Please Login to view full dashboard.

பூவின் மகரந்தச் சேர்க்கை

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 06:55am

பூவின் இயல்புகள்
1. அல்லி பிரிந்த பூ
eg; Hibiscus,Rosa
2. அல்லி இணைந்த பூ
eg; exora,jasmine (மல்லிகை)
3. அல்லி மேல் ஒட்டிய கேசரம்
eg;exora, tridax(மூக்குத்திப் பூண்டு )Helianthus (சூரியகாந்தி)
4. சூலகக் கீழான பூ.
சூலகத்துக் கீழாக பூவின் ஏனைய பகுதிகள் இணைந்து காணலாம். நிலை சூலகத்துக்கு கீழான பூ எனலாம். இங்கு உயர்வுச் சூலகம் காணலாம்.
eg: (அகத்தி) sesbania- அவரைக் கும்பத் தாவரங்கள் or Leguminosae குடும்பம்
(தென்னை) cocos-palmae குடும்பம்
(நெல்) Oryza- தானியவகை குடும்பம் /Gramminal குடும்பம்.
5. சூலக மேலான பூ
eg: மாதுளை – Psidium(கொய்யா) curcubita பூசணி)
Helianthus (சூரியகாந்தி)Tridax (மூக்குத்திப் பூண்டு)
சூலகத்துக்கு மேலாக பூவின் ஏனைய பகுதிகள் இணைந்து காணலாம் நிலை. சூலகத்துக்கு மேலான பூ எனலாம். இங்கு தாழ்வுச் சூலகம் காணலாம்.
6. சூலகச் சுற்றான பூ
சூலகத்தை சுற்றி பூவின் ஏனைய பகுதிகள் இணைந்து காணப்படல் சூலகச் சுற்றான பூ எனலாம். இங்கு அரைத் தாழ்வுச் சூலகம் காணலாம்.
eg; rosa
7. ஓர் அறை கொண்ட சூலகம்
eg;catica papaya (பப்பாசி)
8. பல்லறை கொண்ட சூலகம்
Hibiscus செவ்வரத்தை/ வெண்டி
citrus தோடை/ எலுமிச்சை
Lycopersicum/தக்காளி

பூந்துணர்

 

பூவின் மகரந்தச் சேர்க்கை
முதிர்ந்த மகரந்தமணி மகரந்தக் கூட்டிலிருந்து வெளியேறி வாங்கும் தன்மையுள்ள குறியை சென்றடைதல்ää மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்தச் சேர்க்கை பிரதானமாக 02 வகைப்படும்.
1. தன்மகரந்தச் சேர்க்கை
2. அயன்மகரந்தச் சேர்க்கை.

தன்மகரந்தச் சேர்க்கை (self polination)
ஒரு பூவின் முதிர்ந்த மகரந்தமணி மகரந்தகூட்டிலிருந்து வெளியேறி அதே பூவின் வாங்கும் தன்மையுள்ள குறியை சென்றடைதல் தன்மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
அனேகமான ஆண்டுக்குரிய தாவரங்களின் வித்துக்கள் வழமையாக தன்மகரந்தச் சேர்க்கை மூலம் உற்பத்தியாக்கப்படும்.

(உ +ம்) நெல் (oryza)
சில தாவரங்களே தன்மகரந்தச் சேர்க்கைக்கு இசைவாக்கப்பட்டுள்ளன. அனேகமானவை அயன்மகரந்த சேர்க்கைக்கு இசைவாக்கப்பட்டுள்ளன.
சில தாவரங்களில் பூக்கள் முழுமையாக விரியாமல் ஆணகம்ää பெண்ணகம் முதிர்ச்சியடைந்து தன்மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றது. இச்செயல் கூம்புநிலை புணர்ச்சி எனப்படும்.
உ – ம் : தோட்டப்பட்டாணி (Pisum sativa)
தன்மகரந்தச் சேர்க்கையால் அடுத்த சந்ததிகளில் மாறல்கள் குறைவாக தோன்றும். இதனால் பெரும்பாலான தாவரங்கள் தன்மகரந்தச் சேர்க்கையை விரும்புவதில்லை.

அயன் மகரந்தச் சேர்க்கை (cross polination)
ஒரு பூவின் முதிர்ந்த மகரந்தமணி மகரந்தக் கூட்டிலிருந்து வெளியேறி அதே தாவரத்தின் வேறொரு பூவில்or அதே இனத்தைச் சேர்ந்த வேறொரு தாவரத்தின் பூவின் வாங்கும் தன்மையுள்ள குறியை சென்றடைதல் அயன்மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
பெரும்பாலான தாவரங்கள் அயன்மகரந்தச் சேர்க்கைக்கு இசைவாக்கப்பட்டுள்ளன.

அயன் மகரந்தச் சேர்க்கையின் முக்கியத்துவம்
அயன்மகரந்தச் சேர்க்கையால் கடந்து கருக்கட்டல் நடைபெறும். இதனால் ஒரு இனத்தின் அங்கத்தவரிடையே பரம்பரை அலகுகள் கலக்கப்படுகின்றன. இதனால் புதிய பரம்பரை இயலுக்குரிய சேர்க்கைகள் ஏற்பட்டு பாரம்பரிய மாறல்கள் அதிகரிக்க வழிவகுக்கும்.
பூக்களால் காட்டப்படும் அனேக இசைவாக்கங்கள் தாவரத்தின் நிலவுகைக்கு முக்கியமானவையாக அமைகின்றன.

  • அயன்மகரந்தக் சேர்க்கைக்கு உதவும் சூழற் காரணிகள்
  • பூச்சிகளினால்
  • விலங்கினால்
  • காற்றால்
  •  நீரால்

பூச்சிகளால் அயன்மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகும் பூக்களில் காணப்படும் இசைவாக்கங்கள்.
1. கவரக்கூடிய நிறத்தை கொண்டிருத்தல்.
உ – ம் : rosa ஒக்கிட்,Jasmine
2. கவரக்கூடிய வாசனையை { மணத்தை கொண்டிருத்தல்
உ – ம் : ,Jasmine
3. அமுதச் சுரப்பியை கொண்டிருப்பதன் மூலம் தேனை சுரத்தல்
உ – ம் :ixora, hibiscus
4. மகரந்த மணிகள் ஒட்டுந்தன்மையை கொண்டிருத்தல்.
உ – ம் : பொதுவாக எல்லா தாவரங்களும்.
5. மகரந்தக் கூடு, குறி என்பன பூவினுள் உள்ளடக்கப்பட்டிருத்தல்.
6. அல்லிகள் / பூவுறைகள் நன்கு விருத்தியடைந்திருத்தல்.

காற்றால் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகும் பூக்களில் காணப்படும் இசைவாக்கங்கள்
1. அதிக எண்ணிக்கையான மகரந்த மணிகளை தோற்றுவிக்கக் கூடிய தன்மையை கொண்டிருத்தல்.
2. மகரந்த மணிகள் பருமனில் சிறியதாகவும் பாரம் குறைந்தவையாகவும் காணப்படுதல்.
3. ஒட்டுந் தன்மையான குறியை கொண்டிருத்தல்
4. சிறை பிரிப்பான குறியை கொண்டிருத்தல்
5. மகரந்தக் கூடு குறி என்பன பூவிற்கு வெளியாக நீட்டப்பட்டிருந்தல்
6. அல்லி, புல்லி, பூவுறைகள் என்பன விருத்தி குறைவாக காணப்படல்.
7. சுழலும் மகரந்தக் கூட்டை கொண்டிருத்தல் – தென்னை

.
நீரால் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகும் பூக்களில் காணப்படும் இசைவாக்கங்கள்.
1. பூக்கள், மகரந்த கூடு, மகரந்த மணி என்பன நீரில் மிதக்கக்கூடியதாக இருத்தல்.
2. பூவின் பிரதான பகுதிகள் நீரினால் பழுதடையாதிருத்தல்
உ – ம் :hydrilla
vallisnaria

தன்மகரந்தச் சேர்க்கையை தவிர்த்து அயன் மகரந்தச் சேர்க்கைக்காக தாவரங்கள் / பூக்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்
1. ஏகலிங்கப் பூ or ஓரிலிங்கப்பூ
ஒரு பூவில் ஆணகம் ழுசு பெண்ணகம் மட்டும் காணப்படும் தன்மை ‘ஏகலிங்கப் பூ / ஒலிலிங்கப் பூ” எனப்படும். ஆணகம் மட்டுமுள்ள பூ ‘ஆண்பூ”. பெண்ணகம் மட்டுமுள்ள பூ ‘பெண்பூ”.
உ – ம் :  தென்னை cocas nucifera
carica papaya

borassus

cucurbita- பூசணி

2. ஈரில்ல தாவரம்
ஒரு தாவரத்தில் ஆண் பூக்கள் /பெண்பூக்கள் மட்டும் காணலாம். தன்மை அல்லது | ஆணகம், பெண்ணகம் வௌ;வேறு தாவரங்களில் காணப்படல். ஆண்பூக்களை (ஆணகம்) மட்டும் கொண்டது ஆண் பூக்களை (ஆணகம்) மட்டும் கொண்டது ஆண்தாவரம் பெண்பூக்களை (பெண்ணகம்) மட்டும் கொண்டது பெண்தாவரம்.
உ – ம்  vallisnaria
carica
borassus
3. சமனில்லா தம்பு உண்மை

உ – ம் :Jasmine
ஒரு தாவரத்தில் சில பூக்களில் தம்பம் குறுகி குறி தாழ்ந்து காணலாம். மகரந்தக் கூடு உயர்ந்து காணலாம். வேறு சில பூக்களில் தம்பம் நீண்டு குறி உயர்ந்து காணலாம். மகரந்தக் கூடு தாழ்ந்து காணலாம்.

4. இருகால முதிர்வு
சில தாவரங்களின் ஈரிலிங்க பூக்களில் ஆணகம்ää பெண்ணகம் வௌ;வேறு காலத்தில் முதிர்ச்சியடைகின்றன. இவ்வியல்பு இருகால முதிர்வு எனப்படும். இது 2 வகைப்படும்.
a. ஆணக முன் முதிர்வு
ஈரிலிங்கப் பூவில் உள்ள ஆணகம் பெண்ணகத்திலும் பார்க்க முந்தி முதிர்வடைதலாகும்.
உ – ம் : Tidax (மூக்குத்திப்பூண்டு)
b. பெண்ணக முன் முதிர்வு
ஈரிலிங்க பூக்களில் அணகத்துக்கு முன் பெண்ணகம் முதிர்ச்சியடைதலாகும்.
உ – ம் : Aristalochia
5. தற்கருக்கட்டல் தடை
சில தாவரத்தில் ஈரிலிங்க பூக்களில் கேசர இழைகள் வளைந்து மகரந்தக் கூடுகள் கீழ்நோக்கி காணலாம். தம்பம் நிமிர்ந்து குறி உயர்ந்து காணலாம். அதே பூவில் வேறொரு நிலையில் கேசர இழைகள் நிமிர்ந்து மகரந்தக்கூடு மேல்நோக்கி உயர்ந்து காணலாம். தம்பம் வளைந்து குறி கீழ்நோக்கி காணலாம்.
உ – ம் :  clerodendron (வாதமடக்கி)
6. தன்மலடு
சில தாவரங்களின் ஈரிலிங்க பூக்களின் ஒரு பூவின் மகரந்த மணி அதே பூவின் வாங்கும் தன்மையுள்ள குறியை சென்றடையும் போது முளைக்கும் ஆற்றலை இழக்கின்றது. இவ்வியல்பு ‘தன்மலடு” எனப்படும்.
உ – ம் :  Plassiflora(கொடித் தோடை)

 

கன்னிக்கனியமாதல்
கருக்கட்டல் நடைபெறாமல் சூலகத்திலிருந்து பழம் விருத்தியடைதல் ‘கன்னிக்கனியமாதல்” எனப்படும். கன்னிக் கனியத்திற்குரிய பழங்கள் வித்துக்களை கொண்டிருக்காது. சில இனங்களில் கன்னிக்கனியமாதல் இயற்கையாக நடைபெறும்.
உ – ம் :  வாழை (Musa)  அன்னாசி (Ananas)
சில பழம் தரும் மரங்களில் தாவர வளர்ச்சி பதார்த்தங்களினால் கன்னிக்கனியமாதல் தூண்டப்படும்.
உ – ம் :  திராட்சை  தோடை
இங்கு தாவர வளர்ச்சி பதார்த்தமான ஒட்சின் பயன்படுத்தப்படும்.
கன்னிக் கனியமாதல்ää கன்னிப் பிறப்பிலிருந்து வேறுபடும். கன்னிப்பிறப்பு என்பது | கருக்கட்டல் நடைபெறாமல் வளர்மற்ற வித்துக்கள் விரத்தியடைதல்.

RATE CONTENT 1, 1
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank