விலங்கு இராச்சியத்தின் சுவாசக் கட்டமைப்புகளின் பல்வகைமை
புறச் சூழலுடன் சுவாச வாயுக்களான O2, CO2 என்பவற்றை பரிமாற்றம் அடையச் செய்யும் உடற்பரப்பு சுவாச மேற்பரப்பு எனப்படும்.சுவாச மேற்பரப்பினூடாக வாயுக்கள் பரவல் முறையில் பரிமாற்றம் அடைகின்றன.
வாயுப் பரிமாற்றம் வினைத்திறனாக நடைபெறுவதற்காக சுவாச மேற்பரப்பு கொண்டிருக்கும் சிறப்பியல்புகள்.
சிறிய விலங்குகளில் உடற்பருமன் சிறிதாகவும் அவற்றின் சக்தித் தேவை குறைவாகவும் இருப்பதால் உடல் மேற்பரப்பினூடாக நிகழும் வாயுப் பரிமாற்றம் போதுமானது.
பெரிய விலங்குகளில் உடற்சிக்கல் தன்மை அதிகரிக் கின்றது. சக்தித் தேவை அதிகரிக்கின்றது. இதனால் உடல் மேற்பரப்பு / கனவளவு விகிதம் குறைகின்றது. எனவே போதியளவு வாயுப்பரிமாற்ற மேற்பரப்புடைய விசேட சுவாசக் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன.
விலங்குகளில் காணப்படும் வெவ்வேறு வகையான சுவாசக் கட்டமைப்புக்கள்
விலங்குக் கூட்டம் | சுவாசக் கட்டமைப்பு |
---|---|
புரோட்டோசோவன்கள் | உடல் மேற்பரப்பு |
Cnidaria | உடல் மேற்பரப்பு |
Platyhelminthes | உடல் மேற்பரப்பு |
Nematoda | உடல் மேற்பரப்பு |
Annelida | உடல் மேற்பரப்பு, வெளிப்பூக்கள் |
Mollusca | வெளிப்பூக்கள், உட்பூக்கள், மென்மூடி, மென்மூடிக் குழியிலுள்ள சீப்புரு |
Arthropoda | உட்பூக்கள், ஏட்டு நுரையீரல், வாதனாளித் தொகுதி, உடல் மேற்பரப்பு |
Echinodermata | குழாய்ப்பாதம், பூக்கள், சிம்பி,கழியறைக்குரிய சுவாச மரங்கள் |
chordata | வெளிப்பூக்கள் – Amphibia களின் வாற்பேய்
உட்பூக்கள் – Amphibia களின் வாற்பேய், மீன்கள் வாய்க்குழி சீதமென்சவ்வு – Amphibia தோல் – Amphibia நுரையீரல் – Amphibia,Reptilia, Aves, Mammalia |
விசேட சுவாச மேற்பரப்புகள்
வெளிப்பூக்கள்
உடல் மேற்பரப்பின் வெளி வளர்ச்சியாக வெளிப்பூக்கள் உருவாக்கப்படுகிறது.
இவற்றுக்கு உடலில் இருந்து குருதி வழங்கல் மேற்கொள்ளப்படுகிறது.
உதாரணம் : Arenicola போன்ற Annelida களில் Crustacea களில்
உட்பூக்கள்
உடலின் வெளி வளர்ச்சியாக குருதி வழங்கலுடன் உருவாக்கப்பட்டு பின்பு உடல் மேற்றோலினால் மூடப்படும் கட்டமைப்பு உட்பூ எனப்படும்.
உதாரணம் : என்பு மீன், சிங்க இறால்
வாதனாளித் தொகுதி
குருதி தரவற்ற வாதனாளி, புன்வாதனாளியைக் கொண்ட கட்டமைப்பு வாதனாளித் தொகுதி எனப்படும்.
வாதனாளிகள் சுவாசத் துவாரங்கள் வழியாகத் திறக்கின்றன.
வாதனாளிகள் கிளைத்த குழாயுருவான அமைப்புகள், வளைய வடிவமான கைற்றின் படிவுகளால் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.
வாதனாளிகள் கிளைத்து புன்வாதனாளியாகி இழையங்களை ஊடுருவிக் காணப்படுகின்றன. இதனூடாக வளி நேரடியாக உடற்கலங்களிற்கு வழங்கப்படுகிறது.
உதாரணம் : Insecta, Chilopoda களான மட்டத்தேள், Diplopoda களான அட்டைகள், சில Arachinida களில்
ஏட்டு நுரையீரல்
குருதிக் கலன்களுடன் 15 – 20 வரையான மெல்லிய தட் டுக்கள் போன்ற கட்டமைப்பு ஏட்டு நுரையீரல் எனப்படும்.
உதாரணம் : சிலந்திகள், தேள்கள் போன்ற Arachinida களில்
விலங்குகளிடையே காணப்படும் சில சுவாசக் கட்டமைப்புக்களும் இக்கட்டமைப்புக்களையுடைய விலங்குகள் அடங்கும் கணங்களும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் சுவாசக் கட்டமைப்பு – கணம் சேர்க்கைகளுள் தவறான சேர்க்கை எது?
சுவாசக் கட்டமைப்பு – கணம்
விலங்கு இராச்சியத்தில் காணப்படும் சுவாசக் கட்டமைப்புகள் சில பின்வருவனவாகும்.
A – நுரையீரல்கள்
B – ஏட்டுநுரையீரல்கள்
C – வாதநாளி
D – உட்பூக்கள்
E – வெளிப்பூக்கள்
F– உடற்போர்வை
முள்ளந்தண்டு விலங்குகளினால் சுவாச வாயுபரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுபவை மேற்குறிப்பிட்டவைகளுள் எது / எவை ?
விலங்குகளிடையே காணப்படும் சில சுவாசக் கட்டமைப்புக்களும் இக்கட்டமைப்புக்களையுடைய விலங்குகள் அடங்கும் கணங்களும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் சுவாசக் கட்டமைப்பு – கணம் சேர்க்கைகளுள் தவறான சேர்க்கை எது?
சுவாசக் கட்டமைப்பு – கணம்
விலங்கு இராச்சியத்தில் காணப்படும் சுவாசக் கட்டமைப்புகள் சில பின்வருவனவாகும்.
A – நுரையீரல்கள்
B – ஏட்டுநுரையீரல்கள்
C – வாதநாளி
D – உட்பூக்கள்
E – வெளிப்பூக்கள்
F– உடற்போர்வை
முள்ளந்தண்டு விலங்குகளினால் சுவாச வாயுபரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுபவை மேற்குறிப்பிட்டவைகளுள் எது / எவை ?