Please Login to view full dashboard.

மார்பு என்புக்கூடு

Author : Admin

1  
Topic updated on 02/15/2019 06:25am

நெஞ்சறைக்கூடு 12 நெஞ்சறைக்குரிய முள்ளென்புகள், 12 சோடி விலாஎன்புகள், 1 மார்புப்பட்டை ஆகியவற்றை கொண்டதாக மொத்தம் 37 என்புகளை கொண்டுள்ளது.

 

மார்புப்பட்டை என்பு
  • தட்டையான என்பு.  இது  3  பகுதிகளைக்  கொண்டது.
    பிடியுரு – அதிமேற்பகுதி
    உடல் – நடுப்பகுதி
    வாற்போல் – கீழ்பகுதி
  • பிடியுருவுடன் 2 சிறுசாவி என்புகளும்  2 சோடி விலா என்புகளும் மூட்டுக்கொள்கின்றன.
  • உடல் பகுதியுடன்  3வது – 7 வது சோடி  விலாஎன்புகள் இணைகின்றன.
  •  மார்புப்பட்டையின்  என்புமச்சையிலிருந்து  செங்குழியங்கள் பிரதானமாக  உற்பத்தியாகின்றன
  • தொழில்கள் :
    • சிறுசாவிகள், விலாஎன்புகள், தசைகள் என்பன இணைய இடமளிக்கின்றது.
    • உட்பகுதி அங்கங்களை பாதுகாக்கின்றது.
    • காற்றூட்டல் தொழிலை மேற்கொள்ளும்.
    • நெஞ்சறைக்கூட்டை தோற்றுவிக்க உதவும்.
    • வாழ்நாள் முழுவதும் குருதிக் கலங்களின் உற்பத்தியில்      பங்கெடுக்கும்.
விலா என்புகள்
  • 12 சோடி விலாஎன்புகள் உண்டு.
  • 1 வது – 7வது சோடி விலாஎன்புகள்  உண்மையான விலா என்புகளாகும்.  இவை மார்புப்பட்டையுடன் நேரடியாக இணைகின்றன.
  • 8 வது – 10 வது சோடி விலாஎன்புகள் போலியான விலாஎன்புகள் ஆகும்.  இவை மறைமுகமாக மார்புப்பட்டையுடன் இணைகின்றன.  இவை ஒவ்வொன்றும் தமக்கு மேலுள்ள விலாஎன்புடன் நேரடியாக இணைகின்றன.
  • 1வது – 10வது சோடி விலாஎன்புகள்  பளிங்குரு கசியிழையத்தின் மூலம் மார்புப்பட்டையுடன் / தமக்கு மேலுள்ள விலாஎன்புடன் இணைகின்றன.
  • 11வது, 12 வது சோடி விலாஎன்புகள் மிதக்கும் விலாஎன்புகள் ஆகும் .  இவை மார்புப்பட்டையுடன் இணையாது சுயாதீனமான முற்புற முனையை கொண்டிருக்கும்.
  • எல்லா விலாஎன்புகளும் பிற்புறமாக முள்ளந்தண்டு கம்பத்தில் நெஞ்சறை முள்ளென்புடன் மூட்டுக்கொள்கின்றன.
  • 1வது சோடி விலா என்புகள் அசையும் ஆற்றல் அற்றவை. அவை சுவாச அசைவில் பங்கெடுப்பதில்லை.  இவற்றை ஆதாரமாகக் கொண்டே ஏனைய விலாஎன்பு பழுவிடைத்தசைகளுக்கூடாக அசைகின்றன.
RATE CONTENT 0, 0
QBANK (1 QUESTIONS)

மனிதனின் விலாவென்புக் கூட்டுள் அடங்கியிருக்கும் அங்கங்களாவன.

Review Topic
QID: 6520
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் விலாவென்புக் கூட்டுள் அடங்கியிருக்கும் அங்கங்களாவன.

Review Topic
QID: 6520
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank