Please Login to view full dashboard.

தாவரத்தில் நீர் கொண்டு செல்லல் எண்ணக் கருக்கள்

Author : Admin

23  
Topic updated on 02/14/2019 02:00am

 

அங்கிகளில் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு பதார்த்தங்கள் அசைதல் கொண்டு செல்லல் எனப்படும்.

  • தாவரங்களில் நீரும் கனியுப்பும் வேர்களினால் மட்டும் மண்ணிலிருந்து தாவரத்தினுள் உள்ளெடுக்கப்படுகின்றன.
  • எனவே தாவரத்தின் ஏனைய பகுதிகளாவான இலை, பூ, பழம் போன்றவற்றின் கல அனுசேபங்களுக்கு தேவையான நீரும் கனியுப்பும் வேரிலிருந்து கொண்டு செல்லப்பட வேண்டும்.
  • இதேபோல் தாவர இலையினால் தயாரிக்கப்படும் ஒளித்தொகுப்பு விளைபொருட்கள் தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.Please Login to view the Question
  • எனவே தாவரங்களில் பதார்த்த கொண்டு செல்லல் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். எனவே இதற்காக விருத்தியடைந்த கட்டமைப்பு கலன்தொகுதி / கலன் இழையமாகும்.
  • தாவரங்களில் 2 வகையான கலனிழையங்கள் காணப்படுகின்றன.
    • காழ் இழையம் : நீர், கனியுப்பு கடத்தலுக்கு சிறந்தலடைந்தது.
    • உரிய இழையம் : உணவு கடத்தலுக்கு சிறத்தலடைந்தது.Please Login to view the Question
  • தாவர  இழையங்களினூடாக  நீர் 4  முறைகளில்  அசைகின்றது.
    • பரவல்
    • பிரசாரணம்
    • திணிவுப் பாய்ச்சல்
    • உட்கொள்கை    Please Login to view the Question
  • பரவல் 
    • பரவல் எனப்படுவது செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்கு துணிக்கைகள் சுயாதீனமாக அசைதலாகும்.
    • இது செறிவுப் படித்திறனுக்கு ஏற்ப நிகழ்கின்றது.
    • நீரின் பரவல் எனப்படுவது நீர் அழுத்தம் கூடிய இடத்திலிருந்து / நீர்ச் செறிவு கூடிய இடத்திலிருந்து நீர் அழுத்தம் குறைந்த இடத்திற்கு / நீர்ச்செறிவு குறைந்த இடத்திற்கு நீர் மூலக்கூறுகள் சுயாதீனமாக அசைதல்.
      (உ+ம்) : தாவர உடலிலிருந்து வளி மண்டலத்திற்கு நீர் ஆவியாதல்.Please Login to view the Question
  • பிரசாரணம்
    • பிரசாரணம் எனப்படுவது நீர் அழுத்தம் கூடிய இடத்திலிருந்து நீர் அழுத்தம் குறைந்த இடத்திற்கு ஒருபங்கு புகவிடும் மென்சவ்வு, புகவிடும் மென்சவ்வினூடாக செறிவுப் படித்திறனுக்கு ஏற்ப நீர் அசைதலாகும்.
    • இது ஒரு விசேட பரவல் ஆகும்.
      (உ+ம்) : தாவர வேர்மயிர்க் கலங்களால் நீர் அகத்துறிஞ்சப்படல்.
  • திணிவுப் பாய்ச்சல்
    • திணிவுப் பாய்ச்சல் எனப்படுவது அமுக்கப் படித்திறனுக்கு ஏற்ப அமுக்கம் கூடிய இடத்திலிருந்து அமுக்கம் குறைந்த இடத்திற்கு நீரும் அதில் கரைந்துள்ள பதார்த்தங்களும் தொகையே கொண்டு செல்லப்படுதல் ஆகும்.
      (உ+ம்) : தாவரத்தினூடான அப்போபிளாஸ்ட் பாதை.
      காழினூடாக நீர் கனியுப்பு கடத்தல்.
      உரியத்தினூடாக உணவு கொண்டு செல்லப்படல்.
  • உட்கொள்கை 
    • நீர் அழுத்தம் கூடிய இடத்திலிருந்து நீர் அழுத்தம் குறைந்த இடத்திற் நீர் விருப்பு பதார்த்தங்களான ஏகார், ஜெலடின், புரதம் ஆகியவற்றால் நீர் கவரப்பட்டு அசைதலாகும்.
    • நீர் விருப்பு பதார்த்தங்களால் நீர் அகத்துறிஞ்சப்படல் நீர் புறத்துறிஞ்சல் எனப்படும்.
      (உ+ம்) : வித்துக்களினால் நீர் மண்ணிலிருந்து அகத்துறிஞ்சப்படல்.
நீருடன் தொடர்பான எண்ணக்கருக்கள்

  • நீர் அழுத்தம்   ψw
  • கரைய அழுத்தம்   ψs
  • அமுக்க அழுத்தம்   ψp

நீர் அழுத்தம்   ψw  

  • நீரைக் கொண்ட எந்தவொரு தொகுதியும் நீர்  அழுத்தத்தைக் கொண்டிருக்கும்.
  • நீர் அழுத்தம் நீர் மூலக்கூறுகளின் இயக்கசக்தி தொடர்பாக  ஏற்படுத்தப்படுகின்றது. அதாவது இயக்கச்சக்தி காரணமாக நீர் மூலக்கூறுகள் அசைகின்றன.
  • நீர் மூலக்கூறுகளின் இயக்கச்சக்தி தொடர்பாக அளவிடக்கூடிய நீரின் அசையும் அளவு / ஆற்றல் ‘ நீர் அழுத்தம் ‘ எனப்படும்.
  • ஒரு நீர்த்தொகுதியில் நீரினளவு அதிகரிக்கும் போது நீர் அழுத்தமும் அதிகரிக்கும்.
  • நீர் மூலக்கூறுகளின் சுயாதீன இயக்கப் பண்பு சக்தியின் அடிப்படையில் அளவிடப்படக்கூடிய நீரின் அசைவு ஆகும்.
  • நீர் அழுத்தம் பின்வரும் காரணிகளால் பாதிக்கப்படும்.
    • கரையங்கள்
    • புற அமுக்கம்
    • நீர் விருப்பு பதார்த்தங்கள்
    • வெப்பநிலை

(1)  கரையங்கள்

  • ஒரு நீர்த் தொகுதியினுள் கரையங்களை சேர்க்கும் போது அத் தொகுதியின் நீர் அழுத்ததம் குறைக்கப்படும். காரணம், நீர் மூலக்கூறுகளின் சுயாதீன அசைவை கரைய மூலக்கூறுகள் பாதிக்கின்றன. எனவே தூய நீருக்கே நீர் அழுத்தம் உயர்வாக காணப்படும்.
  • தூய நீரின் நீர் அழுத்தம் நியமமாக பூச்சியமாக கொள்ளப்படும்.
  • எனவே நீர்க் கரைசல்கள் யாவற்றுக்கும் நீர் அழுத்தம் 0 இலும் குறைவாகும். அதாவது எதிர்ப்பெறுமானம் உடையவை.
  • நீர்க்கரைசலில் கரையச் செறிவு அதிகரிக்கும் போது நீர் அழுத்தம் குறையும்.  அதாவது,

(2)  புற அமுக்கம்

  • ஒரு நீர்த்தொகுதிக்கு அமுக்கம் பிரயோகிக்கப்படும் போது நீர் மூலக்கூறுகளின் இயக்கச்சக்தி அதிகரிப்பதால் நீர் அழுத்தம் அதிகரிக்கும்.
  • எனவே, அமுக்கம் ∝  நீர் அழுத்தம்

(3)  நீர் விருப்பு பதார்த்தங்கள்

  • நீர்த் தொகுதியில் நீர் விருப்பு பதார்த்தங்கள் அதிகரிக்கும் போது,  இவை நீர் மூலக்கூறுகளை கவர்வதால் அவற்றின் சுயாதீன அசைவு குறைக்கப்பட்டு நீர் அழுத்தம் குறைக்கப்படும்.

(4)  வெப்பநிலை

  • நீர்த் தொகுதியின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது, மூலக்கூறுகளின் இயக்கச் சக்தி அதிகரிப்பதால் நீர் அழுத்தம் அதிகரிக்கும்.

கரைய அழுத்தம்  ψs

  • ஒரு நீர்த் தொகுதியில் கரையம் சேர்ப்பதால் நீர் அழுத்தத்தில் ஏற்படும் குறைவு கரைய அழுத்தம் எனப்படும்.Please Login to view the Question
  • ψs (-)  மறையினால் குறிக்கப்படும். காரணம் நீர் அழுத்தத்தில் ஏற்படும் குறைவு என்பதால் ஆகும்.Please Login to view the Question

அமுக்க அழுத்தம்   ψp

  • ஒரு நீர்த்தொகுதிக்கு அமுக்கம் பிரயோகிக்கப்படும் போது நீர் அழுத்தத்தில் ஏற்படும் அதிகரிப்பு அமுக்க அழுத்தம் எனப்படும்.
  • ψ (+)  நேரினால் குறிக்கப்படும். காரணம் நீர் அழுத்தத்தில் ஏற்படும் அதிகரிப்பு ஆகும்.Please Login to view the Question
ஒரு நீர்த்தொகுதியின் ψw, ψs, ψp என்பவற்றுக்கிடையிலான தொடர்பு

  •    ψw – நீர் அழுத்தம்
  •    ψs – கரைய அழுத்தம்
  •    ψp – அமுக்க அழுத்தம்Please Login to view the Question

நீர் அசைவுக் கொள்கை :

எப்போதும் நீரானது நீர் அழுத்ததம் கூடிய இடத்திலிருந்து நீர் அழுத்தம் குறைந்த இடத்திற்கு நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப அசையும்.Please Login to view the Question

ஒரு கலத்தின் நீர் அழுத்தத்துடன் (ψw) தொடர்பான கரைசல்கள்

உப பிரசாரண கரைசல்

  • ஒரு தாவர கலத்தின் நீரழுத்தத்தை விட கரைசலின் நீரழுத்தம் உயர்வாயின் (கரைசல் கலத்திற்கு) உப பிரசாரண கரைசல் எனப்படும்.
  • இக் கரைசலில் கலத்தை இடும் போது நீரின் தேறிய அசைவு கரைசலிலிருந்து கலம் நோக்கி இருக்கும். கலம் வீக்கமடையும். கனவளவு அதிகரிக்கும். தூயநிறை அதிகரிக்கும்.

சம பிரசாரண கரைசல்

  • ஒரு தாவர கலத்தின் ψw இற்கு கரைசலின் ψw  சமனாயின் கரைசல் அக்கலத்திற்கு சம பிரசாரண கரைசல் எனப்படும்.
  • இக் கரைசலின் கலத்தை இட்டால் நீரின் தேறிய அசைவு பூச்சியமாகும். கலத்தின் கனவளவில், நிறையில்  மாற்றம் எற்படாது.

அதி பிரசாரண கரைசல்

  • ஒரு தாவர கலத்தின் நீரழுத்தத்தை விட கரைசலின் நீரழுத்தம் குறைவெனின் கரைசல் கலத்திற்கு அதி பிரசாரண கரைசல் எனப்படும்.
  • இக் கரைசலில் கலத்தை இட்டால் நீரின் தேறிய அசைவு கலத்திலிருந்து  கரைசலை நோக்கி இருக்கும். கலத்தின் கனவளவு குறையும். தூய நிறை குறையும். வீக்கம் குறையும். கலம் சுருங்கும்.
தாவர இழையத்தின் நீர் அழுத்தத்தை துணியும் பரிசோதனைகள்
  • உருளைக்கிழங்கு இழையம், கொலகேஷியா இலைகாம்பு   பரிசோதனையில் பயன்படுத்தப்படும்.
  • உருளைக் கிழங்கு எனின் நீளமாற்ற முறை ஆராயப்படும்.
  • கொலகேஷியா இலைக்காம்பு எனின் வளைவு மாற்ற முறை ஆராயப்படும்.

பரிசோதனை 1: உருளைக் கிழங்கு கீல நீளமாற்ற முறையை கொண்டு நீர் அழுத்தத்தை துணிதல் 

  • வெவ்வேறு மூலர் திறனுடைய சுக்ரோசு கரைசல்கள் தயாரிக்கப்படும். (0.3M, 0.35M, 0.4M, 0.45M, 0.5M, 0.55M)
  • இவ் சுக்ரோசு கரைசல்களை பெயரிடப்பட்ட பெக்டிக் கிண்ணங்களில் இடுக.
  • 12 உருளைக்கிழங்கு கீலங்கள் 2mm தடிப்பும், 4 cm நீளமும் கொண்டவையாக வெட்டி எடுக்கப்படும்.
  • ஒவ்வொரு கரைசலினுள்ளும் இரு கீலங்கள் வீதம் இடப்படும்.
  • 30 – 45 நிமிடம் சமநிலையடைய விடப்படும்.
  • பின்பு அவை எடுக்கப்பட்டு அதிலுள்ள நீர் ஒற்றப்பட்டு இறுதி நீளம் அளவிடப்படும்.

பதிவு செய்தலும் வரைபு வரைதலும் :

  • அவதானங்களிலிருந்து பெறப்பட்ட  தரவுகளைக் கொண்டு வரைபு வரையப்படும்.
  • அட்டவணையிலிருந்து அவ் மூலர்திறனுக்குரிய கரைய அழுத்தம் அறியப்படும்.
  • வரைபிலிருந்து நீளமாற்ற வீதம் பூச்சியத்தை காண்பிக்கும் சுக்ரோசுக் கரைசலின் மூலர்திறன் அறியப்படும்.
  • x அச்சில் சுக்ரோசு கரைசலின் மூலர்திறனும்; y அச்சில் நீளமாற்ற வீதமும் குறிக்கப்படும்.

இங்கு பயன்படுத்தப்பட்ட தத்துவம் :

  • உருளைக் கிழங்கின் நீளமாற்ற வீதம் பூச்சியமாக உள்ள சுக்ரோசு கரைசல்,உருளைக் கிழங்கிற்கு சம பிரசாரண கரைசலாகும்.
    ஃ அம் மூலர்திறனில் கலத்தின்  ψw = கரைசலின்  ψw
  • கரைசலின் கரைய அழுத்தமானது நீர் அழுத்தத்திற்கு சமனாக காணப்படும். காரணம், கரைசலின்  ψw = 0Please Login to view the Question

பரிசோதனை  2:  கொலகேஷியா இலைக்காம்பின் வளைவு மாற்ற முறையை கொண்டு நீர் அழுத்தத்தை துணிதல்

  • கொலகேஷியா இலைக்காம்பு கீலங்களாக வெட்டியவுடன் வளைந்து காணப்படும். நேரிய கீலமாக காணப்பட மாட்டாது.
  • காரணம், இலைக்காம்பின் வெளிப்புறமாக காணப்படும் மேற்றோலில் தடிப்படைந்த சுவருடைய கலங்களும் உட்புறமாக காணப்படும் மேற்பட்டையின் மெல்லிய சுவருடைய கலங்களும் காணப்படுதலாகும். எனவே கீலம் தடிப்பமான பக்கம் நோக்கி வளையும்.
  • வெட்டும் போது மெல்லிய சுவருடைய கலங்கள் நீட்சியடையும். எனவே மேற்பட்டை வெளிப்புறமாகவும் மேற்றோல் உட்புறமாகவும் இருக்கத்தக்கதாக  வளையும்.
  • இவ் வெட்டிய கீலத்தினுள் நீர் உட்செல்லும் போது மேலும் வளைவு அதே திசையில் அதிகரிக்கும். காரணம், மேற்பட்டையில் உள்ள மெல்லிய சுவருடைய கலங்களால் நீர் அதிகளவில் உள்ளெடுக்கப்படுவதாகும். மேற்றோல் குறைவாகவே கலவிரிவு அடையும்.
  • வெட்டிய வளைந்த கீலத்திலிருந்து நீர் வெளியேறும் போது இவ் வளைவு படிப்படியாக எதிர்த்திசைக்கு மாற்றப்படும். அதாவது, நன்றாக நீர் வெளியேறின் வளைவின் உட்புறமாக மேற்பட்டையும் வெளிப்புறமாக மேற்றோலும் காணப்படும்.
  • காரணம், மேற்பட்டையில் உள்ள மெல்லிய சுவருடைய கலங்களால் அதிகளவில் நீர் உறிஞ்சப்பட்டதால் நீரும் அதனூடாகவே வெளியேற்றப்படும். இதனால் நீட்சி குறைவடைந்து எதிர்ப்புறம் அசையும். நீர் வெளியேறும். மிக அதிகளவில் சுருக்கம் ஏற்படுவது மேற்பட்டைக் கலங்களிலாகும்.

நோக்கம் :

  • வளைவுமாற்ற முறையில் கொலக்கேசியா இலைக்காம்பு கலங்களின் நீரழுத்தத்தை துணிதல்.

தேவையான பொருட்கள் :

  • கொலக்கேசியா இலைக்காம்பு
  • சுக்குரோசு கரைசல்
  • காய்ச்சி வடித்த நீர்
  • பெற்றிக்கிண்ணம்
  • அளவி
  • சிறிய கத்தி

செய்முறை :

  • ஒரே கனவளவு வெவ்வேறு மூலர்த்திறன் கொண்ட சுக்குரோசு கரைசல்கள் தயாரிக்கப்படும்.
  • கொலக்கேசியா இலைக்காம்பு கீலங்கள் வெட்டியெடுக்கப்பட்டு அவற்றின் மேற்பரப்பு ஈரலிப்பு ஒற்றும் தாளால் ஒற்றப்படும்.
  • தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு சுக்குரோசு கரைசலினுள்ளும் கீலங்களின் புறவுருவப்படம் வரைந்த பின் ஒவ்வொரு கீலங்கள் வீதம் இடப்படும்.
  • கரைசல்கள் மூடிய நிலையில் கீலங்கள் 30 நிமிடங்கள் சமநிலை அடைய விடப்படும்.
  • சமநிலையின் பின் இலைக்காம்புக் கீலங்கள் கரைசலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு அவற்றின் மேற்பரப்பு நீர் ஒற்றி அகற்றப்பட்டு மீண்டும் அதன் புறவுருவப்படம் வரையப்படும்.

அவதானம் :

  • ஆரம்ப, இறுதி நிலைகளில் கொலக்கேசியா இலைக்காம்பின் வளைவுக் கோணங்கள் அளக்கப்படும்.

கணிப்பீடு :

  • ஆரம்ப, இறுதி வளைவுக் கோணங்களின் வித்தியாசம் அளக்கப்பட்டு சுக்குரோசு கரைசல்களின் மூலர்த்திறனுடன் அட்டவணைப்படுத்தப்படும்.

வரைபு : 

  • x  அச்சில் – சுக்குரோசு கரைசலின் மூலர்த்திறன்;  y அச்சில் – வளைவுக்கோண மாற்றம்
    • வளைவு மாற்றம் அற்ற நிலையில் சுக்குரோசு கரைசலின் மூலர்த்திறன் a mol-1 வரைபிலிருந்து அறியப்படும்.
    • கரைய அழுத்த அட்டவணையிலிருந்து மூலர்த்திறன் a mol-1 சுக்குரோசு கரைசலின் கரைய அழுத்தம் அறியப்படும்.

முடிவு :

  • கொலக்கேசியா இலைக்காம்பு கீலங்களின் நீரழுத்தம் -x kPa ஆகும்.
தாவர இழையத்தின் கரைய அழுத்தத்தை துணியும் பரிசோதனை

பரிசோதனை 3: Rhoeo இலையின் கீழ்ப்புற மேற்றோல் இழையத்தின் கரைய அழுத்தத்தை துணிதல் (முதலுருச் சுருக்க முறையில் துணியப்படும்)

நோக்கம் :

  • Rhoeo இலைக்காம்பின் மேற்றோலுரியின் கரையழுத்தத்தை துணிதல்.

இங்கு பயன்படுத்தப்படும் தத்துவம் :

  • 50% முதலுரு சுருங்கல் வீதத்தை காட்டும் இழையம் முதலுரு சுருக்க தொடக்க நிலையில் உள்ள இழையமாக கருதப்படும். (ஒரு இழையத்தின் ஒவ்வொரு கலத்தினதும் கரையழுத்தம் வேறுபட்டதாகும். எனவே 50% முதலுருச் சுருக்கத்தை காட்டும் இழையம் செய்முறை ரீதியில் முதலுரு சுருக்க தொடக்க நிலை இழையமாகும்)
  • கரைந்துள்ள கரையங்களின் வகை, அளவால் கலத்தின் ψs வேறுபடும். ψw வேறுபடும். எனவே ஒரு இழையத்தின் கலம் ஒவ்வொன்றும் வெவ்வேறாக காணப்படும்.
  • 50% இலும் குறைவான முதலுரு சுருக்கத்தை காட்டும் இழையம் வீக்க நிலையில் உள்ளதாக கருதப்படும்.
  • 50% இலும் அதிகமாக முதலுரு சுருக்கத்தை காட்டும் இழையம் முதலுரு சுருக்க நிலையில் உள்ளதாக கருதப்படும்.
  • சமநிலையில் கலத்தின் / இழையத்தின் நீரழுத்தம் கரைசலின் நீரழுத்தத்திற்கு சமன்.

தேவையான பொருட்கள் :

  • Rhoeo இலைக்காம்பு
  • சுக்குரோசு கரைசல்
  • காய்ச்சி வடித்த நீர்
  • பெற்றிக்கிண்ணம்
  • அளவி
  • முகவை
  • சாவணம்
  • ஒளிநுணுக்குக்காட்டி
  • வழுக்கி, மூடித்துண்டு

செய்முறை :

  • வேறுபட்ட மூலர்திறனுடைய சுக்குரோசு கரைசல்கள் தயாரிக்கப்படும்.
  • அடையாளப்படுத்தப்பட்ட பெக்டிக் கிண்ணங்களுக்கு மாற்றப்படும்.
  • ஒவ்வொரு சுக்குரோசு கரைசலினுள்ளும் Rhoeo இலையின் கீழ்ப்பக்க மேற்றோல் உரிப்பின் இரு சிறுதுண்டுகள் இடப்படும்.Please Login to view the Question
  • பெக்டிக் கிண்ணம் மூடப்பட்டு 30 நிமிடம் சமநிலையடைய விடப்படும்.
    பின்பு அதிலுள்ள மேற்றோல் உரிப்பு வழுக்கிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மூடித்துண்டினால் மூடப்பட்டு நுணுக்குக் காட்டியின் உயர்வலுவின் கீழ் அவதானிக்கப்படும்.
  • மொத்த கலங்களின் எண்ணிக்கையும் முதலுரு சுருக்கமடைந்த கலங்களின் எண்ணிக்கையும் அறியப்படும்.

பதிவு செய்தலும் வரைபு வரைதலும் :

  • x அச்சில் சுக்ரோசு கரைசலின் மூலர்திறனும்; y முதலுரு சுருக்க வீதமும் குறிக்கப்படும்.
  • 50% முதலுருச் சுருக்கத்தை காண்பிக்கும் கரைசலின் மூலர்திறன் வரைபிலிருந்து அறியப்பட்டு, அதன் கரையழுத்தம் அட்டவணையிலிருந்து பெறப்படும்.
    இக் கரையழுத்தம் இழையத்தின் கரையழுத்திற்கு சமன். காரணம்
  • இழையத்தின் கலங்களின் முதலுரு சுருக்க தொடக்க நிலையில், ψw = ψs ; ψw = 0
  • சமநிலையில்; ψwஇலை = ψwகரைசல் = ψsஇலை = ψsகரைசல்

RATE CONTENT 0, 0
QBANK (23 QUESTIONS)

Rhoeo இலையின் கீழ்ப்பக்க மேற்றோல் உரியின் இரு துண்டுகள் A,B எனப் பெயரிடப்பட்ட இரண்டு சுக்குரோசுக் கரைசல்களில் தனித்தனியாக அமிழ்த்தப்பட்டன. A கரைசலின் கரைய அழுத்தம் – 1450kPa ஆகும். கரைசல் B இன் கரைய அழுத்தம் – 1120kPa ஆகும். இழையங்கள் கரைசல்களுடன் சமநிலையை அடைந்த பின்னர் கரைசல் A யில் அமிழ்த்தப்பட்ட உரியின் 50% கலங்கள் முதலுருச் சுருங்கிய நிலையில் காணப்பட்டன. B கரைசலில் அமிழ்த்தப்பட்ட கலங்களின் அமுக்க அழுத்தத்திற்கு அண்மித்ததாகக் காணப்படுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6089
Hide Comments(0)

Leave a Reply

Colocasia இலைக்காம்பின் சிறு துண்டுகள் நெடுக்குமுகமாக பகுதி தூரத்துக்குப் பாதி
யாகப் பிளக்கப்பட்டன. இரு பாதிகளும் வெட்டிய உடனே படத்திற்காட்டியவாறு வெளிப்பக்கமாக வளைந்தன. பிளக்கப்பட்ட இலைக்காம்புத் துண்டுகள் 30 நிமிடத்திற்கு நீரினில் அமிழ்த்தப்பட்டன. நீரில் 30 நிமிடத்திற்கு அமிழ்த்திய பின்னர் பிளக்கப்பட்ட இலைக்காம் பின் சரியான தோற்றத்தை பின்வரும் படங்களில் எது எடுத்துக் காட்டுகிறது.

Review Topic
QID: 5118

Answer: 3 & 4

Hide Comments(0)

Leave a Reply

ஒரு தாவரக் கலம் தொடக்க முதலுருச்சுருங்கற் கட்டத்தில் இருக்கும்போது?

Review Topic
QID: 5826
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் எது தவறானது?

Review Topic
QID: 5827
Hide Comments(0)

Leave a Reply

ஒரு தாவரத்தின் அப்போபிளாஸ்ட் (Apoplast) இனது பகுதி அல்லாதது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 5831
Hide Comments(0)

Leave a Reply

உரியக் (Phloem) கொண்டுசெல்லல் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 5836
Hide Comments(0)

Leave a Reply

தனியாக்கப்பட்ட பச்சையவுருவங்கள் நீரில் வைக்கப்பட்ட போது அவை வீங்கி வெடிப்பது?

Review Topic
QID: 4305
Hide Comments(0)

Leave a Reply

8 வளிமண்டலப் பிரசாரண அமுக்கத்தைக் கொண்ட கலச்சாறுடையதும் 3 வளிமண்டலச் சுவர் அமுக்கத்தை உடையதுமான ஒரு தாவரக் கலம் சுக்குரோசுக் கரைசலில் இடப்பட்டது. பின்வரும் வரிப்படம் 30 நிமிடங்களின் பின் நுணுக்குக் காட்டியின் கீழ் பரிசோதிக்கப்பட்டபொழுது காணப்பட்ட இக் கலத்தின் தோற்றத்தைக் குறித்துக் காட்டுகிறது. மேலே காட்டப்பட்ட நிலைமை தொடர்பில் பின்வரும் கூற்றுக்களுள் எது சரியானது / எவை சரியானவை ஆகும்?

1

Review Topic
QID: 4859
Hide Comments(0)

Leave a Reply

கரைசல் யுயின் பிரசாரணவமுக்கம் எவ்வளவாக இருக்கும்?

Review Topic
QID: 4731
Hide Comments(0)

Leave a Reply

ஒரு கலத்தில் தொடக்க முதலுரு சுருங்க நிலையில்?

Review Topic
QID: 4741
Hide Comments(0)

Leave a Reply

கலமொன்றில் முதலுருச் சுருங்கற் தொடக்க நிலையில் சுவரமுக்கம் (W.P) மற்றும் வீக்கவமுக்கம் (T.P) தொடர்பாக பின்வரும் தொடர்புகளில் சரியானது எது?

Review Topic
QID: 4945
Hide Comments(0)

Leave a Reply

Rhoeo இலையின் கீழ்ப்பக்க மேற்றோல் உரியின் இரு துண்டுகள் A,B எனப் பெயரிடப்பட்ட இரண்டு சுக்குரோசுக் கரைசல்களில் தனித்தனியாக அமிழ்த்தப்பட்டன. A கரைசலின் கரைய அழுத்தம் – 1450kPa ஆகும். கரைசல் B இன் கரைய அழுத்தம் – 1120kPa ஆகும். இழையங்கள் கரைசல்களுடன் சமநிலையை அடைந்த பின்னர் கரைசல் A யில் அமிழ்த்தப்பட்ட உரியின் 50% கலங்கள் முதலுருச் சுருங்கிய நிலையில் காணப்பட்டன. B கரைசலில் அமிழ்த்தப்பட்ட கலங்களின் அமுக்க அழுத்தத்திற்கு அண்மித்ததாகக் காணப்படுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6089

Colocasia இலைக்காம்பின் சிறு துண்டுகள் நெடுக்குமுகமாக பகுதி தூரத்துக்குப் பாதி
யாகப் பிளக்கப்பட்டன. இரு பாதிகளும் வெட்டிய உடனே படத்திற்காட்டியவாறு வெளிப்பக்கமாக வளைந்தன. பிளக்கப்பட்ட இலைக்காம்புத் துண்டுகள் 30 நிமிடத்திற்கு நீரினில் அமிழ்த்தப்பட்டன. நீரில் 30 நிமிடத்திற்கு அமிழ்த்திய பின்னர் பிளக்கப்பட்ட இலைக்காம் பின் சரியான தோற்றத்தை பின்வரும் படங்களில் எது எடுத்துக் காட்டுகிறது.

Review Topic
QID: 5118

Answer: 3 & 4

ஒரு தாவரக் கலம் தொடக்க முதலுருச்சுருங்கற் கட்டத்தில் இருக்கும்போது?

Review Topic
QID: 5826

பின்வரும் கூற்றுக்களில் எது தவறானது?

Review Topic
QID: 5827

ஒரு தாவரத்தின் அப்போபிளாஸ்ட் (Apoplast) இனது பகுதி அல்லாதது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 5831

உரியக் (Phloem) கொண்டுசெல்லல் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 5836

தனியாக்கப்பட்ட பச்சையவுருவங்கள் நீரில் வைக்கப்பட்ட போது அவை வீங்கி வெடிப்பது?

Review Topic
QID: 4305

8 வளிமண்டலப் பிரசாரண அமுக்கத்தைக் கொண்ட கலச்சாறுடையதும் 3 வளிமண்டலச் சுவர் அமுக்கத்தை உடையதுமான ஒரு தாவரக் கலம் சுக்குரோசுக் கரைசலில் இடப்பட்டது. பின்வரும் வரிப்படம் 30 நிமிடங்களின் பின் நுணுக்குக் காட்டியின் கீழ் பரிசோதிக்கப்பட்டபொழுது காணப்பட்ட இக் கலத்தின் தோற்றத்தைக் குறித்துக் காட்டுகிறது. மேலே காட்டப்பட்ட நிலைமை தொடர்பில் பின்வரும் கூற்றுக்களுள் எது சரியானது / எவை சரியானவை ஆகும்?

1

Review Topic
QID: 4859

கரைசல் யுயின் பிரசாரணவமுக்கம் எவ்வளவாக இருக்கும்?

Review Topic
QID: 4731

ஒரு கலத்தில் தொடக்க முதலுரு சுருங்க நிலையில்?

Review Topic
QID: 4741

கலமொன்றில் முதலுருச் சுருங்கற் தொடக்க நிலையில் சுவரமுக்கம் (W.P) மற்றும் வீக்கவமுக்கம் (T.P) தொடர்பாக பின்வரும் தொடர்புகளில் சரியானது எது?

Review Topic
QID: 4945
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank