Please Login to view full dashboard.

இலிப்பிட்டுகள்

Author : Admin

6  
Topic updated on 02/14/2019 03:46am

இலிப்பிட்டுகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இதில் காணப்படும் மூலகங்களாவன C,H,O சில இலிப்பிட்டுகளில் மேலதிகமாக P, N காணப்படும். இலிப்பிட்டுகளில் H : O = 2 : 1 என்ற விகிதத்தில் காணப்படுவது இல்லை.
    காபோவைதரேற்றுடன் ஒப்பிடும்போது இலிப்பிட்டில் H எண்ணிக்கை அதிகமாகவும் O எண்ணிக்கை குறைவாகவும் காணப்படும்.
  • இவை முனைவுத் தன்மை அற்ற மூலக்கூறுகள் ஆதலால் நீரில் கரைவதில்லை. ஆனால், சேதன கரைப்பான்களில் கரைகின்றன. (சேதன கரைப்பான் : ஈதர், பென்சீன், குளோரோபோம்)
  • இலிப்பிட்டுகள் மா மூலக்கூறுகள் அல்ல. அதாவது பல்பகுதிய சேர்வை அல்ல. ஆனால் சில இலிப்பிட்டு மூலக்கூறுகள் பெரியவை.
    அதாவது மூலக்கூற்று நிறை அதிகம் கொண்டவை.
  • இலிப்பிட்டுகள் பல்லினத்துவ கூட்டச் சேர்வைகள் என அழைக்கப்படும். காரணம் கட்டமைப்பிலும் தொழிற்பாட்டிலும் வேறுபட்ட அனேக வகைகளை கொண்டுள்ளன.
  • இலிப்பிட்டின் வகைகளாவன
    1. மூகிளிசரைட்டு (உண்மையான இலிப்பிட்டு)
    2. பொஸ்போ இலிப்பிட்டு
    3. ஸ்ரெரோயீட்டுகள்
    4. ரேபீன் / தேர்பீன்கள்
    5. மெழுகு
    6. கிளைக்கோ இலிப்பிட்டு
    7. இலிப்போ புரதம்

மூகிளிசரைட்டு

  • மூகிளிசரைட் இரு வகைப்படும்
    1. கொழுப்பு – அறைவெப்பநிலையில் திண்மமாக காட்டும்.
    2. எண்ணெய் – அறைவெப்பநிலையில் திரவமாக காட்டும்.
  • மூகிளிசடைட்டின் கட்டமைப்புக் கூறுகளாவன மூன்று மூலக்கூறு கொழுப்பமிலம், ஒரு மூலக்கூறு கிளிசரோல் ஆகும்.

கொழுப்பமிலம்

  • இதன் பொது சூத்திரம் R-COOH
  • இதன் தொழிற்படு கூட்டம் COOH (காபொட்சைட் கூட்டம்)
  • R நீண்ட ஐதரோகாபன் சங்கிலி அதாவது C,H மட்டும் கொண்ட சங்கிலி
  • கொழுப்பமிலத்தில் பொதுவாக C எண்ணிக்கை 16 – 18 கொண்ட ஐதரோகாபன் சங்கிலி காணப்படும். அத்துடன் C அணுக்களுக்கிடையில் ஒற்றை பிணைப்பு / இரட்டை பிணைப்பு காணப்படலாம்.
  • ஐதரோகாபனின் C எண்ணிக்கையை பொருத்தும் C அணுக்களுக்கிடையில் காட்டும் பிணைப்பை பொருத்தும் வெவ்வேறு கொழுப்பமிலங்கள் பெறப்படுகின்றன.
  • C அணுக்களுக்கிடையில் காணப்படும் பிணைப்பு வகையின் அடிப்படையில் கொழுப்பமிலம் 2 வகைப்படும்.
    1. நிரம்பிய கொழுப்பமிலம்
    2. நிரம்பாத கொழுப்பமிலம்
  • நிரம்பிய கொழுப்பமிலம் எனப்படுவது ஐதரோகாபன் சங்கிலியில் காபன் அணுக்களுக்கிடையில் ஒற்றை பிணைப்பை மட்டும் கொண்ட சேர்வையாகும். (அணுக்களுக்கிடையில் இரட்டை பிணைப்போ / மும்மை பிணைப்போ காணப்படாது)
    உ – ம் : Stearic அமிலம்
  • நிரம்பாத கொழுப்பமிலம் எனப்படுவது கொழுப்பமிலத்தின் ஐதரோகாபன் அணுக்களுக்கிடையில் ஒன்று / மேற்பட்ட இரட்டை பிணைப்பை கொண்டவை.
    உ – ம் : Oleic acid
  • கொழுப்பமிலம் தனது கட்டமைப்பில் இரு கூறுகளை கொண்டது.
    1. தலைப்பகுதி :
  • COOH கூட்டத்தை கொண்ட பகுதி
  • இது முனைவாக்கம் கொண்டது.
  • நீர் விருப்புடையது

2. வால் பகுதி:

  • ஐதரோகாபன் சங்கிலியை கொண்டது.
  • முனைவாக்கம் அற்ற பகுதி
  • நீர் வெறுப்பு பகுதி எனப்படும்.

கிளிசரோல்

  • இதன் மூலக்கூற்று சூத்திரம் C3H8O3
  • இதன் கட்டமைப்பு சூத்திரம்  
  • இதன் தொழிற்படு கூட்டம் ஐதரொட்சைட்டு கூட்டம் (OH)
  • இது ஒரு அற்ககோல் வகையாகும்.
  • மூகிளி சரைட்டின் உருவாக்கம்
    tryglycaride
  • ஒரு மூலக்கூறு கிளிசரோலும் 3 மூலக்கூறு கொழுப்பமிலமும் ஒடுங்கற் தாக்கிற்கு உட்பட்டு 3 மூலக்கூறு நீர் அகற்றப்பட்டு உருவாக்கப்படும் சேர்வை மூகிளிசரைட் எனப்படும்.
  • மூகிளிசரைட்டின் இயல்புகள்:-
  1. C,H,O மூலகங்களை கொண்டது.
  2. நீரில் கரையாது (முனைவாக்கம் அற்ற மூலக்கூறு)
  3. சேதன கரைப்பானில் கரையக்கூடியது.
  4. அறைவெப்பநிலையில் திண்மமாகவோ / திரவமாகவோ காணப்படும்.
  5. நிரம்பிய இலிப்பிட்டாகவோ / நிரம்பாத இலிப்பிட்டாகவோ காணப்படும்.
    (கொழுப்பமிலத்தின் அடிப்படையில்)
  6. மூகிளிசரைட்டே அதிகளவு, பொதுவாக காணப்படும் இலிப்பிட்டு வகையாகும். இது உண்மை இலிப்பிட்டு என அழைக்கப்படும்.
  7. நீரை விட அடர்த்தி குறைவானது. எனவே, இவை நீரில் மிதக்கக்கூடியவை.
  • பொதுவாக நிரம்பிய மூகிளிசரைட்டுகள் அறைவெப்பநிலையில் திண்மமாக காணப்படும். அதாவது கொழுப்பாக காணப்படும்.
  • விலங்குகளிலிருந்து பெறப்படும் மூகிளிசரைட் நிரம்பியதாக காணப்படும்.
  • நிரம்பிய மூகிளிசரைட்டே இதயம், குருதிகலன் தொடர்பான படிவுகளை ஏற்படுத்தும்

மூகிளிசரைட்டின் தொழில்கள்:-

1. சக்தி மூலமாக தொழிற்படுகின்றது.

  • காபோவைதரேற்றைவிட மூகிளிசரைட் சக்தி பெறுமானம் கூடியது.
  • 1g காபோவைதரேற்று 4 kgகலோரி / 16 kJ
  • 1g மூகிளிசரைட் 9 kgகலோரி / 37 kJ
  • மூகிளிசரைட்டில் காபோவைதரேற்றிலும் C,H பிணைப்பு அதிகளவு காணப்படுகின்றது.

2. வெப்ப காவிலியாக தொழிற்படுகின்றது. அதாவது விலங்குகளிலிருந்து வெப்ப இழப்பை தடுக்கின்றது. விலங்குகள் மேலதிக கொழுப்பை கொழுப்பிழையத்தில் தோலுக்கு கீழாக, இதயம், சீறுநீரகத்தைச் சூழ சேமிக்கின்றது. இவை அதிர்ச்சி உறிஞ்சிகளாக தொழிற்பட்டு உள் அங்கங்களை பாதுகாக்கின்றது.

3. தாவரங்களில் சேமிப்பு தொழிலை புரிந்து உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
உ – ம் : தேங்காய், ஆமணக்கு வித்து, சூரியகாந்தி வித்து.

4. பாலைவன விலங்குகளில் சேமிப்பில் உள்ள மூகிளிசரைட்டின் ஒட்சியேற்றத்தின் மூலம் பெறப்படும் நீர் கல அனுசேபத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.

பொஸ்போ இலிப்பிட்டு

  • இதன் கட்டமைப்பு கூறுகளாவன
  1. ஒரு மூலக்கூறு கிளிசரோல்
  2. ஒரு மூலக்கூறு பொஸ்போரிக்கமிலம்
  3. இரண்டு மூலக்கூறு கொழுப்பமிலம்
  • பொஸ்போரிக்கமிலத்தின் மூலக்கூற்று சூத்திரம் H3PO4

பொஸ்போ இலிப்பிட்டின் இயல்புகள்

  • மூலகங்கள் C,H,O,P
  • இதன் தலைப்பகுதி நீரில் கரையும், வால்பகுதி நீரில் கரையாது
  • மொத்தத்தில் இது முனைவாக்கமுடைய மூலக்கூறு.

பொஸ்போ இலிப்பிட்டின் முக்கியத்துவங்கள்

  • கல மென்சவ்வின் ஆக்ககூறு (லெசிதீன்)
  • விலங்குகளில் நரம்பு கலத்தின் மயலீன் கவசத்தின் ஆக்ககூறு. இது மின் காவிலியாக தொழிற்பட்டு கணத்தாக்க வேகத்தை அதிகரிக்கின்றது.
  • சிற்றறைகளில் மேற்பரப்பு கழுவி / Surfactant இன் ஆக்ககூறு.

ஏனைய இலிப்பிட்டு வகைகள்

இலிப்பிட்டு வகை இயல்புகளும் தொழில்களும்
Steroid
  • தாவரத்தில் காணப்படுவதில்லை, விலங்குகளில் காணப்படுகின்றது.
  • காணப்படும் மூலகங்கள் C,H,O
  • இதன் கட்டமைப்பில் நான்கு, காபன் வளைய அமைப்புக்கள் காணப்படும்
  • நீரில் கரையாது
  1. இலிங்க ஓமோன்களினதும் அதிரீனல் மேற்பட்டைக்குரிய ஓமோன்களினதும் ஆக்கக்கூறு
  2. விற்றமின் D இன் ஆக்க கூறு
  3. பித்த உப்புகளின் ஆக்ககூறு
  4. விலங்குகளில் காணப்படும் Steroidக்கு கொலஸ்திரோல் ஒரு உதாரணமாகும்
ரேபின்கள்
  • C,H,O மூலகங்களை கொண்டுள்ளது
  • இதன் கட்டமைப்பில் நீண்ட ஐதரோகாபன் சங்கிலியை கொண்டது
  1. ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களின் கட்டமைப்பு கூறு
  2. பார்வை நிறப்பொருட்களின் கட்டமைப்பு கூறு (ரொடொப்சின், அயடொக்சின்)
  3. தாவர வளர்ச்சி பதார்த்தங்களின் ஆக்க கூறு
  4. வாசணை எண்ணெய்களின் ஆக்க கூறு
  5. விற்றமின் A,D,K ஆக்க கூறு
  6. இறப்பரின் ஆக்க கூறு
 மெழுகு
  • இதன் ஆக்க கூறாக கொழுப்பமிலம், கிளிசரோல் அல்லாத அற்ககோல் பங்கு கொள்கின்றன
  • தாவரம், விலங்குகளில் காணப்படும் நீர் ஊடுபுகவிடாத இலிப்பிட்டு ஆகும்
  1. தாவரத்தின் இலை, தண்டின் வெளிப்புறமான புறத்தோலில் உள்ள கியூற்றின் நீர் இழப்பை தடுக்கின்றது
  2. தாவர வேரின் அகத்தோலில் உள்ள சுபரின் Apoplast பாதையை தடுக்கின்றது
  3. விலங்குகளில் காதில் உருவாகும் மெழுகு தூசு துணிக்கைகள் உட்செல்வதை தடுக்கின்றது
  4. பறவைகளின் இறக்கைகளில் காணப்படும் மெழுகு நீர் இழப்பை தடுக்கின்றது
  5. பூச்சிகளின் புறவன்கூட்டில் காணப்படும் மெழுகு நீர் இழப்பை தடுக்கின்றது
  6. தேன்கூடு ஆக்கத்தில்
 கிளைக்கோ இலிப்பிட்டு
  • இலிப்பிட்டு காபோவைதரேற்றுடன் இணைந்து உருவாகின்றது
  1. கலமென்சவ்வில் கட்டமைப்பு கூறு
 இலிப்போ புரதம்
  • இலிப்பிட்டு புரதத்துடன் சேர்ந்து இலிப்போ புரத்தை உருவாகின்றது
  1. கலமென்சவ்வின் கட்டமைப்பு கூறு
  2. குருதியில் உள்ள இலிப்போ புரதம் பதார்த்த கடத்தலில் பங்கு கொள்கின்றது

மூகிளிசரைட்டிற்கான ஆய்வு கூட பரிசோதனை

  1. மூகிளிசரைட்டு (தேங்காய் எண்ணெய்) 2ml பரிசோதனை குழாயினுள் எடுத்தல்.
  2. அதனுள் 2ml நீர் இட்டு நன்கு கலக்கி அடையவிடுதல்.
  3. ஒரு துளி சூடான் 3 சாய கரைசலை இட்டு கலக்கி அடையவிடுதல்.
  4. நீர் படை தெளிவாக கீழாகவும், சிவப்பு நிறத்தில் காணப்படும். எண்ணெய் படை மேலாகவும் காணலாம். சிறிதளவு எண்ணெய் துளியை வழுக்கிக்கு இடமாற்றம் செய்து ஒளிநுணுக்குக்காட்டியின் கீழ் அவதானிக்க.
  5. இளம்சிவப்பு / சிவப்பு நிறத்தில் எண்ணெய் சிறு கோள்ங்களை அவதானிக்கலாம்.
RATE CONTENT 0, 0
QBANK (6 QUESTIONS)

கலத்தில் உள்ள பின்வரும் புன்னங்கங்களுள் இலிப்பிட் டுத் தொகுப்புடன் சம்பந்தப்பட்டது எது?

Review Topic
QID: 3398
Hide Comments(0)

Leave a Reply

கலத்தில் உள்ள பின்வரும் புன்னங்கங்களுள் இலிப்பிட் டுத் தொகுப்புடன் சம்பந்தப்பட்டது எது?

Review Topic
QID: 3398

கலத்தில் உள்ள பின்வரும் புன்னங்கங்களுள் இலிப்பிட்டுகளைத் தொகுப்பது எது?

Review Topic
QID: 3535
Comments Hide Comments(1)
Sutharsan Darsayini
Sutharsan Darsayini commented at 09:45 am on 25/11/2021
Please give more lipid questions
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank