Please Login to view full dashboard.

சமிபாட்டுத் தொகுதியின் பிரதான சுரப்பிகள்

Author : Admin

14  
Topic updated on 02/14/2019 01:00am
சதையச் சுரப்பி

Pic - 16

  • வயிற்றுக்குழியில் முன்சிறுகுடல் வளைவினுள் / தடத்தினுள் அடைந்து காணப்படும். இரைப்பைக்கு கீழாகவும் இடது சிறுநீரகத்துக்கு முன்பாகவும் மண்ணீரல் வரை நீட்டப்பட்டு காணப்படும். Please Login to view the QuestionPlease Login to view the Question
  • அகன்ற தலைப்பகுதியையும் தொடர்ந்து உடற்பகுதியையும் அதை தொடர்ந்த ஒடுங்கிய வால்ப்பகுதியையும் கொண்டது.
  • தலைப்பகுதி முன்சிறுகுடல் விளைவினுள் காணப்படும்.
  • இச் சுரப்பியில் அகஞ்சுரக்கும், புறஞ்சுரக்கும் பகுதிகள் உள்ளன. எனவே, இது அகஞ்சுரக்கும், புறஞ்சுரக்கும் சுரப்பியாக தொழிற்படும்.
  • இதன்  புறஞ்சுரக்கும்  பகுதி அதிக  எண்ணிக்கையான  சதையச் சிறு சோணைகளை கொண்டது.
  • இச்சதையச் சிறுசோணையில் அனேக சதையச் சிற்றறைகள் காணப்படும்.
  • சதையச் சிற்றறையின் சுவர்கள் சுரக்கும் கலங்களான கனவடிவ மேலணியாலான சதையக்குலை கலங்களை கொண்டது. (ACINI கலம்) இவை சுரக்கும் சுரப்பு சதையச்சாறு எனப்படும்.
  • இச்சதையச்சாறு சதையச் சிற்றறைகளிலுள்ள சிறிய கான்களினூடாக எடுக்கப்பட்டு பின்பு இவை இணைந்து சதையக் கானை உருவாக்கும்.
  • சதையக்கான் சதையியின் பின்னிருந்து முன்னோக்கி நீட்டப்படும். முன்சிறுகுடலின் நடுப்புள்ளியில் திறக்கும்.  திறப்பதற்கு முன் பித்தக்கானுடன் இணைந்து விரிமுனையை ஆக்கும்.
  • விரிமுனை முன்சிறுகுடலில் திறக்கும் வாயில் ஓடியின் இறுக்கியினால் கட்டுப்படுத்தப்படும்.
  • இலங்ககான் தீவு அகஞ்சுரக்கும் பகுதியாகும்.
  • இது ஒவ்வொரு சதையச் சிறுசோணையின் மத்திய பகுதியிலும் அமைந்து காணப்படும்.
  • இதில் 2 வகையான கலக்கூட்டமுள்ளன.
    • α கலங்கள் – குறைந்த எண்ணிக்கையில் காணப்படும். பருமனில் பெரிய கலங்கள். சுற்றயல் பகுதியில் காணப்படும். குளுக்ககோன் ஓமோனைச் சுரக்கும்.
    • β கலங்கள் – அதிக எண்ணிக்கையில் காணப்படும். பருமனில் சிறிய கலங்கள். தீவின் நடுப்பகுதியில் காணப்படும். இன்சுலின் ஓமோனைச் சுரக்கும்.

சதையியின் தொழில்கள்

  • புறஞ்சுரக்கும் பகுதியாக தொழிற்படல் – சதையச்சாறை சுரத்தல்.
  • அகஞ்சுரக்கும் பகுதியாக தொழிற்படல் – இன்சுலின்,குளுக்ககோன் ஓமோன்களைச் சுரத்தல்.

♦  இன்சுலின் – குருதியிலுள்ள மேலதிக குளுக்கோசை கிளைகோஜனாக மாற்ற தூண்டுகிறது.
♦  குளுக்ககோன் – குருதியில் குளுக்கோசின் அளவு குறையும் போது மேலதிக கிளைகோஜனை குளுக்கோசாக மாற்ற தூண்டுகிறது.

இவ்விரு ஓமோன்களும் சேர்ந்து குருதியில் குளுக்கோசின் அளவை பேணுகின்றன.

சதையச்சாறு 

  • சதையியின் புறஞ்சுரக்கும் பகுதியான சதையக்குலை கலங்களால் சுரக்கப்படும் சுரப்பு சதையச்சாறு எனப்படும்.
  • இதன் சுரத்தல் நரம்பு, ஓமோன் கட்டுப்பாட்டுக்குரியது.
  • நரம்பு கட்டுப்பாட்டில் தன்னாட்சி நரம்புத் தொகுதியின் பரிவு நரம்புகள் சுரத்தலை நிரோதிக்கும் / குறைக்கும். பரபரிவு நரம்புகள் சுரத்தலை அதிகரிக்கும்.
  • ஓமோன் கட்டுப்பாட்டில் செக்ரடின் ஓமோன் சதயச்சாறு சுரத்தலை அதிகரிக்க செய்கின்றது. (HCO3 ஐ அதிகரிக்க செய்யும்). கோலிசிஸ்ரோகைனின் (CCK)  ஓமோனும் இதன் சுரத்தலை அதிகரிக்க செய்யும். (நொதியத்தின் அளவை)
  • கோலிசிஸ்ரோகைனின் (CCK) ஓமோன் பித்தம் வெளியேற்றலுடனும் தொடர்பானது. இவ் ஓமோன் பித்தப்பையை சுருங்க செய்து ஓடியின் இறுக்கியை தளரச் செய்து பித்தத்தை வெளியேற்றும்.
  • சதையச்சாறு தொழிற்படும் இடம் முன்சிறுகுடல் ஆகும்.
  • சதையச்சாறின் கூறுகள் :
    • நீர்
    • கனியுப்பு / அயன்கள் – HCO3
    • நொதியங்கள் – அமைலேசு, இலிப்பேசு, திருச்சின், கைமோ திருச்சின், காபொட்சி பெப்திடேசு, நியூக்கிளியேசு
  • நீர்
    • உணவை ஈரலிப்பாக்கல்.
    • நொதியம் தொழிற்பட திரவ ஊடகம் வழங்கல்.
  • கனியுப்பு / அயன்கள் (HCO3)
    • கார ஊடகம் வழங்கல்.
  • நொதியங்கள்
    • அமைலேசு : மாப்பொருள் → மோல்ற்றோசு
    • இலிப்பேசு : இலிப்பிட்டு → கிளிசரோல் + கொழுப்பமிலம்
    • திருச்சின் : புரதம் → சிறிய பொலிபெப்டைட்டு / பெப்தோன்கள்
    • கைமோதிருச்சின் : புரதம் → இருபெப்டைட்டு  + அமினோவமிலம்
    • காபொக்சி பெப்திடேசு : சிறிய பொலிபெப்டைட்டு → இருபெப்டைட்டு + அமினோவமிலம்
    • நியூக்கிளியேசு – இதில் இருவகை உண்டு.
      • DNA ase
      • RNA ase
    • DNA ase : டீஓட்சி நியூக்கிளிக்கமிலம் → டீஒட்சிறைபோ நியூக்கிளியோடைட்டு
    • RNA ase : றைபோ நியூக்கிளிக்கமிலம்  → றைபோ நியூக்கிளியோடைட்டு
  • புரத பிரிநொதியங்களான திருச்சின், கைமோதிருச்சின், காபொக்சி பெப்திடேசு முறையே தொழிற்படா நிலைகளான திருச்சினோஜன், கைமோ திருச்சினோஜன், புரோ / முதல் காபொக்சி பெப்திடேசு நிலைகளில் ஆக்கப்பட்டு சுரக்கப்படுகின்றது.  இத்தொழிற்படா நிலைகள் உயிர்ப்பான தொழிற்படு நிலைக்கு என்டரோகைனேசினால் மாற்றப்படும். (உயிர்ப் பாக்கத்தில் பங்குகொள்ளும்)
  •  சதையச்சாறில் காணப்படும்  நொதியங்கள் யாவும் கார ஊடகத்தில்  (pH = 8) தொழிற்படுகின்றன.
ஈரல்

Pic - 17

  • உடலிலுள்ள 2வது பெரிய அங்கம் ஈரல் ஆகும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • வயிற்றுக்குழியில், பிரிமென்றகட்டுக்கு உடன் கீழாக / மருவிய வண்ணம் பெரும்பகுதி வலப்புறத்தில் அமைந்து காணப்படும்.
  • ஈரலானது உடலிலுள்ள மிகப்பெரிய புறஞ்சுரக்கும் சுரப்பியாகும். (சராசரியாக 1.5 kg)
  • இதன் சுரப்பான பித்தம், கானினூடாக அது தொழிற்படும் இடத்துக்கு கடத்தப்படுகிறது.
  • ஈரலானது மொத்த அமைப்பில் ஆப்பு வடிவமானது.
  • முற்பக்க மேற்பரப்பு அழுத்தமானது. இணையத்தால் பிரிக்கப்பட்ட சிறிய இடது சோணையையும் பெரிய வலது சோணையையும் கொண்டது.
  • பிற்பக்க மேற்பரப்பு அழுத்தமற்றது. 4 சோணைகளை கொண்டது.
    • இடது சோணை
    • வலது சோணை
    • வலது சோணையிலமைந்த நாற்புடைச் சோணை
    • வலது சோணையிலமைந்த வாற்சோணை
  • நாற்புடைச்சோணை, வாற்சோணையை பிற்பக்க தோற்றத்தில் மட்டுமே அவதானிக்கலாம். இச்சோணைகள் வெற்றுக்கண்ணுக்கு தெரியக்கூடிய ஈரல்சிறு சோணைகளை கொண்டது.
  • ஈரலின் பிற்பக்க மேற்பரப்பினூடாக பல கட்டமைப்புகள் தொடர்புபட்டு காணப்படும்.
    • ஈரல் நாடி – முதுகுப்புற பெருநாடியிலிருந்து குருதியை ஈரல்நோக்கி காவும்.
    • ஈரல் வாயிநாளம் – உணவுக் கால்வாய் / சிறுகுடல் பகுதியிலிருந்து ஈரலை நோக்கி குருதியை காவும்.
    • ஈரல் நாளம் – ஈரலிலிருந்து குருதியை கீழ்பெருநாளத்துக்கு காவும்
    • நிணநீர்க் கலன் – ஈரலிலிருந்து நிணநீரை வெளிநோக்கி காவும்.
    • பித்தக்கான் – ஈரலிலிருந்து பித்தத்தை பித்தப்பை நோக்கியும் பின்பு பித்தப்பையிலிருந்து முன்சிறுகுடலை நோக்கியும் காவும்.
    • தன்னாட்சி நரம்பு – பரிவு, பரபரிவு நரம்புககளை வழங்கும்.
  • ஈரலின் வலது சோணையில் பிற்புற மேற்பரப்புடன் இணைக்கப்பட்ட பையுருவான பித்தப்பை காணப்படும்.
    தொழில் – பித்தத்தை செறிவாக்குதலும் சேமித்தலும்.
  • ஈரலானது வெளிப்புறமாக வெண்ணார் இழையத்தினால் படரிடப்பட்டு காணப்படும். அதற்கு வெளிப்புறமாக மேலணி இழையத்தால் ஆக்கப்பட்ட சுற்றுவிரியினால் பகுதிபட / தொடர்ச்சியற்று போர்வை இடப்பட்டு காணப்படுகின்றது.

ஈரலின் இழைய அமைப்பு

ஈரல் சோணைகள் ஒவ்வொன்றும் பல சிறு சோணைகளால் ஆக்கப்பட்டவை. ஒரு ஈரல் சிறு சோணையின் அமைப்பு, இழைய கட்டமைப்பு / நுண்ணமைப்பு எனப்படும்.

  • Pic - 18ஈரல் சோணைகள் வெற்றுக் கண்ணுக்கு தெரியக்கூடிய நுண்ணிய, அனேக ஈரல் சிறுசோணைகளினால் ஆக்கப்பட்டவை.
  • இவ் நுண்ணிய கட்டமைப்புகள் தொடுப்பிழைய நார் உறையினால் சூழப்பட்டிருப்பதுடன் அறுகோண / பல்கோண வடிவமானவை.
  • ஈரலின் கட்டமைப்பு, தொழிற்பாட்டலகாக ஈரல் குழியங்கள் காணப்படுகின்றன.
  • இவை கனவடிவ மேலணி வகை கலங்களாகும்.
  • இக் கலங்கள் ஈரல் சிறுசோணையின் மைய நாளத்தில் இருந்து ஆரைக்குரிய முறையில் சோடி நாண்களாக ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும்.
  • ஈரல் நாளத்தின் கிளையாக மைய நாளம் காணப்படுகின்றது.
  • அடுத்துள்ள இரு சோடி நாண்களுக்கிடையில் ஈரல் குடாப்போலி காணப்படுகின்றது. இது ஒரு குருதிக்கலன் வகைக்குரியது.
    இதன் சுவர் எளிய செதின் மேலணியினால் தொடர்ச்சியற்று படலிடப்பட்டுள்ளது.
  • இச்சுவரில் திரிபடைந்த கலமாக கூப்பரின் கலம் காணப்படுகின்றது. இக்கலம் பெருந்தின்கல வகைக்குரியது.  இக்கலமானது வயது முதிர்ந்த செங்குழியங்களையும் கலங்களையும், பற்றீரியாக்களையும் தின்குழிய செயன்முறை மூலம் விழுங்கி அழிக்கின்றது.
  • இக் குருதிக்கலனினுள் ஈரல்நாடி கிளையினதும் ஈரல் வாயிநாள கிளையினது குருதிகளின் கலவை காணப்படுகின்றது.
    இக் குருதிக்கலனினுள்ள குருதி சுற்றயல் பகுதியில் இலிருந்து மையநாளம் நோக்கி பாய்கின்றது.
  • ஈரல் கலங்களால் பித்தம் சுரக்கப்பட்டு பித்தச் சிறுகால்வாயினுள் வெளியேற்றப்படுகின்றது.
  • ஒரு சோடி ஈரல் நாண்களுக்கிடையில் பித்தச் சிறுகால்வாய் காணப்படும்.
  • பித்தமானது குருதிக்கு எதிரான திசையில் பாய்கின்றது.
  • ஒரு சோடி ஈரல் நாண்களுக்கிடையிலான பித்தச் சிறுகால்வாய்கள் பல இணைந்து பித்தக்கானின் கிளையை ஆக்குகின்றன.
  • ஈரல் சிறு சோணையின் சுற்றயல் பகுதியில் கிளிசனின் உறை, விசேடமான தொடுப்பிழைய இழைய வகை உள்ளது. இதனுள் ஈரல் நாடிக்கிளை, ஈரல்வாயி நாளக்கிளை, பித்தக்கானின் கிளை என்பன காணப்படுகிறன.

ஈரலின் தொழில்கள்

  • பித்தம்  உற்பத்தி  செய்கிறது. – சமிபாட்டுடன் தொடர்பான தொழில்
  • கிளைக்கோஜனை சேமிக்கின்றது.
  • குருதியின் குளுக்கோசினளவு ஒழுங்காக்கம்.
    • குருதியில் குளுக்கோசினளவு கூடும் போது மேலதிக குளுக்கோசு இன்சுலின் ஓமோனின் உதவியுடன் கிளைக்கோஜனாக மாற்றப்படு கிறது. அதே சமயம் குருதியில் குளுக்கோசினளவு குறையும் போது கிளைக்கோஜனானது குளுக்ககோன் ஓமோனின் உதவியுடன் மீண்டும் குளுக்கோசாக மாற்றப்படுகிறது.
  • குருதியில் புரத்தின் ஒழுங்காக்கம்
    • மேலதிக புரதங்கள் அமைனகற்றலுக்கு உட்பட்டு புரத ஒழுங்காக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
  • அத்தியாவசியமற்ற அமினோவமில தொகுப்பு
    • அமைனகற்றலின் மூலம் அமைனோ கூட்டம் அகற்றப்பட்ட மூலக்கூறு மீண்டும் வேறு தேவையான அமினோவமிலமாக மாற்றப்படுகிறது.
  • இலிப்பிட்டின் ஒழுங்காக்கம்.  மேலதிக இலிப்பிட்டு ஈரலில் சேமிக்கப்படுகிறது.
  • நச்சு நீக்கல்
    • சில மருந்துகள், அற்ககோல் போன்ற அந்நிய பொருட்கள் ஈரல் கலங்களில் SER  மூலம் உடைக்கப்பட்டு நச்சு நீக்கப்படுகிறது.
  • வெப்ப உற்பத்தியும் வெப்ப ஒழுங்காக்கமும்
    • மனித உடலில் ஈரல் அனுசேபம் கூடியதாகும். இதன் வெப்பநிலை சாதாரணமாக ஏனைய பகுதியை விட 1°C கூடவாக காணப்படும். எனவே மேலதிக வெப்பம் பகிர்ந்தளிக்கப்பட்டு வெப்பம் ஒழுங்காக்கப்படுகிறது.
  • செயற்பாடு முடிந்ததும் ஓமோன்களை செயலிழக்க செய்யும். குறிப்பாக இலிங்க ஓமோன்களை விரைவாக அழிக்கிறது.
  • மூலவுரு நிலையில் RBC இன் உற்பத்தி.
  • Haemoglobin அழித்தல் / உடைத்தல்.
  • RBC அழித்தல் / உடைத்தல்.
  • குருதியை சேமித்தலும் குருதிக் கனவளவை ஒழுங்காக்கலும்.
    • மேலதிக குருதி ஈரல் குடாப்போலிகளில் சேமிக்கப்பட்டு, தேவைப்படும் போது ஈரல் சிறுசோணைகள் சுருங்கி குருதியை சுற்றோட்டத்திற்கு அனுப்புகிறது.
  • குருதி முதலுரு புரதங்களையும் குருதி உறைதல் காரணிகளையும் தொகுத்தல்.
  • நீரில் கரையும் விற்றமினான  B12  ஐயும் கொழுப்பில் கரையும் விற்றமின்களான A, D, E, K  இன் சேமிப்பு.
  • கரோட்டினிலிருந்து விற்றமின் A தொகுப்பு.
  • கனியுப்புகளின் சேமிப்பு. (Fe, Cu)
  • யூரியா, யூரிக்கமில உற்பத்தி.
    • அமைனகற்றல் மூலம் அகற்றப்படும் அமைனோ கூட்டம் முதலில் NH3 ஆக  மாற்றப்பட்டு  பின்பு  யூரியா, யூரிக்கமிலமாக மாற்றுகிறது.
  • கொலஸ்திரோல்  உற்பத்தி.

பித்தம் 

  • பித்தம் பச்சை கலந்த மஞ்சள் நிறமானது.
  • ஈரலில் பித்த உற்பத்தியுடன் தொடர்பான ஓமோன் செக்ரடின் ஆகும்.
  • ஈரலினால் உற்பத்தி செய்யப்பட்டு பித்தம் பித்தப்பையில் சேமிக்கப்பட்டு, கானினூடாக முன்சிறுகுடலினுள் வெளியேற்றப்படுகிறது.
  • பித்த வெளியேற்றலுடன் கோலி சிஸ்ரோகைனின் (CCK) ஓமோன் தொடர்புபட்டது. இவ் ஓமோனானது பித்தப் பையை சுருங்கச் செய்து ஓடியின் இறுக்கியை தளரச் செய்து பித்தத்தை வெளியேற்றுகின்றது.
  • பித்தத்தின் கூறுகள் :
    • நீர் – 98%
    • சீதம்
    • கனியுப்பு / அசேதன அயன்கள் (HCO3) – 0.7%
    • பித்த நிறப்பொருள்கள் – Bilirubin, Biliverdin
      • Biliverdin : பச்சை நிறமானது. இவ் நிறப்பொருளே முதலில் உருவாக்கப்படுகிறது.
      • Bilirubin : மஞ்சள் நிறமானது. Bilirubin ஆனது படிப்படியாக Biliverdin ஆக மாற்றப்படுகிறது.
    • கொலஸ்திரோல் – 0.6%
    • பித்த உப்புக்கள் – 0.8% – Sodium glychotate, Sodium taurocholate
  • நீர்
    • உணவை ஈரலிப்பாக்கல்.
    • நொதியம் தொழிற்பட திரவ ஊடகம் வழங்கல்.
  • சீதம்
    • உணவு  மசகிடல்.
  • HCO3
    • கார ஊடகம் வழங்கல்.
    • தாங்கல் தொழிற்பாடு (pH மாறாது பேணல்).
  • பித்த நிறப்பொருள்
    • மலத்திற்கு நிறம் வழங்கல். இவை Haemoglobin இன் உடைப்பின் மூலம் ஈரல்கலத்தில் உருவாக்கப்படும் கழிவுப் பொருள். மலத்தினூடாக வெளியகற்றப்படும்.
  • பித்த உப்புக்கள்
    • இலிப்பிட்டின் குழம்பாக்கல்.  இலிப்பிட்டின் குழம்பாக்கல் எனப்படுவது, பித்த உப்புக்களின் மூலம் இலிப்பிட்டின் மேற்பரப்பு இழுவிசை குறைக்கப்பட்டு இலிப்பிட்டு சிறு கோளங்களாக மாற்றப்படும் செயன்முறையாகும்.
    • கொழும்பு, கொழுப்பமில அகத்துறிஞ்சலுக்கு உதவுகிறது.
    • விற்றமின் K இன் அகத்துறிஞ்சலுக்கு உதவுகிறது.
உணவுக் கால்வாய் தொகுதியுடன் தொடர்பான ஓமோன்கள்
ஓமோன்  உற்பத்தி இடம்  பிரதான தூண்டல் இலக்கு அங்கம்  தொழில் 
 காசுத்திரின் ஓமோன் இரைப்பையின் சீதமுளிப்படை  உணவின் மூலம் இரைப்பை விரிவடைதல் உதரச்சுரப்பி  உதரச்சாறு சுரத்தலை அதிகரித்தல்
என்ரோ காசுத்திரின் ஓமோன் முன்சிறுகுடலின் சீதமுளிப்படை உணவின் மூலம் முன்சிறுகுடல் விரிவடைதல் உதரச்சுரப்பி  உதரச்சாறு சுரத்தலை நிரோதித்தல்
கோலிசிஸ்ரோகைனின்  (CCK )  ஓமோன் முன்சிறுகுடலின் சீதமுளிப்படை உணவின் மூலம் முன்சிறுகுடல் விரிவடைதல்  1) பித்தப்பை

2) சதையி

 1) பித்தப்பையை சுருங்கச் செய்து (ஓடியின் இறுக்கியை  தளர்த்தி) பித்தத்தை வெளியேற்றல்

2) சதையச்சாறு சுரத்தலை அதிகரித்தல்

செக்ரடின் ஓமோன் முன்சிறுகுடலின் சீதமுளிப்படை முன்சிறுகுடலில் உணவு தொடுகை  1) சதையி

2) ஈரல்

3) குடற்சுரப்பி

1) சதையச்சாறு சுரத்தலை அதிகரித்தல்

2) பித்த உற்பத்தியை தூண்டல்

3)  குடற்சாறு சுரத்தலை அதிகரித்தல்

RATE CONTENT 5, 1
QBANK (14 QUESTIONS)
Question: of 4

நஞ்சுகள், மருந்து வகைகள் ஆகியவை மனித உடலிற்குள் எடுக்கப்பட்ட பின், அவை நஞ்சகற்றும் முறைக்குள்ளாகும் இடம் ஆவது?

Review Topic
QID: 3935
Hide Comments(0)

Leave a Reply

நஞ்சுகள், மருந்து வகைகள் ஆகியவை மனித உடலிற்குள் எடுக்கப்பட்ட பின், அவை நஞ்சகற்றும் முறைக்குள்ளாகும் இடம் ஆவது?

Review Topic
QID: 3935

நிறையுடலி மனிதனின் ஈரலில் நடைபெறாதது?

Review Topic
QID: 3954

மனித ஈரல் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4121

மனித ஈரல் தொடர்பாகப் பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?

Review Topic
QID: 4132
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank