கருவுற்றிருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள்
கர்ப்பமுறுதலுடன் தொடர்பான சில ஓமோன் மாற்றங்களினால் பின்வரும் அறிகுறிகள் ஏற்படும்.
1. மாதவிடாய் நிறுத்தப்படல்
2. Morning sickness- வாந்தி
தலைச்சுற்று
அருவெறுப்பு
3. சில உணவுப் பொருட்களுக்கு அவா கொள்ளுதல் சில உணவுப் பொருள்களை வெறுத்தல்
4. முலைகள் மிருதுவாதல்.
5. கருதியில் 10 நாட்களின் பின்னரும் சிறுநீரில் 14 நாட்களில் பின்னரும் hcG காணப்படுதல்.
6. அடிக்கடி சிறுநீர்கழித்தல்
7. முலையின் சிற்றிடப் பிரதேசத்தில் நிறமாற்றம் ஏற்றப்படும் (சிலரில்)
8. மலச்சிக்கல் ஏற்படும் (சிலரில்)
கருவுற்று இருப்பதை இனங்காணும் சோதனைகள்
பிரதானமாக சிறுநீரிலும் குருதியிலும் hcG உள்ளதை இனங்காணும் சோதனையை அடிப்படையாகக் கொண்டது.
hcG இன் செறிவு கருவுற்ற பெண்ணின் குருதியில் கூடும். இது 10 நாட்களின் பின் குருதியில் காணப்படும். 14 நாட்களின் பின் சிறுநீரில் வெளியேற்றப்படும்.
முதல் 3 மாதங்களில் hcG கூடுதலாக இருந்து பின்னர் குறைவடையும்.
குடும்பத் திட்டமிடல்
இயற்கை வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும் காணப்படும். வளங்களின் நீடித்து நிலைபெறும் பயன்பாட்டுக்காக வும் மனித குடும்பத்தின் பருமன் எல்லைப்படுத்தப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.
மேலும் பெற்றோரின் பொருளாதார நிலை குறித்து குடும்ப பருமன் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளத ழுசு பிள்ளைப் பேற்றை தாமதப்படுத்தல் வேண்டும்.
இதற்காக பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகள்
தேவையற்ற கருத்தரிப்புக்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளால் தவிர்க்கப்படுகின்றன.
1. வாய்க்குரிய கருத்தடை மாத்திரைகள் – பெண்களுக்குரியது.
பிரதானமாக Oestragen,Progestron ஆகிய ஓமோன்களை உயர் செறிவில் கொண்டிருக்கும். இதனால் புடைப்பு முதிர்ச்சியடைதல் உட்பதித்தல் என்பன தடுக்கப்படும் எதிர்ப்பின்னூட்டலால்FSH,LH ஓமோன்கள் சுரத்தல் நிரோதிக்கப்படும். கழுத்து சீதமுளி தடிப்படையும்.
(உ – ம்)Oralpill,MiniIpil (Progestron ஐ மட்டும் கொண்டது)
2. condom- ஆண்களுக்குரியது
இது ஆண்களில் பயன்படுத்தப்படும். இது விந்து உட்செல்வதை தடுக்கும்.
3. IUD(தடம்/ loop)
IUD- intra uterine Device
பெண்களில் பயன்படும். இது உட்பதித்தலை தடுக்கும். அழற்சி தாக்கத்தை இது ஏற்படுத்தும்.
4.Depo provera
இது பெண்களில் பயன்படுத்தப்படும். கருப்பைக் கழுத்து சீதமுளிப்படை தடிப்படைவதால் விந்து உட்செல்லல் தடுக்கப்படும். கருப்பை அகத்தோலை மெல்லியாக்குவதன் மூலம் முளையம் உட்பதிக்கப்படுவது தடுக்கப்படும்.
மேற்படி முறைகள் யாவும் ஓர் தற்காலிகமான செயன்முறைகள் ஆகும்.
5. Vasectomy
இது ஆண்களில் பயன்படுத்தப்படும். அப்பாற்செலுத்திகள் இரண்டும் வெட்டப்பட்டு அதன் இரு முளைகளும் இழையினால் கட்டப்படும். இதன் மூலம் விந்து வெளியாதல் தடுக்கப்படும். இது ஆண்களுக்குரிய நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு முறையாகும்.
6. சிறுகுழாய் இழையிடல் (tubal ligation )
இது பெண்களில் பயன்படுத்தப்படும். பலோப்பியன் குழாய்கள் இரண்டும் வெட்டப்பட்டு அவற்றின் முனைகள் இழை யினால் கட்டப்படும். இதனால் சூல் கருப்பையை அடைவது தடுக்கப்படும். இது பெண்களுக்குரிய நிரந்தர கட்டுப் பாட்டு முறையாகும்.
1. கொனோரியாGonorrhoea
2. சிபிலிஸ் (Treponema pallidum)
3. எயிட்ஸ் (யுஐனுளு) ஃ பெற்ற நிர்ப்பீடனக் குறைப்பாட்டு நோய்
4. சனனிக்குரிய கேர்ப்பிஸ் (புநnவையட hநசிநள)
கொனோரியா
நோயாக்கி : நேளைளநசயை பழழெசசாழநய
கடத்தப்படும் முறைகள் : 1. புணர்தலின் போது
2. பிறக்கும்போது தாயிலிருந்து குழந்தைக்கு
பிரதான நோய் அறிகுறிகள் :
1. ஆண்களில் சிறுநீர் கழித்தலின் போது எரிவும் அசௌகரியமும்.
2. நிறுநீர் சனனிக்கானிலிருந்து சீலுடன் கூடிய மஞ்சள் நிறமான வெளியேற்றம்.
3. காய்ச்சல்ää தலைவலி
4. பெண்களில் பலோப்பியன் குழாய் சீலினால் நிரப்பப்பட்டிருக்கும்.
5. மலட்டுத் தன்மை
சிபிலிஸ்
நோயாக்கி : வுசநிழநெஅய pயடடனைரஅ
கடத்தப்படும் பிரதான முறைகள் : 1. புணர்தலின் போது
2. பிறக்கும்போது தாயிலிருந்து குழந்தைக்கு
பிரதான நோய் அறிகுறிகள் :
1. உடலில் ஏதாவதொரு பாகங்களில் கொப்புழங்கள் { நோவற்ற புண் புண் காணப்படுதல். (யோணிமடல் உதடு விரல் முலைக்காம்பு).
2. காய்ச்சல்
3. தோலில் அரிப்பு
4. பெண்களில் பலோப்பியன் குழாய் சீலினால் நிரப்பப்பட்டிருக்கும்.
5. மலட்டுத் தன்மை
எயிட்ஸ்
நோயாக்கி : மனித நிர்ப்பீடனக் குறைப்பாட்டு வைரஸ் (HIV) (Human ImmuneDefeciency)
கடத்தப்படும் முறைகள் : 1. புணர்தலின் போது
2. பிறக்கும்போது தாயிலிருந்து குழந்தைக்கு
3. பாலுட்டலின் போதும் தாயிலிருந்து குழந்தைக்கு கடத்தப்படும்
4. உடல் பாய்பொருளில் (Blood) குறுக்குப்பாய்ச்சலின் போது
5. கிருமியழிக்கப்படாத ஊசிகளின் பயன்பாடு
6. கர்ப்ப காலத்தில் தாயிலிருந்து முதிர்மூலவுருக்கு (சூல் வித்தகத்தினூடாக)
பிரதான நோய் அறிகுறிகள் :
1. நிறை குறைவு
2. பசியின்மை
3. காய்ச்சல்
4. தொடர்ச்சியான உலர் இறுமல்
5. இலிம்போமா (Lymphoma) (நிணநீர் தொகுதியுடன் தொடர்பான நோய்)
6. நிர்ப்பீடனக் குறைப்பாட்டால் ஏற்படும் சுவாசப்பை அழற்சி நோய்கள் ஏற்படல்
சனனிக்குரிய ஹேர்ப்பிஸ்
நோயாக்கி :Herpes simplex virus
கடத்தப்படும் முறைகள் : புணர்தலின் போது
பிரதான நோய் அறிகுறிகள் :
1. இலிங்க அங்கங்களைச் சூழ நோவுடன் கூடிய அரிக்கும் கொப்புளங்கள் தோன்றல்
2. சிலரில் காய்ச்சல் தோன்றல்
Thank you for your comment.
மிகவும் நன்று