Please Login to view full dashboard.

கல ஒழுங்கமைப்பு

Author : Admin

18  
Topic updated on 02/14/2019 10:32am
  • அங்கிகளில் காணப்படும் கலங்கள் 2 வகையான கல ஒழுங்கமைப்பில் உள்ளன.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  1. புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பு : இக்கலத்தில் திட்டமான கருவுறையால் சூழப்பட்ட கரு காணப்படுவதில்லை. ஆனால் பிரதான வட்ட DNA ஒன்றைக் கொண்ட கருப் பிரதேசம் காணப்படும்.
  2. இயூக்கரியோற்றா கல ஒழுங்கமைப்பு : திட்டமான கருவுறையால் சூழப்பட்ட கருவை கொண்ட கலம். இக்கருவினுள் நேரிய DNA, histone புரதத்துடன் சேர்ந்து நிறமூர்த்தமாக காணலாம்.
  • புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பை காட்டும் அங்கிக்கூட்டங்கள்
  1. ஆக்கி பற்றீரியா
  2. பற்றீரியா
  3. சயனோ பற்றீரியா
  • இயூக்கரியோற்றா கல ஒழுங்கமைப்பை காட்டும் அங்கிக்கூட்டங்கள்Please Login to view the Question
  1. புரட்டோசோவன்கள்
  2. அல்காக்கள்
  3. பங்கசுகள்
  4. தாவரங்கள்
  5. விலங்குகள்
  • வைரஸ் கல அமைப்பு அற்றதால் புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பையோ இயூக்கரியோற்றா கல ஒழுங்கமைப்பையோ கொண்டிருப்பது இல்லை.

ஒரு வகையான புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பு படம்Please Login to view the QuestionPlease Login to view the Question
(பற்றீரியா கலத்தின் அமைப்பு வகையான புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பாகக் கொள்ளப்படும்)

  1. வில்லையம்
  2. கலச்சுவர்
  3. முதலுரு மென்சவ்வு / கலமென்சவ்வு
  4. கச்சம்
  5. சவுக்கு முளை
  6. குழியவுரு
  7. பிரதான DNA
  8. றைபோசோம்கள்
  9. ஒளித்தொகுப்பு மென்சவ்வு / தையிலகொயிட்டு
  10. நைதரசன் பதிக்கும் மென்சவ்வு
  11. மீசோசோம்
  12. பிளாஸ்மிட்டு
  13. உணவு ஒதுக்கு
  • எல்லா பற்றீரியாக்களிலும் காணப்படும் கட்டமைப்புக்களாவன
  1. கலச்சுவர்
  2. முதலுரு மென்சவ்வு
  3. உணவு ஒதுக்கு
  4. றைபோசோம்
  5. கரு பிரதேச DNA
  6. குழியவுரு

புரோகரியோற்றா கலத்தில் காணப்படும் கட்டமைப்புகளும் அவற்றின் தொழில்களும்

புரோகரியோற்றா கல கட்டமைப்பு தொழில்கள்
வில்லையம்

 

(பல்சக்கரைட்டால் ஆக்கப்பட்டது)

  • மேற்பரப்பில் பற்றி பிடிப்பதற்கு உதவும்
  • நுண்ணுயிர் கொல்லி பதார்த்தங்களை எதிர்த்தல்
கலச்சுவர்

 

(பற்றீரியாக்களில் பெப்ரிபோகிளைக்கனால் ஆக்கப்பட்டது)

  • பற்றீரியாக்களுக்கு வடிவம் கொடுத்தலும் பாதுகாப்பும்
கல மென்சவ்வு

 

(இயூகரியோற்றிக் கலமென்சவ்வை பெரும்பாலும் ஒத்தது

உள் மடிப்படைவதால் பல கட்டமைப்புக்களை உருவாக்கும்)

  1. மீசோசோம்
  2. ஒளித்தொகுப்பு மென்சவ்வு / தையிலகொயிட்டு மென்சவ்வு (ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் காணப்படும்)
  3. நைதரசன் பதிக்கும் மென்சவ்வு
  • கலத்தின் உள்ளும் வெளியும் பதார்த்த பரிமாற்றல்
  1. காற்றிற் சுவாசம்
  2. ஒளித்தொகுப்பு மேற்கொள்ளல்
  3. நைதரசன் பதித்தல் (வளிமண்டல N2  NO3 / NH4+ ஆக மாற்றப்படுதல்
 குழியவுரு
  • அனுசேபத் தாக்கங்கள் நிகழும் இடம்
  • அனுசேபத் தாக்கங்களுக்கான மூலப்பொருட்களை வழங்கும்
 பிரதான DNA

 

(வட்ட DNA / வளைய DNA)

  • பிறப்புரிமைத் தகவல்களை சேமித்து கடத்துதல்
பிளாஸ்மிட்டு

 

(பிரதான DNA க்கு மேலதிகமாக காணலாம். சிறிய வட்ட DNA)

  • நுண்ணுயிர்க்கொல்லி பதார்த்தங்களிலிருந்து பாதுகாப்பு
  • பிறப்புரிமைத் தொழினுட்பம் /மூலக்கூற்று உயிரியலில் பயன்படுத்தப்படுகிறது
இறைபோசோம்

 

(இயூகரியோற்றாவுடன் ஒப்பிடும் போது பருமனில் சிறியது

70S வகை)

  • புரதத் தொகுப்பிற்கான இடம் / மேற்பரப்பு
சவுக்குமுளை

 

(கலமென்சவ்விலிருந்து உருவாகும் நுண்புன் குழாய்கள் அற்ற எளிய அமைப்புடைய புரத இழையாகும்.  Flagelline புரதம்

எண்ணிக்கையில் குறைவாக காணலாம்)

  • இடப்பெயர்ச்சி
கச்சம்

 

(ஒப்பிட்டளவில் சிறிய கட்டமைப்பு

அதிக எண்ணிக்கையில் காணப்படும்

கலச்சுவரிலிருந்து உருவாகின்றது)

  • மேற்பரப்பில் இணைந்து இருக்க உதவுகின்றது
  • இலிங்கமுறை இனப்பெருக்கத்தில் பங்கு கொள்கின்றது
உணவு ஒதுக்கு

 

(பிரதான உணவு ஒதுக்காக கிளைகோஜன், இலிப்பிட்டு காணப்படும்)

  • சக்தி மூலமாக பயன்படுகின்றது

புரோகரியோற்றா,இயூக்கரியோற்றா கலங்களுக்கிடையிலான வேறுபாடுகள்

இயல்புகள் புரோகரியோற்றா கலம் இயூக்கரியேற்றா கலம்
பருமன் பருமனில் சிறியது பருமனில் பெரியது
கரு மென்சவ்வால் சூழப்பட்ட திட்டமான கரு இல்லை உண்டு
மென்சவ்வால் சூழப்பட்ட கல புன்னங்கள் இல்லை உண்டு
இறைபோசோம் பருமனில் சிறியது 70S வகை பருமனில் பெரியது 80S வகை
சவுக்குமுளை எளிய அமைப்பு

 

நுண்புன்குழாய் அற்றது

ஒப்பீட்டளவில் மெல்லியது

சிக்கலான அமைப்பு

 

நுண்புன்குழாய் கொண்டது

தடித்தது

கலச்சுவர் பெப்ரிடோகிளைக்கனால் ஆக்கப்பட்டது

 

ஆர்க்கி பற்றிரியாவில் பல்சக்கரைட், புரதம்

அல்காக்களில் செலிலோசு

 

பங்கசு → கைற்றின்

தாவரத்தில் பிரதானம் செலிலோசு

நைதரசன் பதித்தல் சில நைதரசன் பதிக்கும் ஆற்றல் உடையவை நைதரசன் பதிக்கும் ஆற்றல் அற்றவை

உயர்ந்த உருப்பெருக்கம் உடைய ஒளி, கூட்டு நுணுக்குகாட்டியின் ஊடாக அவதானிக்கக் கூடிய கல கட்டமைப்புக்களாவன

  1. முதலுரு மென்சவ்வு / கலமென்சவ்வு
  2. கலச்சுவர்
  3. கரு
  4. இழைமணி
  5. குழியவுரு
  6. நிறமூர்த்தம்
  7. புன்கரு
  8. புன்மையத்தி
  9. பச்சையவுருமணி
  10. கொல்கிச்சிக்கல்
  11. பிசிர்
  12. சவுக்குமுளை

ஒளி நுணுக்குக்காட்டியின் ஊடாக அவதானிக்க முடியாது, இலத்திரன் நுணுக்குக்காட்டியின் ஊடாக மட்டும் அவதானிக்கக் கூடிய கலக்கட்டமைப்புக்களாவன

  1. இலைசோசோம்
  2. அககலவுரு சிறுவலை
  3. இறைபோசோம்
  4. பெரொக்சிசோம்
  5. கிளை ஒட்சிசோம்
  6. நுண்புன் குழாய்கள்
  7. நுண் இழைகள்
  8. நடுத்தர இழைகள்
  9. குழியவன்கூடு
  • இரட்டை மென்சவ்வு : கரு,இழைமணி, பச்சையவுருமணி
  • ஒற்றை மென்சவ்வு : அகமுதலுரு சிறுவலை, கொல்கிச்சிக்கல், இலைசோசோம், நுண்ணுடல்                                                         பிசிர், சவுக்குமுளை
  • மென்சவ்வால் சூழப்படாதது : Ribosome, குழியவன்கூடு, புன்மையத்தி
RATE CONTENT 0, 0
QBANK (18 QUESTIONS)

புரோக்கரியோட்டாக் கலங்களில் மாத்திரம் காணப்படும் இயல்பு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3297
Hide Comments(0)

Leave a Reply

தாவர,விலங்கு பற்றீரியாக் கலங்களுக்குப் பொதுவானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3304
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 3545
Hide Comments(0)

Leave a Reply

அங்கிகள் யாவற்றிலும் காணப்படாதது /காணப்படாதவை பின்வருவனவற்றுள் எது /எவை?

Review Topic
QID: 3636
Hide Comments(0)

Leave a Reply

புரோகேரியோட்டாக் கலங்கள் தொடர்பாக தவறானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3654
Hide Comments(0)

Leave a Reply

கீழ்  குறித்தவற்றில் எது யூக்கரியோற்றாக் கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றது?

(A) Saccharomyces

(B) Anabaena

(C) Chlamydomonas

(D) Mucor

(E) Clostridium

 

 

 

Review Topic
QID: 3530
Hide Comments(0)

Leave a Reply

யூக்கரியோற்றிக்கலங்களின் பின்வரும் சிறப்பியல்பு களிடையே எது அகவொன்றியவாழ்வுத் தோற்றக் கொள்கையை ஆதரிக்கின்றது?

Review Topic
QID: 3552
Hide Comments(0)

Leave a Reply

புரோக்கரியோட்டாக் கலங்களில் மாத்திரம் காணப்படும் இயல்பு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3297

தாவர,விலங்கு பற்றீரியாக் கலங்களுக்குப் பொதுவானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3304

பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 3545

அங்கிகள் யாவற்றிலும் காணப்படாதது /காணப்படாதவை பின்வருவனவற்றுள் எது /எவை?

Review Topic
QID: 3636

புரோகேரியோட்டாக் கலங்கள் தொடர்பாக தவறானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3654

கீழ்  குறித்தவற்றில் எது யூக்கரியோற்றாக் கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றது?

(A) Saccharomyces

(B) Anabaena

(C) Chlamydomonas

(D) Mucor

(E) Clostridium

 

 

 

Review Topic
QID: 3530

யூக்கரியோற்றிக்கலங்களின் பின்வரும் சிறப்பியல்பு களிடையே எது அகவொன்றியவாழ்வுத் தோற்றக் கொள்கையை ஆதரிக்கின்றது?

Review Topic
QID: 3552
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank