மனித சுவாசத் தொகுதியின் மொத்தக் கட்டமைப்பு
மனித சுவாசத் தொகுதியின் கட்டமைப்புகளும், தொழில்களும்
சுவாச வட்டம்
உட்சுவாசம், வெளிச் சுவாசம், இடைநிலை ஓய்வு ஆகிய மூன்று தொடர் அவத்தைகளையுடைய மூச்சுவிடும் செயற்பாடு சுவாச வட்டம் எனப்படும்.
மனிதனில் சாதாரணமாக நிமிடத்திற்கு 15 தடவைகள் சுவாச வட்டம் நிகழ்கிறது.
உட் சுவாசம் | வெளிச் சுவாசம் |
---|---|
இது உயிர்ப்பான செய்முறை | இது உயிர்ப்பற்ற செய்முறை |
வெளிப்பழுவிடைத் தசைகள், பிரிமென்றட்டுத் தசை சுருக்கமடையும் | வெளிப்பழுவிடைத் தசைகள், பிரிமென்றட்டுத்தசை தளரும் |
விலா என்புகளும், மார்புப்பட்டையும் முறையே வெளிநோக்கியும், மேலாகவும் தள்ளப்படும் | விலா என்புகளும், மார்புப்பட்டையும் முறையே உள்நோக்கியும், கீழ் நோக்கியும் அசையும் |
நெஞ்சறைக் குழியின் கனவளவு அதிகரிக்கும் | நெஞ்சறைக் குழியின் கனவளவு குறையும் |
புடைப்புக் குழியில் அமுக்கம் குறைவடையும் | புடைப்புக் குழியில் அமுக்கம் அதிகரிக்கும் |
நுரையீரல்களின் கனவளவு அதிகரிக்கும் | நுரையீரல்களின் கனவளவு குறையும் |
சிற்றறைகளிலும், நுரையீரல்களிலும் வளியமுக்கம் குறைவதால் வெளி அமுக்கத்திற்கு சமனாகும் வரை வளி நுரையீரல்களினுள் சென்று சிற்றறைகளை நிரப்பும் | நுரையீரல்களின் உள் வளியமுக்கம் வெளி அமுக்கத்தை விட அதி கரிப்பதால் சிற்றறைகளில் இருந்து வளி வெளியேறு கின்றது |
மனிதனில் வளியூட்டல் செய்முறையின் கட்டுப்பாடு
அவையாவன,
மனிதனின் நுரையீரலின் கனவளவுகள்
மனித நுரையீரல்களின் சராசரிக் கனவளவு 6l ஆகும்.
வற்றுப் பெருக்க கனவளவு
சாதாரண மூச்சுவிடுதலின் போது ஒரு தடவையில் நுரையீரல்களினுள்ளே வந்து வெளியேறுகின்ற வளியின் கனவளவு.
இதன் பெறுமானம் 500 ml
உட்சுவாச ஒதுக்கக் கனவளவு
ஆழமான மூச்சு உள்ளெடுத்தலின் போது வற்றுப் பெருக்கக் கனவளவை விட மேலதிகமாக உள்ளெடுக்கப்படக் கூடிய வளியின் கனவளவு
இதன் பெறுமானம் 1 500 ml
உட்சுவாசக் கொள்ளளவு
ஆழமான மூச்சு உள்ளெடுத்தலின் போது ஒரு தடவையில் உள்ளெடுக்கக் கூடிய வளியின் அதிகூடிய கனவளவு
இதன் பெறுமானம் 2 000 ml
வெளிச்சுவாச ஒதுக்கக் கனவளவு
சாதாரண வெளிச் சுவாசத்தின் போது வெளியேற்றக் கூடிய வளியின் கனவளவை விட வலிந்த வெளிச் சுவாசம் ஒன்றில் மேலதிகமாக வெளியேற்றக் கூடிய வளியின் கனவளவு
இதன் பெறுமானம் 1 500 ml
உயிர்க் கொள்ளளவு
ஒரு தடவை நிகழும் மூச்சுவிடும் செயற்பாட்டின் போது நுரையீரல்களின் உள்ளே வந்து வெளியேறக் கூடிய வளியின் அதியுயர் கனவளவு
மீதிக் கனவளவு
வலிந்த வெளி மூச்சின் போதும் வெளியேற்றப்படாது நுரையீரல்களில் தேங்கியிருக்கும் வளியின் கனவளவு
தொழிற்படு மீதிக் கனவளவு
சாதாரண ஒரு வெளி மூச்சின் பின்னர் சுவாசப்பாதை வழியிலும், சிற்றறைகளிலும் தேங்கியிருக்கின்ற வளியின் கனவளவு
சிற்றறை வாயுப் பரிமாற்றம்
இழையங்களில் நிகழும் வாயுப் பரிமாற்றம்
மனிதனின் சுவாசத் தொகுதியின் ஒழுங்கீனங்கள்
புகைத்தல் காரணமாக நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்புகள்
சிலிக்கோசிஸ் (Silicosis)
இதனால் ஏற்படும் பாதிப்புகள் :
(1) சுவாசப்பை சிறுகுழாய், குருதிக் கலன் என்பவற்றில் தடைகள் ஏற்படும்.
(2) சுவாசப்பை இழையங்களை அழிவடையச் செய்கின்றது.
(3) சுவாசப்பை உயரழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
(4) இதய பாதிப்பை ஏற்படுத்தும்
அஸ்பெஸ்ரோசிஸ் (Asbestosis)
கீழ்க்காண்பவற்றில் எதனை அனுசேப வீதத்தைக் குறிக்கும் ஓர் அறிகுறியாக உபயோகிக்க முடியாது?
Review Topicமனிதனில் சுவாச ஒழுங்காக்கம் (சீராக்கல்) தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?
Review Topicமனிதனின் சுவாசத் தொகுதியின் பின்வரும் அங்கங்களுள் எது அதன் தொழிற்பாட்டுடன் தவறாகச் சோடியாக்கப்பட்டிருக்கின்றது?
Review Topicகீழ்க்காண்பவற்றில் எதனை அனுசேப வீதத்தைக் குறிக்கும் ஓர் அறிகுறியாக உபயோகிக்க முடியாது?
Review Topicமனிதனில் சுவாச ஒழுங்காக்கம் (சீராக்கல்) தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?
Review Topicமனிதனின் சுவாசத் தொகுதியின் பின்வரும் அங்கங்களுள் எது அதன் தொழிற்பாட்டுடன் தவறாகச் சோடியாக்கப்பட்டிருக்கின்றது?
Review Topic