Please Login to view full dashboard.

அவயவங்கள்

Author : Admin

21  
Topic updated on 02/14/2019 04:29am
மேல் அவயவ வன்கூடு
  • மனிதனின் மேல் அவயவ வன்கூடு அடிப்படையில் ஐவிரல் அவயவ அமைப்பையொத்தது. Please Login to view the Question  
  • உடற்பாரத்தை தாங்கும் தொழிற்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு பற்றி பிடித்தலுக்கும், நுட்பமான தொழிற்பாட்டுக்கும் ஏற்ப சிறத்தலடைந்துள்ளது.
  • பரந்த வீச்சிலான அசைவை மேற்கொள்ள கூடியதாகவுள்ளது.
  • மேல் அவயவ வன்கூடு 4 பிரதான பகுதிகளைக் கொண்டது.
பிரதான பகுதிகள் என்புகள் எண்ணிக்கை
 மேற்கை  புய என்பு   01
 முன்கை  ஆரை என்பு   01
 அரந்தி என்பு   01
 மணிக்கட்டு  மணிக்கட்டு என்புகள்   08
 அங்கை / கை  அனுமணிக்கட்டு என்புகள்   05
 விரல்துண்ட என்புகள்   14

 

மேற்கை Please Login to view the Question  

  • இது தனித்த ஒரு என்பாலானது. இது புயவென்பாகும். மேல் அவயவ வன்கூட்டில் மிகவும் நீண்ட வன்மையான என்பாகும்.
  • புயஎன்பு நீண்ட உருளை வடிவ என்பு. இதன் முனைகள் விரிவடைந்தவை.
  • புயஎன்பின் அண்மையான முனையில் புயஎன்பு தலை உண்டு. புயஎன்பின் தலை தோற்பட்டை என்பின் கிண்ணக்குழியுடன் மூட்டு கொண்டு காணப்படும். இம்மூட்டு நிறைவற்ற பந்துக்கிண்ண மூட்டாகும்.  இது பரந்த வீச்ச அசைவிற்கு இது இடமளிக்கும்.
  • புயஎன்பின் சேய்மை அந்தத்தில் ஆரை அன்பு பொருந்துவதற்கான தலையுரு; அரந்தி என்பு பொருந்தும் கப்பியுரு என இரு மூட்டுப்பரப்புகளுண்டு.

முன்கை Please Login to view the QuestionPlease Login to view the Question    

  • இதில் ஆரை, ஆரந்தி எனும் இரு என்புகளுண்டு.
  • ஆரை என்பிலும் பார்க்க அரந்தி நீண்டது. ஆரை என்பு நீளம் குறைந்தது.
  • ஆரை என்பு வெளிப்பக்கமானது. அரந்தி என்பு உட்பக்கமானது.
  • உள்ளங்கை முன்னோக்கி இருக்கையில் ஆரை, அரந்தி எனும் இரு என்புகளும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக காணப்படும்.
  • இவ்விரு என்புகளும் நீண்ட உருளை வடிவ என்புகள் இவற்றின் முனைகள் விரிவடைந்துள்ளன.
  • அரந்தியின் அண்மைமுனை அகன்றது. சேய்மைமுனை ஒடுங்கியது.
  • ஆரையின் அண்மை முனை ஒடுங்கியது. சேய்மை முனை அகன்றது.
  • அரந்தியின் அண்மை முனை முழங்கை மூட்டையமைக்க அனுமதிக்கும். இம்மூட்டின் அசைவுகளாக முன்கையை மடித்தல் (3ம் வகை),  நீட்டல் (1ஆம் வகை) அசைவுகள் அமைகின்றன.
  • ஆரை, அரந்தி இரண்டும் தமக்கிடையில் அண்மை, சேய்மை அந்தங்களில் ஒன்றுடனொன்று மூட்டு கொள்கின்றன.
  • முன்னோக்கி காணப்படும் உள்ளங்கை (இயல்புநிலை)
    பின்னோக்கி திரும்புதல் ” முனைவளைவு ” எனப்படும்.
  • இதன்போது ஆரை என்பின் சேய்மை முனை, அரந்தி என்பின் சேய்மை முனைக்கு மேலாக  180°  க்கூடாக அசையும். இந்நிலையில் அரந்திக்கு குறுக்காக ஆரை காணப்படும்.
  • பின்வளைவு நிலையில் உள்ளங்கை  மீண்டும்  முன்புறம் நோக்கி அசையும்.  பின் ஆரை, அரந்தி என்புகள் மீண்டும் சமாந்தர நிலைக்கு கொண்டுவரப்படும்.

