பாரம்பரியம்
இத் தாவரம் பரிசோதனைக்கு ஏற்ற வகையில் கொண்டிருந்த சிறப்பியல்புகள் :
மென்டலின் பரிசோதனையில் காணப்படும் விஞ்ஞான முறைகள் :
யாதேனும் ஒருபாரம்பரிய இயல்பின் இரண்டு வேறுபட்ட வகைகளுக்கு உரிய ஓரின நுகத்தினரிடையே செய்யப்படும் கலப்பு ஒற்றைக் கலப்புப் பிறப்பு எனப்படும்.
ஒற்றைக் கலப்பு சோதனை இனங்கலப்பு
கருதப்படும் யாதாயினுமொரு பாரம்பரிய இயல்பு தொடர்பாக அவ் அங்கி கருதப்படும் இயல்பின் ஓரின நுக பின்னிடைவான அங்கியுடன் செய்யப்படும் கலப்பு ஒற்றைக்கலப்பு சோதனை இனங்கலப்பு எனப்படும்.
ஒற்றைக் கலப்புப் பிறப்பாக்கலில் f2 சந்ததியில் தோற்ற அமைப்புக்கள் எப்பொழுதும் 3 : 1 என்ற விகிதத்தில் பெறப்பட்டன. இது ஒற்றைக் கலப்பு பிறப்பாக்கலின் மென்டலியனின் விகிதம் எனப்படும்.
மென்டலின் முதலாம் விதி (தனிப்படுத்துகை விதி)
பாரம்பரிய இயல்புகளைத் தீர்மானிக்கும் காரணிகள் சோடியாக உள்ளன. இவை புணரிகளை உருவாக்கும் போது தனிப்படுத்துகைக்கு உள்ளாகின்றன. இதனால், ஒவ்வொரு புணரியும் சோடிக் காரணிகளில் ஒன்றினை மட்டும் காவுகின்றது.
இரண்டு வேறுபட்ட பாரம்பரிய இயல்புகள் தொடர்பான வகைகளைக் கருதி செய்யப்படுகின்றன கலப்புகள் துவி கலப்பு பிறப்பு எனப்படும்.
இரட்டைக் கலப்புப் பிறப்பாக்கலில் f2 சந்ததியில் தோற்ற அமைப்புக்கள் எப்பொழுதும் 9 : 3 : 3 : 1 என்ற விகிதத்தில் பெறப்பட்டன.
மெண்டலின் இரண்டாம் விதி (தன்வயத்த தொகுப்பு விதி)
இனப்பெருக்கத்தின் போது, வேறுபட்ட பாரம்பரிய இயல்புகளைத் தீர்மானிக்கும் எதிருருக்களின் சோடிகள் சுயாதீனமாகத் தனிப்படுத்தப்பட்டு சோடியின் எதிருரு வில் ஒன்று மற்றைய சோடியின் யாதேனும் ஓர் எதிருருவுடன் சேர்ந்து செல்லும்.
கலப்புப் பிறப்பு ஒன்றில் இரண்டிற்கு மேற்பட்ட பல பரம்பரை அலகுகளின் வேறுபட்ட பண்புகள் கருதப்படுமாயின், அது பல்காரணிக் கலப்புப் பிறப்பு எனப்படும்.
பாரம்பரியம் தொடர்பான சில வரைவிலக்கணங்கள்
பரம்பரை அலகு : தற்சிறப்பான முறையில் ஒரு தனிப் பல்பெப்தைட்டின் கட்டமைப்பைத் தீர்மானிக்கின்ற DNA இன் பகுதி பரம்பரை அலகு எனப்படும். இதுவே, பாரம்பரியத்தின் அடிப்படையான கட்டமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அலகு ஆகும்.
எதிருரு : பரம்பரை அலகு ஒன்றின் நேர்மாறான இயல்புகளைத் தீர்மானிக்கும் மாற்று வடிவங்களில் ஒன்று.
ஓரினநுகம் : இருமடிய நிலையில் அங்கியொன்றின் அமைப்பொத்த நிறமூர்த்தங்களின் ஒத்த தானங்களில் ஒரே தன்மையான எதிருருக்கள் காணப்படின், ஓரின நுகம் எனப்படும்.
பல்லினநுகம் : இருமடிய நிலையில் அங்கியொன்றில் அமைப்பொத்த நிறமூர்த்த சோடிகளில் ஒத்த தானங்களில் ஒவ்வாத எதிருருக்கள் காணப்படின், அது பல்லின நுகம் எனப்படும்.
ஆட்சியான எதிருரு : பல்லின நுக நிலையில் தனது மாற்று எதிருரு இருக்கும் போது, தோற்ற அமைப்பை வெளிப்படுத்தும் எதிருரு ஆட்சியான எதிருரு எனப்படும்.
பின்னடைவான எதிருரு : ஓரினநுக நிலையில் தன்னை ஒத்த எதிருரு ஒன்று காணப்படும் போது மட்டும் தோற்ற அமைப்பை வெளிப்படுத்தும் எதிருரு பின்னடைவான எதிருரு எனப்படும்.
பிறப்புரிமை அமைப்பு : கருதப்படும் பாரம்பரிய இயல்பு தொடர்பான எதிருருக்களின் மொத்த தொகுதியின் தன்மை பிறப்புரிமை அமைப்பு எனப்படும்.
தோற்ற அமைப்பு : அங்கியின் பிறப்புரிமை அமைப்பினதும், சூழற்காரணிகளின் இடைத் தாக்கங்களாலும் அவ் அங்கியின் விருத்தியின் பொழுது வெளிக்காட்டப்படுகின்ற அமைப்பு தோற்ற அமைப்பு எனப்படும்.
பட்கெரிகார் (Budgerigar) பறவைகள் நீலம், பச்சை,மஞ்சள், வெள்ளை என்னும் நான்கு வகை நிறங்க ளில் காணப்படும் இந் நான்கு வகைகளையும் தூயவழிகளில்பேணலாம்.தூயவழிவகைகள்இனங்கலக்கப்படும் போது பின்வரும் பெறுபேறுகள் பெறப்ப டுகின்றன.
மஞ்சள் நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் மஞ்சள் நிறமுள்ளனவாக இருந்தன.
நீல நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் நீல நிறமுள்ளனவாக இருந்தன.
பச்சை நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் பச்சை நிறமுள்ளனவாக இருந்தன.
மஞ்சள் நிறமுள்ள ஒன்றை நீல நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் பச்சை நிறமுள்ளனவாக இருந்தன.
நிறத்தின் தலைமுறையுரிமை தொடர்பாக இப்பெறுபேறுகளிலிருந்துமேற்கொள்ள முடியாத கருதுகோள் பின்வருவனவற்றுள் எது?
நீண்ட சிறகுகளும் செந்நிறக் கண்களும் உள்ள Drosophila ஈயை பதாங்கச் சிறகுகளும் கபில நிறக்கண்களும் உள்ள ஈயுடன் இனங்கலந்த போது F1 தோன்றலில் எல்லா ஈக்களும் நீண் ட சிறகுகளையும் செந்நிறக்கண்களையும் உடையனவாக இருந்தன.F1தோன்றலில் ஈக்கள் சோதனைஇனங்கலத்தலுக்கு உட்படுத்தப்பட்ட போது இரண்டாம் தோன்றல் இருவகை ஈக்களை மாத்திரம் கொண்டிருந்தது. அவற்றில் ஒருவகை நீண்ட சிறகுகளையும் செந்நிறக்கண்களை உடையதாக இருந்தது. மற்றைய வகை பதாங்கச் சிறகுகளையும் கபில நிறக்கண்களையும் உடையதாக இருந்தது.F1 தோன்றலில் ஈக்கள் தமக்கிடையே இனவிருத்தி செய்தால் பின்வரும் எவ் வகைத் தோன்றல் பெரும்பாலும் கிடைத்தல் கூடும்?
Review Topicவெள்ளை பூக்களைத் தோற்றுவிக்கும் இரு தாவரங்களை இனங்கலந்த போது கிடைத்த F1 தாவரம் சிவப்பு பூக்களைத் தோற்றுவித்தது. F2 சந்ததியைப் பெறுவதற்கு F1 தாவரத்தை தன்மகரந்தச்சேர்க்கைக்குட்படுத்திய போது 179 தாவரங்கள் சிவப்புப் பூக்களையும் 141 தாவரங்கள் வெள்ளைப் பூக்களையும் தோற்றுவித்தன. இந்தத் தாவரங்களின் பூக்களின் நிறம் தலைமுறையுரிமை பெற்றது?
Review Topicபூனைகளில் வெண்பொட்டுகள் இருத்தல் ஓர் ஆட்சியுள்ள இயல்பாக இருக்கும் அதேவேளை தனிநிறம் பின்னிடை வானதாகும். குறுகிய மயிர்கள் ஓர் ஆட்சியுள்ள இயல் பாகும். அதேவேளை நீண்ட மயிர்கள் பின்னிடை வானவையாகும். வெண் பொட்டுகளையும் குறுகிய மயிர்களையும் கொண்ட ஒரு பூனை தனி நிறத்தையும் நீண்ட மயிர்களையும் கொண்ட ஒரு பூனையுடன் இனங்கலக்கப்பட்டபோது நான்கு பூனைக்குட்டிகள் பிறந்தன. அவற்றில் ஒன்று வெண்பொட்டுகளையும் குறுகிய மயிர்களையும் கொண்டிருந்தது. வேறொன்று வெண் பொட்டுகளையும் நீண்ட மயிர்களையும் கொண் டிருந்தது. வேறொன்று தனி நிறத்தையும் குறுகிய மயிர் களையும் கொண்டிருந்தது. வேறொன்று தனி நிறத்தை யும் நீண்ட மயிர்களையும் கொண்டிருந்தது. பின்வரும் முடிவுகளில் எது மேற்குறித்த இனங்கலத்தல் தொடர்பாகத் தவறானது?
Review Topicவெள்ளை வியன்டோட்டும் வெள்ளை லெக்கோனும் முழுமையாக வெண் இறக்கைகள் கொண்ட இரு கோழி வருக்கங்கள் ஆகும். இரண்டும் தூயவழி விருத்தியாகும். வெள்ளை லெக்கோன்கள், வெள்ளை வியன்டோட்டுகளுடன் இனங்கலக்கப்படும்போது F1 பறவைகளும் வெண் நிறம் ஆனவை. F1 பறவைகள் உள்ளக விருத்தி செய்யப்படும் போது F2 தோன்றல் வெண் பறவைகளையும் நிறமுள்ள பறவைகளையும் 13 : 3 விகிதசமத்தில் கொண்டுள்ளது. இத்தலைமுறையுரிமை தொடர்பாகப் பின்வரும் முடிபுகளில் தவறானது எது?
Review Topicதாவர இனம் ஒன்றில் பழங்கள் சிவப்பாக அல்லது மஞ்சளாக இருக்கலாம். இவ்வகைகள் இரண்டும் தூய வழிகளாகப் பெறப்படலாம். மஞ்சள் பழங்களையுடைய இரு தாவரங்கள் இனங்கலக்கப்பட்டபோது F1 தாவரங்கள் எல்லாம் சிவப்புப் பழங்களைத் தோற்றுவித்தன. F1 தாவரங்களை உள்ளகவிருத்தி செய்தபோது F2 தோன்றலில் 27 தாவரங்கள் சிவப்புப் பழங்களையும் 21 தாவரங்கள் மஞ்சள் பழங்களையும் தோற்றுவித்தன. இத் தலைமுறையுரிமை தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
Review Topicஒரு தாவர இனத்தில், செந்நிறப் பூக்கள் (R) ஆட்சியுள்ள இயல்பாகவிருக்கும் அதேவேளை வெண்ணிறப் பூக்கள் (r) ஒரு பின்னடைவான இயல்பாகும். நீள்வட்ட வடிவமான பழங்கள் (L) ஆட்சியுள்ள இயல்பாக விருக்கும் அதேவேளை வட்டமான பழங்கள் (1) ஒரு பின்னடைவான இயல்பாகும். R,L எனப்படும் இரண்டு பரம்பரையலகுகளும் ஒரே நிறமூர்த்தத்தில் 18 பட அலகுகள் (map units) இடைத் தூரத்தில் அமைந்துள்ளன எனக் கொள்க. செந்நிறப் பூக்களையும் நீள்வட்டவடிவமான பழங்களையும் கொண்ட தூயமுறை விருத்தி செய்யப்பட்ட தாவரமொன்று வெண்ணிறப் பூக்களையும் வட்டமான பழங்களையும் கொண்ட தூயமுறை விருத்தி செய்யப்பட்ட தாவரமொன்றுடன் இனங்கலக்கப்பட்டு, F1 தாவரங்கள் F2 தாவரங்களை உருவாக்குவதற்கு தன்மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டபோது, F2 தோன்றலில் என்ன சதவீதமான தாவரங்கள் வெண்ணிறப் பூக்களையும் வட்டமான பழங்களையும் கொண்டிருக்கும்?
Review Topicபீ (Pea) தாவரங்களின் பேதம் ஒன்றில் உயரமான தாவரம் ஆட்சியானது (T) , குட்டையான தாவரம் பின்னடைவானது (t), அதே பேதத்தில் மஞ்சள் நிறமுடையவித்து ஆட்சியானது (Y), பச்சை நிறமுடைய வித்து பின்னடைவானது (y), இரு தாவரங்களுக்கிடையேயான கலப்புப் பிறப்பில் மஞ்சள் வித்துகளைக் கொண்ட உயரமான தாவரங்கள் 296 உம் பச்சை வித்துக்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் 104 உம் தோன்றின. பெற்றோர்த் தாவரங்களின் பிறப்புரிமையமைப்புகளைப் பெரும்பாலும் கொண்டிருக்கக் கூடியது பின்வருவனவற்றில் எது?
Review Topicமக்களிடையே சிவப்பு – பச்சை நிறக்குருடு இலிங்க மிணைந்த இயல்புகளில் அரிதானதொன்றாகும். பெண் ஒருவர் சாதாரண கணவனுக்கு நிறக் குருடுள்ள மகனைப் பெற்றெடுத்தார். அவர்களின் அடுத்த குழந்தை நிறக்குருடு உள்ளதாக இருக்கக்கூடிய நிகழ்தகவு யாது?
Review Topicசிவப்புப் பழங்களைக் கொண்ட உயரமான தூயவித்திசெய்கின்ற தக்காளித் தாவரம் மஞ்சள் பழங்களை உடைய குட்டைத் தாவரத்துடன் கலப்பினம் செய்யப்பட்டது . F1 சந்ததி எல்லாம் உயரமாகவும் சிவப்புப் பழங்களை உடையதாகவும் காணப்பட்டது.பின்னர் ஒரு பரிசோதனையில் சிவப்புப் பழங்களைக் கொண்ட உயரமான தக்காளித் தாவரம் A மஞ்சள் பழங்களைக் கொண்ட குட்டைத் தாவரம் B யுடன் கலப்பினம் செய்யப்பட்டது. தோன்றல்கள் எல்லாம் உயரமாகவும் 50%சிவப்புப் பழங்களைக் கொண்டும் மிகுதி மஞ்சள் பழங்களைக் கொண்டும் இருந்தன. தாவரம் A யின் பிறப்புரிமையமைப்பு என்ன?
Review Topicபீ தாவரமொன்றில் சிவப்பு வித்துகள் (R) மஞ்சள் வித்துகளுக்கு (r) ஆட்சியானவை. நீண்ட நெற்றுகள் (L) குறுகிய நெற்றுகளுக்கு (l) ஆட்சியானவை. சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட ஒரு தாவரம் ஓரினநுகமுள்ள பின்னடைவான தாவரமொன்றுடன் இனங்கலக்கப்பட்டபோது பின்வரும் தோன்றல்கள் பெறப்பட்டன.
சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட தாவரங்கள் – 138
சிவப்பு வித்துகளையும் குறுகிய நெற்றுகளையும் கொண்ட தாவரங்கள் -145
ஓரினநுகமுள்ள பின்னடைவான தாவரத்துடன் இனங்கலக்கப்பட்ட சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட தாவரத்தின் பிறப்புரிமையமைப்பானது
பீ (Pea) தாவரத்தில் உயரமான பண்பு (T) ஆட்சியானதும் குறள் பண்பு (t) பின்னிடைவானதும் ஆகும்.ஊதா பூ நிறம் (P) ஆட்சியுடையதும் வெண்பூ நிறம் (p) பின்னிடைவானதும் ஆகும் .வித்தின் வட்டவடிவம் (R) ஆட்சியுடையதும் வித்தின் சுருங்கிய வடிவம் (r) பின்னடைவானதுமாகும். மூன்று பரம்பரையலகுகளுக்கும் பல்லின நுகமுள்ள இரண்டு F1 தாவரங்கள் புணர்வதனாற் பெறப்படும் F2 தோன்றலில்,முழுதாகப் பின்னிடைவான தோற்றவமைப்புகளைக் கொண்ட பங்கு பின்வருவனவற்றுள் எது?
Review Topicஈமோபிலியா என்னும் நோய் X நிறமூர்த்தத்துடன் தொடுக்கப்பட்ட பின்னிடைவான ஒரு பரம்பரை அலகினால் விளைவிக்கப்படும். காவிப்பெண் ஒருத்தி ஒரு சாதாரண ஆணை முடித்தால் இந்நோயுடைய ஆண் குழந்தை அவர்களுக்குப் பிறப்பதன் நிகழ்தகவு என்ன?
Review Topic54 முதல் 55 வரையிலான வினாக்கள் பின்வரும் தரவுகளின் அடிப்படையிலானவை:வட்டமான பழங்களைத் தரும் உயரமான தக்காளித் தாவரமொன்று, சோணையுடைய பழங்களைத் தரும் குட்டையான தக்காளித் தாவரமொன்றுடன் கலப்பினப் பிறப்பாக்கம் செய்யப்பட்டபோது F1 பரம்பரையில் தோன்றிய எல்லாத் தாவரங்களும் வட்டமான பழங்களைக் கொண்ட, உயரமான தாவரங்களாகக் காணப்பட்டன. F1 தாவரமொன்றினை, சோணையுடைய பழங்களைக் கொண்ட குட்டையான தாவரமொன்றுடன் கலப்பினப் பிறப்பாக்கம் செய்தபோது கிடைத்த மகட் தாவரங்கள் பின்வருமாறு,
உயரமான வட்டமான -22
உயரமான சோனையுடைய -26
குட்டையான வட்டமான -23
குட்டையான சோனையுடைய -28
மேலே குறிப்பிடப்பட்ட கலப்புப் பிறப்பாக்கம் தொடர்பான பிழையான கூற்று எது?
Review Topic
F2 மகட்சந்ததியின் வட்டமான பழங்களைக் கொண்ட குட்டையான தாவரமொன்று, சோணையுடைய பழங்களைக் கொண்ட குட்டையான தாவரமொன்றுடன் கலப்புப் பிறப்பாக்கம் செய்யப்பட்டால், கிடைக்கும் மகட்சந்ததியில் சோணையுடைய பழங்களைக் கொண்ட குட்டையான தாவரங்கள் எவ்விகிதத்தில் காணப்படும்?
Review Topicஒரு வெளிறிப் பெண், வெளிறி நோய்க்குப் பலவின நுகமுள்ள ஒரு ஆணை முடித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை ஒரு வெளிறியாகும் என்பதன் வாய்ப்பு என்ன?
Review Topic
பயற்றைத் தாவரத்தின் செந்நிறப் பூக்கள் (W) வெண்ணிறப் பூக்களுக்கு (w) ஆட்சியுடையவை. பச்சைநிற வித்துக்கள் (Y) மஞ்சள் நிற வித்துக்களுக்கு (y) ஆட்சியுடையவை. செந்நிறப் பூக்களையும், பச்சைநிற வித்துக்களையும் கொண்ட தாவரமொன்றைப் பின்னடைவான ஓரினநுகமுள்ள தாவரமொன்றுடன் பின்முகக் கலப்புச் செய்தபோது கிடைத்த தோன்றல் தாவரங்களுள் 52% ஆனவை செந்நிறப் பூக்களையும், பச்சை நிற வித்துக்களையும் கொண்டு காணப்பட்டன. 48% மானவை செந்நிறப் பூக்களையும் மஞ்சள் நிற வித்துக் களையும் கொண்டவையாகக் காணப்பட்டன. பின்முகக் கலப்புப் பிறப்பாக்கத்துக்குட்படுத்தப்பட்டன பெற்றார்த் தாவரத்தின் பிறப்புமையமைப்பு யாது?
Review Topicதக்காளியில், உயரமான தாவரம் (D) குறளான தாவரத்திற்கு (d) ஆட்சியுடையது. வட்டமான பழம் (L) சோணை கொண்ட பழத்துக்கு (I) ஆட்சியுடையது. வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரம் ஒன்று, இரட்டைப் பின்னிடைவான ஓரினநுகமுடைய தாவரமொன்றுடன் பின்முகக் கலப்புச் செய்யப்பட்டபோது தோன்றல்கள் பின்வருமாறு கிடைக்கப்பெற்றன.
வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 46
சோணை கொண்ட பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 46
சோணை கொண்ட பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 04
வட்டமான பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 04
மேற்படி அவதானிப்புகள் தொடர்பாகப் பின்வருவனவற் றுள் எம் முடிவு தவறானதாகும்?
Review Topicபட்டாணித் தாவரங்களில் சிவப்புப் பூ (W) வெள்ளை நிறப் பூ (w) மீது ஆட்சி பெறுவதாகும். பச்சை நிற வித்து (Y) மஞ்சள் நிற வித்து (y) மீது ஆட்சி பெறுவதாகும். சிவப்பு நிறப் பூக்களும் பச்சை நிற வித்துக்களையும் கொண்ட ஒரு தாவரத்தின் பிறப்புரிமையமைப்பைத் துணிவதற்காக அது வெள்ளை நிறப் பூக்களையும் மஞ்சள் நிற வித்துக்களையும் கொண்ட ஒரு தாவரத்துடன் இனக்கலப்புச் செய்யப்பட்டது. பெற்றுக்கொள்ளப்பட்ட தாவரங்கள் பச்சை நிற வித்துக்களுடன் சிவந்த நிறப் பூக்கள், பச்சை நிற வித்துக்களுடன் வெள்ளை நிறப் பூக்கள் என இருவகையான அமைந்தன. பரிசோதிக்கப்பட்ட பெற்றோரின் பிறப்புரிமையமைப்பு பின்வருவனவற்றுள் எதுவாக இருக்கக்கூடும்?
Review Topicகுறித்வொரு சனத்தொகையில் 81% குறித்த ஒரு இயல்பிற்கு ஓரினனுக நிலையை உடையவையும் ஆட்சியானவையும் ஆகும். இச்சனத்தொகையில் பின்னிடைவான ஜீனின் அதிர்வெண் என்ன?
Review Topicதமது பெற்றோர்களில் தகப்பன் ஐயும் தாய் ஐயும் கொண்டிருக்கப் பெற்ற எச்சங்களில் பின்வரும் குருதித்தொகுதிகளுள் எது காணப்படும்?
Review Topicமனிதனில் கபில நிறக் கண்கள் நீல நிறக் கண்களுக்கு ஆட்சியுள்ளன. நீலக் கண்களைக் கொண்ட தாயையுடைய கபிலக் கண்ணுடைய ஒரு மனிதன் நீலக் கண்ணுடைய ஒரு பெண்ணை மணம் செய்து கொள்கிறான். இவர்களின் மக்களிடையே தோன்றும் கபில நிற : நீல நிற விகிதமாவது,
Review Topicபட்கெரிகார் (Budgerigar) பறவைகள் நீலம், பச்சை,மஞ்சள், வெள்ளை என்னும் நான்கு வகை நிறங்க ளில் காணப்படும் இந் நான்கு வகைகளையும் தூயவழிகளில்பேணலாம்.தூயவழிவகைகள்இனங்கலக்கப்படும் போது பின்வரும் பெறுபேறுகள் பெறப்ப டுகின்றன.
மஞ்சள் நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் மஞ்சள் நிறமுள்ளனவாக இருந்தன.
நீல நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் நீல நிறமுள்ளனவாக இருந்தன.
பச்சை நிறமுள்ள ஒன்றை வெள்ளை நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் பச்சை நிறமுள்ளனவாக இருந்தன.
மஞ்சள் நிறமுள்ள ஒன்றை நீல நிறமுள்ள ஒன்றுடன் இனங்கலந்தபோது கிடைத்த தோன்றல்கள் எல்லாம் பச்சை நிறமுள்ளனவாக இருந்தன.
நிறத்தின் தலைமுறையுரிமை தொடர்பாக இப்பெறுபேறுகளிலிருந்துமேற்கொள்ள முடியாத கருதுகோள் பின்வருவனவற்றுள் எது?
நீண்ட சிறகுகளும் செந்நிறக் கண்களும் உள்ள Drosophila ஈயை பதாங்கச் சிறகுகளும் கபில நிறக்கண்களும் உள்ள ஈயுடன் இனங்கலந்த போது F1 தோன்றலில் எல்லா ஈக்களும் நீண் ட சிறகுகளையும் செந்நிறக்கண்களையும் உடையனவாக இருந்தன.F1தோன்றலில் ஈக்கள் சோதனைஇனங்கலத்தலுக்கு உட்படுத்தப்பட்ட போது இரண்டாம் தோன்றல் இருவகை ஈக்களை மாத்திரம் கொண்டிருந்தது. அவற்றில் ஒருவகை நீண்ட சிறகுகளையும் செந்நிறக்கண்களை உடையதாக இருந்தது. மற்றைய வகை பதாங்கச் சிறகுகளையும் கபில நிறக்கண்களையும் உடையதாக இருந்தது.F1 தோன்றலில் ஈக்கள் தமக்கிடையே இனவிருத்தி செய்தால் பின்வரும் எவ் வகைத் தோன்றல் பெரும்பாலும் கிடைத்தல் கூடும்?
Review Topicவெள்ளை பூக்களைத் தோற்றுவிக்கும் இரு தாவரங்களை இனங்கலந்த போது கிடைத்த F1 தாவரம் சிவப்பு பூக்களைத் தோற்றுவித்தது. F2 சந்ததியைப் பெறுவதற்கு F1 தாவரத்தை தன்மகரந்தச்சேர்க்கைக்குட்படுத்திய போது 179 தாவரங்கள் சிவப்புப் பூக்களையும் 141 தாவரங்கள் வெள்ளைப் பூக்களையும் தோற்றுவித்தன. இந்தத் தாவரங்களின் பூக்களின் நிறம் தலைமுறையுரிமை பெற்றது?
Review Topicபூனைகளில் வெண்பொட்டுகள் இருத்தல் ஓர் ஆட்சியுள்ள இயல்பாக இருக்கும் அதேவேளை தனிநிறம் பின்னிடை வானதாகும். குறுகிய மயிர்கள் ஓர் ஆட்சியுள்ள இயல் பாகும். அதேவேளை நீண்ட மயிர்கள் பின்னிடை வானவையாகும். வெண் பொட்டுகளையும் குறுகிய மயிர்களையும் கொண்ட ஒரு பூனை தனி நிறத்தையும் நீண்ட மயிர்களையும் கொண்ட ஒரு பூனையுடன் இனங்கலக்கப்பட்டபோது நான்கு பூனைக்குட்டிகள் பிறந்தன. அவற்றில் ஒன்று வெண்பொட்டுகளையும் குறுகிய மயிர்களையும் கொண்டிருந்தது. வேறொன்று வெண் பொட்டுகளையும் நீண்ட மயிர்களையும் கொண் டிருந்தது. வேறொன்று தனி நிறத்தையும் குறுகிய மயிர் களையும் கொண்டிருந்தது. வேறொன்று தனி நிறத்தை யும் நீண்ட மயிர்களையும் கொண்டிருந்தது. பின்வரும் முடிவுகளில் எது மேற்குறித்த இனங்கலத்தல் தொடர்பாகத் தவறானது?
Review Topicவெள்ளை வியன்டோட்டும் வெள்ளை லெக்கோனும் முழுமையாக வெண் இறக்கைகள் கொண்ட இரு கோழி வருக்கங்கள் ஆகும். இரண்டும் தூயவழி விருத்தியாகும். வெள்ளை லெக்கோன்கள், வெள்ளை வியன்டோட்டுகளுடன் இனங்கலக்கப்படும்போது F1 பறவைகளும் வெண் நிறம் ஆனவை. F1 பறவைகள் உள்ளக விருத்தி செய்யப்படும் போது F2 தோன்றல் வெண் பறவைகளையும் நிறமுள்ள பறவைகளையும் 13 : 3 விகிதசமத்தில் கொண்டுள்ளது. இத்தலைமுறையுரிமை தொடர்பாகப் பின்வரும் முடிபுகளில் தவறானது எது?
Review Topicதாவர இனம் ஒன்றில் பழங்கள் சிவப்பாக அல்லது மஞ்சளாக இருக்கலாம். இவ்வகைகள் இரண்டும் தூய வழிகளாகப் பெறப்படலாம். மஞ்சள் பழங்களையுடைய இரு தாவரங்கள் இனங்கலக்கப்பட்டபோது F1 தாவரங்கள் எல்லாம் சிவப்புப் பழங்களைத் தோற்றுவித்தன. F1 தாவரங்களை உள்ளகவிருத்தி செய்தபோது F2 தோன்றலில் 27 தாவரங்கள் சிவப்புப் பழங்களையும் 21 தாவரங்கள் மஞ்சள் பழங்களையும் தோற்றுவித்தன. இத் தலைமுறையுரிமை தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
Review Topicஒரு தாவர இனத்தில், செந்நிறப் பூக்கள் (R) ஆட்சியுள்ள இயல்பாகவிருக்கும் அதேவேளை வெண்ணிறப் பூக்கள் (r) ஒரு பின்னடைவான இயல்பாகும். நீள்வட்ட வடிவமான பழங்கள் (L) ஆட்சியுள்ள இயல்பாக விருக்கும் அதேவேளை வட்டமான பழங்கள் (1) ஒரு பின்னடைவான இயல்பாகும். R,L எனப்படும் இரண்டு பரம்பரையலகுகளும் ஒரே நிறமூர்த்தத்தில் 18 பட அலகுகள் (map units) இடைத் தூரத்தில் அமைந்துள்ளன எனக் கொள்க. செந்நிறப் பூக்களையும் நீள்வட்டவடிவமான பழங்களையும் கொண்ட தூயமுறை விருத்தி செய்யப்பட்ட தாவரமொன்று வெண்ணிறப் பூக்களையும் வட்டமான பழங்களையும் கொண்ட தூயமுறை விருத்தி செய்யப்பட்ட தாவரமொன்றுடன் இனங்கலக்கப்பட்டு, F1 தாவரங்கள் F2 தாவரங்களை உருவாக்குவதற்கு தன்மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டபோது, F2 தோன்றலில் என்ன சதவீதமான தாவரங்கள் வெண்ணிறப் பூக்களையும் வட்டமான பழங்களையும் கொண்டிருக்கும்?
Review Topicபீ (Pea) தாவரங்களின் பேதம் ஒன்றில் உயரமான தாவரம் ஆட்சியானது (T) , குட்டையான தாவரம் பின்னடைவானது (t), அதே பேதத்தில் மஞ்சள் நிறமுடையவித்து ஆட்சியானது (Y), பச்சை நிறமுடைய வித்து பின்னடைவானது (y), இரு தாவரங்களுக்கிடையேயான கலப்புப் பிறப்பில் மஞ்சள் வித்துகளைக் கொண்ட உயரமான தாவரங்கள் 296 உம் பச்சை வித்துக்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் 104 உம் தோன்றின. பெற்றோர்த் தாவரங்களின் பிறப்புரிமையமைப்புகளைப் பெரும்பாலும் கொண்டிருக்கக் கூடியது பின்வருவனவற்றில் எது?
Review Topicமக்களிடையே சிவப்பு – பச்சை நிறக்குருடு இலிங்க மிணைந்த இயல்புகளில் அரிதானதொன்றாகும். பெண் ஒருவர் சாதாரண கணவனுக்கு நிறக் குருடுள்ள மகனைப் பெற்றெடுத்தார். அவர்களின் அடுத்த குழந்தை நிறக்குருடு உள்ளதாக இருக்கக்கூடிய நிகழ்தகவு யாது?
Review Topicசிவப்புப் பழங்களைக் கொண்ட உயரமான தூயவித்திசெய்கின்ற தக்காளித் தாவரம் மஞ்சள் பழங்களை உடைய குட்டைத் தாவரத்துடன் கலப்பினம் செய்யப்பட்டது . F1 சந்ததி எல்லாம் உயரமாகவும் சிவப்புப் பழங்களை உடையதாகவும் காணப்பட்டது.பின்னர் ஒரு பரிசோதனையில் சிவப்புப் பழங்களைக் கொண்ட உயரமான தக்காளித் தாவரம் A மஞ்சள் பழங்களைக் கொண்ட குட்டைத் தாவரம் B யுடன் கலப்பினம் செய்யப்பட்டது. தோன்றல்கள் எல்லாம் உயரமாகவும் 50%சிவப்புப் பழங்களைக் கொண்டும் மிகுதி மஞ்சள் பழங்களைக் கொண்டும் இருந்தன. தாவரம் A யின் பிறப்புரிமையமைப்பு என்ன?
Review Topicபீ தாவரமொன்றில் சிவப்பு வித்துகள் (R) மஞ்சள் வித்துகளுக்கு (r) ஆட்சியானவை. நீண்ட நெற்றுகள் (L) குறுகிய நெற்றுகளுக்கு (l) ஆட்சியானவை. சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட ஒரு தாவரம் ஓரினநுகமுள்ள பின்னடைவான தாவரமொன்றுடன் இனங்கலக்கப்பட்டபோது பின்வரும் தோன்றல்கள் பெறப்பட்டன.
சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட தாவரங்கள் – 138
சிவப்பு வித்துகளையும் குறுகிய நெற்றுகளையும் கொண்ட தாவரங்கள் -145
ஓரினநுகமுள்ள பின்னடைவான தாவரத்துடன் இனங்கலக்கப்பட்ட சிவப்பு வித்துகளையும் நீண்ட நெற்றுகளையும் கொண்ட தாவரத்தின் பிறப்புரிமையமைப்பானது
பீ (Pea) தாவரத்தில் உயரமான பண்பு (T) ஆட்சியானதும் குறள் பண்பு (t) பின்னிடைவானதும் ஆகும்.ஊதா பூ நிறம் (P) ஆட்சியுடையதும் வெண்பூ நிறம் (p) பின்னிடைவானதும் ஆகும் .வித்தின் வட்டவடிவம் (R) ஆட்சியுடையதும் வித்தின் சுருங்கிய வடிவம் (r) பின்னடைவானதுமாகும். மூன்று பரம்பரையலகுகளுக்கும் பல்லின நுகமுள்ள இரண்டு F1 தாவரங்கள் புணர்வதனாற் பெறப்படும் F2 தோன்றலில்,முழுதாகப் பின்னிடைவான தோற்றவமைப்புகளைக் கொண்ட பங்கு பின்வருவனவற்றுள் எது?
Review Topicஈமோபிலியா என்னும் நோய் X நிறமூர்த்தத்துடன் தொடுக்கப்பட்ட பின்னிடைவான ஒரு பரம்பரை அலகினால் விளைவிக்கப்படும். காவிப்பெண் ஒருத்தி ஒரு சாதாரண ஆணை முடித்தால் இந்நோயுடைய ஆண் குழந்தை அவர்களுக்குப் பிறப்பதன் நிகழ்தகவு என்ன?
Review Topic
54 முதல் 55 வரையிலான வினாக்கள் பின்வரும் தரவுகளின் அடிப்படையிலானவை:வட்டமான பழங்களைத் தரும் உயரமான தக்காளித் தாவரமொன்று, சோணையுடைய பழங்களைத் தரும் குட்டையான தக்காளித் தாவரமொன்றுடன் கலப்பினப் பிறப்பாக்கம் செய்யப்பட்டபோது F1 பரம்பரையில் தோன்றிய எல்லாத் தாவரங்களும் வட்டமான பழங்களைக் கொண்ட, உயரமான தாவரங்களாகக் காணப்பட்டன. F1 தாவரமொன்றினை, சோணையுடைய பழங்களைக் கொண்ட குட்டையான தாவரமொன்றுடன் கலப்பினப் பிறப்பாக்கம் செய்தபோது கிடைத்த மகட் தாவரங்கள் பின்வருமாறு,