கருக்கட்டல்
பெண் இனப்பெருக்க சுவட்டில் சுரக்கப்படும் சுரப்புக்களால்ää அங்கு விடப்படும் விந்துக்களின் முதலுருமென்சவ்வில் சில மூலக் கூற்றுக்குரிய மாற்றங்கள் ஏற்படும். இதனால் விந்துக்களின் இயங்கும் ஆற்றல் கூடும். (அதி உயிர்ப்பு Hyper activation). இச்செயன்முறை capacitation எனப்படும்.
அதி உயிர்ப்புக்குள்ளான விந்து ஆரைமுடியினூடாக ஊடுருவிச் சென்று தெளிவுவலயத்தை அடைந்து அங்குள்ள விந்துவாங்கி தானங்களுடன் இணைந்து கொள்ளும். இந்நிலையில் விந்தின் உச்ச மூர்த்தத்திலிருந்து hyaluronidase,protease நொதியங்கள் விடுவிக்கப்படும். இச்செயல் உச்சிமூர்த்த தாக்கம் எனப்படும்.
சூல்கலத்தின் கருவூண்மென்சவ்விலிருந்து ஊற்றப்படும். நொதியங்களும் கருவூண்மென்சவ்வுடன் விந்தின் தலை இணை வதும் வேறு விந்துக்கள் உட்புகுவதை தடைசெய்யும். இது பல்விந்து கருக்கட்டல் தடை எனப்படும்.
சூலின் குழியவுருவினுள் விந்தினது தலை உட்புகும் இதன் போது விந்தின் ஒரு புன்மையத்தியும் உட்செல்லும். சூலின் வெளிப்புறமாக காணலாம். இலைசோசோம் (மேற்பட்டைக்குரிய சிறுமணிகள்) கருவூண் மென்சவ்வின் வெளிப்புறமாக தமது நொதியங்களை வெளிவிடும். இதனால் தெளிவுவலயம் தடிப்புற்று கடினமானதாக மாறி பல்விந்துக் கருக்கட்டலை தடுக்கும். இது மெற்பட்டைக்குரிய தாக்கம் எனப்படும்.
விந்தின் உட்செல்லுகைää துணை முட்டைக்குழியத்தின் ஒடுக்கற்பிரிவு – 2 பூரணப்படுத்தி துணையான முனைவுடல் கருவூண் சுற்றுவெளிக்கு வெளியேற்றலையும் சூல் தோன்றலையும் தூண்டும். துணையான முனைவுடல் உடனடியாக சிதைவடைந்து விடும்.
விந்தினது குரோமற்றின் சுருள்களின் நெருக்கம் குறைவானதனால் விந்தின் கரு பருமனில் அதிகரிக்கும். இந்நிலையிலுள்ள துணைமுட்டைக்குழியத்தினதும் விந்தினதும் கருக்கள் முதிர்வு வழிக்கருக்கள் எனலாம்.
ஒரு மடிய ஆண் முதிர்வு வழிக்கரு ஒரு மடிய பெண் முதிர்வு வழிக்கருவுடன் இணைவதன் மூலம் இரு மடிய கரு கொண்ட நுகம் தோற்றுவிக்கப்படும். இதுவே உண்மையான கருக்கட்டல் ஆகும்.
தோன்றிய புதிய கரு விந்திலிருந்தும் சூலிலிருந்தும் பெற்ற நிறமூர்த்தங்களால் இரண்டு தொகுதி நிறமூர்த்தங்களை கொண்டிருக்கும். இப்புதிய கரு { நுகக்கரு இழையுருப்பிரிவின் மூலம் உடனடியாக பிரிவடையும்.
பலோப்பியன் குழாயினூடாக நுகம் கீழ்நோக்கிச் செல்லும்போது அது தொடர்ச்சியான இழையுருப்பிரிவால் பிரி வடைந்து முசுவுரு நிலை தோற்றுவிக்கப்படும். இது ஏறத்தாழ 100 கலங்களை கொண்ட கருத்திணிவாக காணலாம்.
சிறிய முசுவுரு மீள ஒழுங்கமைக்கப்படுவதன் மூலம் அரும்பர்குழி எனும் பாயியினால் நிரப்பப்பட்ட உட்குழியை கொண்ட உட்குழிவான கோளமாக மாறும். இந்நிலை அரும்பர் சிறைப்பை எனலாம். இது போசணை அரும்பர் என அழைக்கப்படும் தனிக்கலப்படையால் படலிடப்பட்டுள்ளது.
போசணை அரும்பர் சடைமுளையை உருவாக்கும். இப் போசணையரும்பர் சடைமுளைகள் கருப்பை அகத்தோலுடன் இணைக்கப்படும். இச்செயன்முறை உட்பதித்தல் எனலாம்.
உட்பதித்தல் 7ஆம் நாளில் ஆரம்பித்து 14 நாளில் முடிவடையும்.
தாயின் குருதிக்குடாவிலிருந்து இச்சடைமுளைகளினூடாக போசணை அகத்துறிஞ்சப்படும். உறிஞ்சும் மேற்பரப்பின் அளவை அதிகரிப்பதற்காக, நுண்சடைமுளைகள் ஒரு மேலணியால் படலிடப்பட்டிருக்கும்.
கருக்கட்டலானது | பலோப்பியன் குழாயின் / கருப்பைக் குழாயின் சேய்மையான பகுதியில் 1ஃ3 பகுதியில் உள்ளிடத் தில் நடைபெறுகின்றது.
சூல் கருக்கட்டப்படும் கர்ப்பமுறல் நிலை எய்தப்பட்டுவிடும். மனிதனில் கரக்கட்டலிலிருந்து பிரவசம் வரை கர்ப்பம் தரிக்கும் காலமாகும். இக்கால எல்லை ஏறத்தாழ 40 கிழமைகளாகும்.
கர்ப்பகாலத்தில் மும்மாத கால இடைவெளியில் முதிர்மூலவுருவில் நிகழும் பிரதான மாற்றங்கள்
ஒவ்வொரு 3 மாதங்களிலும் நடைபெறும் பிரதான விருத்திகள் ஆவன :
3 ஆம் மாத இறுதியில்
முதிர்மூலவுரு கருப்பை சார்பாக குறித்தளவை அடையும் போது பிறப்பு (பிரசவம்) நடைபெறும்.
கர்ப்பகாலத்தின் 16வது கிழமை oestragen,progestrone என்பன சூல்வித்தகத்தால் உற்பத்தியாக்கப்படும். oestrogen கருப்பைச் சுவர் தசையிலுள்ள oxytocin வாங்கிகளின் உருவாக்கத்தை தூண்டும்.
பிறப்பு நடைபெறுவதற்கு சற்று முன்னர் Pசழபநளவநசழn மட்டத்தில் தெளிவான வீழ்ச்சி ஏற்படும்.
oxytocin முதிர் மூலவுருவினதும் தாயினதும் பரிவகக்கீழினால் சுரக்கப்படும். சுரக்கப்பட்ட oxytocin,oxytocin வாங்கிகளுடன் இணைந்து கருப்பைச் சுவர் தசையில் வலுவான தசைச்சுருக்கத்தை தூண்டும்.
oxytocin சூல்வித்தகத்தை தூண்டி Prostoglandin ஐச் சுரக்கச் செய்யும். Prostoglandin கருப்பையின் தசையில் சுருக் கத்தை ஏற்படுத்தும்.
இத்தசைச் சுருக்கத்தால் சிசு யோனிமடலை நோக்கி தள்ளப்படும். சிசுவின் தலையும் தசைச்சுருக்கமும் கருப்பைச் சுவர், கருப்பைக் கழுத்து என்பவற்றிலுள்ள இழுவை வாங்கிகளை தூண்டும்.
இத்தூண்டலால் oxytocin, Prostoglandin என்பன மேலும் சு / ம். பிறப்பு நடைபெறும் வரை மேன்மேலும் கருப்பைத் தசையில் சுருக்கத்தை ஏற்படுத்தும். இது நேர்ப்பின்னூட்டல் பொறிமுறை எனலாம்.
இரண்டு முலைச்சுரப்பிகள் (முலைகள்) உண்டு. ஒவ்வொரு முலைச்சுருப்பிகளும் பல பால் சுரக்கும் சுரப்பிகளை கொண்டிருக்கும். இச்சுரப்பிகள் பால் சுரக்கும் கலங்களை கொண்டுள்ளது. பால்சுரக்கும் கலங்களை கொண்ட ஏறத்தாழ 15 – 20 பால் உற்பத்தி தொகுதிகளுண்டு.
ஒவ்வொரு பால் உற்பத்தி தொகுதியும் பாலை சேமிக்கக் கூடிய ஏராளமான சிற்றறை / சிறுசோணைகளைக் கொண்டுள்ளன. சிற்றறைகளும் பாற்கான்களும் மழமழப்புத் தசையாலும் கொழுப்புக் கலங்களாலும் சூழப்பட்டுள்ளன. சிற்றறைகள் ழுசு சிறுசோணைகள் கான்களினுள் திறக்கும்.
கான்கள் குடாக்களினுள் தமது சுரப்பை விடுவிக்கும். குடாக்கள் பெரிய கான்களினூடாக தனித்தனியாக முலைக்காம்பில் திறக்கும்.
முலைக்காம்பு முலைக்காம்பை சூழவுள்ள சிற்றிடம் என்பவற்றில் தொட்டுணர வாங்கிகளுண்டு.
பால் சுரக்கும் சுரப்பிகள்
or
பால் உற்பத்தி தொகுதிகள்
⇒
சிற்றறை / சிறுசோணை
⇒
கான்
⇒
குடா
⇒
பெரிய கான்
⇒
முலைக்காம்பு
மிக நன்று