வகையான முள்ளந்தண்டென்பாக நாரி முள்ளென்பு கருதப்படுகின்றது.
ஏனெனில் இதில் முள்ளென்புக்குரிய சகல பாகங்களும் விருத்தியடைந்துள்ளன.
ஒவ்வொரு முள்ளென்பும் 2 பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளன.
மையத்தி / உடல்
இது முள்ளென்பின் முற்பகுதியாகும். இதன் பருமன் முள்ளந்தண்டுக் கம்பத்தில் முள்ளென்பு அமைந்துள்ள பிரதேசத் தின் அடிப்படையில் வேறுபடும். கழுத்துப் பகுதியில் மையத்தின் மிகவும் சிறியதாகவும் தொடர்ந்து நாரி வரை செல்லும் போது மையத்திகளின் பருமன் அதிகரித்துச் செல்லும்.
மையத்தி தின்னமானது என்பலானது உருளைவடிவானது. இதன் மேல் கீழ் பரப்புக்கள் தட்டையானவை. அழுத்தமற்றவை.
தொழில் : மையத்தி; உடல் நிறையை தாங்கும் கோலை உருவாகின்றது.
நரம்புவில் / முள்ளென்புவில்
மையத்திலிருந்து பின்புறமாக (முதுகுப்புறம்) என்பாலான நரம்புவில் உருவாக்கப்பட்டுள்ளது. நரம்புவில்லால் உள் ளடக்கப்படும் வெளி நரம்புக் கால்வாய் அல்லது முள்ளென்புக்குடையம் எனலாம். இக்குடையத்தின் பக்கப்புற, பின்புற சுவராக நரம்புவில் அமைகின்றது. நரம்பு வில்லின் பக்கச்சுவர் சிற்றடி எனவும் பின்புறச்சுவர் தகடு எனவும் அழைக்கப் படும். சிற்றடி தடித்தது குறுகியது. தகடு தட்டையானது.
நரம்பு வில்லிலிருந்து வெளி நீட்டங்களாக என்பாலான 7 முளைகள் உண்டு.
1. குறுக்கு முளைகள் – 02
2. நரம்பு முள் – 01
3. மேல் கீழ் மூட்டுமுளைகள் – 04
நரம்பு வில்லின் சிற்றடி,தகடு சந்திக்கும் இடத்திலிருந்து பக்கப் புறமாக வெளிநீட்டப்பட்ட என்பாலான முளைகளாக ”குறுக்கு முளைகள்” (2) உண்டு. இவை தசை பொருந்தும் மேற்பரப்பை வழங்கும்.
நரம்பு வில்லின் பின்புறம் நடுக்கோட்டுக்குரியதாக இரு தகடுகளும் சந்திக்கும் இடத்திலிருந்து வெளி நீட்டப்பட்ட என்பாலான முளையாக “நரம்புமுள்” (1) உண்டு. இது தசை பொருந்தும் பரப்பை வழங்கும்.
நரம்புவில்லில் 4 மூட்டுமுளைகள் / மூட்டுப்பரப்புகள் உண்டு.
1. மேல்மூட்டுமுளைகள் – 02
2. கீழ் மூட்டு முளைகள் – 02
நரம்பு வில்லின் மேற்பரப்பிலிருந்து மேல்நோக்கி நீட்டப்பட்ட என்பலான முளைகளாக 2 மேல் மூட்டுமுளைகளை காணப்படும். வில்லின் கீழ்பரப்பிலிருந்து கீழ் நோக்கி நீட்டப்பட்ட என்பாலான முளைகளாக 2 கீழ் மூட்டுமுளைளை காணப்படும். இம் மேல்,கீழ் மூட்டுமுளைகள் அடுத்துள்ள முள்ளென்புகளுடன் மூட்டுக்கொள்ளும் பரப்பை கொண்டுள்ளன. இவ்வாறு மூட்டுக்கொள்வதன் மூலம் முள்ளென்புகள் விலகிச் செல்லல் தடுக்கப்படும்.
முள்ளென்புக் குடையங்கள் ஒன்றாகச் சேர்ந்து நரம்புக் கால்வாய் / முள்ளென்புக் கால்வாயை தோற்றுவிக்கும்.
கனவுரு வடிவான மிகச் சிறிய மையத்தி / உடல் உண்டு. இரண்டு குறுகிய குறுக்கு முளைகளுண்டு. ஒவ்வொரு குறுக்குமுளையின் அடியிலும் முள்ளென்பு நாடிக்கான குறுக்குக்குடையம் காணலாம். (முள்ளென்பு நாடிக் கால்வாய்). இது (சகல) முலையூட்டிக்குமுரிய இயல்பாகும்.
பெரும்பாலான கழுத்து முள்ளென்புகளில் (2 – 6 வரை) இரண்டு கவர் கொண்ட ஒரு நரம்புமுள் காணப்படும். இது பின்நோக்கி நீட்டப்பட்டுள்ளது.
பெரிய நரம்புக் கால்வாய் / முள்ளென்புக்குடையம் காணப்படும் . இது தடித்த முண்ணானை உள்ளடக்குகின்றது.
மேல், கீழ் மூட்டுப்பரப்புக்கள் உண்டு. மேல் மூட்டுப்பரப்பு மேல் நோக்கியும் பின்நோக்கியும் காணப்படும். கீழ் மூட்டுப்பரப்பு கீழ்நோக்கியும் முன்னோக்கியும் காணலாம்.
இது 2வது கழுத்து முள்ளெண்பாகும்.
முதலான வளைவுகள்
துணையான வளைவுகள்
உடலின் நிமிர்ந்த தோற்ற அமைவுக்கு பங்களிப்புச் செய்யும் மனித முள்ளந்தண்டில் காணப்படும் இயல்புகள்
மனித முள்ளந்தண்டிலுள்ள முலையூட்டிக்கான சிறப்பியல்புகள்
முள்ளந்தண்டுக் கம்பத்திற்குரிய அசைவுகள்
மனிதனின் நிமிர்ந்த நிலைக்கு மனிதனின் வன்கூட்டுத் தொகுதியின் சிறப்பியல்புகளுள் முக்கியமானது /
முக்கியமானவை பின்வருவனவற்றுள் எது / எவை?
மனிதனில் நெஞ்சறைக்குரிய முள்ளந்தண்டென்பு ஏனைய முள்ளந்தண்டென்புகளிலிருந்து வேறு பிரித்தறியக்
கூடியதாக இருப்பது
மனிதனில் நன்கு விருத்தியடைந்த மையத்தி, நீண்ட நரம்புமுள், நீண்ட குறுக்குமுளைகள் என்பன காணப்படக் கூடியதாக இருப்பது,
Review Topicமனிதனின் நிமிர்ந்த நிலைக்கு மனிதனின் வன்கூட்டுத் தொகுதியின் சிறப்பியல்புகளுள் முக்கியமானது /
முக்கியமானவை பின்வருவனவற்றுள் எது / எவை?
மனிதனில் நெஞ்சறைக்குரிய முள்ளந்தண்டென்பு ஏனைய முள்ளந்தண்டென்புகளிலிருந்து வேறு பிரித்தறியக்
கூடியதாக இருப்பது
மனிதனில் நன்கு விருத்தியடைந்த மையத்தி, நீண்ட நரம்புமுள், நீண்ட குறுக்குமுளைகள் என்பன காணப்படக் கூடியதாக இருப்பது,
Review Topic