விலங்குகளின் அகத்தே அல்லது புறத்தே காணப்படுவதும் அவற்றின் அசைவு, ஆதாரம், பாதுகாப்பில் உதவுவதுமான உறுதியான உயிருள்ள / உயிரற்ற கட்டமைப்பு வன்கூடு எனப்படும்.
வன்கூட்டில் 3 பிரதான வகைகளுண்டு. 

எதிர் இயக்கத்தை காண்பிக்கும் நீள்பக்கத்தசை, வட்டத்தசை என இரு தசைப்படைகளாலான உடற்சுவரினால் உடலினுள் சுரக்கப்பட்ட பாயி அடைக்கப்பட்டிருக்கும். தசைகளின் சுரக்கத்தினதும் பாயியின் அமுக்கத்தினதும் இணைந்த விளைவு இடப்பெயர்ச்சியிலும் உடலின் வடிவமும் தோற்றமும் பேணப்படுவதிலும் உதவும்.
ஆத்திரபோடாக்களில் காணப்படும். இது கைற்றினை கொண்டது. (N கொண்ட பல்சக்கரைட்டு). கல ஒழுங்கற்ற பதார்த்தங்களினாலானது. இப்புறவன்கூடு பூச்சிகளில் புரதத்தாலும் Crustacea களில் CaCO3 இனாலும் வன்மையாக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் பொருட்டு நெகிழ்தகவுடைய மூட்டு மென்சவ்வுகள் காணப்படும். உலர்தலை தடுப்பதற்காக வெளிப்புறமாக மெழுகுப்படை காணப்படும். வளர்ச்சி ஏற்பட வேண்டிய போது கவசம் கழற்றல் நடைபெறும். தசைகள் பொருந்துவதற்கான முளைகளை கொண்டிருக்கும். சிறிய விலங்குகளின் ஆதாரம், இடப்பெயர்ச்சி என்பவற்றில் வினைத்திறனாக அமையும்.

– தனிக்கலவிலங்குஅகவன்கூடுகள் விறைப்பானவை உடலின் உட்புறமாக காணப்படுபவை. இவற்றுக்கு தசைகள் இணைக்கப்படும். என்பு, கசியிழையம் போன்ற உயிருள்ள இழையங்களால் ஆனவை. விலங்கின் வளர்ச்சியுடன் சேர்ந்து விலங்கினுள் தொடர்ந்து வளர்ந்து செல்பவை.
இணையங்களால் ஒன்றுடனொன்று தொடுக்கப்பட்ட என்புகள் தம்மிடையே மூட்டுக்களை உருவாக்குகின்றன. பல விலங்குகளின் ஆதாரத்தொகுதியாக அகவன்கூடு காணப்படுகின்றது.
வன்கூட்டுத் தொகுதியின் தொழில்கள்
அசைவு :
வன்கூடு விறைப்பான பதார்த்தங்களினாலானது. உடலில் தசை பொருந்தும் தானங்களை வழங்குகின்றது. வன்கூட்டின் பாகங்கள் நெம்புகளாக தொழிற்படுவதன் மூலம் தசைகள் இழுபடக் கூடியவையாக இருக்கின்றன. இதன் மூலம் அசைவு நடைபெறும்.
ஆதாரம் :
சகல வன்கூடுகளும் உடலுக்கு விறைப்பான கட்டமைப்பை வழங்குகின்றன. நெருக்கங்கள்,இழுவை விசைகள், தகைப்புக்கள் போன்றவற்றை எதிர்க்கின்றன. உடலின் வடிவத்தை பேணுவதில் உதவுகின்றன.
பாதுகாப்பு :
உடலின் உள்ளேயுள்ள மென்மையான அங்கங்களை பாதுகாக்கின்றன.
சேமிப்பு :
குருதிக்கலங்களின் ஆக்கம் :
என்பு மச்சையில் நடைபெறும்.
மனிதனை மற்றைய எல்லா முளையூட்டிகளிலிருந்தும் வேறுபடுத்தி இனங்காண உதவும் அம்சம்,
மனிதனை மற்றைய எல்லா முளையூட்டிகளிலிருந்தும் வேறுபடுத்தி இனங்காண உதவும் அம்சம்,
