முதலுரு மென்சவ்வால் எல்லைபடுத்தப்பட்ட கலத்தின் உள்ளிடம் முதலுரு எனப்படும்.
இம்முதலுரு இருபகுதிகளைக் கொண்டது.
கரு
குழியவுரு (Cytoplasm)
குழியவுரு
குழியவுரு கலப்புன்னங்கங்களைத் தாங்கி நிற்கும் திரவப் பகுதியாகும். எனவே, இது கலப்புன்னங்கம், குழியவுருத்திரவம் (Cytosom) என்பவற்றைக் கொண்டது.
குழியவுருத்திரவம் 90% நீரைக் கொண்டது. அத்துடன், அயன்கள், உப்புகள், வெல்லங்கள், அமினோஅமிலங்கள், கொழுப்பமிலம், இலிப்பிட்டுகள், நியூக்கிளியோடைட்டுகள், விற்றமின்கள் சுவாச வாயுக்கள் (CO2, O2), புரதம் என்பவற்றை கொண்டது.
குழியவுருத்திரவம் கலத்தின் வெளிப்புறம் / சுற்றயல் பகுதியில் ஜெலி போன்ற அமைப்பில் காணப்படும். கலத்தின் நடுப்பகுதியில் திரவநிலையில் காணப்படும்.
குழியவுருவின் தொழில் :
கலப்புன்னங்கங்களைத் தாங்குதல்
அனுசேபம் நிகழும் பிரதான இடம். அத்துடன், அனுசேபத்திற்கான மூலப்பொருட்களை வழங்குதல்.
கரு
கரு ஆனது புரோகரியோற்றா கலங்களில் காணப்படுவதில்லை. இயூக்கரியோற்றா கலங்களில் காணப்படுகின்றது. ஆனால், சில உயிருள்ள இயூக்கரியோற்றா கலங்கள் தொழிலுக்கான கட்டமைப்பு சிறப்பு அம்சமாக முதிர்ந்த நிலையில் கருவை இழக்கின்றன.
(உ-ம்) : மூலையூட்டிகளின் முதிர்ந்த RBC
முதிர்ந்த நெய்யரி குழாய் மூலகம்
முதிர்ந்த விலங்குக்கலங்களில் பொதுவாக கரு மத்தியில் காணலாம். ஆனால்ää தாவரக் கலத்தில் மத்தியில் அமைந்த புன்வெற்றிடம் காரணமாக சுற்றியல் பகுதியில் காணப்படும்.
பொதுவாக ஒரு கலம் ஒரு கருவைக் கொண்டது. ஆனால் விதிவிலக்கும் உண்டு.
(உ-ம்): பரமீசியம் → 2 கரு
வன்கூட்டு தசைக்கலம் → பல கரு
பங்கசுக்கலம் → பல கரு
இதுவே மிகப்பெரிய கலப்புன்னங்கம் ஆகும்.
ஒளிநுணுக்குக்காட்டியின் ஊடாக முதலில் அவதானிக்கப்பட்டது இதுவாகும்.
பொதுவாகக் கோளவடிவம்.
Robert Brown எனும் விஞ்ஞானியினால் கண்டுபிடிக்கப்பட்டது.
இது புன்கரு, குரோமற்றின், கருச்சாறு என்பவற்றைச் சூழ கருவுறையைக் கொண்டது.
கருவுறை இரு மென்சவ்வுகளால் ஆக்கப்பட்டது. அவையாவன வெளிமென்சவ்வு, உள்மென்சவ்வு.
வெளிமென்சவ்வின் தொடர்ச்சியாக அகக்கலவுருச்சிறுவலை காணப்படும்.
கருவறை கருநுண்துளைகளை கொண்டதாகக் காணப்படும். இத்துளைகளின் ஊடாக கருச்சாறுக்கும் குழியவுருவுக்குமிடையில் பதார்த்தப் பரிமாற்றம் நிகழும்.
உ – ம் : RNA, mRNA, rRNA, Ribosome களின் உபதுணிக்கைகள்
நிறமூர்த்தங்கள் யாவும் சேர்ந்து காணப்படும் சிக்கலான வலையமைப்பு Chromatin எனப்படும்.
ஒவ்வொரு நிறமூர்த்தமும் ஒரு DNA மூலக்கூறையும், hitone புரதங்களையும் கொண்டது.
கலப்பிரிவின் போது நிறமூர்த்தம் இரட்டிப்பு அடைந்து இரு அரை நிறவுருக்கள் உருவாக்கப்படும். இவ்விரு அரை நிறவுருக்களும் மையப்பாத்து எனும் ஸ்தானத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.
ஒரு DNA மூலக்கூறில் பல பரம்பரையலகுகள் காணப்படும்.
ஒவ்வொரு பரம்பரையலகும் ஒரு பொலிபெப்தைட் தொகுப்புக்குப் பொறுப்பானது. அல்லது இயல்புக்குப் பொறுப்பானது.
கருவினுள் காணப்படும் அடர்த்தியான கோளக் கட்டமைப்பு புன்கரு எனலாம். இது DNA, RNA, புரதங்களைக் கொண்டது.
கலப்பிரிவின் போது புன்கரு, கருவுறை இல்லாமல்போய் / மறைவடைந்து மீண்டும். உருவாக்கப்படுகின்றன.
புன்கருவின் தொழில்களாவன
rRNA உற்பத்தி
tRNA உற்பத்தி
Ribosome களின் உப அலகுகளின் உற்பத்தி
கருவின் தொழில்கள்
கலத்தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்தல்
கலப்பிரிவில் புதிய கருக்களைத் தோற்றுவிப்பதற்காக DNA யை உற்பத்தி செய்தல்.
புதிய தொகுப்பிற்கு வேண்டிய RNA, Ribosome களைத் தொகுத்தல்.
கலத்தில் பாரம்பரியத் தகவல்களை சேமித்தலும் சந்ததிக்குக் கடத்தலும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்