Please Login to view full dashboard.

வளையங்கள்

Author : Admin

3  
Topic updated on 02/15/2019 07:18am

தூக்கவன்கூடானது  மேல் அவயத்தை கொண்ட மார்பு வளையத்தையும் கீழ் அவயவத்தை கொண்ட இடுப்பு வளையத்தையும் கொண்டது.

மார்பு வளையம்
  • இது மேல் அவயத்தை தாங்கி பரந்த அசைவிற்கு இடமளிக்கும் வகையில் சிறப்படைந்துள்ளது.
  • மார்புவளையம் 2 வகையான, 4 என்புகளை கொண்டுள்ளது.
    சிறுசாவி என்புகள் – 2
    தோற்பட்டை என்புகள் – 2

சிறுசாவி என்புகள்

  • இது நீண்ட கோலுருவான ‘ S ‘ வடிவ ( சிக்மா (σ) போலி என்பு ) என்பாகும்.
  • இது மார்புப்பட்டையின்  அதிமேற்பகுதியுடனும்  (பிடியுரு) தோற்பட்டை  என்பின்  நீண்ட  முளையுடனும்  மூட்டுக் கொள்கின்றன.
  • தொழில்கள் :
    • மேல் அவயத்துக்கும் அச்சு வன்கூட்டிற்கும் இடையில் என்பாலான இணைப்பை வழங்குகின்றன.
    • மார்புவளையத்தில் புயஎன்பு மூட்டுக்கொள்ளும் தோற்பட்டையின் கிண்ணப்பகுதியை உடலின் மத்திய நடுகோட்டி லிருந்து விலக்கி வைத்திருப்பதன் மூலம் மேல்அவயத்தின்  பரந்த அசைவிற்கு இடமளித்தல்.

தோற்பட்டை  என்புகள்

  • இது தட்டையாக்கப்பட்ட முக்கோண வடிவ என்பு .
  • இது நெஞ்சறைச்சுவரின் பிற்புற மேற்பகுதியில் அமைந்துள்ளது.
  • தோற்பட்டை என்பின் பக்கமாக ஆழம் குறைந்த கிண்ணக்குழி காணப்படும்.
  • இக்கிண்ணக்குழியுடன் புயஎன்பு தலை மூட்டுக்கொள்கின்றது. இம்மூட்டு நிறைவற்ற பந்துக்கிண்ண மூட்டை ஆக்கும்.  இது மேல் அவயத்தில் பரந்த வீச்சு அசைவிற்கு இடமளிக்கிறது.
  • தொழில்கள் :
    •  உள் அங்கங்களை பாதுகாத்தல்.
    • தசைகள் பொருந்தும் பரப்பை வழங்குதல்.
    •  நிறைவற்ற பந்துக்கிண்ண மூட்டை உருவாக்கி மேல் அவயத்தின் பரந்த வீச்சு அசைவிற்கு உதவும்.

 

இடுப்பு வளையம்
  • இடுப்பு வளையம், திருஎன்பு, குயிலலகு என்பு  என்பன  சேர்ந்து மனித  இடுப்பு வன்கூடு  ஆக்கப்படுகின்றது.
  • இடுப்பு ” பேசின் ” வடிவானது.
  • பெரிய இடுப்புக்குழியை சூழ்ந்து இடுப்பு அமைந்துள்ளது.
  • இடுப்பு வளையம் இரண்டு இடுப்பென்புகள் அல்லது நிர்நாம என்புகளை கொண்டது.
  • இரு இடுப்பென்புகளும் தமக்கிடையில் பூப்பென்பு ஒட்டினால் இணைகின்றன.
  • ஒவ்வொரு இடுப்பென்பும் 3 இணைந்த என்புகளால் ஆனது.
    •  புடைதாங்கி என்பு – பக்கப்புறம் , பின்புறம்
    •  நாரிய என்பு – முற்புறம் , கீழ்புறம்
    •  பூப்பென்பு – முற்புறம்
  • இடுப்பு வளையத்தில் மிகப்பெரிய என்பு புடைதாங்கி ஆகும். இது விசிறி வடிவானது. இதன் மேல்விளிம்பு ” புடைதாங்கி உச்சி ” எனப்படும். இதன் முற்புற மேற்பரப்பு உட்குழிவானது.
  • புடைதாங்கி, திருஎன்பின் பக்கப்புற மேற்பகுதியுடன் மூட்டுக்கொள்கின்றது.  இது  திருஎன்பு – புடைதாங்கி மூட்டு ஆகும்.
  • இடுப்பு வளையத்தில் மிக வலிமையான என்பு நாரீயமாகும். மனிதன் இருக்கும் போது நாரிய என்பு உடற்பாரத்தை தாங்குகின்றது.
  • இடுப்பு வளையத்தில் மிகச் சிறிய என்பு பூப்பென்பாகும்.
  • இடுப்பென்பின் பக்கப்புறமாக ஆழமான கிண்ணக்குழியாக அசற்றல்புலம் காணப்படும்.
  • அசற்றபுலத்தில் புடைதாங்கி, நாரீயம், பூப்பென்பு  ஆகிய  3 என்புகளும் இணைகின்றன.
  • அசற்றபுலத்தில் கீழ் அவயவத்தின் தொடையென்பு தலை மூட்டுக் கொள்கின்றது. இம்மூட்டு பந்துக் கிண்ண மூட்டு வகைக்குரியது.
  • முற்புறம்  பூப்பென்புகளுக்கிடையில் அமைந்துள்ள கோணம் ” பூப்பென்புவில் ” எனப்படும்.
  • நாரியம், பூப்பென்புகளுக்கிடையில்  நெருங்கற் குடையம் காணப்படுகின்றது.
  • இடுப்பு வளையம் பேசின் வடிவாக காணப்படல் மனிதனின் முற்றான நிமிர்ந்த தோற்றத்திற்கு உதவும். இதன்போது புவியீர்ப்புமையம் இடுப்பினுள் பேணப்பட்டு சமநிலை குலைவுகள் தடுக்கப்படுகின்றது.
  • இடுப்புக்குழியானது  வயிற்றுக்குழியின் ஒருபகுதி,  இடுப்பு உள்வழி என்பவற்றைக் கொண்டுள்ளது.

ஆண், பெண்  இடுப்பு வளையங்களுக்கிடையிலான வேறுபாடு

 

 

இயல்புகள்   ஆண் பெண்
இடுப்புக்குழியின் அகலம் ஒடுங்கியது அகன்றது
இடுப்புக்குழியின் ஆழம் கூடியது குறைந்தது
இடுப்புக்குழியின் வடிவம் ” புனல் ” வடிவம் ” Basin ” வடிவம்
இடுப்பு உள்வழி வடிவம் இதயவடிவம் நீள்வட்ட வடிவம்
பூப்பென்பு ஒட்டு ஆழம் கூடியது / அகன்றது ஆழம் குறைந்தது / ஒடுங்கியது
பூப்பென்புவில் 90º யிலும் குறைந்தது
90º யிலும் கூடியது
அசற்றப்புலம் பெரியது சிறியது
புடைதாங்கி கூடியளவு நிலைக்குத்தானது குறைந்தளவு நிலைக்குத்தானது
புடைதாங்கி உச்சி கூடிய வளைவுடையது குறைந்த வளைவுடையது
 புடைதாங்கிகளுக்கு இடையிலான தூரம் குறைவு அதிகம்
 நெருங்கற் குடையம் பெரியது /நீள்வட்டமானது சிறியது /முக்கோண வடிவானது

pelvic

இடுப்பு வளையத்தின் தொழில்கள்

  •  உள் அங்கங்களை பாதுகாத்தல்.
    (உ – ம்) கருப்பை, சிறுநீர்ப்பை,நேர்குடல்
  •  தசைகள் பொருந்தும் பரப்புக்களை வழங்கல்.
  •  நிமிர்ந்த உடற்கோலத்தை வழங்கல்.
  •  உடற்பாரத்தை தாங்குதல்.
  •  கீழ் அவயவத்தை தாங்கி மூட்டுக்களை ஏற்படுத்தி பரந்த
  • அசைவுக்கு உதவுதல்.

நிமிர்ந்த உடல்நிலை பேணுவதற்கு இடுப்பு வளையத்தின் கட்டமைப்பு இசைவாக்கங்கள் 

  • பேசின்படிவானதாக காணப்படல். இதனால் வயிற்றுக்குழியின் அங்கங்களின் நிறையை தாங்குதல்.
  • புடைதாங்கி பெரியதாகவும் அகலமாகவும் காணப்படல்.
RATE CONTENT 0, 0
QBANK (3 QUESTIONS)

மனிதனது மார்புவளையம் ஆக்கப்பட்டிருப்பது?

Review Topic
QID: 6491

 

 

Hide Comments(0)

Leave a Reply

ஒரு ஆணினதும், பெண்ணினதும் இடுப்பு வளையங்களுக்கிடையிலான ஒரு வேற்றுமையாவது வழமையாகப்
பெண்களில்,

Review Topic
QID: 6543
Hide Comments(0)

Leave a Reply

மனித இடுப்பு தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6741
Hide Comments(0)

Leave a Reply

மனிதனது மார்புவளையம் ஆக்கப்பட்டிருப்பது?

Review Topic
QID: 6491

 

 

ஒரு ஆணினதும், பெண்ணினதும் இடுப்பு வளையங்களுக்கிடையிலான ஒரு வேற்றுமையாவது வழமையாகப்
பெண்களில்,

Review Topic
QID: 6543

மனித இடுப்பு தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6741
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank