சுவாச வாயுக்களின் கொண்டு செல்லல்
O2 கொண்டு செல்லல்
உட்சுவாசத்தின் மூலம் சிற்றறைகளை அடைந்த வளியிலுள்ள O2 வாயுப் பரிமாற்றம் அடைந்து சிற்றறை குருதிக் கலனினுள் சென்று RBC யினுள் சென்று Haemoglobin னுடன் இணைந்து ஒட்சி ஹீமோகுளோபினாக மாற்றமடையும்.
1. மூலக்கூறு ஹீமோகுளோபினுடன் 4 மூலக்கூறு O2 இணையும்
Hb + 4O2 ⇔ HbO2
இவ் ஒட்சி ஹீமோகுளோபின் குருதியினூடு கொண்டு செல்லப்பட்டு இழையங்களினூடு மீண்டும் பிரிகையடைந்து அகவாயுப் பரிமாற்றம் அடைந்து கலத்தின் இழைமணியை அடையும்.
CO2 கொண்டு செல்லல்
மனிதனில் CO2 3 வேறுபட்ட முறைகளில் கொண்டு செல்லப்படும்.
1. குருதி முதலுருவில் H2CO3ஆக (5%)
2. காபமினோ ஹீமோகுளோபினாக (10%)
3. HCO3- ஆக (85%) – இரு காபனேற் அயனாக
மிகவும் சிறிய அளவிலான CO2 குருதியின் தாயம் / முதலுருவில் உள்ள நீரில் கரைந்து காபோனிக் அமிலமாக கொண்டு செல்லப்படும்.
ஒரு பகுதி CO2 RBC யிலுள்ள ஹீமோகுளோபினுடன் இணைந்து காபமினோ ஹீமோகுளோபினாக மாற்றப்பட்டு சிற்றறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு காபமினோ ஈமோகுளோபின் பிரிகையனடைந்து CO2 வாயுப் பரிமாற்றம் அடைந்து வெளிச்சுவர் சத்தின் மூலம் வெளியேற்றம்.
பெருமளவான CO2 குருதியின் RBC யில் சென்று அங்குள்ள நீரில் கரைந்து காபோனிக் அமிலத்தை உருவாக்கும்.
இத் தாக்கத்தை carbonic anhydrase நொதியம் ஊக்கும்.
பின்பு காபோனிக் அமிலம் பிரிகையடைந்து H+,Hco3-ஆக மாற்றமடைந்து Hco3-,RBC யிலிருந்து குருதி முதலுமிவை அடைந்து Na+உடன் இணைந்து NaHco3- யை உருவாக்கும்.
இந்நிலையில் குருதியினூடாக கடத்தப்பட்டு சிறுநீரகத்தினூடாக வெளியேற்றப்படும்.
இதன்போதுRbC க்குள் அயன் சமநிலை பேண Cl- குருதி முதலுருவிலிருந்து RBcக்குள் செல்லும் இச்செயல் முறை Cl- நகர்வு / பெயர்ச்சி எனப்படும்.
Haemoglobin Rbc க்குள் pH ஐ மாறாமல் பேணுவதிலும் பங்கு கொள்கிறது.