இலிப்பிட்டு, Steroid, காபோவைதரேற்றுகளைத் தொகுத்து கொண்டுசெல்லல் புடகங்களினூடாக கலத்தினுள் கடத்துதல்.
தசைக் கலங்களில் கல்சியத்தை சேமித்தல்.
ஈரல் கலங்களில் அற்ககோல், மருந்துகள், நச்சுப்பொருட்களை உடைத்து நச்சு நீக்கல்.
கொல்கிப் புடகங்களை உருவாக்குதல்
கலத்திற்கு ஆதாரம் அளித்தல்.
கொல்கிச்சிக்கல் / கொல்கி உபகரணம்
இயூகரியோற்றா கலத்தில் கரு / ER ற்கு அண்மையில் காணப்படும் கலப்புன்னங்கங்கள் ஆகும்.
அமைப்பு : தனியலகு / ஒற்றையலகு மென்சவ்வால் ஆக்கப்பட்ட ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தட்டையான நீண்ட பைகள் / புடகங்களால் ஆக்கப்பட்டது. எனவே, உள்ளிடத்தைக் கொண்டது.
தட்டையான புடகம் ER இலிருந்து உருவாக்கப்படும் புடகங்களினால் உருவாக்கப்பட்டது.
கொல்கியின் தட்டைப்புடகம் இரு மேற்பரப்புகளைக் கொண்டது.
Cis மேற்பரப்பு : குவிவானது
ER இன் புடகங்கள் இணையும் மேற்பரப்பு
Trans மேற்பரப்பு : குழிவானது
இம்மேற்பரப்பிலிருந்து புடகங்கள் வெட்டப்படும்.
இதுவும் ஒரு மென்சவ்வு தொகுதியாகும்.
தொழில்கள்
RER,SER ஆல் உருவாக்கப்பட்ட புரதம், இலிப்பிட்டுகளை காபோவைதரேற்றுடன் இணைத்து கிளைக்கோ புரதம், கிளைகோ இலிப்பிட்டு ஆக்கல்.
கலத்தினுள் பதார்த்தங்களைச் சேகரித்துப் பொதி செய்து கலத்தினுள் விநியோகிக்கல் (புடகத்தின் மூலம்)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்