Please Login to view full dashboard.

தாவரங்களில் நீர்,கனியுப்பு கொண்டுசெல்லல்

Author : Admin

27  
Topic updated on 02/14/2019 02:47am

7தாவர இழையங்களினூடாக நீர், கனியுப்பு 3 பாதைகளினூடாக அசைகின்றன.

  • அப்போபிளாஸ்ட் (Apoplast)  பாதை
  • சிம்பிளாஸ்ட் (Symplast) பாதை
  • புன்வெற்றிடப் (Vacuolar) பாதைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அப்போபிளாஸ்ட் (Apoplast) பாதை
  • நீர், கரையங்கள் என்பன சுயாதீனமாக அசையக் கூடியதும் அடுத்துள்ள கலங்களின் கலச்சுவர், கலத்திடைவெளி, இறந்த காழ்கலன் உள்ளிடம் என்பன இணைக்கப்பட்ட தொகுதி.
  • அதாவது, தாவர இழையத்தின் கலங்களின் கலச்சுவர், கலத்திடைவெளி என்பவற்றின் ஊடாக நீர் அசையும் தொடர்ச்சியான பாதையாகும்.
  • நீர் அழுத்தப் படித்திறன் படி நீர் அழுத்தம் கூடிய இடத்திலிருந்து
    நீர் அழுத்தம் குறைந்த இடத்திற்கு ஒரே திசையில் அசையும். நீருடன் கரையங்களும் தொங்கல்களும் சேர்ந்து அசையும்.
  • இறந்த காழ் இழையத்தின் உள்ளிடத்தினூடாக நீர் அசைதல் Apoplast முறையாகும்.
  • தடையற்ற பாதை.
  • Apoplast கூடியளவு நீர் அசையும் பாதை.
சிம்பிளாஸ்ட் (Symplast) பாதை
  • முழு தாவர இழையங்களின் குழியவுரு, முதலுரு இணைப்பு ஒன்றிணைக்கப்பட்ட வலையமைப்பின் ஊடாக நீர் அசையும் பாதையாகும்.
  • பரவல், பிரசாரண முறைகளினால் நீர் அசையும்.
  • பிரசாரணம் சம்பந்தப்படுவதால் இம்முறையினூடாக நீர் மட்டும் அசையும்.
  • தடை கொண்ட பாதை.
புன்வெற்றிடப் (Vacuolar) பாதை
  • தாவர இழையத்தின் தொடர்ச்சியான புன்வெற்றிடங்களினூடாக நீர் அசையும் பாதையாகும்.
  • இதன் போது நீர் கலத்தின் இழுவிசை இரசணை மென்சவ்வு → குழியவுரு →  முதலுரு மென்சவ்வு →  கலச்சுவர் ஊடாக நீர் அசைந்து மறு கலத்தின் கலச்சுவர் →  முதலுரு மென்சவ்வு →  குழியவுரு→ இழுவிசை இரசணை மென்சவ்வினூடாக அசையும்.
  • பிரதானமாக பிரசாரண முறையால் அசையும் நீர் மட்டும் அசையும்.
  • நீர் அழுத்த படித்திறனுக்கு ஏற்ப நீர் மட்டும் அசையும்.
  • இப் பாதையினூடாக நீர் மிகவும் மந்தமாக அசையும். காரணம், தடை கூடிய பாதை.
  • தடைகளாக மென்சவ்வுகள் தொழிற்படும்.
  • மிகக் குறைந்தளவு நீரே இம்முறையால் அசையும்.
தாவரத்தில் நீரின் அகத்துறிஞ்சல், கடத்தல்

 வேர்மயிரின் ஊடான நீரின் அகத்துறிஞ்சல்

  • தாவரங்களில் நீர் அகத்துறிஞ்சலுக்கு சிறந்தலடைந்த கட்டமைப்பாக வேர்மயிர் கலங்கள் காணப்படுகின்றன.
  • வேர்மயிர் கலங்கள் தனிக்கலத்தான மேற்றோலிலிருந்து வெளிநீட்டத்தை கொண்ட கலமாகும்.
  • இதனால் மேற்பரப்பு அதிகரித்து காணப்படுகின்றது.
  • தாவரங்களில் வேர்மயிர்களினூடாகவே நீரின் அகத்துறிஞ்சல் நிகழ்கின்றது.
  • தாவரத்தில் நீரின் அகத்துறிஞ்சல் எனப்படுவது மண்ணீர் கரைசலிலுள்ள நீரானது வேர்மயிரினூடாக கலச்சாற்றை அடைதலாகும்.
  • மண்ணீர் கரைசலுடன் ஒப்பிடும் போது வேர்மயிர் கலத்தின் நீர் அழுத்தம் அங்கு கரைந்துள்ள கரையங்கள் காரணமாக குறைவாக காணப்படும். (மண்ணீர் கரைசலில் நீரின் அளவுடன் ஒப்பிடுகையில் கரைய அளவு மிகவும் குறையும். எனவே, இது தூய நீராக கருதப்படும்)
  • நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப நீரானது நீர் அழுத்தக் கூடிய இடத்திலிருந்து நீர் அழுத்தம் குறைந்த இடத்திற்கு அசையும். எனவே நீர் மண்ணீர் கரைசலிலிருந்து வேர் மயிர் கலத்தினுள் பிரதானமாக பிரசாரண முறையால் அசையும்.
  • வேர்மயிர் கலத்தின் நீர் அழுத்தம் மண்ணீர் கரைசலின் நீர் அழுத்தத்திற்கு சமனாகும் வரை நீர் அசையும். அதாவது, வேர்மயிர் கலத்தின் நீர் அழுத்தம் பூச்சியமாகும் வரை நீர் அசையும்.

நீரின் ஆரைக்குரிய கடத்தல் / பக்கக் கடத்தல்

  • வேர்மயிர் கலத்தினுள் உள்ளெடுக்கப்பட்ட நீர் தொடர்ச்சியாக பல இழையங்களினூடாக அசைந்து வேரின் காழ்கலனை அடைதல் நீரின் ஆரைக்குரிய / பக்கக் கடத்தல் எனப்படும்.
  • இதன் போது நீரானது பின்வரும் இழையங்களினூடாக அசைகின்றது. வேர் மயிர் கலம் – மேற்பட்டைக் கலம் – அகத்தோல் கலம் – பரிவட்டவுறை கலம் – காழ்க் கலன்.
  • வேர்மயிர் கலத்தினுள் நீர் உள்ளெடுக்கப்படுவதனால் அதன் நீரழுத்தம் அடுத்துள்ள மேற்பட்டைக் கலத்தின் நீர் அழுத்தத்தை விட அதிகமாக காணப்படும். எனவே நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப நீர் மேற்பட்டை கலத்தினுள் செல்லும். இவ்வாறு நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப அகத்தோல் வரை நீரானது Apoplast, Symplast, Vacuolar பாதைகளின் மூலம் அசையும்.
  • அகத்தோலின் ஆரைக்குரிய சுவரிலும் குறுக்குச் சுவரிலும் காணப்படும் சுபரின் படிவிலானலான கஸ்பாரின் கீலத்தினால் Apoplast பாதை தடுக்கப்படும். எனவே, மேற்பட்டைக் கலத்திலிருந்து அகத்தோலினுள் நீர் Symplast, Vacuolar பாதையினூடாகவே செல்லும்.
  • அகத்தோலில் Apoplast பாதை தடுக்கப்படுவதால் பதார்த்தங்கள் தேர்வுக்குரிய முறையில் உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
    தாவரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள், நோயாக்கிகள் உட்செல்வதை தடுக்கின்றது.
  • அகத்தோலை சென்றடைந்த நீரானது பரிவட்டவுறையை அடையும்.
  • பரிவட்டவுறையிலிருந்து காழ்கலனை அடையும். இங்கு மீண்டும் 3 பாதையினூடாகவும் நீர் அசையும்.
  • காழ்கலங்களினூடான நீரின் அசைவு Apoplast  இனால் மட்டும் நிகழும்.

♦  இளம் தாவர வேர்களின் அகத்தோலில் கஸ்பாரியன் பட்டிகை காணப்படும். முதிர்ச்சியடைந்த தாவர வேர்களில் மேலதிக சுபரின் படிவதால் கஸ்பாரின் கீலம் அகற்றப்பட்டு தொடுகோட்டுக்குரிய சுவரிலும் சுபரின் படிகின்றது. எனவே, முதிர்ச்சியடைந்த தாவர வேர்களில் Symplast பாதையும், Vacuolar தடுக்கப்படும். ஆனால் இடையிடையே சில கலங்களில் தொடுகோட்டுக்குரிய சுவர்களில் படிவு ஏற்படுவதில்லை. இக் கலங்கள் வழிக்கலங்கள் எனப்படும். இதனூடாகவே நீரின் அசைவு நிகழும்.

 நீரின் மேல்நோக்கிய கடத்தல் / சாற்றேற்றம்

  • சாற்றேற்றம் / நீரின் மேல்நோக்கிய கடத்தல் எனப்படுவது வேரின் காழ்கலனில் உள்ள நீரானது தண்டின் காழ்கலனின் ஊடாக இலையின் கால்கலனை அடைதலாகும்.
  • வேர், தண்டு, இலை என்பவற்றின் காழ்கலன்கள் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டு தாவரம் முழுக்க ஒரு வலைத் தொகுதியாக காணப்படுகின்றது.
  • சாற்றேற்றத்தை விளக்குவதற்கு 4 தத்துவம் / கொள்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.
    அவையாவன :

    • ஆவியுயிர்ப்பு இழுவை
    • நீர் அழுத்தப் படித்திறன்
    • நீர் மூலக்கூறின் பிணைவு விசை
    • நீர் மூலக்கூறின் ஒட்டற்பண்பு விசை

( 1 )  ஆவியுயிர்ப்பு இழுவையும் நீர் அழுத்தப் படித்திறனும்

  • இத் தத்துவத்தின் படி இலைகளிலிருந்து நீர் ஆவியாவதால் வேரிலிருந்து நீர் மேல்நோக்கி இழுக்கப்படுகின்றது.
  • ஆவியுயிர்ப்பினால் இலையின் இலைநடுவிழைய கலங்களில் நீர் அழுத்தம் குறைக்கப்படும். எனவே, இலையின் காழ்கலனிலிருந்து  நீர் இலையின் இலை நடுவிழைய கலங்களுக்கு நீர் அழுத்த படித்திறனுக்கு ஏற்ப அசையும்.
  • இதனை தொடர்ந்து தண்டின் காழ்கலனிலிருந்து இலையின் காழ்கலனிற்கு நீர் அசையும்.
  • இதனை தொடர்ந்து வேரின் காழ்கலனிலிருந்து தண்டின் காழ்கலனிற்கு அசையும்.
  • இறுதியில் மண்ணீர் கரைசலிலிருந்து வேரின் காழ்கலனிற்கு நீர் அசையும். எனவே, மண்ணீர் கரைசலுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையில் தாவரத்திற்கூடாக நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப நீர் கடத்தப்படுகிறது.
  • நீரின் மேல்நோக்கிய அசைவு திணிவுப் பாய்ச்சல் முறையினால் நிகழ்கின்றது. மேலும் ஒட்டற்பண்பு, பிணைவு விசை கருதுகோள்களிற்கு  அமையவும் நிகழ்கின்றது.

( 2 )  நீரின் பிணைவு விசை

  • அடுத்துள்ள இரு நீர் மூலக்கூறுகளுக்கு இடையில் காணப்படும் கவர்ச்சி, பிணைவு விசை எனப்படும்.
  • இவ்விசை காழ்கலனினுள் நீர் நிரல் தொடர்ச்சியாக பேண உதவுகிறது. அதாவது நீர் கம்பம் / நீர் நிரல் உடையாது தடுக்கின்றது. எனவே, காழ்கலனின் ஊடாக நீர் தொடர்ச்சியாக அசையும்.

( 3 )  நீரின் ஒட்டற்பண்பு விசை

  • நீர் மூலக்கூறிற்கும் காழ்கலனின் சுவர் மூலக்கூற்றிக்கும் இடையில் காணப்படும் கவர்ச்சி, ஒட்டற்பண்பு விசை எனப்படும்.
  • இவ் விசையானது நீர் நிரல் கீழ்நோக்கி அசைவதை தடுக்கின்றது.
RATE CONTENT 2, 1
QBANK (27 QUESTIONS)

பின்வரும் எது / எவை ஊடாக உட்கொள்ளுகை மூலம் நீர் அசையக்கூடியதாகவிருக்கும்?

Review Topic
QID: 4958
Hide Comments(0)

Leave a Reply

1 – 5 வரையிலான 5 நிலைகளைக் காட்டும் பொதுமைப்பாடான ஒரு வாழ்க்கை வட்டம் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. 102, 103, 104 ஆம் வினாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளுக்குப் பொருத்தமான வாழ்க்கைவட்ட நிலைகளைத் தெரிவு செய்யுங்கள்.

வித்துமூடியுளித் தாவரமொன்றினது சூல்வித்துக் கவசம்?

Review Topic
QID: 8425
Hide Comments(0)

Leave a Reply

A,B என்பன ஒன்றுக்கொன்று அடுத்துள்ள இரண்டு தாவரக் கலங்களாகும். இருகலங்களினதும் Ψw, Ψs பெறுமானங்கள் வரிப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1

 

 

 

 

 

 

 

 

பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6092

Answers: 3 & 4

Hide Comments(0)

Leave a Reply

ஒரு தாவரத்தின் அப்போபிளாஸ்ட் (apoplast) இன் பகுதி அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5570
Hide Comments(0)

Leave a Reply

காய்ச்சி வடித்த நீரில் முப்பது நிமிடங்களுக்கு இலைமேற்றோல் துண்டு ஒன்று அமிழ்த்தப்பட்ட போது கலங்கள் முற்றாக வீக்கமடைந்து சமநிலையை அடைந்தன. சமநிலையிலுள்ள இக் கலங்கள் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5579
Hide Comments(0)

Leave a Reply

உயர் மரத்தில் காழினூடாக நிலைக்குத்தான நீர் கொண்டு செல்லலில் மிகக் குறைந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப்படுவது பின்வரும் காரணிகளில் எது?

Review Topic
QID: 5585
Hide Comments(0)

Leave a Reply

வேர்களின் கப்பாரிக் கீலங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 5821
Hide Comments(0)

Leave a Reply

நீர் அழுத்தம் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 5822
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது நீர் அழுத்தம் காரணமாக ஏற்படுவதில்லை?

Review Topic
QID: 5835
Hide Comments(0)

Leave a Reply

தாவரவேர்களின் அகத்தோல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6088
Hide Comments(0)

Leave a Reply

பொதுவாக காழில் கொண்டு செல்லப்படுவது பின்வரும் பதார்த்தங்களுள் எது / எவை?

Review Topic
QID: 6095
Hide Comments(0)

Leave a Reply

கணம் கோடேற்றாவுக்கு (Chordata) கூர்ப்பு ரீதியில் அதிக உறவுள்ள முள்ளந் தண்டற்ற கணம்?

Review Topic
QID: 3178
Hide Comments(0)

Leave a Reply

-0.3 MPa கரைய அழுத்தத்தையும் 0.2 MPa அமுக்க அழுத்தத்தையும் கொண்ட ஒரு தாவரக்கலம் தூய நீரில் வைக்கப்பட்டால் மிகப் பெரும்பாலும் நடைபெறக்கூடிய
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6109
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் எது / எவை ஊடாக உட்கொள்ளுகை மூலம் நீர் அசையக்கூடியதாகவிருக்கும்?

Review Topic
QID: 4958

1 – 5 வரையிலான 5 நிலைகளைக் காட்டும் பொதுமைப்பாடான ஒரு வாழ்க்கை வட்டம் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. 102, 103, 104 ஆம் வினாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளுக்குப் பொருத்தமான வாழ்க்கைவட்ட நிலைகளைத் தெரிவு செய்யுங்கள்.

வித்துமூடியுளித் தாவரமொன்றினது சூல்வித்துக் கவசம்?

Review Topic
QID: 8425

A,B என்பன ஒன்றுக்கொன்று அடுத்துள்ள இரண்டு தாவரக் கலங்களாகும். இருகலங்களினதும் Ψw, Ψs பெறுமானங்கள் வரிப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1

 

 

 

 

 

 

 

 

பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6092

Answers: 3 & 4

ஒரு தாவரத்தின் அப்போபிளாஸ்ட் (apoplast) இன் பகுதி அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5570

காய்ச்சி வடித்த நீரில் முப்பது நிமிடங்களுக்கு இலைமேற்றோல் துண்டு ஒன்று அமிழ்த்தப்பட்ட போது கலங்கள் முற்றாக வீக்கமடைந்து சமநிலையை அடைந்தன. சமநிலையிலுள்ள இக் கலங்கள் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 5579

உயர் மரத்தில் காழினூடாக நிலைக்குத்தான நீர் கொண்டு செல்லலில் மிகக் குறைந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப்படுவது பின்வரும் காரணிகளில் எது?

Review Topic
QID: 5585

வேர்களின் கப்பாரிக் கீலங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 5821

நீர் அழுத்தம் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 5822

பின்வருவனவற்றில் எது நீர் அழுத்தம் காரணமாக ஏற்படுவதில்லை?

Review Topic
QID: 5835

தாவரவேர்களின் அகத்தோல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6088

பொதுவாக காழில் கொண்டு செல்லப்படுவது பின்வரும் பதார்த்தங்களுள் எது / எவை?

Review Topic
QID: 6095

கணம் கோடேற்றாவுக்கு (Chordata) கூர்ப்பு ரீதியில் அதிக உறவுள்ள முள்ளந் தண்டற்ற கணம்?

Review Topic
QID: 3178

-0.3 MPa கரைய அழுத்தத்தையும் 0.2 MPa அமுக்க அழுத்தத்தையும் கொண்ட ஒரு தாவரக்கலம் தூய நீரில் வைக்கப்பட்டால் மிகப் பெரும்பாலும் நடைபெறக்கூடிய
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6109
Comments Hide Comments(1)
Ariyaranjan Goodwin devaprian
ariyaranjan goodwin devaprian commented at 09:56 am on 06/03/2019
good questions
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank