தாவரங்களின் இலிங்கமுறை இனப்பெருக்கம் பல தரைவாய் தாவரங்கள் இலிங்க முறையாலும் இலிங்கமில் முறையாலும் இனப்பெருகுகின்றன. இலிங்கமில் முறையிலும் பார்க்க இலிங்க முறை இனப்பெருக்கத்தில் பாரம்பரிய மாறல்கள் ஏற்படுகின்றன. இதனால் மாறும் சூழலுக்கேற்ற புதிய இசைவாக்கம் கொண்ட மகட் சந்ததிகள் தோற்றுவிக்கப்படும்.
Neprolepisஇன் வா/ வட்டத்தின் வித்தியை தோற்றுவிக்கும் இருமடிய வித்தி தாவர சந்ததியும் புணரியை தோற்றுவிக்கும் ஒரு மடிய புணரிதாவர சந்ததியும் மாறி மாறி தோன்றும். இங்கு புணரி, வித்தி தாவரங்கள் உருவத்தில் மாறுபட்டவை. எனவே பல்லின வடிவ சந்ததி பரிவிருத்தி காணலாம்.
வித்தித்தாவரம் ஆட்சியானது சுயாதீனமானது. ஒளித்தொகுப்புக்குரிய தற்போசணை. உண்மையான வேர்ää தண்டு இலை என்ற பிரிவை காட்டும்.
வித்தித் தாவரத்தில் உண்மையான கடத்தும் இழையமான காழ்ää உரியம் உண்டு. பொறிமுறை தாங்கும் இழையங்களுண்டு. தரைக்கு மேலான பகுதியில் மேற்றோலுக்கு வெளியே கியூற்றினாலான புறத்தோலுண்டு. இடம்மாறிப் பிறந்த வேர்கள் காணப்படும். நிலக் கீழ்த்தண்டு காணப்படும்.
இலை பெரியது. கூட்டிலை இளம் இலைகள் அச்சுருண்ட தனியிலைகளாக காணலாம். இளம் இலைகளின் மேற்பரப்பில் அதிக எண்ணிக்கையான துருவல்கள் காணலாம். (மேற்றோல் மயிர்) மேற்றோலில் இலைவாய்களுண்டு.
வித்தித் தாவரத்தின் முதிர்ந்த சீறிலையின் வயிற்றுப் புறமாக பக்கநரம்புகளின் முனைகளில் இனப்பெருக்க கட்டமைப்பாக “குவைகள்” தோன்றும். குவையினுள் பல வித்திக் கலன்கள் காணப்படும். இவை நங்கூரவடிவ புறவணியால் மூடி பாதுகாக்கப்படும். வித்திக் கலன்கள் நீண்ட காம்பின் மூலம் குவையின் சூல் வித்தகத்துடன் இணைந்துள்ளன.
ஒரு வித்திக் கலனினுள் 2n மடிய பல வித்தி தாய்க்கலங்கள் தோன்றும். இவை ஒடுக்கற் பிரிவிற்குள்ளாகி ஒரு மடியமான ஓரினவித்திகள் தோன்றும்.
வித்திக்கலன் முதிர்ந்ததும் அதன் சுவர் புழை பகுதியில் வெடித்து வித்திகள் கெடபொல (catapol) பொறிமுறையில் காற்றில் வீசப்படும். ஒரு வித்திக் கலனிலிருந்து அதிக எண்ணிக்கையான வித்திகள் தோன்றும். வித்திகள் பருமனில் சிறியவை. பாரம் குறைந்தவை. இவை காற்றால் பரவலடைந்து வளமான சூழலில் விழுந்து முளைப்பதன் மூலம் புணரி தாவரம் தோன்றும்.
புணரித் தாவரம் ஆட்சியற்றது. சுயாதீனமானது. ஒளித்தற்போசணைக்குரியது. உண்மையான வேர்ää தண்டுää இலை என வியத்தடையாத பிரிவிலி. நுணுக்குக் காட்டிக்குரியது. இதய வடிவானது. முதுகுää வயிற்றுப்புறம் தட்டையானது. ஓரில்ல தன்மை கொண்டது. கலனிழையம் இல்லை. வேர்தொகுதி தாங்குமிழையம் என்பன இல்லை. கியூற்றினாலான புறத்தோல் இல்லை.
புணரித் தாவரத்தில் ஊச்சிமொழிää வளரும் முனைää இலிங்க அங்கங்கள் தனிக்கல வேர்போலிகள் என்பன காணலாம். புணரித் தாவர வயிற்றுபுறமாக இலிங்க அங்கங்களும் வேர்ப்போலிகளும் உண்டு
.
இலிங்க அங்கங்களாக ஆதிச்சனனிகள்ää ஆண்கலவாக்கிகள் என்பன காணலாம். ஆண்கலவாக்கிகள் பிரிவிலியின் முதிர்ந்த பகுதியில் காணலாம். இதனுட்பகுதியில் பல 1n மடிய விந்து தாய்க்கலங்கள் காணலாம். இவ்விந்து தாய்க்கலம் இழை யுருப்பிரிவுக்குள்ளாகி ஒரு மடிய பல விந்துபோலிகள் தோன்றும். விந்துபோலி சுருளி வடிவானது. அதனொரு முனையில் பல சவுக்குமுளைகள் காணலாம்
.
பெண்கலச்சனனி ஆதிச்சனனிகள் இளம் பகுதிகளில் காணலாம். இது உதரம் கழுத்து எனும் 2 பகுதிகளைக் கொண்டது. உதரம் பிரிவிலியினுள் புதைந்து காணலாம். உதரத்தினுள் மத்தியில் ஒரு முட்டைக்கலம்/ பெண்புணரி காணலாம். இது வெளியேற்றப்படாது உதரத்தள் நிறுத்தி வைக்கப்படும் குறுகிய வளைந்த கழுத்து காணலாம். பெண்கலச்சனனி முதிர்ச்சியடைந்ததும் உதரக் கால்வாய் கலம் கழுத்து கால்வாய்கலம் என்பன அழிவடையும்.
முட்டைக் கலத்தில் ஒரு வகை இரசாயன பதார்த்தம் சுரக்கப்படும். இப்பதார்த்தத்தால் விந்துப்போலி கவரப்படும். விந்துப்போலி புறநீரில் நீந்தி அசைந்து பெண்கலச்சனனியின் கழுத்தை சென்றடைந்து தொடர்ந்து கழுத்து கால்வாயூடாக அகநீரில் நீந்தி அசைந்து உதரத்திலுள்ள முட்டை கலத்தை சென்றடையும். இங்கு விந்துப்போலி அசைவு இரசாயன இரசணை அசைவாகும்.
அக கருக்கட்டல் நடைபெறும். பெண்கலச்சனனி உதரத்துள் விந்துப்போலியின் ஒரு மடிய கரு முட்டை கலத்துள் சென்று முட்டைக் கலத்தின் ஒரு மடிய கருவுடன் இணைவதால் கருகட்டி 2n கருகொண்ட நுகம் தோன்றும். நுகம் வெளியேற் றப் படாது பெண்கலசனனி உதரத்துள் நிறுத்தி வைக்கப்படும்.
நுகம் இழையுருப்பிரிவுக்குள்ளாகி விருத்தியடைவதன் மூலம் முளையம் தோன்றும். முளையமும் வெளியேற்றப்படாது புணரித்தாவரத்தில் நிறுத்தி வைக்கப்படும். முளையம் நன்கு விருத்தியடைந்த நிலையில் அடி முளையதண்டு முளைவேர் வித்திலை ஆகிய பகுதிகளைக் கொண்டது. முளையம் தொடர்ந்து விருத்தியடைவதன் மூலம் வித்திதாவரம் தோன்றும்.
Cycas தாவரத்தில் வித்திகளை தோன்றும். இரு மடிய வித்தித் தாவர சந்ததியும் புணரிகளை தோன்றும். ஒரு மடிய புணரித் தாவர சந்ததியும் மாறி மாறி தோன்றுதல் சந்ததி பரிவிருத்தி எனப்படும்.
இங்கு வித்தித் தாவர சந்ததியும் புணரித் தாவர சந்ததியும் உருவவியலில் வேறுபட்டிருத்தல் பல்லின / இதர சந்ததி பரிவிருத்தி எனப்படும்.
வித்தித்தாவரம் ஆட்சியானது. சுயாதீனமானது. ஒளித்தற் போசணைக்கு உரியது. உண்மையான வேர் தண்டு இலை என்ற பிரிவை சிறப்பாக காட்டும்.
நன்கு விருத்தியடைந்த ஆணிவோர்தொகுதி உண்டு.
சில பக்கவேர்கள் புவியீர்புக்கு எதிராக வளர்ச்சியடைந்து முலையுரு வேரை தோன்றும்.
இவ்வேரின் மேற்பட்டையில் Anabaenaஎனும் சயனோ பற்றீரியா ஒன்றுக்கொன்று துணையான ஒன்றியவாழி ஈட்டத்தை ஏற்படுத்தி வாழுகின்றது.
தண்டு தடித்தது. பருத்தது. இலை கூட்டிலையாக காணலாம். இலை அடியில் தண்டில் செதிலிலைகள் காணலாம். தண் டுச்சியில் இளம் இலைகள் அக்சுருண்ட தளிரிலைகளாக காணலாம்.
வித்தித்தாவரம் ஈரில்லத் தன்மையுடையது. எனவே ஆண்வித்தித் தாவரம் பெண்வித்தித் தாவரம் என வேறாக காணலாம்
முதிர்ந்த ஆண்வித்தித் தாவரத்தின் தண்டுச்சியில் இலிங்க முறை இனப்பெருக்கக் கூட்டமைப்பாக கூம்பி தோனம்றும். கூம்பி பருமனில் பெரியது. கூம்பின் அச்சை சூழ அதிக எண்ணிக்கையான நுண்வித்தியிலைகள் நெருக்கமாக இணைந்து காணலாம்.
ஒரு நுண்வித்திலையில் வளமான அகன்ற பகுதியில் வளமற்ற ஒடுங்கிய பகுதியும் காணலாம். நுண்வித்தியிலையின் வளமான பகுதியின் கீழ்புறமாக பல குவைகள் காணலாம். ஒவ்வொரு குவையிலும் 2 – 4 நுண்வித்திக்கலன்கள் காணலாம்.
ஒரு நுண்வித்திக் கலனுக்குள் பல இருமடியமான நுண்வித்தித் தாய்க்கலங்கள் விருத்தியடையும். நுண்வித்தித் தாய்க்கலம் ஒடுக்கற்பிரிவிற்குள்ளாகி ஒரு மடியமான பல நுண்வித்திகள் தோன்றும்.
நுண்வித்திக் கலன் முதிர்ச்சியடைந்ததும் நுண்வித்திக் கலனின் சுவர் கங்கணப் பகுதியில் வெடித்து வித்திகள் வெளியேற் றப்படும். வித்திகள் பருமனில் சிறியவை. பாரம் குறைந்தவை. இவை காற்றால் பரவலடையக் கூடியன
முதிர்ந்த பெண் வித்தி தாவரத்தின் தண்டுச்சியில்த பல மாவித்தியிலைகள் தோன்றுவிக்கப்படும். ஒரு மாவித்தியிலையில் நீண்ட காம்பு பல வளமான சூல்வித்துக்கள்ää சில மலடான சூல்வித்துக்கள்ää சிறை பிழப்பான அகன்ற வளமற்ற மாவித்தியிலைப் பகுதி என்பன காணலாம்.
கவசத்தால் சூழப்பட்ட மாவித்திக்கலன் சூல்வித்து எனப்படும். இங்கு ஒரு கவசம் காணலாம். இக்கவசத்தில் 3 படைகளுண்டு.
1. வெளிச்சதை படை
2. நடு கல்லான படை
3. உட்சதைப்படை
ஒரு சூல்வித்தினுள் ஒரு மாவித்திக் கலன் மட்டும் காணலாம். இம்மாவித்திக்கலன் மூலவுருப்பையகம் எனப்படும். ஒரு மாவித்திக்கலனினுள் ஒரு மடியமான ஒரு மாவித்தி தாய்கலன் மட்டும் விருத்தியடையும். இம்மாவித்திதாய் கலம் ஒடுக்கற் பிரிவிற்குள்ளாகி ஒரு மடியமான 4 மாவித்திகள் தோன்றும். இந்நான்கு மாவித்திகளில் ஒன்று மட்டும் வளமானது. 3 வளமற்றது.
வளமான மாவித்தி வெளியேற்றப்படாது மாவித்திலகனிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு பெண்புணரித் தாவரமாக விருத்தியடையும் பெண் பு/ தா விருத்தியடைய மாவித்திக்கலன் மென்சவ்வு போன்ற மூலவுருபையகமான மாறும்.
பெண் பு/ தா நன்கு விருத்தியடைந்த நிலையில் | சூல்வித்தின் நுண்களை பக்கமாக பெண் புணரித் தாவரத்தில் பெண்கலச்சனனி அறை காணலாம். இவ்வறையில் பல ஆதிச்சனிகள் விருத்தியடையும். ஒரு பெண் கலச்சனனியில் (பெண் கலச்சனனியில்) உதிரம், கழுத்து என 2 பகுதிகளுண்டு உதரத்தின் மத்தியில் ஒரு மையக்கலம் காணலாம். மையக் கலத்தின் மத்தியில் ஒரு மடியமான முட்டைக்கரு காணலாம். முட்டைக் கருவுக:கு மேலாக ஒரு உதரக் கால்வாய் கரு காணலாம். கழுத்தில் இதன் கழுத்துக்கலங்கள் மட்டும் காணலாம்.
தாவர கூர்ப்பில் வித்து மூடியிலிகளிலே இறுதியாக பெண் கலச்சனனி தோன்றுகின்றது. பெண்புணரித் தாவரத்தில் வெல்ல உணவுகள் சேமிக்கப்படும்.
பெண்கலச்சனனி அறைக்கும் சூல்வித்து நுண்துளைக்கும் இடையே முலவுருபையக அலகு காணலாம். இதில் சில கலங்கள் அழிவடைந்த மகரந்த அறை தோன்றும்.
நுண்வித்தி முளைத்து ஆண்புணரித் தாவரம் தோன்றும். நுண்வித்திக் கலனுக்குள் இருக்கும் போதே நுண்வித்தி ஆண் பு
/ தா ஆக விருத்தியடைய ஆரம்பித்துவிடும். முதலில் நுண்வித்தி இழையுருப் பிரிவுக்குள்ளாகி மூல பிரிவிலிக்கலம் அண் கலவாக்கிக் கலம் என்பன தோன்றும். ஆண்கலவாக்கிக் கலம் இழையுருப்பிரிவிற்குள்ளாகி குழாய்கலம் பிறப்பாக்கும் கலம் என்பன தோன்றும்.
நுண்வித்தி 3 கல நிலையில் நுண்வித்திக் கலனின் சுவர் கங்கணப் பகுதியில் வெடிப்பதன் மூலம் வெளியேற்றப்படும். வெளியேற்றப்படும் நுண்வித்தி காற்றால் பரவலடைந்து சூல்வித்தின் நுண்துளையை சென்றடையும் சூல்வித்தின் மகரந்த அறையினுள் இந்நுண்வித்திகள் சேர்க்கப்படும்.
மகரந்த அறையினுள் இருந்த நிலையில் நுண்வித்தி தொடர்ந்து வளர்ச்சியடைவதன் மூலம் ஆண்புணரித்தாவரம் தோன்றும். இதன்போது முதலில் குழாய்க் கலத்தின் உள்ளடை வெளியடையை துளைத்து வளர்ச்சியடைவதால் கிளை கொண்ட மகரந்த குழாய் தோன்றும். இம்மகரந்த குழாய் மூலவுருபைய அலகிற்குள் ஊடுருவி வளர்ந்து அங்கிருந்து போசணையை அகத்துறிஞ்சும்.
பிறப்பாக்கும் கலம் இ/ பி உள்ளாகி உடற்கலம்ää காம்புக்கலம் என இரு கலங்களை தோன்றும். உடற்கலம் மேலும் இழை யுருப் பிரிவிற்குள்ளாகி இரண்டு விந்துப் போலிகளை தோன்றும். இங்கு ஒரு ஆண்புணரித் தாவரத்திலிருந்து 2 ஆண் புணரிகள் (விந்துப் போலிகள்) மட்டும் தோன்றும். விந்துப் போலி ‘பம்பர” வடிவானது மத்தியில் தனித்த பெரிய கரு காணலாம். விந்துப் போலியைச் சூழ சுருளியுருவில் பட்டிகையாக பல பிசிர்கள் காணலாம்.
கருக்கட்டலுக்கு புறநீர் தேவையில்லை. அகநீர் தேவை. பெண் புணரித் தாவரம் நன்கு விருத்தியடைந்த நிலையில் அதன் சுவரும் மூலவுருபையக அலகும் அழிவடையும். விந்துப் போலிகள் பெண்கலச்சனனி அறைக்குள் விடுவிக்கப்படும். பெண்கலச்சனனி அறையிலுள்ள வெல்லக் கரைசலினுள் இவை நீந்தி திரியும் பெண்கலச்சனனியின் கழுத்துக் கலங்கள் உதரக் கால்வாய் கலம் என்பன அழிவடையும்.
விந்துப் போலி பிசிர் கொண்ட உடலை பெண்கலச்சனனியினுள் விடுவித்து அதன் விந்துப் போலியின் ஒரு மடிய கரு மட்டும் பெண் கலச்சனனியின் உதரத்திலுள்ள மையக்கலத்துக்குள் செல்லும். அங்கு அகக்கருக்கட்டல் நடைபெறும்.
உதரத்தினுள் விந்துப்போலியின் ஒரு மடிய கரு ஒரு மடிய முட்டைக்கருவுடன் இணைந்து கருக்கட்டுவதன் மூல் 2n மடிய நுகம் தோன்றம். நுகம் வெளியேற்றப்படாது உதரத்தினுக்கு நிறுத்தி வைக்கப்படும். அங்கு நுகம் இழையுருப் பிரிவுக்குள்ளாகி விருத்தியடைவதன் மூலம் முளையம் தோன்றும். முளையம் விருத்தியடைவதன் மூலம் தூக்கணம் தோற்றுவிக்கப்பட்டு பின் மறையும். முளையம் நன்கு விருத்தியடைந்த நிலையில் இரண்டு வித்திலைகள் முளைதண்டு முளைவேர் முளைவேர் கவசம் என்பவற்றை கொண்டிருக்கும்.
ஒரு சூல்வித்தில் பல பெண்புணரிகள் காணப்படுவதால் கருக்கட்டலின் பின் பல நுகங்கள் தோன்றி பல முளையங்கள் விருத்தியடையும். இதனால் ஒரு வித்தில் பல முளையங்கள் காணப்படலாம். இவ்வியல்வு பன்முளையம் கொள்ளும் தன்மை எனப்படும்.
கருக்கட்டலின் பின் சூல்வித்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும்.
நுகம் முளையமாக விருத்தியடையும். முளையத்தில் இரண்டு வித்திலைகள் முளைத்தண்டு முளைவேர் முளைவேர் கவசம் என்பன காணலாம்.
பெண் பு/ தா (in) வித்தகவிழையமாக (in) விருத்தியடைதல். இதன்போது பெண் பு { தா உள்ள வெல்ல சேமிப்பு மாப்பொருள் சேமிப்பாக மாற்றப்படும்.
சூல்வித்துக்கவசம் வித்துறையாக மாற்றப்படும். இதன்போது உட்சதைப்படை அழிவடையும். நடுக்கல்லான படை மேலும் தடிக்கும். வெளிச்சதைப் படை பரம்பலுக்கு விலங்குகளை கவரக் கூடியதாக மாறும்.
சூல்வித்து வித்தாக விருத்தியடையும்.
சூல்வித்தின் நுண்துளை வித்தின் நுண்துளையாக பேணப்படும்.
இவ்வித்துக்கள் மூடப்படாது வெளிக்காட்டப்பட்டுள்ளன. இதனால் இவை நிர்வாண வித்துக்கள் எனப்படும். இவ்வாறான வித்துக்களை தோன்றும். தாவரங்களை வித்து மூடியிலிகள் என்பர். இவற்றின் வித்துக்கள் நீண்ட காலம் உறங்கு நிலையில் காணலாம். உறங்குநிலை களைந்ததும் வளமான சூழலில் வித்துக்கள் முளைத்து வித்தித் தாவரம் தோற்றுவிக்கப்படும்.
ஒரு வித்தில் பல முளையங்கள் காணப்படினும் ஒரு முளையம் மட்டும் வித்தித் தாவரமாக விருத்தியடையும் வித்துக்கள் விலங்குகளினால் பரவலடையும்.
cycas இன் வித்தில் 3 சந்ததிக்குரிய இழையங்களை காணலாம்.
1. வித்துறை – தாய்வித்தித் தாவரம்
2. வித்தகவிழையம் – பெண் பு / தா
3. முளையம் – சேய் வித்தித் தாவரம்.
Selaginella இன் வாழ்க்கை வட்டத்தில் வித்திகளை தோன்றும். இருமடிய வித்தி தாவர சந்ததியும் புணரிகளை தோன்றும். ஒரு மடிய புணரித் தாவர சந்ததியும் மாறி மாறி தோன்றல் சந்ததி பரிவிருத்தி எனலாம்.இங்கு வித்தித் தாவரமும் புணரித் தாவரமும் உருவவியலில் வேறுபட்டதால் இங்கு பல்லின /இதர வடிவ சந்ததி பரிவிருத்தி எனலாம்.வித்திதாவரம் ஆட்சியானது சுயாதீனமானது. ஒளித்தொகுப்புக்குரிய தற்போசணை வேர் தண்டு இலை என்ற பிரிவை காட்டும். சிறிய பூண்டு தாவரமாகும். தண்டு இணைகவர் கிளை கொள்ளலை காட்டும். தண்டில் பெரிய இலை சிறிய இலை என 2 வகை இலைகளுண்டு. இவ்வியல்பு பல்லின இலை உண்மை எனலாம். தண்டு கிளை கொள்ளும் இடத்தில் வேர்தாங்கி காணலாம். இவ்வேர்த்தாங்கியின் முனையில் இடமாறிப்பிறந்த வேர்கள் உண்டு. பெரிய இலை சிறிய இலை அடியில் சிறுநா காணலாம்.
வித்தித் தாவரம் ஓரில்லம். முதிர்ந்த வி / தாவரத்தின் அங்குர உச்சியில் இனப்பெருக்க கட்டமைப்பாக கூம்பி தோன்றும்கூம்பி சிறியது. நுணுக்குகாட்டிக்குரியது. கூம்பியின் அச்சில் நுண்வித்தியிலைகளும் மாவித்திலைகளும் சுருளி ஒழுங்கில் நெருக்கமாக இணைந்து காணலாம். கூம்பியின் அடிப்பகுதியில் மாவித்தியிலைகளும் மேற்பகுதியில் நுண்வித்தியிலைகளும் காணப்படலாம். மாவித்தியிலையின் அடியில் மேற்பகுதியில் ஒரு மாவித்திக்கலன் காம்பின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
ஒரு மாவித்திக்கலனுக்குள் இருமடியமான ஒரு மாவித்தி தாய்க்கலம் மட்டும் விருத்தியடையும். இம்மாவித்தி தாய்க்கலம் ஒடுக்கற் பிரிவுக்குள்ளாகி ஒரு மடியமான 4 மாவித்திகள் தோன்றும். இந்நான்கு மாவித்திகளும் வளமானவை.
ஒரு நுண்வித்தியிலையின் அடியின் மேற்பகுதியில் ஒரு நுண்வித்திக் கலன் காம்பின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு நுண்வித்திக் கலனுக்குள் இருமடியமான பல நுண்வித்தி தாய்க்கலங்கள் விருத்தியடையும்.
Selaginella இன் வாழ்க்கை வட்டத்தில் பருமனில் சிறிய நுண்வித்தியும் பருமனில் பெரிய மாவித்தியும் தோன்றும் தன்மை பல்லின வித்தியுண்மை எனலாம். ளுநடயபiநெடடய இன் ஒரு வித்திதாவரத்திலிருந்தே நுண்வித்தியும் மாவித்தியும் தோன்றுகிறது. இது ஓரில்லத் தன்மை எனலாம்.
வித்திக் கலனிலிருந்து வித்திகள் வெளியெற்றப்படுவதற்கு விசேட பொறிமுறைகள் இல்லை. வித்திகள் வித்திக் கலனுக்குள் இருக்கும் போதே முளைத்து புணரித் தாவரமாக விருத்தியடையும்.
நுண்வித்தி முளைத்து விருத்தியடைவதன் மூலம் ஆண்புணரித்தாவரம் தோன்றும். மாவித்தி முளைத்து விருத்தியடைவதன் மூலம் பெண்புணரித் தாவரம் கொண்டவை. புணரித்தாவரங்கள் ஆட்சியற்றவை. சுயாதீனமற்றவை. முழுமையாகவோ/ பகுதியாகவோ வித்தி தாவரத்தில் தங்கி வாழும். இவை இலை தண்டு வேர் எனும் பிரிவு காட்டாத பிரிவிலிகளாகும். நுணுக்குக் காட்டிக்குரியவை ஆண்புணரித் தாவரம் நுண்வித்திச் சுவருக்குள் விருத்தியடைந்து காணலாம். இதில் பதியவுடல் | மூலப்பிரிவிலிக்கலம் எனும் தனிக்கலமாக ஒடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆண்கலவாக்கியின் மத்தியில் மையக் கலங்கள் உண்டு. மையக் கலங்கள் இழையுருப்பிரிவுக் குள்ளாகி விந்துப் போலிகள் (in) தோன்றும். ஒரு ஆண்புரித் தாவரத்திலிருந்து அதிக எண்ணிக்கையான விந்துப் போலிகள் தோன்றும். விந்துப் போலியின் ஒரு முனையில் இரண்டு சவுக்குமுளைகள் காணலாம். ஆண் புணரித் தாவரம் ஒளித்தொகுப்பு செய்யாது. முழுமையாக வித்தித் தாவரத்தில் தங்கி வாழ்கின்றது.மாவித்தி முளைத்து பெண்புணரித் தாவரம் தோன்றும். பெண்புணரித் தாவரம் விருத்தியடையும் போது மாவித்திச் சுவர் மூவாரைக்குரிய திசையில் பிளவடையும். இப்பிளவுக் கூடாக பெண்கலச்சனனிகள் தனிக்கல வேர்ப் போலிகள்Chlorophil2 கொண்ட ஒளித் தொகுப்பு இழையம் என்பன வெளிக்காட்டப்படும். பெண்புணரித் தாவரம் ஓரளவு ஒளித்தொகுப்பு செய்யக்கூடியது. எனவே பகுதியாக வித்தித்தாவரத்தில் தங்கி வாழுகின்றது.
பெண்கலச்சனனி | உதரம் கழுத்து எனும் இருபகுதிகளைக் கொண்டது. உதரம் பெண்புணரித் தாவரத்துள் புதைந்து காணலாம். உதரத்தினுள் மத்தியில் ஒரு முட்டைக்கலம் (பெண்புணரி) காணலாம். இதற்கு மேற்புறமாக உதரக் கால்வாய் கலம் காணலாம். பெண்கலச் சனனியின் கழுத்து | குறுகியது. நேரியது.
கருக்கட்டலுக்கு புறநீர் அகநீர் அவசியம். பெண்கலச்சனனி முதிர்ச்சியடைந்ததும் அதன் உதரக் கால்வாய்கலம் கழுத்துக் கால்வாய்கலம் என்பன அழிவடையும். முட்டைக் கலத்தால் ஒரு வகை இரசாயனப் பதார்த்தம் சுரக்கப்படும். இப்பதார்த் தத்தின் தூண்டலால் விந்துப் போலி கவரப்படும்.
விந்துப் போலி புறநீரில் நீதியசைந்து பெண்கலச்சனனியின் கழுத்தைச் சென்றடைந்து தொடர்ந்து கழுத்துக் கால்வாய்க் கூடாக அகநீரில் நீந்தியசைந்து உதரத்தில் உள்ள முட்டைக் கலத்தைச் சென்றடையும் விந்துப்போலியின் அசைவு இரசா யன இரசணை அசைவாகும்.
அகக்கருக்கட்டல் நடைபெறும். பெண் கலச்சனனி உதரத்தினுள் விந்துப் போலியின் ஒரு மடிய கரு முட்டைக் கலத் திற்குள் சென்று முட்டைக் கலத்தின் ஒரு மடிய கருவுடன் இணைவதன் மூலம் கருக்கட்டி இருமடியக்கரு கொண்ட நுகம் தோனலாம். நுகம் வெளியேற்றப்படாது. பெண்கலச்சனனி உதரத்தினுள் நிறுத்தி வைக்கப்படும்.
நுகம் இழையுருப் பிரிவுக்குள்ளாகி விருத்தியடைவதன் மூலம் முளையம் தோற்றுவிக்கப்படும். முளையம் வெளியேற்றப் படாது புணரித் தாவர்தில் இளையம் நிறுத்தி வைக்கப்படும்.
முளையம் நன்கு விருத்தியடைந்த நிலையில்ää அடிää முளைத் தண்டுää முளைவேர்ää தூக்கணம் வித்திலை ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும் முளையம் தொடர்ந்து விருத்தியடைவதன் மூலம் வித்தித் தாவரம் தோன்றும்.
Pogonatum தாவரத்தின் வாழ்க்கை வட்டத்தில் புணரிகளை தோற்றுவிக்கும் ஒருமடியமான புணரித் தாவர சந்ததியும் வித்திகளை தோற்றுவிக்கும் இருமடியமான வித்தித் தாவர சந்ததியும் மாறி மாறி தோன்றுகின்றது. இங்கு புணரித் தாவரமும் வித்தித் தாவரமும் உருவவியலில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. எனவே, Pogonatum இன் வாழ்க்கை வட்டம் இதர or பல்லின வடிவ சந்ததி பரிவிருத்தியை காட்டுகின்றது.
புணரித் தாவரம் ஆட்சியானது சுயாதீனமானது. ஒளித்தொகுப்புக்குரிய தற்போசணை. உண்மையான வேர். தண்டு, இலை என்ற பிரிவு காட்டாத பிரிவிலி எனினும் வேர்போலி, தண்டுபோலி, இலைபோலி எனும் பிரிவை காட்டும்.
உண்மையான கடத்தும் இழையமான காழ், உரியம் இல்லை. மேற்றோலுக்கு வெளியே கியூற்றினாலான புறத்தோற்படை இல்லை. பொறிமுறை தாங்கும் இழைய விருத்தி குறைவு. உண்மையான வேர்தொகுதி இல்லை.
முதிர்ந்த ஆண்புணரி தாவரத்தின் தண்டுபோலியின் உச்சியில் விசேட கட்டமைப்பாக கருச்சுற்று தோற்றுவிக்கப்படும். கருச்சுற்றில் இலைபோலிகள் செறிந்து காணப்படும். இவவ்றுக்கிடையில் இலிங்க அங்கமாக பல அண்கலவாக்கிகளும் பல புடை வளரிகளும் காணலாம். புடைவளரிகள் ஆண்கல வாக்கியை பாதுகாக்கின்றது.
ஆண்கலவாக்கி குண்டாந்தடி வடிவானது. காம்பின் மூலம் தண்டுச்சியில் இணைந்துள்ளது. ஆண்கலவாக்கியினுள் ஒரு மடியமான பல விந்து தாய்க்கலங்கள் காணலாம்.
இவ்விந்து தாய்கலம் இழையுரு பிரிவிற்குள்ளாகி விந்துபோலிகள் தோன்றும். ஒரு ஆண்கலவாக்கியிலிருந்த பெருந்தொகை யான விந்துபோலிகள் தோன்றும். ஆண்கல வாக்கியின் முளைசுவர் சிதைவடைவதன் மூலம் விந்து போலிகள் சூழலுக்கு விடுவிக்கப்படும்.
விந்துபோலி வளைந்தது / சுருளி வடிவானது. இதன் ஒரு முனையில் இரு சவுக்குமுளைகள் உண்டு.முதிர்ந்த பெண்புணரி தாவரத்தின் தண்டுபோலியின் உச்சியில் இலிங்க அங்கங்களாக ஆதிச்சனனிகள் / பெண்கல சனனிகள் புடைவளரிகள் இலைபோலிகள் காணலாம்.
ஆதிச்சனனி குழாயுருவானது. இதில் காம்பு ,உதரம், நேரிய நீண்ட கழுத்து எனும் 3 பகுதிகளுண்டு உதரத்தினுள் மத்தியில் ஒரு முட்டைக்கலம்/ பெண்புணரியும் மேலாக உதரகால்வாய் கலமும் காணலாம்.
பெண்கலசனனி முதிர்வடைந்ததும் கழுத்து கால்வாய் கலங்கள் உதர கால்வாய் கலம் என்பன அழிவடையும். முட் டைக்கலத்தால் ஒருவகையான இரசாயன பதார்த்தம் சுரக்கப்படும். இப்பதார்த்த தூண்டலால் விந்துபோலி கவரப்படும்.
கருக்கட்டலுக்கு புறநீர்ää அகநீர் அவசியம் விந்துபோலி புறநீரில் நீந்தி அசைந்து ஆதிசனனியின் கழுத்தின் உச்சியை சென்றடையும். பின் கழுத்து கால்வாயினூடு அகநீரில் நீந்தி அசைந்து முட்டைக் கலத்தை அடையும்.
உதரத்தினுள் அகக்கருக்கட்டல் நடைபெறும். இதன்போது விந்துபோலியின் ஒருமடிய கரு முட்டை கலத்தினுள் சென்று அதன் கருவுடன் இணைவதன் மூலம் இருமடிய கருகொண்ட நுகம் தோன்றும். நுகம் வெளியேற்றப்படாது உதரத்தி னுள் நிறுத்தி வைக்கப்பட்டு இழையுருப்பிரிவுக்குள்ளாகி முளையமாக விருத்தியடையும்.
Pogonatum இன் முளையம் சிறப்பு விருத்தி குறைந்தது. முளையம் வெளியேற்றப்படாது. பெண்புணரி தாவரத்தின் உதரத்தினுள் தங்கியிருந்து மேலும் விருத்தியடைவதன் மூலம் வித்திதாவரம் தோன்றும்.
வித்திதாவரம் ஆட்சியற்றது. சுயாதீனமற்றது. பெண்புணரி தாவரத்தில் பகுதியாக தங்கி வாழும். இதில் அடி உலோமம் வில்லையம் எனும் 3 பகுதிகளுண்டு.
உலோமத்தில்chlorophil உண்டு. எனவே, வித்திதாவரம் ஓரளவு ஒளித்தொகுப்பு செய்யும்.
வில்லையத்தினுள் இருமுடிய பல வித்திதாய்க் கலங்கள் விருத்தியடையும். வித்திதாய்கலம் ஒடுக்கற்பிரிவுக்குள்ளாகி ஒரு மடிய பல வித்திகள் தோற்றுவிக்கப்படும். இங்கு ஓரின வித்திகள் தோன்றும். எனவேää வித்திகள் யாவும் ஒரே பருமனுடையவை. ஆனால் பாரம்பரிய வேறுபாடு கொண்டவை. ஒரே வில்லையத்திலிருந்து பெருந்தொகையான வித்திகள் தோன்றும். இவ்வித்திகள் பருமனில் சிறியவை. பாரம் குறைந்தவை. காற்றால் பரம்பலடையக் கூடியவை.
வித்திதாவரம் முதிர்ந்ததும் உலோமம் வளையும். கவசம் முடிவுரு கொட்டப்பட்ட வாய்ச்சுற்று பற்கள் வெளிகாட்டப்படும். காற்றில் வில்லையம் அசையும் போது வாய்ச்சுற்று பல் இடைவெளிக்களுக்கூடாக வித்திகள் காற்றில் தூவப்படும். இவ்செயல் தூபமூட்டு பொறிமுறை எனப்படும்.
வித்திகள் வளமான சூழலில் விழுந்து முளைப்பதன் மூலம் இழைமுதல் தோற்றுவிக்கப்படும். இழைமுதல் இழையுருவான கிளை கொண்டது. இதில் தரைமேலான தரை கீழான பகுதிகளுண்டு. தரை மேலான பகுதியில்Chlorophil2 உண்டு. ஒளித்தொகுப்பு செய்யும். இழைமுதலில் அரும்புகள் தோற்றுவிக்கப்பட்டு புணரி தாவரம் விருத்தியடையும். ஒரு இழைமுதலில் பல புணரி தாவரங்கள் தோன்றலாம். எனினும் எல்லா புணரி தாவரங்களும் ஒரே இலிங்க இயல்பை கொண்டுள்ளன.
பூக்கும் தாவரத்தின் வாழ்க்கை வட்டத்தில் புணரிகளை தோற்றுவிக்கக் கூடிய புணரித் தாவர சந்ததியும் (in) வித்திகளை தோற்றுவிக்கக் கூடிய 2n மடிய வித்தித் தாவர சந்ததியும் மாறி மாறி தோன்றுகின்றது. இங்கு புணரித் தாவரமும் (in) வித்தித் தாவரமும் (2n) உருவவியலில் வேறுபட்டு காணப்படுதல் இதர ழுசு பல்லின சந்ததி பரிவிருத்தி எனப்படும்.
வித்தித் தாவரம் ஆட்சியானது சுயாதீனமானது. ஒளித் தற்போசணைக்குரியது. பதியவுடல்ää வேர்ää தண்டுää இலை எனும் பிரிவை சிறப்பாக காட்டும்.
முதிர்ந்த வித்தித் தாவரத்தில் இனப்பெருக்க கட்டமைப்பாக ‘பூ” தோற்றுவிக்கப்படும்.
பூவின் பகுதிகள் தொழில்கள்
1. மகரந்த கூடு ஆணகம் – மகரந்த மணிகளை உற்பத்தியாக்கல்
2. இழை – மகரந்த கூட்டை தாங்குதல்
3. சூலகம் பெண்ணகம் – சூல்வித்து உற்பத்தி
4. குறி – மகரந்த மணிகளை வாங்குதல்
5. தம்பம் – குறியை உயர்ந்த நிலையில் பேணல்
– மகரந்த குழாய் வளர்வதற்கு இடம் வழங்கல்
6. அல்லி (அல்லிவட்டம்) பலபான இழைகள் – பூவின் பிரதான பகுதிகளை பாதகாத்தல்
– (சில பூக்களில்) மகரந்த சேர்க்கைக்காக பூச்சிகளை கவர்தல்
7. புல்லி – பூ அரும்பு நிலையில் பூவின் பகுதிகளை பாதுகாத்தல்
8. ஏந்தி – பூவின் பகுதிகளை தாங்கி வைத்திருத்தல்
9. பூக்காம்பு { புன்னடி – பூவை தாவர தண்டுடன் இணைத்தல்
ஒரு பூவின் பிரதான பகுதிகள் ஆணகம், பெண்ணகம் ஆகும். ஒரு பூவின் ஆணகப்பகுதியில் 2 ஃ அதற்கு மேற்பட்ட கேசரங் கள் காணலாம். ஒரு கேசரத்தில் மகரந்த கூடு, இழை எனும் 2 பகுதிகளுண்டு.
ஒரு மகரந்த கூட்டில் 2 மகரந்த சோணைகளுண்டு. ஒவ்வொரு மகரந்த சோணையிலும் 2 மகந்தர பைகள் வீதம் ஒரு மகரந்த கூட்டில் 4 மகரந்த பைகள் உண்டு. ஒவ்வொரு மகரந்த பையிலும் 2n மடிய பல மகரந்த தாய்க் கலங்கள் விருத்தியடையும். இம்மகரந்த தாய்க்கலம் ஓடுக்கற் பிரிவிற்குள்ளாகி in மடிய பல மகரந்த மணிகளை தோன்றும்.
மகரந்த கூட்டின் மத்தியில் கலனிழையம் உண்டு. மகரந்த கூட்டின் சுவரில் வெளியிலிருந்து உள்நோக்கி முறையே :
ய. மேற்றோல்படை டி. நார்படை உ. சுவர்படை ன. போசணைப்படை
எனும் 4 படைகள் காணப்படும்.
மகந்த பைகளின் உட்புறச் சுவராக போசணைப் படை உண்டு. இதிலிருந்து மகரந்த மணிகள் போசணையை பெறும்.
மகரந்த சோணைகளின் பக்கப்புறமாக புழைப் பகுதி காணலாம். மகரந்த கூடு முதிர்ச்சியடைந்ததும் அது புழைப்பகுதியில் வெடித்து மகரந்த மணிகள் வெளியேற்றப்படும். மகரந்த மணிகள் காற்றால் { நீரால் விலங்குகளால் பரம்பலடையும்.
மகரந்த மணிகள் பருமனில் சிறியவை. பாரம் குறைந்தவை. ஒரு மகரந்த கூட்டிலிருந்து அதிக எண்ணிக்கையான மகரந்த மணிகள் தோன்றும்.
ஒரு பூவின் பெண்ணகப் பகுதியில் ஒன்று/ பல சூல்வித்திலைகள் காணலாம். ஒரு சூல்வித்திலையில் சூலகம் தம்பம் குறி எனும் 3 பகுதிகளுண்டு. ஒரு சூலகத்தினுள் ஒன்று / பல சூல்வித்துக்கள் காணலாம்.
ஒரு சூலகத்தில் ஒன்று { பல சூலக அறைகள் காணப்படலாம். ஒரு சூலக அறையில் ஒன்று { பல சூல்வித்துக்கள் காணப்படலாம். சூல்வித்தானது சூல்வித்திழை மூலம் சூலக அறையில் சூல்வித்தகத்துடன் இணைந்துள்ளது.
சூல்வித்து என்பது | சுவசத்தால் சூழப்பட்ட மாவித்திக் கலன் ழுசு மூலவுருப்பையகமாகும்.
இங்கு சூல்வித்தில் உட்கவசம் வெளிக்கவசம் என 2 கவசம் சூழ்ந்த காணலாம். சூழ்வித்துக்கவசத்தில் நுண்களை காண லாம். ஒரு சூல்வித்தினுள் ஒரு மாவித்திக்கலன் ழுசு மூலவுருப்பையகும் உண்டு. இம்மூலவுருப் பையகத்தினுள் ஒரேயொரு மாவித்தி தாய்க்கலம் (2n) மட்டும் விடுப்படும். இம்மாவித்தித் தாய்கலம் ஒருக்கற் பிரிவுக்குள்ளாகி 4 மாவித்திகள் தோன்றும்.
இந்நான்கு மாவித்திகளில் ஒன்று மட்டும் வளமானது. ஏனைய மூன்றும் வளமற்றது. வளமான மாவித்தி மூலவுருப்பை யகத்திலிருந்து போசணையை பெற்று பெண்புணரித் தாவரம் ழுசு முலையப்பையாக விருத்தியடையும்.
மாவித்தி முலையப்பையாக விருத்தியடையும் போது முதலில் மாவித்தி வளர்ச்சியடைந்து பருமனில் அதிகரிக்கும். இம்மாவித்திக்கரு அடுத்தடுத்து மூன்று தடவை இழையுருப் பிரிவுக்குள்ளாகும். இதன் மூலம் ஒரு மடியமான 8 கருக்கள் தோன்றும். இதில் குழியவுருப்பிரிவு நடைபெற்று 7 கலங்கள் கொண்டதாக முலையப்பை தோன்றும்.
1. முட்டைக்கலம் – 01
2. உதவிவழங்கிக் கலங்கள் – 02
3. எதிரடிக் கலங்கள் – 03
4. இரு முனைவுக் கருக்கள் கொண்ட கலம் – 01
முலையப்பை விருத்தியடைவதால் மூலவுருப்பையகம் மெல்லிய மென்சவ்வு போன்றதாக மாறும்.
மகரந்தக் கூட்டின் மகரந்த பையில் மகரந்த மணிகள் தோற்றுவிக்கப்படும். தோன்றும் மகரந்தமணி ஒரு கலம்ää ஒரு கருவை கொண்டது. அதைச் சூழ 2 கவசங்கள் காணலாம்.
1. அத்தமற்ற வெளியடை
2. அழுத்தமான உள்ளடை
மகரந்த மணிகள் மகரந்தக் கூட்டின் மகரந்த பைக்குள் இருக்கும் போதே அண்புணரித் தாவரமாக விருத்தியடைய தொடங்கிவிடும். இதன்போது மகரந்த மணிக்கரு இழையுருப்பிரிவுக்குள்ளாகி ஒரு மடியமான இரு கருக்கள் தோன்றும்.
1. பிறப்பாக்கும் கரு (in)
2. குழாய்க்கரு (in)
ஒரு கலம் இரு கரு நிலையில் மகரந்தமணி மகரந்த கூடு வெடிப்பதன் மூலம் வெளியேற்றப்படும். மகரந்த மணிகள் காற்றால்/{ நீரால் / விலங்குகளால் (பூச்சிகள்) பரம்பலடையும்.
இவ்வாறு பரம்பலடையும் மகரந்த மணிகள் வாங்கும் தன்மையுடைய குறியை சென்றடையும். இச்செயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்த சேர்க்கையின் பின் மகரந்த மணி குறியில் முளைத்து வளருவதன் மூலம் விருத்தியடைந்து ஆண்புணரித்தாவரம் தோன்றும். இதன்போது முதலில் மகரந்த மணியின் குழாய்க்கருவின் கட்டுப்பாட்டால் உள்ளடை வெளியடையை துளைத்து வளரும். இதன்மூலம் கிளையற்ற மகரந்த குழாய் தோன்றும். இதன்போது பிறப்பாக்கும் கரு (in) இழையுருப் பிரிவுக்குள்ளாகி ஒரு மடியமான இரு ஆண்புணரிகள் தோன்றும்.
ஆண்புணரியின் உடல் கருவை மட்டும் கொண்டது. இதில் பிசிர்ää சவுக்குமுளை குழியவுரு என்பன இல்லை. எனவே இவ் ஆண்புணரி சுயாதீனமாக அசையமாட்டாது. மகரந்தக் குழாயிலுள்ள குழியவுரு ஒட்டத்தின் மூலம் அசையும். ஒரு ஆண்புணரித் தாவரத்திலிருந்து 2 ஆண்புணரிகள் மட்டும் தோன்றும்.
மகரந்தக் குழாய் : சூல்வித்திலையின் தம்பம்ää சூலக அறை சூல்வித்தின் நுண்துளை மூலவுருப்பையகம் என்பவற்றுக் கூடாக வளர்ச்சியடைந்து முளையப்பையினுள் ஊடுருவியதும் அதன் முனைப்பகுதியும் குழாய்க்கருவும் அழிவடையும். இரண்டு ஆண்புணரிகளும் ம / குழாயினூடு கடத்தப்பட்டு முளையப்பைக்குள் சேர்க்கப்படும். இந்நிலையில் முளையப்பையிலுள்ள ஒரு மடிய முனைவுக்கருக்கள் இணைந்து ஒரு மடியமான ஒரு துணைக்கரு தோன்றும்.
கருக்கட்டலுக்கு அகநீரோ புறநீரோ தேவையில்லை. அகக்கருக்கட்டல் நடைபெறும்.
முளையப்பைக்குள் விடுவிக்கப்படும். இரண்டு ஆண்புணரிகளில் ஒரு மடியமான ஒரு ஆண்புணரி கரு ஒருமடியமான பெண்புணரி { முட்டைக் கலத்தின் கருவுடன் இணைந்து இரு மடிய கரு கொண்ட நுகம் தோன்றும். மற்றைய ஒரு மடிய ஆண்புணரி கரு பெண்புணரி அல்லாத இரு மடிய துணைக்கருவுடன் இணைந்து மும்முடிய வித்தகவிழைய கரு தோற்றுவிக்கப்படும். இவ்வாறான கருக்கட்டல் செயன்முறை இரட்டைக் கருக்கட்டல் எனலாம். இவ்வியல்பு பூக்குந் தாவரங்களில் மட்டுமே காணலாம்.
கருக்கட்டலின் பின் சூலகம் சூல்வித்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும்.
இக்கருக்கட்டலால் உருவாகும் நுகம் இழையப்பிரிவுக்குள்ளாகி விருத்தியடைவதன் மூலம் முளையம் தோற்றுவிக்கப்படும்.
இதன் போது முதலில் நுகம் இழையுருப்பிரிவுக்குள்ளாகி முளையக்கலம் தூக்கணக்கலம் தோன்றும். முளையக் கலம் மேலும் இழையுருப்பிரிவுக்குள்ளாகி விருத்தியடைவதன் மூலம் முளையம் தோன்றும். தூக்கணக்கலம் மேலும் இழை யுருப் பிரிவுக்குள்ளாகி விருத்தியடைவதன் மூலம் தூக்கணம் அடிக்கலம் தோன்றும்.
1. முளையம் நன்கு விருத்தியடைய தூக்கணம் அடிக்கலம் என்பன அழிவடையும். நன்கு விருத்தியடைந்த முளையத்தில் ஒன்று { இரண்டு வித்திலைகள் முளைதண்டு முளைத்தண்டுகவசம் முளைவேர் முளைவேர் கவசம் என்பவற்றை கொண்டிருக்கும்.
2. கருக்கட்டலின்பின் உருவாகும் வித்தக விழையக் கரு மேலும் விருத்தியடைந்து உணவு சேமிக்கப்படுவதன் மூலம் மும்மடிய வித்தகவிழையம் தோற்றுவிக்கப்படும்.
3. சூல்வித்து வித்தாக விருத்தியடையும்.
4. சூல்வித்துக்கவசம் வித்துறையாக விருத்தியடையும்.
5. சூலகம் பழமாக விருத்தியடையும் சூலகச் சுவர் சுற்றுக்கணியமாக விருத்தியடையும் சில சுற்றுக்கணியம் நன்கு விருத் தியடைந்து வெளிக்கணியம் இடைக்கணியம்ää உட்கணியமாக காணப்படும்.
6. சூல்வித்திழை இணைந்த வித்தின பகுதி வித்துத் தழும்பாக மாறும்.
7. சூல்வித்தின் நுண்களை வித்தின் நுண்துளையாக தொடர்ந்து காணப்படும்.
தோன்றும் வித்துக்கள்ää பழங்கள் காற்றால் / நீரால்/ விலங்குகளால் பரம்பலடையும் வித்துக்கள் குறித்த காலம் உறங்கும் நிலையில் காணப்படும். உறங்குநிலை குலைந்ததும் வளமான சூழலில் வித்துக்கள் முளைத்து வித்தித் தாவரம் தோற்று விக்கப்படும்.