ribosome கள் காணப்படுகின்றன. அவையாவன 70S வகை. 80S வகை.
70S வகை பருமனில் சிறியது. புரோகரியோற்றா கல குழியவுருவில் இழைமணி, பச்சையவுருமணியுள்ளும் காணப்படும்.
80S வகை இயூக்கரியோற்றா கல குழியவுருவில் காணப்படும். பருமனில் பெரியது.
தொழில்
புரதத் தொகுப்பிற்கான இடம் / மேற்பரப்பு
Ribosome இன் உப அலகுகள் / Ribosome புன்கருவில் ஆக்கப்பட்டு கரு நுண்துளையினூடாக குழியவுருவிற்கு வெளியேற்றப்படுகின்றது. அங்கு புரதத் தொகுப்பின் போது இரு உப அலகுகளும் Mg அயன்களால் இணைக்கப்பட்டு Ribosome ஆக்கப்படும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்