மணிக்கட்டு  Please Login to view the Question  

  • ஒரு வரிசையில் 4 என்புகள் வீதம் இரண்டு வரிசையில் மொத்தம் 8 என்புகளுண்டு.
  • இவ்வென்புகள் மிகவும் நெருக்கமாக ஒன்றாக பொருத்தப்பட்டுள்ளன.
  • இவ்வென்புகளுக்கிடையே ” வழுக்கல் மூட்டு ” காணப்படும்.
  • அண்மையான வரிசை மணிக்கட்டு என்புகள் ஆரை என்பின் சேய்மை முனையுடன் மூட்டு கொண்டு மணிக்கட்டு மூட்டை தோற்றுவிக்கும். சேய்மை வரிசை மணிக்கட்டென்புகள் அனுமணிக்கட்டின் அண்மை பகுதியுடன் மூட்டுக்கொள்கின்றன.

அங்கை Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question      

  • இதில் அனுமணிக்கட்டு என்புகளும் விரல் துண்ட என்புகளும் காணப்படும்.
  • அனுமணிக்கட்டு என்புகள் 5 உண்டு. இவை மெல்லியன உருளையான கோல் வடிவானவை. இவ்வென்புகள் உள்ளங்கையை ஆக்குகின்றன.
  • இவ்வென்புகள் பெருவிரலிலிருந்து உள்நோக்கி இலக்கமிடப்படும்.
  • அனுமணிக்கட்டென்பின் சேய்மை பகுதிகள் அண்மையாக விரல் துண்ட என்புகளுடன் மூட்டு கொள்கின்றன.
  • 1ஆம் அணுமணிக்கட்டென்பு ஏனைய நான்கிலும் பார்க்க கூடியளவு விலகிக் காணப்படும். இதனால் மணிக்கட்டின் மீது பெருவிரல் பெருமளவு சுயாதீன அசைவை மேற்கொள்ள கூடியதாக இருக்கும்.
  • விரல் துண்ட என்புகள் 14 உண்டு. இவை 5 விரல்களில் அமைந்துள்ளன.
  • 1ஆம் விரல் / பெருவிரல் 2 விரல் துண்ட என்புகளையும் ஏனைய விரல்கள் ஒவ்வொன்றும் 3 விரல் துண்ட என்புகளையும் கொண்டிருக்கும்.
  • விரல் துண்ட என்புகள் உருளையானவை. கோல் வடிவானவை. குறுகியவை.
  • 1ஆம் விரல் ஏனைய விரல்களிலும் பார்க்க குறுகியது. இவ்விரல் ஏனைய விரல்களுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் எதிரடையக் கூடியது.
  • அதிலும் 1ஆம் விரல் 2ஆம், 3ஆம் விரல்களுடன் எதிரடைதல் சரிநுட்ப பிடிப்பு மேற்கொள்ள உதவும். இது எழுதுதல், வரைதல், நுண்ணிய பொருட்களை எடுத்தல் போன்ற செயற்பாட்டுக்கு உதவும்.
  • 1ஆம் விரல் ஏனைய 4 விரல்களுடன் எதிரடைதல் வலுபிடிப்புக்கு உதவும். எனினும் இச்செயலுக்கு 1ஆம் விரல் கட்டாயமானதல்ல.
  • கருவிகளை ஆக்கலும் பயன்படுத்தலும், கலைதிறன் மிக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாட்டுக்கு மேல் அவயவ அமைப்பே காரணம்.
  • 1ஆம் அனுமணிக்கட்டென்பு  மணிக்கட்டென்பின் சரிவகத்துடன்  விசேடமான மூட்டு காரணமாக பெருவிரல் ஏனைய விரல்கட்கு செங்குத்தாக  மடிக்க  கூடியதாக காணப்படல் ” எதிரடையும் பெருவிரல் ” எனப்படும்.  இம்மூட்டு மனிதனுக்கு தனித்துவமான சரிநுட்ப பிடிப்புக்கு காரணமாகிறது.

மேல் அவயவம் பாரந்தூக்கலுக்கு பல்வேறு சிறப்பியல்புகளை கொண்டது

  •  வன்மையான  புயஎன்பு.
  •  நெம்புகோலாக  தொழிற்படல்.
  •  தசைகள் பொருந்தி  காணப்படல்.
  • முன்வளைவு, பின்வளைவு  மேற்கொள்ளல்.
  • அகன்ற  உள்ளங்கை.
  • கையின்  பற்றும்  தன்மை.
  • எதிரடையும்  பெருவிரல்.
கீழ் அவயவ வன்கூடு
  • மனித கீழ் அவயவ வன்கூடு அடிப்படையில் ஐவிரல் அவயவ அமைப்பை ஒத்தது. கால் பகுதியில் மட்டும் சிறு வேறுபாடு உண்டு.
  • இது மேல் அவயவத்திலும் பார்க்க நீண்டது.
  • இது உடலின் முற்றான நிமிர்ந்த நிலை பேணல், உடற்பார ம் தாங்குதல், இடப்பெயர்ச்சி செயற்பாடுகளுக்கு ஏற்ப சிறப்படைந்தள்ளது.
  • கீழ் அவயவ வன்கூடு 4 பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது.
    கணுக்கால் என்புகள்

    பிரதான பகுதிகள்    என்புகள் எண்ணிக்கை
    தொடை / மேற்கால் தொடையென்பு  01
    கணுக்கால் / கீழ்க்கால் உட்கணைக்காலென்பு  01
    வெளிக்கணைக்காலென்பு  01
      முழங்கால்சில்லு என்பு  01
    கணுக்கால் கணுக்கால் என்புகள்  07
    பாதம் அனுக்கணுக்கால் என்புகள்  05
    விரல் துண்ட என்புகள்  14

 

 

தொடை / மேற்கால் 

  • தொடைப்பகுதி தனியான தொடை என்பாலானது.
  • தொடை உடலின் என்புகளில் மிகவும் நீண்டது. மிகவும் வலிமையானது மிகவும் பாரமானது.
  • தொடை என்பின் இருமுனைகளும் விரிவடைந்தவை.
  • தொடை என்பின் அண்மையான முனை தொடை என்புத் தலை, கழுத்து ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
  • தொடை என்புத்தலை ஏறத்தாழ கோளவடிவானது.   இது இடுப்பென்பின் அசற்றல் புலத்துடன் மூட்டுக்கொண்டு மூட்டை ஆக்குகின்றது.  இது பந்துக்கிண்ண மூட்டு வகைக்கு உரியது.
  • தொடையென்புத்தலை கழுத்தின் மூலம் தொடை என்புடன் இணைந்துள்ளது.

கணுக்கால் / கீழ்க்கால் Please Login to view the QuestionPlease Login to view the Question    

  • கணுக்கால் பகுதியில் இரண்டு என்புகள் அமைந்துள்ளன.
  • இவை  நீண்டவை.  இவற்றின் முனைகள் விரிவடைந்தவை.
  • கணைக்கால் உள்ளென்பு பெரியது. உட்புறம் காணப்படும்.
  • கணைக்கால் வெளியென்பு சிறியது. வெளிப்புறம் காணப்படும்.
  • இவ்விரு என்புகளும் அண்மை, சேய்மை அந்தங்களின் ஒன்றுடனொன்று மூட்டுக்கொள்கின்றன.
  • இவ் தொடையென்பின் சேய்மையான அந்தத்துடன் கணைக்கால் உள்என்பின் அண்மையான பகுதி மூட்டுக்கொள்வதன் மூலம் முழங்கால் மூட்டை ஆக்கும். இது பிணையல் மூட்டு வகைக்குரியது.
  • முழங்கால் மூட்டின் முற்புறமாக முழங்கால் சில்லு காணப்படும்.
  • முழங்கால் மூட்டு பெரிதாகவும் உறுதியாகவும் காணப்படுவதால் உடற்பாரம் முழங்காலுக்கூடாக கடத்தப்பட்டு தாங்கக்கூடியதாக உள்ளது.

கணுக்கால் 

  • கணுக்கால் பகுதியில் 7 கணுக்கால் என்புகள் 2 வரிசையில் காணப்படும்.
  • குதிக்கால்  என்பு  நன்கு  விருத்தியடைந்து  பெரிதாக காணப்படும்.
  • பரடு  என்புடன் கணுக்கால் உள்ளென்பு மூட்டுக்கொள்கின்றது.
  • கணுக்கால் என்புகள் ஒன்றுடனொன்று மூட்டப்பட்டு வழுக்கல் அசைவிற்கு இடமளிக்கின்றன.

பாதம் Please Login to view the QuestionPlease Login to view the Question    

  • அனுக்கணுக்கால் என்புகளும் விரல் துண்ட என்புகளும் பாதத்தை அமைக்கும்.
  • பெருவிரல் ஏனைய 4 விரல்களுக்கும் சமாந்தரமானது எதிரடையாது.
  • பாதம் அகன்றது. ஒரு பாதத்தில் 2 வகையான பாதவிற்கள் உண்டு.
    • நீள் பக்கவில் – 02
    • குறுக்குவில் – 01
  • நீள்பக்க வில் குதியில் ஆரம்பித்து 2 பக்கங்களிலும் காணப்படும்.
  • குறுக்குவில் அனுக்கணுக்கால் என்புகளிடையே சேய்மையான அந்தங்களினால் அமைக்கப்படும்.
  • பாதவிற்களால் தரையில் குதிக்கால் என்புகள், அனுக்கணுக்கால் என்புகளின் சேய்மையான பகுதிகள் விரல் துண்டங்கள் மட்டுமே பதிக்கப்படும்.
  • பாதவிற்கள் ஒன்றையொன்று சந்திக்கும் இடங்களில் முக்காலி கொண்ட ஒழுக்கை ஆக்குகின்றன. இது நடத்தலில், பாரம் தாங்கவும் பாரத்தை கடத்தவும், சமநிலை பேணவும் உதவும். இப்பண்பு மனிதனின் முற்றான நிமிர்ந்த நிலை பேணப்பட உதவும்.
  • முற்றான நிமிர் நிலையில் உடற்பாரம் முழுவதும் தாங்கப்படுவது 2 பாதங்களினால் மட்டுமாகும்.
  • பாதவிற்களும் பாதத்தின் சகல என்புகளுக்கிடையிலுமுள்ள அசையக்கூடிய மூட்டுக்களும் மனிதனின் நடத்தல், பாய்தல், ஓடுதலில் அனுகூலமாய் அமையும்.
  • பாரம் தாங்குதலுக்கு ஏற்றதாக பாதத்தில் பெரிய குதிக்காலென்பும் பெரிய 1ஆம் விரல்துண்டமும் காணப்படும்.
  • முழங்கால் மூட்டு, கணைக்கால் உள்ளென்புக்கணு என்பன ஒரே நேர்கோட்டில் இருப்பதால் உடற்பாரம் இலகுவாக பாதத்தை நோக்கி கடத்தப்படும்.
  • 5 அனுக்கணுக்கால் என்புகளும் 14 விரல் துண்ட என்புகளும் காணப்படும்.
  • அனுக்கணுக்கால் என்புகள் மெல்லியவை. நீண்டவை.
  • பெருவிரல் / 1ஆம் விரலில் 2 விரல்துண்ட என்புகளும் ஏனைய விரல்களில்  ஒவ்வொன்றிலும்  3 விரல்துண்ட என்புகள் காணப்படும்.

 

கீழ் அவயத்தின் தொழில்கள்  

  •  உடற்பாரத்தை தாங்குதல்
  •  இடப்பெயர்ச்சி / நடத்தல்
  •  நிமிர்ந்த உடற்கோலத்தை பேணுதல்

28500045-Bones-of-the-arm-hand-leg-and-foot-Stock-Vector-bones-anatomy-human

RATE CONTENT 0, 0
QBANK (21 QUESTIONS)

மனிதனின் பாதத்தில் காணப்படும் மிகப் பெரிய என்பானது,

Review Topic
QID: 6559
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் மணிக்கட்டில் 1ஆம் அனுமணிக்கட்டென்புடன் நேராக மூட்டுக்கொள்வது,

Review Topic
QID: 6561
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் இருகால் நடத்தல் முறைக்கு கீழ்க் காணும் இயல்புகளில் எது அதி முக்கியத்துவமுடையதாகும்?

Review Topic
QID: 6564
Hide Comments(0)

Leave a Reply

மனித வன்கூட்டுத் தொகுதியிலே முழங்கைத்தலை முளை காணப்படுவது

Review Topic
QID: 6572
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் கை குரங்கின் கையிலிருந்து வேறுபடுவது

Review Topic
QID: 6577
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் என்புகளில் எது மனிதனின் காற்கணு மூட்டிலே கணைக்காலுள்ளென்புடனும் கணைக்கால்
வெளியென்புடனும் மூட்டப்படுகின்றது?

Review Topic
QID: 6581
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் மேல் அவயவம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 6734
Hide Comments(0)

Leave a Reply

மனித மேல் அவயவத்தினால் பாரம் தூக்குதலில் மிகக் குறைவான பங்களிப்புச் செய்வது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6744
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் இயல்புகளில் எது மனிதனின் இரு காலுண்மையுடன் நேர்த்தொடர்பற்றதாகும்?

Review Topic
QID: 6516
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் பாதத்தில் காணப்படும் மிகப் பெரிய என்பானது,

Review Topic
QID: 6559

மனிதனின் மணிக்கட்டில் 1ஆம் அனுமணிக்கட்டென்புடன் நேராக மூட்டுக்கொள்வது,

Review Topic
QID: 6561

மனிதனின் இருகால் நடத்தல் முறைக்கு கீழ்க் காணும் இயல்புகளில் எது அதி முக்கியத்துவமுடையதாகும்?

Review Topic
QID: 6564

மனித வன்கூட்டுத் தொகுதியிலே முழங்கைத்தலை முளை காணப்படுவது

Review Topic
QID: 6572

மனிதனின் கை குரங்கின் கையிலிருந்து வேறுபடுவது

Review Topic
QID: 6577

பின்வரும் என்புகளில் எது மனிதனின் காற்கணு மூட்டிலே கணைக்காலுள்ளென்புடனும் கணைக்கால்
வெளியென்புடனும் மூட்டப்படுகின்றது?

Review Topic
QID: 6581

மனிதனின் மேல் அவயவம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 6734

மனித மேல் அவயவத்தினால் பாரம் தூக்குதலில் மிகக் குறைவான பங்களிப்புச் செய்வது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6744

கீழ்க்காணும் இயல்புகளில் எது மனிதனின் இரு காலுண்மையுடன் நேர்த்தொடர்பற்றதாகும்?

Review Topic
QID: 6516
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank