Please Login to view full dashboard.

மனித மூளை

Author : Admin

15  
Topic updated on 02/14/2019 10:30am

மனித மூளையானது  பின்வரும் கட்டமைப்புகளால் பாதுகாக்கப்படும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question  
1. மண்டையோடு
2. சருமம்
3. மூளைய முண்ணான் பாய்பொருள்

மூளையின் விருத்தி
  • மனிதனின் மைய நரம்பு தொகுதியான மூளை, முண்ணான் முளைய நிலையில் காணப்படும். Please Login to view the Question 
  • புறத்தோற்படையிலிருந்து உருவாக்கப்பட்ட நரம்பு நாணிலிருந்து விருத்தியடைகிறது.
  • விருத்தியின் போது நரம்பு நாணின் முற்பகுதி வியாபித்து முதல் மூளை புடகத்தை உருவாக்குகிறது. இப்பகுதி மூளை யாகவும் பிற்பகுதி முண்ணானாகவும் விருத்தியடைகிறது.
  • விருத்தியின் போது முதல் மூளைப்புடகம் மேலும் 3 புடகங்களை உருவாக்கும்.
    1. முன்மூளை
    2. நடுமூளை
    3. பின்மூளை
  • முன்மூளை மேலும் பெரிய ஒரு புடகமாகவும் சிறிய ஒரு புடகமாகவும் விருத்தியடையும்.
    பெரிய புடகம் – ஈற்று மூளை.
    சிறிய புடகம் – ஏந்தி / துவி மூளை
  • ஈற்று மூளையிலிருந்து மூளையம்;  ஏந்தி மூளையிலிருந்து பரிவகம் (ஏந்தி), பரிவகக்கீழ்;  நடுமூளையிலிருந்து நடுமூளை;  பின் மூளையிலிருந்து வரோலியின் பாலம், மூளி, நீள்வளைய மையவிழையம்  என்பன உருவாக்கப்படும்.
  • எனவே விருத்தியின் இறுதியில் மனிதனின் மூளை மூளையம், பரிவகம் (ஏந்தி), பரிவகக்கீழ், நடுமூளை, வரோலியின் பாலம், நீள்வளைய மையவிழையம், மூளி ஆகிய பகுதிகளை கொண்டிருக்கும்.
மனித மூளையின் பிரதான பகுதிகள்

pic 3 மூளையம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question   

  • மனித மூளையின் மிகப்பெரிய பகுதி மூளையமாகும்.
  • ஒரு ஆழமான நீள்பக்க பிளவினால் வலது, இடது மூளை அரைக் கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆரைகோளமும் மூளைய அறைகளை கொண்டிருக்கும்.
  • ஒவ்வொரு மூளைய அரைக்கோளத்தினுள்ளும் மூளைய முண்ணான் பாய்பொருளை கொண்ட அறைகள் காணப்படும்.
  • இவை பக்க மூளைய அறைகள் / 1ஆம் 2ஆம் மூளையறைகள் / வலது இடது மூளைய அறைகள் என அழைக்கப்படும்.
  • இவ் வலது இடது மூளைய அறைக்கோளங்கள் ஆழமான உட்பகுதியில் நரம்பு நார் கட்டொன்றினால் இணைக்கப்பட்டு காணப்படும். இக் கட்டு வன்சடலம் எனப்படும்.
  • மூளையத்தின் சுற்றயல் பகுதி / வெளிப்புறமான பகுதி மூளைய மேற்பட்டை எனப்படும். இது நரம்பு கலவுடல்களால் ஆக்கப்பட்டது. எனவே நரை சடப்பொருளாலானது.
  • மூளையத்தின் ஆழமான / உட்புற பகுதி மூளைய மையவிழையம் எனப்படும். இது நரம்பு நார்களினாலானது. எனவே வெண்சடப்பொருளால் ஆக்கப்பட்டது.
  • மூளைய மேற்பட்டை பல உள் நோக்கிய மடிப்புகளைக் கொண்டது. இம் மடிப்புகள் ஆழத்தில் வேறுபட்டவை. மிக ஆழமான மடிப்புகள் சால் / பிளவு எனப்படும்.
  • பிளவு / சாலினால் ஒவ்வொரு மூளைய அரைக்கோளமும் 4 சோணைகளாக பிரிக்கப்படுகிறது.
    1. நுதற் சோணை                                                                                               2. சுவர் சோணை
    3. கடைநுதற் சோணை                                                                                   4. பிடர் சோணை
  • சோணைகளின் எல்லைகள் ஆழமான சால்களினால் எல்லைபடுத்தப்பட்டடிருக்கும். எனவே மூளையம் மொத்தமாக 8 சோணைகள் உடையது.
  • மையச் சாலின் மூலம் நுதற் சோணை, சுவர் சோணை பிரிக்கப்படுகின்றன.
  • பக்கச்சாலின் மூலம் கடை நுதற் சோணை பிரிக்கப்படுகிறது.
  • சுவர் பிடர் சாலின் மூலம் பிடர் சோணை பிரிக்கப்படுகிறது.
  • மூளையின் மேற்பட்டை மடிப்புகளால் மேற்பரப்பு கூட்டப்படுகிறது. மடிப்புகளுக்கிடைப்பட்ட பிரதேசம் / பரப்பு சுழிப்பு எனப்படும்.
  • மூளைய மேற்பட்டையின் பகுதிகள் சிறத்தலடைந்து தொழிற்பாட்டு பரப்புகளாக காணப்படுகின்றன.  அவை 3 வகைப்படும்.
    • புலன் பரப்பு – புலன் வாங்கிகளில் இருந்து புலனுக்குரிய தூண்டலை பெற்றுக்கொள்ளல்.
    • ஒருங்கிணைப்பு பிரதேசம் (ஈட்டப் பரப்பு) – புலன் பரப்பால் வாங்கப்பட்ட ஒருங்கிணைப்பு தூண்டலை தரம் பிரித்தலும் சேமித்தலும் இயக்க பரப்பிற்கு ஒன்றிணைத்தல்.
    • இயக்கப் பரப்பு – தூண்டற் பேறுக்குரிய நரம்பு கணத்தாக்கத்தை விளைவு காட்டிக்கு அனுப்புதல்.
 தொழிற்பாட்டு பரப்பு அமைந்துள்ள சோணை  தொழில் 
 உடல் இயக்க பரப்பு (இயக்க பரப்பு)  நுதற் சோணை  வன்கூட்டுத் தசையின் சுருக்கத்தை ஆரம்பித்தல்
 முன்னியக்க பரப்பு (இயக்க பரப்பு)  நுதற் சோணை  வன்கூட்டுத் தசைகளின் தொழிற்பாட்டை ஒருங்கிணைத்து அவற்றை ஓர் குறித்த தொடர் ஆக்குதல்
 பேச்சியக்க பரப்பு (இயக்க பரப்பு)  நுதற் சோணை  பேசுவதுடன் தொடர்பான தசைகளின் தொழிற்பாட்டை கட்டுப்படுத்துதல்
 நுதல் பரப்பு (ஈட்டப் பரப்பு)   நுதற் சோணை  நுண்ணறிவு. கற்றல், சிந்திக்கும் திறன், காரணப்படுத்தல், ஆக்கத் திறன், உணர்ச்சிகள், ஆளுமைத் தன்மை
 உடல் புலன் பரப்பு (புலன் பரப்பு)  சுவர் சோணை  தோலிலிருந்து நோ, தொடுகை, அமுக்கம், வெப்பம் என்பவற்றிற்கான தூண்டலை பெறல்
 பேச்சு புலன் (ஈட்டப் பரப்பு)  சுவர் சோணை  பேசுவதுடன் தொடர்பான ஒலி கணத்தாக்கத்தை பெறும்.
பேசுவதுடன் தொடர்பான ஒலித் தூண்டலை தரம் பிரித்து சேமிக்கும்.
 சுவை புலன் (ஈட்டப் பரப்பு)  சுவர் சோணை  சுவையுடன் தொடர்பான  கணத்தாக்கத்தை பெறுதலும் தரம் பிரித்தலும்
 கைத்திறன் பரப்பு (இயக்க பரப்பு)  சுவர் சோணை  கைத்தசைகளுக்கு  தூண்டற்பேறுக்கான செய்தி அனுப்புதல்
 பார்வை புலன் (ஈட்டப் பரப்பு)  பிடர் சோணை  விழித்திரையிலிருந்து பார்வைக்கு உரிய கணத்தாக்கத்தை
பெற்று அதனை தரம் பிரித்து சேமிக்கும்
 கேட்டல் பரப்பு (புலன், ஈட்டப் பரப்பு)  கடைநுதற் சோணை  கோட்டியின் அங்கத்திலிருந்து ஒலிக்குரிய கணத்தாக்கத்தை பெறல், அவற்றை தரம் பிரித்தலும் சேமித்தலும்,
 ஞாபகப் பரப்பு (ஈட்டப்பரப்பு)  கடைநுதற் சோணை  நீண்ட காலத்திற்கு  தகவல்களை சேமித்தல்
 மணப் பரப்பு (புலன் பரப்பு) (ஈட்டப் பரப்பு)  கடைநுதற் சோணை  நாசி மேலணியில் இருந்து மணத்திற்குரிய கணத்தாக்கத்தை பெறும். தரம் பிரித்து சேமிக்கும்.

♦ நுதற் சோணை இயக்க பரப்புடன் தொடர்பானது.
♦ சுவர் சோணை புலன் பரப்புடன் தொடர்பானது.
♦ இயக்கப்பரப்பு, புலன் பரப்புகளில் அதிகளவான பரப்பு கை / மேல் அவயவத்திற்கு வழங்கப்படுகிறது.

  • மூளையின் மையவிழையப் பகுதியில் நரம்பு நார்களும் திரட்டுகளும் காணப்படும். நரம்பு நார்களாக வன்சடலம், உள்ளுறை / அகவுறை காணப்படும்.
  • திரட்டுக்களாக அடிக்கரு, பரிவகம், பரிவகக்கீழ் காணப்படும். இவை நரம்பு கலவுடல்களால் ஆக்கப்பட்ட கட்டமைப்பு.
  • அடிக்கரு; வன்கூட்டுத் தசையின் சுருக்கத்துடன் தொடர்புடையது. எனவே உடல் அசைவுடன் தொடர்புடையது. இப்பகுதி பாதிக்கப்படின் பார்கின்சன் (Parkinson’s) இன் நோய் ஏற்படும்.
  • பரிவகம்; மூளையத்தின் அரைக் கோளங்களில் ஆழமான பகுதியில் வன்சடலத்திற்கு கீழாக பரிவகக் கீழுக்கு மேலாக 3ஆம் மூளையறைக்கு பக்கப்புறமாக உள்ளது.
  • தொழில் – புலன் தகவல்களை ஒன்று சேர்த்து மூளையின் உயர் மையங்களுக்கு அனுப்புதல் / கணத்தாக்கம் கடத்தலில் அஞ்சல் நிலையமாக தொழிற்படுதல்.
  • பரிவகக் கீழ்; முன்மூளையின் ஏந்தி மூளையில் இருந்து விருத்தியடைந்தது கபச்சுரப்பிக்கு மேலாக பரிவகத்திற்கு கீழாக அமைந்து காணப்படும்.  இது முற்றிலுமாக நரம்பு இழையத்தினாலானது. சில கலங்கள் சிறந்தலடைந்து ஓமோனை சுரக்கின்றன. எனவே பரிவகக் கீழ் நரம்பு, ஓமோன் தொழிற்பாடுகளை ஆற்றுகின்றது.
  • தொழில் – தன்னாட்சி நரம்பு தொகுதியில் தொழிற்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. எனவே இச்சையின்றிய தொழிற்பாட்டை கட்டுப்படுத்துகிறது.
    பசி, வெப்பநிலை, சுவாச வீதம், குருதியமுக்கம், சுற்றுச்சுருக்கு, இதய அடிப்பு, உணர்ச்சிகள். இதில் பிரசாரண மையம், வெப்ப ஒழுங்கான மையம், தாக மையம், சந்தோஷ மையம்.
    ஓமோன்களை சுரந்து ஓமோன் இயைபாக்கம்.

மூளையத்தின் தொழில்கள் 

  • ஞாபகம், புத்திக் கூர்மை, பொறுப்புத் தன்மை, சிந்தித்தல், காரணப்படுத்தல், கற்றல், ஆளுமை, உணர்ச்சிகள், கைத்திறன் ஆகிய உளச் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருத்தல்.
  • பார்வை, கேட்டல், நோ, தொடுகை, பேச்சு, வெப்பம், மணம், சுவை ஆகிய புலன்களை வாங்குதலும் தரம்பிரித்தலும்.
  • வன்கூட்டுத் தசையின் சுருக்கத்தை தொடக்கலும் கட்டுப்படுத்தலும்.
  • புலன் தகவல்களை சேமித்தலும் ஒருங்கிணைத்தலும்
  • வலது மூளையறைக்கோளம் உடலின் இடப் பகுதியில் தொழிற்பாடுகளை கட்டுப்படுத்தப்படுகிறது.  அதேபோன்று இடது மூளையறைக்கோளம் உடலின் வலப் பகுதியில் தொழிற்பாடுகளை கட்டுப்படுத்தப்படுகிறது.

நடுமூளை 

  • நடுமூளையானது மூளையத்திற்கு கீழாகவும் வரோலியின் பாலத்திற்கு மேலாகவுமுள்ளது.
  • மூளையில் ஒடுக்கப்பட்ட ஒரு சிறிய கட்டமைப்பாக உள்ளது.
  • இதன் சுற்றயல் பகுதி / மேற்புற பகுதி கலவுடல்களால் ஆக்கப்பட்ட நரை சடப்பொருளை கொண்டது. உட்புறப் பகுதி நரம்பு நார்களை கொண்ட வெண் சடப்பொருளை உடையது.
  • இதில் நரம்புக் கலங்களின் கூட்டமும் நரம்பு நார்களும் காணப்படும்.
  • இதிலுள்ள நரம்பு நார்களும் கலங்களும் மூளையத்தை மூளையின் கீழுள்ள பகுதிகளுடனும் முண்ணானுடனும் இணைக்கும்.
  • இதன் முதுகுப்புற சுவரில் இணைந்த பார்வை சோணைகளை உடைய ஈரினைச் சடலம் உள்ளது.
  • இதன் வயிற்றுப்புற சுவரில் நரம்பு திரட்டலான செங்கரு காணப்படும்.
  • செங்கருவானது வன்கூட்டுத் தசைகளின் அசைவை கட்டுப்படுத்தி நிமிர்ந்த நிலை பேணலுடன் தொடர்பானது.
  • கண்ணிலிருந்து வரும் பார்வை நரம்புகள் நடுமூளைக்கு ஊடாக சென்று மூளையத்தை அடையும்.

தொழில்கள் :

  • கட்தசையின் தெறிவினைக்குரிய அசைவுகளை கட்டுப்படுத்தல்.
  • தலை, கழுத்து, முண்டம் என்பவற்றில் பார்வை மற்றும் கேட்டலுடன் தொடர்பான தெறிவினை அசைவுகளை கட்டுப்படுத்தல்.
  • கண்ணிலுள்ள கண்மணியின் அளவை மாற்றுதல்.
  • கண் வில்லையின் வடிவத்தை மாற்றுதல்.

மூளி Please Login to view the Question  

  • இது பின்மூளையிலிருந்து வருவிக்கப்பட்ட அமைப்பாகும்.
  • வரோலியின் பாலத்திற்கு பிற்புறமாகவும் மூளையத்தின் பிற்பகுதிக்கு கீழ்புறமாகவும் காணப்படும்.
  • Ovoid  வடிவமானது.
  • இரு அரைக்கோளத்தை உடையது. இரு அரைக்கோளமும் ஒடுக்கமான புழுவுரு என அழைக்கப்படும். கட்டமைப்பால் இணைக்கப்பட்டு உள்ளது.
  • இரு அரைக்கோளமும் அதிகளவு மடிப்புகளை உடையது.
  • இதன் மேற்புறம் நரை சடப்பொருளையும் உட்புறம் வெண் சடப்பொருளையும் உடையது.
  • மூளி பாதிக்கப்பட்ட ஒருவரால் சரியான முனாயில் நடக்க முடியாது. காரணம், வன்கூட்டுத் தசைகளின் இயையாக்க ஒழுங்கின்றி சமநிலை குழப்பமடையும்.

தொழில்கள் : 

  • வன்கூட்டுத்தசை / இச்சைவழி இயங்கும் தசைகளின் சுருக்கத்தை இயைபாக்கல்.
  • சமநிலை
  • ஆதாரம், கொண்ணிலை பேணல்.

வரோலியின் பாலம் Please Login to view the Question 

  • நடுமூளைக்கு கீழாகவும் மூளிக்கு முன்னாகவும் நீள்வளைய மையவிழையத்தின் மேல் அமைந்து உள்ளது.
  • இதன் சுற்றயல் பகுதி நரம்பு நார்களாலான வெண் சடப்பொருளையும் உட்பகுதி நரம்பு கலவுடலாலான நரை சடப்பொருளையும் கொண்டது.
  • வரோலியின் பாலத்தின் நரம்புக் கலங்களையும் நாரையும் கொண்ட அடர்ந்த நரம்பு நார் திணிவு, மூளியின் இரு அரைக்கோளத்திற்கிடையே பாலத்தை தோற்றுவிக்கும்.

தொழில்கள் : 

  • முண்ணானிலிருந்து மூளையத்திற்கு மேல், கீழாக பயணிக்கும் தகவல்களை ஒன்றாக்க உதவுகிறது. அதாவது அஞ்சல் நிலைய மாக தொழிற்படல்.
  • சுவாசப்பைகளின் காற்றூட்டல் வீதத்தை ஒழுங்காக்கல்.

நீள்வளைய மையவிழையம் 

  • பின்மூளையிலிருந்து வருவிக்கப்பட்டது.
  • வரோலியின் பாலத்திற்கு கீழாக முண்ணானுக்கு மேலாக உள்ளது.
  • மூளையில் மிக முக்கியமான பகுதியாகும் (உயிர்ப்புடைய பகுதி).
  • 2.5 cm நீளமான Pyramid வடிவமானது.
  • சுற்றயல்பகுதி சடப்பொருளால் ஆனது. மையப் பகுதி நரை சடைப்பொருளால் ஆனது.
  • இதனுள் காணப்படும் வெவ்வேறு நரம்பு திரட்டுகள் தொழிற்பாட்டு மையங்களாக தொழிற்படுகின்றன.
    ♦ இதய மையம்
    ♦ சுவாச மையம்
    ♦ கலன் இயக்க மையம் – குருதி வட்டம் சீராக்கல்
    ♦ தெறிவினை மையம்
  • இதய மையம், கலன் இயக்க மையம் ஒருங்கே இதய கலன் இயக்க மையமாகும்.

தொழில்கள் : 

  • இதய துடிப்பு, துடிப்பு வீத வலிமையை சீராக்கல் (இதய மையம்).
  • குருதி அமுக்கத்தை கட்டுப்படுத்தல் (கலன் இயக்க மையம்).
  • சுவாச வீதம் கட்டுப்படுத்தல் (சுவாச மையம்).
  • தும்மல், இருமல், விழுங்குதல், வாந்தியெடுத்தல் ஆகிய இச்சையின்றிய தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் (தெறிவினை)
  • உமிழ் நீர் சுரத்தலை கட்டுப்படுத்துதல்.

மூளையறைகள் 

  • மூளைய முண்ணான் பாய்பொருள் கொண்ட பிசிர் மேலணியால் படரிடப்பட்ட மூளியினுள் காணப்படும் விரிவாக்கப்பட்ட குழிகள் மூளையறைகள் எனப்படும்.
  • 1ம்,2ம்  மூளையறைகள்   (பக்கமூளையறைகள்) மூளையத்தின் வலது, இடது  அரைக்கோளத்திலும்   3ம் மூளையறை இரு பரிவகங்களுக்கிடையிலும்   4ம் மூளையறை வரோலியின் பாலத்திற்கும் மூளிக்குமிடையிலும்  அமைந்துள்ளன.

ஏந்தி 

  • நரம்புக்கலங்கள், நரம்புநார் என்பவற்றைக் கொண்ட இரு திணிவுகள்.
  • மூளையவரைக்கோளத்தினுள் வன்சடலத்தின் கீழ், மூன்றாம் மூளையறையின் இருபுறத்திலும் காணப்படும்.
  • புலன் தகவல்களை ஒன்று சேர்த்து மூளையின் உயர்மையங்களுக்கு அனுப்பும்.

பரிவகக்கீழ் 

  • நரம்புக்கலங்களின் கூட்டங்கள் பலவற்றாலானது.
  • ஏந்தியின் கீழ்ப்புறமாகவும் கபச்சுரப்பியின் சற்று மேற்புறமாகவும் அமைந்து காணப்படும்.
  • ஓமோன் சுரத்தல், தன்னாட்சி நரம்புத்தொகுதி என்பவற்றைக் கட்டுப்படுத்தும்.
    (பசி, தாகம், உடல் வெப்பநிலை, இதய – குருதிக் கான்கள், பாதுகாப்புப்பொறிமுறை என்பவற்றைக் கட்டுப்படுத்தும்).

சருமம் 

  • மூளையையும் மூண்ணானையும் சூழந்து காணப்படும் 3 படைகளும் ” சருமம் ” எனப்படும்.
  • இம்மூன்று படைகளும் வெளியிருந்து உள்நோக்கி வன்றாயி, சிலந்தி வலையுரு, மென்றாயி என அழைக்கப்படும்.
  • வன்றாயி விறைப்பான நாரிழையத்தலான கட்டமைப்பு. தலையோட்டுடன் / முள்ளந்தண்டு கம்பத்துடன் இணைந்து காணப்படும்.
  • நடுவில் சிலந்தி வலையுரு; உட்புறமாக மெல்லிய மென்றாயி. இது நரம்பு இழையத்துடன் தொடுகையிலுள்ளது.
  • இம்மூன்று படைகளுக்குமிடையில் மூளைய முண்ணான் பாய்பொருளைக் கொண்ட இரு வெளிகள் உண்டு.
    ♦  வன்றாயி கீழான வெளி
    ♦  சிலந்தி வலையுரு கீழான வெளி
  • மென்றாயி அதிகளவு குருதி மயிர்க்கலன்களையுடையது.
  • இக் குருதி மயிர்க்கலன்களினூடாக மூளை, முண்ணான் நரம்பு இழையங்களுக்கு போஷணைக் கூறுகள், O2  என்பன வழங்கப்படுகிறன.

மூளைய முண்ணான் பாய்பொருள் 

  • மூளைய முண்ணான் பாய்பொருள் முன், பின் தோலுருப்பின்னல்களினால் சுரக்கப்படுகிறது.

இதன்  கூறுகள் :  

நீர், கனியுப்பு, கிறியேற்றினைன், குளுக்கோஸ், யூரியா,
நீணநீர்க் குழியங்கள்,  குருதிப் புரதங்கள் (சிறிய அளவில் Albimin, Globulin

தொழில்கள் : 

  • மூளை, முண்ணான் நரம்பு இழையத்திற்கு போஷணைக் கூறுக ளை வழங்கல்.
  • நரம்பு இழையத்திற்கு O2 வழங்கல்.
  • நரம்பு இழையத்திலிருந்து கழிவுகளை அகற்றல்.
  • நுண்ணங்கி  தொற்றலுக்கெதிராக பாதுகாப்பு வழங்கல்.
  • பொறிமுறை அதிர்வுகளிலிருந்து பாதுகாத்தல்.
  • மூளையையும் முண்ணானையும் ஈரலிப்பாக பேணுவதுடன் சீரான அமுக்கத்தை பேணுகிறது.

 

 

மனித மூளையின் நெடுக்கு வெட்டுமுகம்  

pic 2

RATE CONTENT 0, 0
QBANK (15 QUESTIONS)

கீழ்க்காணும் கட்டமைப்புகளினால் பாலூட்டிகளின் இடை மூளையிலிருந்து வருவிக்கப்படுவது,

Review Topic
QID: 3887

All answers correct

Hide Comments(0)

Leave a Reply

மனிதரின் மூளையில்,

 

Review Topic
QID: 3898
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் மூளையில் புத்திநுட்பத்துடன் தொடர்புடைய பகுதியானது?

Review Topic
QID: 3907
Hide Comments(0)

Leave a Reply

மனிதனில் மூளையில் முன்ணான் பாய்பொருளைச் சுரப்பது,

Review Topic
QID: 3909
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் மூளையத்தில்,

Review Topic
QID: 3916

All answers correct

Hide Comments(0)

Leave a Reply

மனித மூளையின் பரிவகத்தைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 3926
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கட்டமைப்புகளினால் பாலூட்டிகளின் இடை மூளையிலிருந்து வருவிக்கப்படுவது,

Review Topic
QID: 3887

All answers correct

மனிதரின் மூளையில்,

 

Review Topic
QID: 3898

மனிதனின் மூளையில் புத்திநுட்பத்துடன் தொடர்புடைய பகுதியானது?

Review Topic
QID: 3907

மனிதனில் மூளையில் முன்ணான் பாய்பொருளைச் சுரப்பது,

Review Topic
QID: 3909

மனிதனின் மூளையத்தில்,

Review Topic
QID: 3916

All answers correct

மனித மூளையின் பரிவகத்தைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 3926
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank