இயைபாக்கத்தில் பங்களிப்பு செய்யும் தொகுதிகள்
விலங்குகளின் ஒரு குறித்த தொழில் மேற்கொள்ளப்படும் போது பல கட்டமைப்புகள் அதில் பங்குகொள்ளும் இக் கட்டமைப்புகள் யாவற்றிற்கும் இடையில் ஏற்படுத்தப்படும் ஒருங்கிணைப்பு இயைபாக்கம் எனப்படும்.
விலங்குகளின் உடலில் மேற்கொள்ளப்படும் தொழிற்பாடு தூண்டலுக்கான துலங்கல் ஆகும்.
இயைபாக்கம் எனப்படுவது குறித்த தூண்டலுக்கு துலங்கலை காட்டும் முகமாக வாங்கிக்கும் விளைவுகாட்டிக்கும் இடையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தல்.
இயைபாக்கத்தின் முக்கியத்துவம்
இயைபாக்கத்தின் மூலம் தூண்டலுக்கான துலங்கள் வினைத்திறனாக காட்டப்படுகின்றது. அத்துடன் விலங்குகளுக்கு அசைவின் மூலம் பாதுகாப்பு, ஓர்சீர்திடநிலை பேணல் வினைத்திறனாக நிகழ்கிறது.
இயைபாக்கத்தை மேற்கொள்வதில் நரம்பு தொகுதி, அகஞ்சுரக்கும் தொகுதி, குருதி சுற்றோட்டத் தொகுதி தொடர்பு படும்.
நரம்பு தொகுதியினால் மேற்கொள்ளப்படும் இயைபாக்கம் நரம்பு இயைபாக்கம் எனவும் அகஞ் சுரக்கும் தொகுதியால் மேற்கொள்ளப்படும் இயைபாக்கம் இரசாயன இயைபாக்கம் எனவும் அழைக்கப்படும்.
இயைபாக்கத்தில் குருதியின் பங்களிப்பு
குருதிச்சுற்றோட்ட தொகுதி hormones ஐ கடத்தி இலக்கு அங்கங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் இரசாயன இயைபாக்கத்தில் பங்குகொள்கின்றது. தாவரங்களில் தாவர வளர்ச்சி பதார்த்தங்களால் இரசாயன இயைபாக்கம் மட்டும் காண்பிக்கப்படுகிறது.
நரம்பு , இரசாயன இயைபாக்க வேறுபாடுகள்
நரம்பு இயைபாக்கம் | ஓமோன் இயைபாக்கம் / இரசாயன இயைபாக்கம் |
---|---|
மின் இரசாயன முறையால் மேற்கொள்ளப்படும். | இரசாயன முறையால் மட்டும் |
விரைவாக மேற்கொள்ளப்படும். | மந்தமாக மேற்கொள்ளப்படும். |
துலங்கல் குறுகிய நேரத்திற்கு உரியது | நீண்ட நேரத்திற்குரியது |
துலங்கல் குறித்த பகுதிக்கு உரியது | கலங்கல் பரவலானது |
நரம்பு நார்/ கலத்தினூடாக கடத்தப்படும் | ஓமோனினூடாக குருதியின் மூலம் கடத்தப்பட்டு இரசாயன பதார்த்தத்தால் மேற்கொள்ளளப்படும் |
விலங்கு இராட்சிய கணங்களில் காணப்படும் நரம்பு தொகுதியின் ஓழுங்கமைப்புகள்
பின்வருவனவற்றில் எது ஒரு பரபரிவு நரம்புத் தொகுதி யின் தூண்டுதலால் ஏற்பட்ட தாக்கமன்று?
Review Topicபின்வரும் தொகுதிகளுள் இயைபாக்கத்திற்கான பங்களிப்பில்
குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது எது?
பின்வருவனவற்றில் எது ஒரு பரபரிவு நரம்புத் தொகுதி யின் தூண்டுதலால் ஏற்பட்ட தாக்கமன்று?
Review Topicபின்வரும் தொகுதிகளுள் இயைபாக்கத்திற்கான பங்களிப்பில்
குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தது எது?