Please Login to view full dashboard.

இழையம் – தாவரம்

Author : Admin

10  
Topic updated on 02/14/2019 09:40am
  • இழையம் என்பது  குறித்த தொழில் அல்லது தொழில்களைப் புரிவதற்கென சிறந்தலடைந்த,ஒன்றுடன் ஒன்று பௌதீக இணைப்பைக் கொண்ட, ஒரே முளைய உற்பத்தி உடையனவுமான கலங்களின் கூட்டம்.

தாவர இழையம்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • தாவர இழையங்களை எளிய இழையங்கள் எனவும் சிக்கலான இழையங்கள் எனவும் இருவகைப்படுத்தலாம்.
  • எளிய இழையங்கள் ஒரு வகைக்குரிய கலங்களால் ஆனவை.
  1. புடைக்கலவிழையம்
  2. ஒட்டுக்கலவிழையம்
  3. வல்லருகுக்கலவிழையம்
  •  சிக்கலான இழையங்கள் பலவகையான கலங்களால் ஆக்கப்பட்டவை
  1. காழ்
  2. உரியம்

எளிய இழையம்

 

புடைக்கல விழையம்

5601-004-09de6b42-1

  • குறைவியத்தம் அடைந்த கலங்கள்.
  •  பெரும்பாலும் கோளவடிவான கலங்கள் – சில நீண்டது, ஒழுங்கற்றது.
  •  கலங்கள் குழியவுரு,கரு என்பவற்றை உடைய உயிருள்ள கலங்கள்.
  •  பெரிய புன்வெற்றிடம் உடையவை.
  •  தெளிவான கலத்திடைவெளிகள் உண்டு.
  • கலச்சுவர் மெல்லியது.
  •  முதற்சுவர் படிவை மட்டும் கொண்டது.
  •  பிரதானமாக Cellulose, Pectine,Hemicelluloseஆகியவற்றால் ஆன கலச்சுவர்.
  • துணைச்சுவர் படிவில்லை.
  • பொதுவான கலப்புன்னங்கள் உண்டு.
  1. இழைமணி.
  2. அகமுதலுருச்சிறுவலை.
  3. கொல்கி உபகரணம்.
  4. Ribosome.
  • முதலான,துணையான வளர்ச்சியின்போது தோற்றுவிக்கப்படும்.

அமைவிடம் :- மேற்பட்டை, மையவிழையம் இவற்றுடன் காழ், உரியம் என்பவற்றில் நிரப்புகின்ற இழையமாகவும் காணப்படும்.

தொழில்கள்

  • உணவு, நீர் சேமிப்பு.
  • பதார்த்தங்களின் பக்கக் கடத்தலில் உதவும்.
  • பொதியாக்கும் இழையமாக தொழிற்படும்.
  • பூண்டுத் தாவரங்களில் கலங்களை வீக்கநிலையில் பேணி பொறிமுறை  தாங்கும் வலுவை வழங்கல்.
  • சுரத்தல்.

திரிபடைந்த புடைக்கலவிழையங்களாவன:-

  1.  மேற்றோல்
  2. இலைநடுவிழையம்
  3. அகத்தோல்
  4. பரிவட்டவுறை – வேர்

1.மேற்றோல்

  •  தனிக்கலப்படையில் கலங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது.
  •  மேற்றோல் கலங்கள் நெருக்கமாக அடுக்கப்பட்டது.
  • உயிருள்ள கலங்கள் கரு, குழியவுரு, புன்வெற்றிடம் உண்டு.
  •  பொதுவான கலப்புன்னங்கம் உண்டு.
  • கலத்திடைவெளி அற்றது.
  • கலச்சுவர்; Cellulose,Pectin,Hemicellulose என்பவற்றால் ஆனது.
  • இலைதண்டு மேற்றோலில் மேற்றோலுக்கு வெளியெ Cutin  இனால் ஆன புறத்தோற்படை உண்டு.
  • இது உலர்தலில் இருந்து தாவரத்தை பாதுகாக்கும்.
  •  மேற்றோலில் பெரும்பாலும் பல்கலத்தால் ஆன மேற்றோல் மயிர்கள் காணப்படலாம்.
  • வேர்மேற்றோலில் Cutin னால் ஆன புறத்தோற்படை இல்லை.
  • வேரில் அகத்துறிஞ்சும் மேற்பரப்பைக் கூட்டுவதற்காக தனிக்கல வேர்மயிர் காணப்படும்.
  • வேரில் அகத்தோல் மேற்பரப்பில் இலைவாய் இல்லை.
  •  நீரில் அமிழ்ந்துள்ள தாவரங்களின் இலைமேற்றோலில் புறத்தோல் இல்லை.
  • இலைவாய்கள் இல்லை.
  • ஆனால் அனைத்து மேற்றோல் கலங்களிலும் பச்சையருவுமணி உண்டு.

அமைவிடம் :- முதலான தாவர உடலை மூடிக் காணப்படும்.

தொழில்

  • உலர்தல், பொறிமுறை காயங்களிலிருந்து உள் இழையங்களைப் பாதுகாக்கும்.
  •  நீர், கனியுப்புக்களை அகத்துறிஞ்சுதல்.
  • வாயுப்பரிமாற்றம் செய்தல்.
  • சுரத்தல்.

2.அகத்தோல்

  •  தனிப்படையில் கலங்கள் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும்.
  •  கலத்திடைவெளி அற்றது.
  •  கலங்கள் நீண்ட, தட்டையான பீப்பாவடிவம் உடையவை.
  • கரு, குழியவுரு, புன்வெற்றிடம் என்பவற்றை உடைய உயிருள்ள கலம்.
  • பொதுவான கலப்புன்னங்கங்கள் காணப்படும்.
  1. இழைமணி
  2.  ER
  3. கொல்கி உபகரணம்
  4.  Ribosome
  •  கலச்சுவர் Cellulose,Pectin,Hemicellulose என்பவற்றால் ஆனது.
  • வேரின் அகத்தோல் கலத்தில் ஆரைச்சுவரிலும், குறுக்குச்சுவரிலும் சுபரினால் ஆன கப்பாரிக்கீலம் காணப்படும்.
  • தண்டின் அகத்தோலில் மாப்பொருளின் சேமிப்புண்டு.

அமைவிடம் :-  தண்டுகளிலும், வேர்களிலும் மேற்பட்டைக்கு உள்ளாக கலன் இழையத்தைச் சூழ்ந்து காணப்படும்.

தொழில்கள்

  • வேரின் அகத்தோலின் ஊடாக பதார்த்தங்கள் செல்வதை தேர்விற்குரிய முறையில் கட்டுப்படுத்தும்.
  • தண்டு அகத்தோலில் உள்ள மாமணிகள் காணப்படும். இவை ஈர்ப்பு திருப்ப அசைவில் பங்கெடுக்கும்.

3.இலைநடுவிழையம்

leaf_tissue_structure-svg

  • நீண்ட கலங்களாக /ஒழுங்கற்ற வடிவமான கலங்களைக் கொண்டது.
  • கலங்கள் ஒழுங்கற்ற கோள உருவமாக /கம்ப உருவாக காணப்படலாம்.
  • தெளிவான கலத்திடைவெளி உண்டு.
  • குழியவுருவில் பச்சைய உருமணிகள் காணப்படும்.
  • கரு, குழியவுரு உடைய உயிருள்ள கலங்கள்.
  • Cellulose,Pectin,Hemicellulose ஆல் ஆன கலச்சுவர் உண்டு.

அமைவிடம்

இலையின் கீழ்ப்புற மேற்றோல், மேற்புறமேற்றோலுக்கு இடையில் காணப்படும்.

—தொழில்கள் :-ஒளித்தொகுப்பு செய்தல்.

4.பரிவட்டவுறை

  • வேரின் பரிவட்டவுறை மட்டும் புடைக்கலவிழைய கலங்களின் திரிபினால் ஆனது.
  • ஒருபடை, பலபடையில் கலங்களைக் கொண்டது.
  • கலத்திடைவெளி அற்றது.
  • உயிருள்ள கலம்.
  • கரு, குழியவுரு, புன்வெற்றிடம் கொண்டது.
  • குழியவுருவில் கலப்புன்னங்கள் உண்டு.
  1.  இழைமணி.
  2. ER.
  3. கொல்கி உபகரணம்.
  4.  Ribosome.
  •     கலச்சுவர் முதற்சுவர் படிவைமட்டும் கொண்டது.
  • Cellulose,Pectin,Hemicellulose ஆல் ஆனது.                Ÿ

அமைவிடம் :- அகத்தோலை அடுத்து உட்புறமாக காணப்படும்.

தொழில்கள்

  •  வேர்களில் கலன்மாறிழையம், தக்கைமாறிழையம் உருவாக்கும்.
  •  பக்கவேர்களைப் பிறப்பிக்கும்.

 ஒட்டுக்கலவிழையம்

5601-004-09de6b42-1

  • நன்குவியத்தடைந்த கலம்
  • கலங்கள் நீண்ட, தட்டையான பீப்பாவடிவம் உடையவை.
  • கலத்திடைவெளிகள் காணப்படலாம்.
  • முதற்சுவர்உண்டு. துணைச்சுவர் இல்லை.
  • கலச்சுவர் முலைகளில் Cellulose ஆல் தடிப்படைந்தது.
  • கரு, குழியவுரு, புன்வெற்றிடம் கொண்ட உயிருள்ள கலம்.
  • முதலான வளர்ச்சியின் போது மட்டும் தோற்றுவிக்கப்படும்.

அமைவிடம்

  • இளம் இருவித்திலைத் தண்டுகளின் மேற்பட்டையின் சுற்றுப்புறமாக காணப்படும்.
  • இருவித்திலை இலைகளின் மையநரம்பிற்குக் கீழாகவும் மேலாகவும் காணப்படும்.

தொழில்கள்

  •  ஆதாரம் அளித்தல்.

வல்லருகுக் கலவிழையம்

  • நன்குவியத்தடைந்த கலம்.
  • கலத்திடைவெளிகள் அற்றவை.
  • கரு, குழியவுரு, புன்வெற்றிடம் அற்ற இறந்தகலம்.5601-004-09de6b42-2
  •  கலச்சுவர் முதற்சுவர், துணைச்சுவரைக் கொண்டது.
  • Cellulose,Pectin,Hemicellulose,Pectinஐயும் கொண்டது.
  •  முதற்சுவர் படிவாக Cellulose,Pectin,Hemicellulose காணப்படும்.
  • துணைச்சுவர; படிவாக Lignin உண்டு.
  • இது நார், வல்லுரு என இருவகைப்படும்.          Ÿ

நார்:-

  • கதிர்வடிவான நீண்ட கலம்.
  • இரு முனைவுகளும் கூம்பியவை.
  • குறுக்குவெட்டு முகத் தோற்றத்தில் பல்வோண வடிவம் உள்ளவை.
  •  கலச்சுவரில் எளிய குழிகள் உண்டு.

அமைவிடம்

  • தண்டின் பரிவட்டவுறை.
  • காழ், உரியம்.

தொழில்கள்

ஆதாரம் அளித்தல்.

வல்லுருக்கள்:-

  • குறுகியகலம், கோளவடிவம் / பல்கோண வடிவமானது.
  • கலங்கள் முதிர்ச்சியின் போது கரு, குழியவுரு இழந்து இறந்த கலமாகும்.
  • கல உள்ளிடம் ஒடுக்கப்பட்டது.
  • கலச்சுவரில் எளிய குழிகளும், குழிக்கான்களும் காணப்படும்.

அமைவிடம் :- பழங்களின் ஓடுகள், வித்துகளில் வித்துறை.

தொழில்கள் :- ஆதாரம் அளித்தல்

சிக்கலான இழையம்

 

சிக்கலான இழையம் பிரதானமாக 2 வகைப்படும்.

  1. காழ்
  2. உரியம்

காழ்

இதில் பின்வரும் கலவகைகள் காணப்படும்.

  1. காழ்கலன் மூலகம்.
  2. குழற்போலி.
  3. காழ்நார்.
  4. காழ்புடைக்கலவிழையம்.

1. காழ்கலன் மூலகம்

  •  நன்கு வியத்தடைந்த கலம்.
  • கலத்திடைவெளி அற்றது.
  •  இறந்தகலம், கரு, குழியவுரு, புன்வெற்றிடம் அற்றது.
  •  குறுகிய அகன்ற கலம்.
  • குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தில் வட்டமானது.
  •  தடித்த கலச்சுவர் உடையது.
  •  கலச்சுவர் முதற்சுவர், துணைசுவர் என்பவற்றை உடையது.
  •  முதற்சுவர் படிவாக Cellulose,Pectin,Hemicellulose என்பன காணப்படும்.
  •  துணைச்சுவர் படிவாக lignin காணப்படும்.
  •  கலச்சுவரில் குழிகள் காணப்படும்.
  • கலச்சுவரின் உட்பகுதியில் அழிவடைந்த குறுக்குச்சுவரின் எஞ்சிய பகுதி காணப்படும்.
  • அகன்றகல உள்ளிடம் காணப்படும்.
  • காழ்கலன் மூலகங்கள் குறுக்குசுவர் அழிவடைவதனால் தொடர்ச்சியான நீண்டகாழ்கலன் உருவாகும்.
  • காழ்கலன் சுவரின் வெவ்வேறு வடிவம் துணைச்சுவராக lignin படிவு காணப்படும்.
  • வளர்ச்சியின் ஆரம்பத்தில் தோன்றும் முதல்காழில் lignin படிவு கங்கண வடிவம் / சுருளியுருவான தடிப்பாக காணப்படும்.
     

தொழில்கள்
1. பொறிமுறை தாங்கல்
2. நீர், கனியுப்பு கடத்தல்.

2. குழற்போலி

  • நன்கு வியத்தமடைந்த கலம்.
  •  கலத்திடைவெளிகள் அற்றவை.
  •  இருமுனைவும் கூம்பிய நீண்ட கலம்.
  •  குழற்போலி கலங்கள் ஒன்றுடன் ஒன்று மேற்கொருந் துகை அடைந்து காணப்படும்.
  •  முதிர்ச்சி அடையும் போது கலங்கள் கரு, குழியவுரு என் பனவற்றை இழந்து இறந்தகலம் ஆகும்.
  •  கலவுள்ளிடம் காணப்படும்.
  •  கலச்சுவர் தடித்தது.
  •  முதற்சுவர், துணைச்சுவர் படிவுகளைக் கொண்டது.
  •  முதற்சுவர் படிவாக Cellulose, pectin, Hemicellulose காணப்படும்.
  •  துணைச்சுவர் படிவாக ligninகாணப்படும்.
  •  lignin  வடிவங்களில் படிந்து காணப்படும்.
  • கலச்சுவரின் குழிகள் மூலம் அடுத்துள்ள குழற்போலியின் உள்ளிடம் தொடர்படும்.

தொழில்கள்
1. பொறிமுறை தாங்கல்
2. நீர், கனியுப்பு கடத்தல்.

3. காழ்நார்கள்

  • கலங்கள் நீண்டவை.
  • இருமுனைவுகளும் கூம்பியவை.
  •  கலச்சுவர் தடித்தது.
  • முதற்சுவர், துணைச்சுவர் ஆகியவற்றை உடைய கலச்சுவர் உண்டு.
  • Cellulose, pectin, Hemicellulose என்பவற்றுடன் lignin காணப்படும்.
  • கல உள்ளிடம் ஒடுங்கியது.
  • அருகருகான கலங்களின் முனைவுகள் மேற்பொருந்துகை அடைந்து காணப்படும்.

தொழில்கள் :- ஆதாரம் அளித்தல்.

4. காழ்புடைக் கலவிழையம்

  • காழ் இழையத்தில் காணப்படும் ஒரேயொரு உயிருள்ள கலமாகும்.
  •  கலங்கள் கரு, குழியவுரு என்பவற்றை உடையன.
  •  கலச்சுவர் மெல்லியது.
  •  Cellulose,Pectin என்பவற்றால் ஆக்கப்பட்டது.

தொழில்கள்
1. உணவு சேமித்தல்.
2. நீர், கனியுப்புக்களை ஆரைத் திசையில் கடத்தல்.

உரியம்

சிக்கலான இழையம். இதில் 4 வகையான கலவகைகள் உண்டு.

  • நெய்யரிக் குழாய்.
  • தோழமைக்கலம்.5602-004-2c2c2dd3
  • உரியநார்
  • உரியபுடைக்கலவிழையம்.

    நெய்யரிக்குழாய் மூலகம்

  •  நன்கு வியத்தமடைந்த கலம்.
  • கலத்திடைவெளிகள் அற்றவை.
  • நீண்ட கலம்.
  • குறுக்குவெட்டில் பல்கோண வடிவானது.
  • உயிருள்ள கலம்.
  • முதிர்ந்து நிலையில் கரு அற்றது.
  • கலச்சுவர் தடித்தது.
  • கலச்சுவர்  முதற்சுவர்  படிவைக் கொண்டது. அது Cellulose,Pectin,Hemicellulose ஆல் ஆனது
  • துணைச்சுவர்  படிவில்லை.
  • ஒன்றன்மேல் ஒன்றாகவுள்ள இருநெய்யரிக்குழாய் மூலகங்களுக்கிடையில் நெய்யரித்தட்டு காணப்படும்.
  • இத்தட்டில் பல நுண்துளை உண்டு.
  • நெய்யரிக்குழாய் மூலகத்தின் பக்கச்சுவரில் நெய்யரிப்பரப்பு பல காணப்படும்.

தொழில்கள் :- திணிவுப் பாய்ச்சல் முறையில் சேதன உணவு கடத்தல்.

தோழமைக்கலம்

  • வியத்தமடைந்த கலம்.
  • கலத்திடைவெளிகள் அற்றது.
  • நீண்ட கலம்.
  • குறுக்குவெட்டில் செவ்வாக வடிவானது.
  • உயிருள்ள கலம்.
  • முனைப்பான கருவையும் செறிந்த குழியவுருவையும் கொண்டுள்ளது.
  • கலச்சுவர்  முதற்சுவர்  படிவான Cellulose,Pectin,Hemicelluloseஆல் ஆனது.
  •  துணைச்சுவர்  படிவில்லை.
  • நெய்யரிக்குழாயுடன் இணைந்த நிலையில் காணப்படும்.
  • குழியவுருவில் அதிக எண்ணிக்கையான இழைமணிகள் காணப்படும்.

தொழில்கள் :- சுமையேற்றல், சுமையிறக்கல் தொழிலை மேற்கொண்டு உணவு கடத்தலில் பங்கெடுக்கும்.

உரியபுடைக்கலவிழையம்

  • உயிருள்ளவை. கரு, குழியவுரு என்பவை உடையது.
  • Cellulose,Pectin ஆல் ஆன கலச்சுவர்  கொண்டது.
  •  உணவு சேமிப்பிலும், நீர் சேதன பதார்த்தம் ஆரைக்குரிய கடத்தல் ஈடுபடும்.

    உரியநார்          Ÿ5661126_orig

  •   கலங்கள் இறந்தவை. கரு, குழியவுரு இல்லை.
  • கலச்சுவரில் Cellulose,Pectin,Lignin காணப்படும்.
  • உணவு சேமிப்பிலும், நீர்  சேதன பதார்த்தம் ஆரைக்குரிய கடத்தல் ஈடுபடும்.

 

RATE CONTENT 0, 0
QBANK (10 QUESTIONS)

காழ்க் கலன்கள் சம்பந்தமாகத் தவறான கூற்று பின்வரு வனவற்றுள் எது?

Review Topic
QID: 3299
Hide Comments(0)

Leave a Reply

ஒரு வகையான தாவரக்கலத்தின் விவரணம் தரப்பட்டுள்ளது. புன்வெற்றிடமுள்ள கலங்கள், முதிர்ச்சி நிலையில் உயிருள்ளவை, மெல்லிய முதலான கலச்சுவர்களையுடையன, பொதுவாக ஒத்தபரிமாணமுள்ள, அனுசேப ரீதியாக உயிர்ப்புள்ளவை, சேமிப்புக் கலங்கள், தாவரங்களின் முதலான மற்றும் துணையான இழையங்கள் இரண்டிலும் காணப்படும். மேற்குறித்த விவரணத்திற்கு பொருத்தமான கலவகை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3624
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களில் மட்டும் காணப்படும் புன்னங்கங்கள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3640
Hide Comments(0)

Leave a Reply

விலங்குகளின் மேய்ச்சல் அல்லது விசைப்பொறியைப் பயன்படுத்தி புல்வெட்டலைத் தொடர்ந்து புல்வெளி ஒன்றில் புல் இலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் நீட்சிக்கும் பொறுப்பாக உள்ளது பின்வருவனவற்றுள் எதன் வளர்ச்சியாகும்?

Review Topic
QID: 3665
Hide Comments(0)

Leave a Reply

காழ்க் கலன்கள் சம்பந்தமாகத் தவறான கூற்று பின்வரு வனவற்றுள் எது?

Review Topic
QID: 3299

ஒரு வகையான தாவரக்கலத்தின் விவரணம் தரப்பட்டுள்ளது. புன்வெற்றிடமுள்ள கலங்கள், முதிர்ச்சி நிலையில் உயிருள்ளவை, மெல்லிய முதலான கலச்சுவர்களையுடையன, பொதுவாக ஒத்தபரிமாணமுள்ள, அனுசேப ரீதியாக உயிர்ப்புள்ளவை, சேமிப்புக் கலங்கள், தாவரங்களின் முதலான மற்றும் துணையான இழையங்கள் இரண்டிலும் காணப்படும். மேற்குறித்த விவரணத்திற்கு பொருத்தமான கலவகை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3624

தாவரங்களில் மட்டும் காணப்படும் புன்னங்கங்கள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3640

விலங்குகளின் மேய்ச்சல் அல்லது விசைப்பொறியைப் பயன்படுத்தி புல்வெட்டலைத் தொடர்ந்து புல்வெளி ஒன்றில் புல் இலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் நீட்சிக்கும் பொறுப்பாக உள்ளது பின்வருவனவற்றுள் எதன் வளர்ச்சியாகும்?

Review Topic
QID: 3665
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank