Please Login to view full dashboard.

அங்கிகளின் போசணை வகைகள்

Author : Admin

14  
Topic updated on 02/14/2019 04:08am

அங்கிகள்  தமது கல அனுசேபச் செயற்பாட்டுக்கான சக்தியையும்  காபன் மூலத்தையும்  பெற்றுக்கொள்ளும் செயன்முறை  போசணை  எனப்படும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

போசணை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.

D 1

♦  சிறப்பு போசணை முறையாக  பூச்சியுண்ணம் போசணை காணப்படுகிறது.

  • அங்கிகளில் காணப்படும் போசணை பயன்படுத்தும் காபன் மூலத்தின் அடிப்படையில் தற்போசணை, பிறபோசணை என இரண்டு வகைப்படுத்தப்படும்.
  • காபன் மூலமாக அசேதன காபனை (CO2) பயன்படுத்தும் போசணை முறை தற்போசணை எனப்படும்.
  • காபன் மூலமாக சேதன காபனை பயன்படுத்தும் போசணை பிறபோசணை எனப்படும்.
  • தற்போசணை;  பயன்படுத்தும் சக்தி மூலத்தின் அடிப்படையில் ஒளித்தற்போசணை,  இரசாயன தற்போசணை என மேலும் வகைப்படும்.
  • ஒளித்தற்போசணையில் சக்தி மூலமாக சூரிய ஒளிச்சக்தியும் இரசாயன தற்போசணையில் சக்தி மூலமாக அசேதன இரசாயன சக்தியும் பயன்படுத்தப்படும்.
  • ஒளித்தற்போசணை எனப்படுவது சக்தி மூலமாக சூரிய ஒளிச் சக்தியையும் காபன் மூலமாக அசேதன காபனையும் (CO2) பயன்படுத்தும் போசணை முறையாகும்.  இதை மேற்கொள்ளும் அங்கிகள் ஒளிதற்போசணிகள் எனப்படும்.
    (உ+ம்) : சயனோ பற்றீரியா, ஊதா கந்தக பற்றீரியா, பச்சை கந்தக பற்றீரியா, பச்சை தாவரங்கள், அல்கா
  • இரசாயனத் தற்போசணை எனப்படுவது சக்தி மூலமாக அசேதன இரசாயன சக்தியையும் காபன் மூலமாக அசேதன காபனையும் (CO2) பயன்படுத்தும் போசணை முறையாகும். இதை மேற்கொள்ளும் அங்கிகள் இரசாயன தற்போசணிகள் எனப்படும்.
    (உ+ம்) : Nitrobacter,  Nitrosomonas
  • பிறபோசணை; பயன்படுத்தும் சக்தி மூலத்தின் அடிப்படையில் ஒளிப்பிறபோசணை, இரசாயன பிறபோசணை  மேலும் இரண்டு வகைப்படும்.
  • சக்தி மூலமாக சூரிய ஒளிச்சக்தியை பயன்படுத்தும் போசணை ஒளிப்பிறபோசணை எனவும் சக்தி மூலமாக சேதன இரசாயன சக்தியை பயன்படுத்தும் போசணை முறை இரசாயன பிறபோசணை எனப்படும்.
  • ஒளிப்பிறபோசணை எனப்படுவது சக்தி மூலமாக சூரிய ஒளிச் சக்தியையும் காபன் மூலமாக சேதன காபனையும் பயன்படுத்தும் போசணை முறையாகும்.
    (உ+ம்) : சில பற்றீரியாக்கள்
  • இரசாயன பிறபோசணை எனப்படுவது சக்தி மூலமாக சேதன இரசாயன சக்தியையும் காபன் மூலமாக சேதன காபனையும் பயன்படுத்தும் போசணை முறையாகும்.
    (உ+ம்) : சகல பங்கசுக்கள், அனேக பற்றீரியாக்கள், சகல விலங்குள், புரட்டோசோவன்கள்
  • பிறப்போசணை (இரசாயன பிற போசணை) மூன்று வகைப்படுத்தப்படும்.
    1. அழுகல் வளரி போசணை
    2. ஒன்றியவாழிப் போசணை
    3. விலங்குமுறை போசணை

அழுகல் வளரி போசணை / அகத்துறிஞ்சல் போசணை

  • இறந்த, உக்கிய சேதன பதார்த்தத்தை காபன் மூலமாக பயன்படுத்துபவை அழுகல்வளரி போசணிகள் எனப்படும்.
    (உ+ம்) : அனேக பங்கசுக்கள், சில பற்றீரியாக்கள்
  • இவ்வங்கிகள் இறந்த சேதன பதார்த்தத்தின் மேல் நொதியங்களை சுரந்து, சமிபாடு அடைய செய்து கரையக்கூடிய எளிய உணவு கூறுகளை அகத்துறிஞ்சி பயன்படுத்துகின்றன. பின்பு தன்மய மாக்கப்படுகிறது. எனவே, இவ் போசணை அகத்துறிஞ்சல் போசணை எனவும் அழைக்கப்படும்.
  • இங்கு கலப்புற சமிபாடு நடைபெறுகிறது. அதாவது அங்கிக்கு வெளியெ சமிபாடு நடைபெறும்.

ஒன்றியவாழிப் போசணை 

  • இரு வேறுபட்ட இனத்துக்குரிய அங்கிகளின் போசணை ஈட்டமாகும்.
    அதாவது, இரு வெவ்வேறு இனங்களுக்கிடைப்பட்ட நெருங்கிய இடைத்தொடர்பு ஆகும்.
  • இவை 3 வகைப்படும்.
    • ஒன்றுக்கொன்று துணையாகும் போசணை
    • ஒட்டுண்ணி போசணை
    • ஒரட்டிலுண்ணும் போசணை
  • ஒன்றுக்கொன்று துணையாகும் போசணையில் இரு வேறுபட்ட இனத்துக்குரிய அங்கிகளின் போசணை ஈட்டத்தில் இரு அங்கிகளும் நன்மையை பெற்றுக் கொள்ளலாகும்.
    (உ+ம்) :

    • அவரை குடும்ப தாவர வேர் சிறு கணு முடிச்சும் Rhizobium bacteria உம்
    • உயர்தாவர வேரும் Fungus உம் (வேர்பூஞ்சண கூட்டம்)
  • ஒட்டுண்ணி போசணை எனப்படுவது இரு வெவ்வேறு இனத்துக்குரிய அங்கிகளின் போசணை ஈட்டத்தில் ஒரு அங்கி நன்மையையும் ஒரு அங்கி தீமையையும் பெறுதலாகும்.
    நன்மையை பெறுவது ஒட்டுண்ணி. தீமையை பெறுவது விருந்து வழங்கி ஆகும்.
    (உ+ம்) :

    • Plasmodium உம் மனித களமும்
    •  Necator  americanus உம் மனிதனும்
    • Cascuta (தூத்துமக்கொத்தான்) உம் உயர் தாவரமும் – முழு ஒட்டுண்ணி
    • Loranthus (குருவிச்சை) உம் உயர் தாவரமும் – குறை ஒட்டுண்ணி
  • உணவை தானாக தயாரித்து நீரையும் கனியுப்பையும் விருந்து வழங்கியிடமிருந்து பெறல் – குறை ஒட்டுண்ணி.
    உணவு, நீர், கனியுப்பு ஆகிய அனைத்தையும் விருந்துவழங்கியிலிருந்து பெறல் – முழு ஒட்டுண்ணி
  • ஒட்டிலுண்ணும் போசணை எனப்படுவது இரு வெவ்வேறு இனத்துக்குரிய அங்கிகளின் போசணை ஈட்டத்தில் ஒரு அங்கி நன்மையையும் மற்றைய அங்கிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதிருத்தல்.
    (உ+ம்) :

    • கடல் அன்மனியும் முனிவன் நண்டும்
    • மேலோட்டிகளும் உயர் தாவரமும் – Orchid

விலங்குமுறை போசணை 

  • பெரும்பாலான விலங்குகள் விலங்கு முறை போசணையை காட்டுகின்றன.
  • விலங்குமுறை போசணையை காண்பிக்கும் அங்கிகளில் உணவுக்கால்வாய் விருத்தியடைந்து காணப்படும்.
  • இப்போசணை முறையில் 5 பிரதான படிகள் உண்டு.
    •  உள்ளெடுத்தல்
    •  சமிபாடு
    • அகத்துறிஞ்சல்
    • தன்மயமாக்கல்
    • நீக்கல் (மல நீக்கம்)
  • உள்ளெடுத்தல் : சூழலிலிருந்து உணவு உணவுக் கால்வாயினுள் எடுக்கப்படல்
  • சமிபாடு : சிக்கலான பெரிய உணவுக் கூறுகள் எளிய அகத்துறிஞ்சக்கூடிய உணவுக் கூறுகாளக மாற்றப்படல் இதில் இருவகையான சமிபாடுண்டு.
    • பௌதிக சமிபாடு / பொறிமுறை சமிபாடு :   பெரிய உணவுத் துணிக்கை சிறிய உணவுத் துணிக்கைகளாக பௌதிக நிலையில் மட்டும் மாற்றப்பட்டு இரசாயன நிலையில் மாற்றப்படாத சமிபாடாகும். இதனை பற்கள், உணவுக் கால்வாய் சுவர், மழமழப்பான தசை மேற்கொள்கிறன.
    • இரசாயன சமிபாடு :  சிக்கலான உணவுக் கூறுகள் எளிய அகத்துறிஞ்சக்கூடிய நிலைக்கு மாற்றப்படும் சமிபாடு. அதாவது, இரசாயன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சமிபாடு. இதனை நொதியங்கள் மேற்கொள்கிறன.
  •  அகத்துறிஞ்சல் : எளிய உணவுப் பதார்த்தம் உணவுக் கால்வாயின் உள்ளிடத்திலிருந்து கலங்களுக்கு எடுக்கப்படும் செயன்முறை ஆகும்.
  • தன்மயமாக்கல் : கலங்களுக்குள் எடுக்கப்பட்ட எளிய உணவுக் கூறுகள் கல அனுசேபத்திற்கு பயன்படுத்தலாகும்.
  •  நீக்கல் / (மல நீக்கல்) : அகத்துறிஞ்சப்பட முடியாத மீதி உணவுப் பொருள் உணவுக் கால்வாய் / விலங்கிலிருந்து சூழலுக்கு வெளிய கற்றப்படும் செயன்முறையாகும்.
  • உள்ளெடுத்தல், சமிபாடு, அகத்துறிஞ்சல், தன்மயமாதல், நீக்கல் ஆகிய படிகளுக்கூடாக நிகழும் போசணை விலங்குமுறை போசணை எனப்படும்.
  • மேற்கூறிய போசணை முறைகளுக்கு மேலதிகமாக தாவரங்களில் ஒரு விசேட வகையான போசணைமுறை பூச்சியுண்ணும் போசணை முறையாக காணப்படுகிறது.
  • சில தாவரங்கள் தமது நைதரசன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள சில சிறந்தலடைந்த கட்டமைப்புக்களை உருவாக்கி பூச்சிகளை பிடித்து நொதியத்தை சுரந்து சமிபாடடையச் செய்து அமினோவமிலத்தை அகத்துறிஞ்சி போசணையை மேற்கொள்கிறது. இவை உயிர்ப்பாகவோ உயிர்ப்பற்றதாகவோ பூச்சிகளை சிறைப்பிடிக்கும்.
  • இத்தாவரங்கள் N பற்றாக்குறையான சதுப்பு நிலங்களில் வாழ்வதால் இவ் விசேட போசணை முறையை காண்பிக்கின்றன.
  • பூச்சியுண்ணும் தாவரங்கள் ஒளித்தற்போசணிகளாகும்.
    (உ+ம்) :  Nepenthes,  Drosera,  Utricularia
RATE CONTENT 0, 0
QBANK (14 QUESTIONS)

சேதனக் காபன் முதலிருந்து காபனையும் சத்தியையும் பெறும் அங்கிகள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3956
Hide Comments(0)

Leave a Reply

கீழே தரப்பட்டுள்ள உண்ணல் முறைகளில் ஒன்று அதற்கு எதிரே கூறப்பட்டுள்ள விலங்குக் கூட்டத்திற்கு ஒத்தது அல்ல. இவ்வுண்ணல் முறையைத் தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 4111
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க் காணப்படும் தாவரங்களுள் தாவரவொட்டி எது?

Review Topic
QID: 4114
Hide Comments(0)

Leave a Reply

ஒன்றியவாழி ஈட்டம் எனக் கருதப்பட முடியாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4115
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதனை ஒன்றுக்கொன்று துணையான தன்மைக்கு உதாரணமாகக் கருதமுடியாது?

Review Topic
QID: 4136
Hide Comments(0)

Leave a Reply

பூச்சியுண்ணும் தாவரங்கள் தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறானது எது?

Review Topic
QID: 4152
Hide Comments(0)

Leave a Reply

சேதனக் காபன் முதலிருந்து காபனையும் சத்தியையும் பெறும் அங்கிகள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3956

கீழே தரப்பட்டுள்ள உண்ணல் முறைகளில் ஒன்று அதற்கு எதிரே கூறப்பட்டுள்ள விலங்குக் கூட்டத்திற்கு ஒத்தது அல்ல. இவ்வுண்ணல் முறையைத் தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 4111

கீழ்க் காணப்படும் தாவரங்களுள் தாவரவொட்டி எது?

Review Topic
QID: 4114

ஒன்றியவாழி ஈட்டம் எனக் கருதப்பட முடியாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4115

பின்வருவனவற்றுள் எதனை ஒன்றுக்கொன்று துணையான தன்மைக்கு உதாரணமாகக் கருதமுடியாது?

Review Topic
QID: 4136

பூச்சியுண்ணும் தாவரங்கள் தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறானது எது?

Review Topic
QID: 4152
Comments Hide Comments(1)
Thano Thajee
Thano Thajee commented at 14:45 pm on 23/04/2018
Thank you
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank