மனித இனப்பெருக்கம்
மனித ஈரில்லத் தன்மையுடையவன். எனவேää மனிதனில் ஆண்ää பெண் என்று வேறுபாடு உண்டு.
ஆணின் ஆண்புணரிகளான விந்தை தோற்றுவிக்கும் விதைகள் காணலாம். பெண்ணில் முட்டைக்கலத்தை (n) தோற்று விக்கும் சூலகங்கள் காணப்படும்.
விதை, சூலகம் என்பன முதலான சனனி அங்கங்களாகும். மனிதனில் அகக்கருக்கட்டல் நடைபெற் அகவிருத்தி நடைபெறும்.
ஆண் இனப்பெருக்கத் தொகுதி
ஆண் இனப்பெருக்கத்தொகுதியில் பின்வரும் அங்கங்கள் காணப்படுகின்றன.
1. விதையும் விதைப்பையும்
2. விதைமேற்திணிவு
3. அப்பாற் செலுத்தி
4. வீசற்கான்
5. ஆண்குறி
6. துணையான சுரப்பிகள் (சுக்கிலப்புடகம் முன்னிற்கும் சுரப்பி கூப்பரின் சுரப்பி)
விதையும் விதைப்பையும்
விதை விதைப்பை தவிர்ந்த ஏனைய கட்டமைப்புக்கள் வயிற்றறைக் குழியினுள் அமைந்துள்ளன.
விதைப்பையானது தோலினாலானது. இது வயிற்றுக்குழிக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள பை.
இது விதையை உள்ளடக்கி வைத்திருக்கும்.
விதையும் விதைப்பையும்
1. விந்துக்களின் சிறப்பு உற்பத்திக்கு உதவுதல்.
2. விந்துக்களின் உயிர் வாழ்தலுக்கும் அவற்றின் பாதுகாப்பிற்கும் உதவுதல்.
விதைப்பை உடல் வெப்பநிலையை விட 1°c குறைவாக இருப்பதால் விந்து உற்பத்திக்கு சிறப்பாக அமைகின்றது.
விதையானது சோடியாக காணப்படுகின்றது. நீள்கோள வடிவானது.
ஏராளமான சுக்கிலச்சிறுகுழாய்களை கொண்டுள்ளது.
ஒவ்வொரு விதையிலும் ஏரத்தாள 1000 சுக்கிலச்சிறுகுழாய்கள் உண்டு.
சுக்கிலச்சிறுகுழாய் மெல்லியது. மிகவும் சுருண்டது.
சுக்கிலச் சிறுகுழாய்கள் பல தடங்களை தோற்றுவிக்கின்றது.
விதையின் தொழில்கள்
1. ஆண்புணரியான விந்துக்களின் (n) உற்பத்தி.
2.Testesterone hormone இன் உற்பத்தி
சுக்கிலச்சிறுகுழாய்கள்
சுக்கிலச் சிறுகுழாய்களின் சுவர் விந்துக்களை உற்பத்தியாக்கக் கூடிய மூலவுயிர் மேலணிக் கலங்களாலான படையொன்றை கொண்டிருக்கும். இதில் கலங்கள் அவற்றின் விருத்தி நிலைக்ற்ப ஒரு கிரமப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. விந்துப்பிறப் பாக்க பல்வேறுபட்ட விருத்தி நிலைகள் பின்வரும் ஒழுங்கில் காணலாம்.
1. மூலவுயிர் மேலணி (2n)+ சேற்றோலிக்கலங்கள் (2n) – வெளிப்புறப்படை
2. விந்து பிறப்பாக்கும் கலம் (2n)
3. முதல் விந்துக் குழியங்கள் (2n)
4. துணை விந்துக் குழியங்கள் (n)
5. விந்தாகு கலம் (n)
6. விந்து (n)
சேற்றோலிக்கலம்
இவை சுக்கிலச் சிறுகுழாயிகளின் சுவரில் காணப்படுவதுடன் வெளிப்புறமாக உள்ள படையிலிருந்து உள்நோக்கி நீட்டப்பட்டள்ளது.
தொழில்கள் :
1. Inhibin சுரத்தல்
2. போசணை வழங்கல் (விந்துப்பிறப்பின் வெவ்வேறு நிலையிலுள்ள கலங்கள்)
3. இணைத்தல்
லேடிக்கின் கலங்கள் / சிற்றிடை வெளிக்கலங்கள்
சுக்கிலச் சிறுகுழாய்களின் இடையேயுள்ள சிற்றிடை வெளிகளில் இக்கலங்கள் காணப்படுகின்றன.
தொழில்கள் :
1. ஆண் இலிங்க ஓமோனான வுநளவயளவநசழn ஐச் சுரத்தல்.
விதைமேற்திணிவு
இது விதையில் ஆரம்பித்து அப்பாற் செலுத்தியில் முடிவடையும். இது விதையுடன் தொடுகையிலுள்ள சுருண்ட குழாயாகும்.
தொழில்கள் :
1. விந்துக்களின் சேமிப்பு
2. விந்துக்களின் உடற்றொழிலியல் ரீதியான முதிர்வு.
a.விந்துக்கள் இயங்கும் ஆற்றல் பெறல்.
b.விந்துக்கள் கருக்கட்டும் தகைமையை பெறல்.
3. சுக்கிலப்பாயத்தின் ஒரு பகுதியை சுரத்தல்.
அப்பாற்செலுத்தி
இரண்டு கான்களாக காணலாம்.
ஒவ்வொரு விதைமேற்திணிவிலிருந்தும் ஒவ்வொரு கான் வெளியேறும்.
சுக்கிலப்புடகத்திலிருந்து வரும் கான் அப்பாற் செலுத்தியுடன் இணைந்து குறுகிய வீசற்கான் தோற்றுவிக்கப்படும்.
சுக்கிலப்புடக்கக்கான் வீசற்கானில் திறக்கின்றது.
தொழில்கள் :
1. விந்துக்களை விதைமேற்திணிவிலிருந்து சிறுநீர்வழியினுள் கொண்டு செல்லல்.
2. விந்துக்களின் சேமிப்பு (குறைந்தளவு)
வீசற்கான்
ஒவ்வொரு சுக்கிலப்புடகமும் அவற்றின் உள்ளடக்கங்களை வீசற்கானினுள் வெளிவிடும். சிறுநீர்ப் பையிலிருந்து வெளிப் படும் கானுடன் இணைந்து சிறுநீர் வழியை தோற்றுவிக்கும்.
தொழில்கள் :
1. சுக்கிலப்புடக சுரப்புக்களை கொண்டுசெல்லல்.
சிறுநீர்வழி
இது சிறுநீர்ப்பையிலிருந்து ஆரம்பித்து முன்னிற்கும் சுரப்பிலினூடாக ஆண்குறியை அடையும்.
தொழில்கள் :
1. சிறுநீர் சுக்கிலம் என்பவற்றை கொண்டுசெல்லல்.
ஆண்குறி
உருளை வடிவானது
சிறுநீர்வழியுடன் கடற்பஞ்சாலான நிமிர்வுக்குரிய இழையங்களை கொண்ட தசையாலான கட்டமைப்பாகும்.
ஆண்குறியின் தொழில்கள்
1. யோனிமடலினுள் சுக்கிலத்தை வீசல்
2. சிறுநீரை கொண்டு செல்லல்.
ஆண் இனப்பெருக்கத் தொகுதியுடன் தொடர்பான துணையான சுரப்பிகள்
சுக்கிலப்புடகங்கள்
சோடியானவை. அப்பாற்செலுத்தியுடன் இணைந்து காணப்படும். சுக்கிலத்தின் பெரும்பாகம். இதனால் உற்பத்தியாக்கப் படுகின்றது. இதன் சுரப்பு காரணத்தன்மையானது. பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது.
1. சீதம்
2. பிரக்றோசு
3. Prostoglandin
4.. Vitamin c (ascorbic acid)
தொழில்கள் :
1. இது யோனிமடலின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கும்
2. விந்துக்களுக்கான சத்தியமூலம் (குசரஉவழளந)
3. விந்துக்கள் நீந்துவதற்கான ஊடகத்தை வழங்கும்
4. மசகிடல்
முன்னிற்கும் சுரப்பி
தனித்தது. சிறுநீர்ப்பையின் கீழ் சிறுநீர்வழியின் ஆரம்பப்பகுதியில் அதனைச் சூழ்நது காணலாம். இச்சுரப்பி சீதம் கொண்ட சிறிதளவு காரத்தன்மையான பாயியைச் சுரக்கும்.
தொழில்கள் :
1. யோனிமடலின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கும்.
2. சிறுநீர்வழியிலுள்ள மீதமாகவுள்ள சிறுநீரின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கல்
3. மசகிடல்
கூப்பரின் சுரப்பி
சோடியானது. முன்னிற்கும் சுரப்பிக்கு நேர்கீழாக சிறுநீர் வழிக்கு பக்கத்துக்கு ஒன்றாக அமைந்துள்ளது. கானின் மூலம் சிறுநீர்வழியினுள் திறக்கும். காரணத் தன்மையான பதார்த்தத்தைச் சுரக்கும்.
தொழில்கள் :
1. சிறுநீர்வழியில் மீதமாயுள்ள சிறுநீரின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கல்
2. மசகிடல்
சுக்கிலம் (semen)
விந்துக்களையும் துணையான சுரப்பிகளின் சுரப்புக்களையும் விதைமேற்திணிவின் சுரப்பையும் கொண்ட கலவை சுக்கிலமாகும். வழமையாக 2 – 5 அட சுக்கிலம் வெளியேற்றப்படும்.
1 அட சுக்கிலத்தில் ஏறத்தாழ 20 அடைடழைn விந்துக்கள் காணலாம்.
தொழில்கள் :
1. விந்துக்களுக்கான திரவ ஊடகத்தை வழங்கல்
2. யொனிமடலின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கல்.
சுக்கிலத்தின் கூறுகள் :
1. சீதம்
2. Fructose
3. Prostogladin
4. Vitamin – C / Ascobic acid
5. Hyaluronidase
6. Phospolipid
7. Cholestrol
8. Citric acid
விந்துப் பிறப்பாக்கம்
விந்துப்பிறப்பாக்கத்திற்கு எடுக்கும் காலம் ஏறத்தாழ 72 நாட்கள். சுக்கிலச் சிறுகுழாயினுள் விந்துப் பிறப்புக் கலங்களி லிருந்து முதிர்ச்சியடைந்த விந்துப் பிறப்புக் கலங்கள் உற்பத்தியாக்கப்படல் விந்துப் பிறப்புச் செயன்முறை எனப்படும்.
விந்துப் பிறப்பாக்கச் செயன்முறை பின்வரும் படிகளைக் கொண்டது.
1. முளையத்திற்குரிய விதைகளின் முதர் மூலவுயிர்க் கலங்கள் விந்துப் பிறப்புக்கலங்களாக (2n) விருத்தியடையும்.
2. பூப்பெய்தலின் ஆரம்பத்தில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இழையுருப் பிரிவால் முதல் விந்துக் குழியம் (2n) உருவாகும்.
3. முதலான ஒருக்கற்பிரிவால் ஒரு மடியமான துணையான விந்துக் குழியம் (n) உருவாகும்.
4. ஒவ்வொரு துணை விந்துக்குழியங்களும் ஒடுக்கற்பிரிவின் 2ஆவது நிலையை பூர்த்தி செய்து விந்தாகு கலங்களை (n) உருவாக்கும்.
5. விந்தாகு கலங்கள் முதிர்ச்சியடைந்த விந்துக்கலங்களாக (n) வியத்தமடையும்.
விந்துப் பிறப்புச் செயன்முறை பூப்படைதலுடன் ஆரம்பிக்கும். இச்செயல் வயோதிப காலம் வரை நீடிக்கும்.
FSH விந்து உற்பத்தியை ஆரம்பிக்கின்றது. LH,FSH,Testesterone என்பன விந்துப் பிறப்பாக்கத்தை பேணுவதில் பங் கெடுக்கின்றது.
வீசலின் பின்னர் விந்துக்களின் வாழ்க்கையின் உத்தேச அளவு 42 – 72 மணித்தியாலங்கள்.
ஆண் இனப் பெருக்கத்தொகுதியின் ஓமோன் சீராக்கம்
இது பரிவகக் கீழினாலும் முற்பக்க கபச்சுரப்பினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
பரிவகக் கீழினால் புnசுர் விடுவிக்கப்படும்.
GnRH முற்பக்க கபச்சுரப்பியை கிண்டி FSH,LH ஓமோன் சுரக்கத் தூண்டும்.
FSHஆனது சேற்றோலியின் கலங்களை தூண்டுவதன் மூலம் விந்தாகு கலங்களை விந்துக்கலங்களாக விருத்தியடைய பூரணப்படுத்தும். இதன் மூலம் விந்து பிறப்பாக்கம் தூண்டப்படும் / ஆரம்பித்து வைக்கப்படும்.
LH ஆனது லேடிக்கின் கலங்களை (சிற்றிடை வெளிக்கலங்களை) தூண்டி Testesterone ஓமோன் தொகுப்படுவதை தூண் டும் LH லேடிக் கலங்களை தூண்டுவதால் இதனை ICSH எனும் பெயரால் குறிப்பர்.
ICSH-intestitial cells stimulating hormone
Testesterone ஓமோன் விந்துப் பிறப்புக் கலங்கள் விந்துக்கலங்களாகும் போது நடைபெறும் வளர்ச்சியையும் விருத்தியையும் தூண்டும்.
testesterone மட்டம் அதிகரிக்கும் போது பரிவகக் கீழினால் புnசுர் சுரத்தல் குறைக்கப்படும்.
GnRH சுரப்பு குறையுமெனில் LH,FSH மட்டமும் குறையும்.
testesterone ஆனது முற்றபக்க கபச்சுரப்பியின் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி LH சுரப்பை குறைக்கும்.
விந்துப் பிறப்பாக்கம் மிக விரைவாக நடைபெறுமெனில் சேற்றோலிக் கலங்களிலிருந்து Inhibin வெளிவிடப்படும்.
Inhibin,FSH சுரப்பை குறைக்கும்.
விந்துப் பிறப்பாக்க வீதம் குறைவாக இருக்குமெனில் Inhibin சுரக்கப்பட மாட்டாது. இதனால் FSH விந்துப் பிறப் பாக்கத்தை தூண்டும்.
Testesterone ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் அனைத்து பகுதிகளையும் ஆணுக்குரிய துணைப் பாலியல்புகளையும் விருத்தியடையச் செய்தலையும் பேணுதலையும் மேற்கொள்ளும்.
விந்துக் கலமொன்றின் அடிப்படை கட்டமைப்பும் அதன் தொழில்களும்
விந்துக்கலம் நுணுக்குக் காட்டிக்குரியது. ஏறத்தாழ 50μm நீளமுடையது. வந்துக்கலம் நீண்டது. இது தலை கழுத்து நடுத்துண்டு வால் எனும் 4 பகுதிகளைக் கொண்டுள்ளது.
தலை
தலை தட்டையானது வட்டமானது. ஒரு மடியமான பெரிய கருவைக் கொண்டுள்ளது. தலையின் பெரும் பகுதியில் கரு அமைந்துள்ளது. இக்கரு நுகத்திற்கு தந்தை வழி இயல்புகளை காவக்கூடிய தந்தை வழி பிறப்புரிமையியலுக்குரிய பதார்த்தங்களை கொண்டுள்ளது. கரு கலத்தொழிற்பாடுகளை சீராக்குகின்றது.
கருவில் 23 நிறமூர்த்தங்கள் உண்டு தலையின் முன்முனையில் உச்சி மூர்த்தம் காணப்படுகின்றது. உச்சிமூர்த்தம் ஒரு திரிபடைந்த இலைசோசோம் ஆகும். இவ் உச்சிமூர்த்தம் பல நீர்பகுப்பு நொதியங்களைக் கொண்டுள்ளது.
1. திரிச்சின் (Trypsin)
2. பெப்சின் (Pepsin))
3. கையலுரோனிடேஸ் (Hyaluronidase)
இந்நீர்பகுப்பு நொதியங்கள் முட்டை மென்சவ்வை சமிபாடடையச் செய்கின்றது / முட்டை மென்சவ்வை ஊடுருவ உதவுகின்றன.
நடுத்துண்டு
இது ஏராளமான இழைமணிகளைக் கொண்டுள்ளது. துலை நோக்கி விந்துக்கள் நீந்துவதற்கான சக்தியை வழங்குகின்றது.
கழுத்து
இது தலைக்கும் நடுத்துண்டிற்குமிடையே காணலாம். ஒடுங்கிய பிரதேசமாகும். கழுத்தில் 1 சோடி புன்மையத்திகளுண்டு. இப்புன்மையத்திகள் ஒன்றுக்கொன்று செய்குத்தாக அமைந்துள்ளன. அச்சிழை ஒரு புன்மையத்திலிருந்தே ஆரம்பிக் கின்றது. இவ் அச்சிழை வாலின் அந்தம் வரை செல்லுகின்றது. இது சவுக்குமுளையை ஆக்குகின்றது.
வால்
வால் ஒரு நீண்ட சவுக்குமுளையாகும். விந்து சூலை நோக்கி நீந்துவதற்கு உதவுகின்றது. மேலும் விந்து சூலினுள் புகுவதற்கும் உதவுகின்றது. வாலில் ‘9+2’ ஒழுங்கில் நுண்புன்குழாய்கள் காணலாம்.
வாலின் 3/4 பகுதி கலமென்சவ்வால் போர்க்கப்பட்டுள்ளது. கலமென்சவ்வால் சூழப்படாத பகுதி ஈற்றுத் துண்டமாகும். ஈற்றுத் துண்டம் முட்டைக் கலத்தை நோக்கி விந்து நீந்துவதற்கான உந்துகை பொறிமுறையை வழங்கும்.