Please Login to view full dashboard.

குருதி

Author : Admin

29  
Topic updated on 02/14/2019 02:18am

மனித குருதி அமுக்கம்Please Login to view the Question
குருதியினால் குருதிக் கலன்களின் சுவரில் ஏற்படுத்தப்படும் அமுக்கம் உதைப்பு விசை எனப்படும்.
இது 2 கூறுகளை கொண்டது.
1. சுருங்கலமுக்கம்
2. விரிவமுக்கம் தளர்வமுக்கம்Please Login to view the Question
இடது இதயவறை சுருங்குவதனால் தொகுதிப் பெருநாடி கலனின் சுவரில் குருதியினால் ஏற்படுத்தப்படம் அமுக்கம் சுருங்கலமுக்கம் எனலாம்.
இதன் பெருமானம் 120mmHg
இடது இதயவறை தளர்வதனால் தொகுதிப் பெருநாடி கலனின் சுவரில் குருதியினால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் விரிவமுக்கம் எனலாம்.
இதன் பெறுமானம் 80mmHg

மனித குருதி அமுக்கம் பெறுமானம் =சுருங்கலமுக்கம்/விரிவமுக்கம்=120/80 mmHg

 

சாதாரண சுகதேகியொருவருடைய 120/80 mmHg குருதி அமுக்கத்தை விட கூடிய குருதி அமுக்கம் தொடர்ச்சியாக காணப்படின் உயர் குருதி அமுக்கம் ஆகும்.
உயர் குருதி அமுக்கத்துக்கான காரணம்
1. அதிக உப்பு உள்ளெடுத்தல்
2. நாடிச் சுவர்களில் நார் இழையம் அதிகரித்து தடிப்பாதல்
3. நாடிச் சுவர்களில் குறைந்த அடர்த்தி டுipழ புரதங்கள் படிதல்
4. தகைப்பு நிலைமைகள் உணர்ச்சி வசப்படுதல்
5. புகைத்தல்
6. மிகையாக மது அருந்துதல்
7. அதிகரித்த உடற்பருமன்

உயர் குருதி அமுக்க விளைவுகள்
1. Heart attack முடியுரு துரொம்போசிஸ்
2. சிறுநீரக இழப்பு
3. பாரிச வாதம் / மூளைக்குரிய துரொம் போசிஸ்
4. குருதிக் கலன்கள் வெடித்தல் (internal bleeding)
5. இறப்புக்கு இட்டுச் செல்லல்
* சுகதேகியொருவரின் குருதி அமுக்கமான 120/80 mmHgயை விட குறைவான குருதி அமுக்கத்தை ஏற்படல் ஆகும்.
காரணம்
1. குருதி இழப்பு
2. fasting(விரதம்)
3. dengue காய்ச்சல்
விளைவு
1. சிறுநீரக இழப்பு
2. மூளை இழையங்கள் பாதிக்கப்படல்
3. சிலவேளை இறப்புக்கு இட்டுச் செல்லல்
குருதி அமுக்கம் பின்வரும் காரணிகளுடன் வேறுபடும்
1. வயது
2. பால்
3. ஒரு நாளின் நேரம்
4. ஒருவரின் தொழிற்பாடுகள்
5. தகைப்பு (stress)
6. கொண்ணிலைPlease Login to view the Question

ஒருவரின் குருதி அமுக்கத்தை தீர்மானிக்கும் காரணிகள்
1. இதயத் துடிப்பு வீதம்
 ஒரு நிமிடத்தில் நிகழும் இதயவட்டங்களின் எண்ணிக்கை : 72min
 இதயத்துடிப்பு வீதம் கூடினால் pressure கூடும்.
2. இதய வெளியீடு
 ஒரு நிமிடத்தில் இதயம் சுருங்கும் போது இடது இதயவறையிலிருந்து வெளியேற்றப்படும் குருதியின் கனவளவு
அடிப்புக் கனவளவு
 ஒரு இதயவட்டத்தின் போது இடது இதயவறையிலிருந்து வெளியேற்றப்படும் குருதியின் கனவளவு
அடிப்புக் கனவளவு × 72 =இதய வெளியீடு
3. குருதிக் கனவளவு
குருதிக் கனவளவு ∝ குருதி அமுக்கம்
4. குருதிக் கலன்களின் சுருக்கம்
குருதி கலன்களின் சுருக்கம் ∝ குருதி அமுக்கம்
5. குருதிக் கலன்களின் தளர்வு
6. நாடிச் சுவர்களின் மீள்தன்மை
7. நாளங்களினூடாக இதயத்திற்கு திரும்பும் குருதியின் கனவளவு
8. குருதிக் கலன்களின் (புன்னாடிகளின்) சுற்றயலுக்குரிய தடை
 நாடி துடிப்பு அமுக்கம் சுருங்கல் முகத்திற்கும் விரிவமுக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு.

 

குருதி அமுக்க கட்டுப்பாடு

இதய கலன் தொகுதிக்கான (இதயத்திற்கும் குருதிக் கலன்களுக்கும்) நரம்பு கட்டுப்பாட்டு மையம் நீள்வளைய மையவிழையத்தில் அமைந்துள்ளது

.
அதாவது இதய அடிப்பு வீதம் நீள்வளைய மையவிழையத்தினால் கட்டுப்படுத்தப்படும்.
 இதய அடிப்பு ஒழுங்காக்கத்தில் பரிவு நரம்புகளும் பரபரிவு நரம்புகளும் பங்கு கொள்கின்றன. அதாவது தன்னாட்சி நரம்பு பங்கு கொள்கின்றது.
 பரிவு நரம்பு இதயத் துடிப்பு வீதத்தை அதிகரிக்க பண்ணும்.
 பரபரிவு நரம்பு இதயத் துடிப்பு வீதத்தை குறைக்கும்.
 நீள்வளைய மையவிழையத்தில் இரு பிரதேசங்கள் காணப்படுகின்றன.
1. இதய அடிப்பு நிரோக்கும் மையம் – இதய அடிப்பு வீதத்தை குறைக்கும்
2. இதய அடிப்பு தூண்டும் மையம் – இதய அடிப்பு வீதத்தை கூட்டும்.
 இதய அடிப்பு கட்டுப்பாட்டுடன் தொடர்பான அமுக்க வாங்கிகள்/ baro வாங்கிகள் தொகுதிப் பெருநாடிச் சுவரில் உட்சிரசடி நாடி சுவரிலும்ää பெருநாளச் சுவர்களிலும் காணப்படுகின்றன.
தொகுதிப் பெருநாடிச் சுவர் உட்சிரசு நாடி சுவர் நெருநாளச் சுவர்.
 தொகுதிப் பெருநாடி சுவரிலுள்ள வாங்கிகளானது தொகுதிப் பெருநாடி உடல்கள் எனப்படும். இவை உயர் அமுக்கம் / உயர் இதய வெளியீட்டை உணரக் கூடியது.
 உட்சிரசுநாடிச் சுவரில் காணலாம். அமுக்கவாங்கிகள் உட்சிரசுநாடி குடாக்கள் எனலாம். இவையும் உயர் குருதி அமுக்கத்தை உணரக் கூடியவை

.
 இதயவறையிலிருந்து குருதி பம்பப்படும் போது உயர் அமுக்கம் காணப்படின் பெரநாடி உடல்கள் சிரசுநாடி குடாக்கள் உயர் அமுக்கத்தை உணர்ந்து இதய அடிப்பு நிரோதிப்பு மையத்திற்கு நரம்பு மூலம் கணத்தாக்கம் அனுப்பப்படும்.
அங்கிருந்து பரபரிவு நரம்பு மூலம் குடாச்சோணை கணுவுக்கு செய்தி அனுப்பப்பட்டு இதய அடிப்பு வீதம் குறைக்கப்பட்டு குருதி அமுக்கம் சீராக்கப்படும்.
 மேற்பெருநாளம் கீழ் பெருநாளத்தினூடாக குருதி இதயத்தை அடையும்போது அமுக்கம் குறைவாக காணப்படின் பெருநாள உடல்கள் அதை உணரும். அங்கிருந்து கணத்தாக்கம் நரம்பினூடாக இதய அடிப்பு. தூண்டும் மையத்திற்கு சென்று அங்கிருந்து நரம்பு கணத்தாக்கம் பரிவு நரம்பினூடாக குடாச்சோணை கணுவை அடைந்து இதய அடிப்பு வீதம் கூட்டப்பட்டு குருதி அமுக்கம் ஒழுங்காக்கப்படும்.
1. அதிரினலின் தைரொட்சின் ஓமோன்கள் இதய அடிப்பு வீதம் கூடும்.
2. குருதியில் pர் கூடும் போது இதய அடிப்பு வீதம் கூடும். (co2 குறைதல்)

முடியுரு சுற்றோட்டம்Please Login to view the Question
 இரட்டை சுற்றோட்டத்தில் சுவாசப்பை சுற்றோட்டம் தொகுதிச் சுற்றோட்டத்திற்கு மேலதிகமாக முடியுரு சுற்றோட்டம் காணப்படுகின்றது.
 இச் சுற்றோட்டமானது மிகவும் உயிர்ப்பாக தொழிற்படும் இதயத் தசைகளுக்கு குருதி வழங்கவென சிறந்தலடைந்தது.
 இச்சோற்றோட்டம் பின்வருமாறு காணலாம்.

இடது இதயவறை→ முடியுரு நாடி → முன்னாடி → குருதி மயிர்க்கலன்கள் → சிறிய நாளங்கள் → முடியுரு குடாக்கள் → வலது சோணையறை

 முடியுரு சுற்றோட்டத்தில் வலது இடது முடியுருநாடிகள் தொகுதிப் பெருநாடிகள் ஆரம்பிக்குமிடத்தில் அதன் அடியிலிருந்து உதிக்கின்றன.
 இவை புன்னாடிகளாக பிரிந்து பின் குருதிமயிர்க் கலன்களாக பிரிந்து இதயத்தசை இழையங்களுக்கு குருதியை வழங்குகின்றன.Please Login to view the Question
 இம்மயிர்த்துளை குழாய்களிலிருந்து பல சிறிய நாளங்கள் உருவாகி இதயத்தசையி இருந்து குருதியை சேகரித்து முடியுரு குடாக்களினூடாக வலது சோணையவை அடையும்.
 முடியுரு குடா எனப்படுவது பல சிறிய நாளங்கள் இணைந்து ஆக்கும் பெரியநாள கட்டமைப்பு ஆரம் துவாரத்தினூடாக சோணையறையில் திறக்கும்.
 சில புன்னாளங்கள் இணையாது நேரடியாக வலது சோணையறையில் திறக்கும்.
 இம் முடியுரு நாடிகள் cholestrol ஆல் அடைக்கப்படும் போது இதயத் தசைக்கு போதுமான குருதி வழங்கப்பட மாட்டாது.Please Login to view the Question
O2 பற்றாக்குறை ஏற்படும். இதயத்தில் நோ உணரப்படும் (angina)
 இந்நிலமை சீர்ப்படுத்தப்படா விடின் போதியளவு O2 இன்மையால் இதயத்தசை இழையம் இறப்புக்கு உள்ளாகும்.
இந்நிலமை Heart attack எனப்படும்.
 இந்நிலைமைகளின் போது இதயவட்ட கோலத்தில் மாற்றம் ஏற்படும்.

இதயத்துடன் தொடர்பான சத்திர சிகிச்சைகள்Please Login to view the Question
இதயத்துடன் தொடர்பாக 3 சத்திர சிகிச்சைகள் (பிரதான) மேற்கொள்ளப்படுகின்றன.
1. திறந்த இதய சத்திரசிகிச்சை
2. மாற்றுப்பாதை சத்திரசிகிச்சை (By pass)
3. இதய மாற்றீடு சத்திர சிகிச்சை
 திறந்த இதய சத்திரசிகிச்சையில் இதயத்தினுள் காணப்படும் வால்வுகளின் குறைபாடுகள் இதயத்தை திறந்து நிவர்த்தி செய்யப்படும்.
 முடியுரு நாடிகளில் அடைப்பு ஏற்படும் போது உடலின் கால் மார்புப் பகுதியிலிரந்து எடுக்கப்படும் குருதிக்கலனினால் மாற்றுப்பாதை அமைக்கப்படும்.
இவ்வகையான சத்திரசிக்சை மாற்றுப்பாதை சத்திர சிகிச்சை எனலாம்.

(இதற்கு நாடி / நாளம் பயன்படும். தொடைப்பகுதி – நாளம் மார்புப் பகுதி – நாடி)
 இதயத்தின் தொழிற்பாடு நலிவடையும் போது ஆரோக்கியமான இதயம் எடுக்கப்பட்டு இதயம் மாற்றீப்படுதல் இதயமாற்று சத்திரசிகிச்சை ஆகும்.
 மூளை இழையம் பாதிக்கப்பட்ட நபரிலிருந்து ஆரோக்கியமான இதயம் எடுக்கப்படும்.Please Login to view the Question

மனிதனின் நிணநீர் தொகுதி

 

 குருதி மயிர்க் கலன்களின் ஊடாக குருதி செல்லும் போது இழையங்களில் கலங்கள் மட்டத்தில் மயிர்கலனினூடு வெளியேறும் பதார்த்தம் இழையப்பாய் பொருள் எனப்படும்.
 குருதிமயிர்க் கலன்களினூடாக குருதிக் கலங்களும் குருதி முதலுரு புரதங்களும் வெளியேறுவதில்லை.
எனவே இழையப் பாய்பொருள் RBC, குருதி சிறுதட்டுக்கள், குருதிப் புரதங்கள் அற்ற குருதி ஆகும்.
 இழையப் பாய்பொருள் கலங்களுக்கு புறச்சூழலாக காணப்படும். ஆனால் விலங்கின் அகக் சூழலாக கருதப்படுகின்றது.
 நிறமற்ற கலங்களை சூழ காணப்படும் நீர் போன்ற பாய்மம் இழைய பாய்பொருள் எனப்படும்.
 நிறமற்ற நிணநீர் கலனினுள் காணப்படுகின்ற நீர் போன்ற பாய்மம் நிணநீர் எனப்படும்.
 இழையப்பாய் பொருளில் ஒருபகுதி நிணநீர்மயிர்க் கலங்களின் சுவரினூடாக பரவலடைந்து நிணநீரை ஆக்குகின்றது.
 நிணநீரும் இழையப் பாய்ப்பொருளும் அமைப்பில் ஒத்தவை.
 நிணநீர் மயிர்கலங்கள் ஒன்றிணைந்து நிணநீர் கலனை ஆக்கும்.
 நிணநீர் கலங்கள் நாளங்களினுள் திறக்கும்.

குருதி மயிர்கலன் – நிணநீர் மயிர்கள் இடையிலான வேறுபாடு

 

குருதிமயிர் கலன் நிணநீர் மயிர் கலன்
இருமுனையும் திறந்தது ஒருமுனை மழுங்கியது / மூடியது
ஒப்பிட்டளவில் சுவரின் பதார்த்த உருபுகவிடும் தன்மை குறைவு அதிகம்

 

மனிதனின் நிணநீர் தொகுதி பின்வரும் கூறுகளை கொண்டது.
1. நிணநீர் மயிர்க்கலன்கள்
2. நிணநீர் கலன்கள்
3. நிணநீர் முடிச்சுக்கள் / கணுக்கள்
4. மற்றும் ஏனைய நிணநீர் இழையங்களான

 

மண்ணீரல் தைமஸ் சுரப்பி சிறுகுடல் பெருங்குடலிலுள்ள நிணநீர் இழையங்கள் தொண்டையில் நிணநீர் இழையம் – Tonsil
 நிணநீர் மயிர்க்குழாய்கள் இழையப் பாய்பொருளில் ஆரம்பிக்கும் ஒருமுனை மழுங்கிய சிறிய கலங்களாகும்.
 குருதி மயிர்க்கலங்களின் அமைப்பை ஒத்தவை. அதாவது இதன்சுவர் எளிய செதின் மேலணியை கொண்டது. ஆனால் அதிக ஊடுபுகவிடும் தன்மை கொண்டது.
 இவ் நிணநீர் மயிர்க்கலங்கள் இணைந்து சிறிய நிணநீர் கலன்களை ஆக்கும் இறுதியில் அவை இருபெரிய நிணநீர் கலன்களை உரவாக்கும்.
 இவ் நிணநீர்கலன்கள் சிறிய நாளங்களின் நடிப்பை உடையவை. நாளத்தின் சுவரின் அமைப்பை ஒத்தவை.
 நிணநீர் கலனிடு கிண்ண வடிவான வால்வுகள் குறித்த இடைவெளியில் காணலாம்.
 இவ் வால்வுகள் நிணநீரின் பின்முகப் பாய்ச்சலை தடுக்கும்.
 நிணநீர் கலன்களினூடாக நிணநீர் அயலிலுள்ள / சூழலுள்ள வன்கூட்டுத் தசையின் சுருக்கத்தாலும் சுவரிலுள்ள மழமழப்பான தசையின் சுருக்கத்தாலும் சுற்றி ஒடுகின்றது /பாய்கின்றது.
மனிதனிலுள்ள இரு பெரிய நிணநீர் கான்களாவன
1. நெஞ்சறைக்கான
2. வலது நிணநீர்கான்
 நெஞ்சறைகான் 40 cmநீளமானது. இடது காரையெம்பு கீழ்நாளத்தினுள் திறக்கின்றது.
 இக் கானானது கால்கள் இருப்புப் பகுதி இடது நெஞ்சறைப்பகுதி தலை கழுத்து இடது புயம் ஆகிய பகுதிகளிலிருந்து நிணநீரை சேகரிக்கின்றது.
 வலது நிணநீர்கான் 1 cm நீளமானது வலது காரை என்பு கீழ்நாளத்தினுள் திறக்கும்.
 இக் கலனானது வலது நெஞ்சறைப் பகுதி தலை கழுத்து வலது புயம் என்பவற்றிலிருந்து நிணநீரை சேகரிக்கும்.

மனிதனின் மூளை முண்ணான் பகுதிகளில் நிணநீர் மயிர்கலன்கள் காணப்படுவதில்லை.
 நிணநீர் பாதையில் அநேக நிணநீர் முடிச்சுக்கள் or கணுக்கள் காணலாம்.
 இவை நாருiயால் சூழப்பட்டவை.
 இதனுள் நிணநீர் குழியங்களும் பெருந்தின் கலங்களும் காணலாம்.
 நிணநீர் கணுவுடன் புன்னாடி, புன்னாளம் நிணநீர் கலன்கள் தொடர்புபட்டு காணலாம்.

 

நிணநீர் தொகுதியின் தொழில்கள்
1. மேலதிக பாயத்தை நிணநீராக அகற்றுவதன் மூலம் குருதிக் கனவளவு ஒழுங்காக்கல்
2. நிணநீர் முடிச்சுக்களுக்கூடாக நிணநீர் செல்கையில் நுண்ணங்கிகள் வடிக்கப்படல் / அகற்றப்படல். அதாவது பெருந்தின் கலங்கள் தின்கிழிய செயல் மூலம் அவற்றை அழிக்கின்றன. இதன் மூலம் குறிப்பிலகற்ற நீர் பீடனத்தில் பங்கெடுக் கின்றன.
3. நிணநீர் குழுpயங்களின் உற்பத்தி (மண்ணீரல், தைமஸ் சுரப்பி, நிணநீர் முடிக்கல்) இதன் மூலம் பிறபொருள் எதிரி உற்பத்தி செய்யப்பட்டு குறித்த நோய் எதிரிகளான நுண்ணங்கிகள் அழிக்கப்படுகின்றன. அல்லது குறிப்பிலக்கான நிர்பீடன ஆக்கலின் பங்குகொள்கின்றன.
4. உணவுக் கால்வாய் பகுதியில் கொழுப்பமிலம் கிளிச்சோல் அகத்துறிஞ்சப்பட்டு பின் குருதிச் சுற்றோட்டத் தொகுதிக்கு கொண்டு செல்லல்.

 

 

சுவாச நிறப்பொருட்கள் (குருதி நிறப்பொருட்கள்)

 

6.1.7 சுவாச நிறப்பொருட்கள் (குருதி நிறப்பொருட்கள்)
 சுவாச நிறப்பொருள் எனப்படுவது ஒட்சிசனை மீறும்முறையில் இணைந்து அதனை கொண்டு செல்கின்ற இணைந்த கோளப்புரதமாகும்.
விலங்கு இராச்சியத்தில் 4 வகையான சுவாச நிறப்பொருட்கள் உண்டு.
1. ஹீமோ சயனின் (Haemo cyanin )
2. ஹீமோ எரித்திரின் (Haemo erythrin)
3. ஹீமோகுளோபின் (Haemoglobin)
4. குளோரோகுரோரின் (Chlorocurorin)Please Login to view the Question


இவ் சுவாச நிறப் பொருட்களால் O2 கொண்டு செல்லல் வினைத்திறன் ஆக்கப்படுகிறது.Please Login to view the Question

 

சுவாச நிறப்பொருள் கா / ம் மூலகம் ஒட்சிசனுடன் நிறம் கா / ம் விலங்கு கூட்டம் குருதியின் அமைக்கும் இடம்
ஹீமோ சயனின்  Cu நீலம் சில mollusca,crustacea
குருதித் தாயம்
ஹீமோ எரித்திரின்  Fe சிவப்பு சில annelida குருதிக் கலம்
  குளோரோகுரோரின்  Fe சிவப்பு சில annelida குருதி முதலுரு
ஹீமோகுளோபின்  Fe சிவப்பு சில annelida,சில mollusca, குருதி முதலுரு

 

 

Insecta களில் சுவாச நிறப்பொருட்கள் காணப்படுவதில்லை. காரணம் O2 நேரடியாக கலங்களுக்கு வழங்கப்படும். குருதித் தரவும் இல்லை.
 மனிதனில் வன்கூட்டுத்தசை இதயத் தசை கலங்களில் Myoglobin எனும் சுவாச நிறப்பொருள் காணலாம். இது Haemoglobin இன் அமைப்பை ஒத்தது. ஆனால் Haemoglobin லும் பார்க்க O2 நாட்டம் கூடியது.

மனிதனில் குருதி வகை

மனிதனின் குருதி வகை ABO குருதி வகை என அழைக்கப்படும்.
 மனித குடித்தொகையில் பிரதானமாக 4 குருதிவகை காணப்படுகின்றது. அவையாவன :Please Login to view the Question
A,AB,O,B

 

குருதி கூட்ட  O  A  B  AB
குடித்தொகையில் காணப்படும் வீதம்  46%  42% 9%  3%
RBC இன் மென்சவ்வில் காணலாம்.
Antigen வகை Agglutinogen
 –  A  B  A,B
குருதி தாயத்தில் காணப்படும்
Antibody பிறபொருளெதிரி (Agglutinin)
 a,b  b  a  –

குருதி மாற்றீடுPlease Login to view the Question
குருதி மாற்றீட்டின் போது வழங்கியின் RBC மென்சவ்வில் காணப்படும் Antigen ஆம் வாங்கியின் குருதி தாயத்தில் காணப்படும் Antibody ஆம் கருத்திற் கொள்ளப்படும். இவற்றில் ஒருங்கொற்றக் கூடிய / குருதி திரளக் கூடிய தன்மை காணப்படின் குருதி மாற்றீடு மேற்கொள்ள முடியாது.

Rhesusகாரணி (Rh)Please Login to view the Question
மேற்கூறிய Antigen ,antibody கு மேலதிகமாக RBC மென்சவ்வில் மேலதிகமாக ஒரு Antigen வகை காணப்படுவது அறியப்பட்டுள்ளது. இது Antigen D என அழைக்கப்படும்.
ஒரு குடித்தொகையில் 85% ஆனோர் இம்மேலதிக Antigen ஐ கொண்டிருப்பார்கள்.Antigen D கொண்டிருப்போர் Rh+ குருதி எனவும் கொண்டிராதோர் Rh- குருதிவகை உடையோர் எனவும் கொள்ளப்படும்.Please Login to view the Question
எனவே குருதிவகை மொத்தமாக 8 வகைப்படும். அவையாவன :
A+,A-,B+,B-,O+,O-,AB+,AB-Please Login to view the Question
Rh+குருதியுடையவர்க்கு Rh+,Rh-குருதி மாற்றீடு செய்யலாம். ஆனால் Rh- குருதியுடையவர்க்கு Rh- குருதி மட்டுமே வழங்கப்படலாம். சுh10 குருதி வழங்கப்படின் Antigen D க்கு எதிரான Antibody உற்பத்தி செய்யப்பட்டு குருதி ஒருங் கொட்டல் ஏற்படும்.
எனவே சர்வதேச பொது வழங்கி O- சர்வதேச பொதுவாங்கிAB+Please Login to view the Question

குருதியின் தொழில்கள்

குருதி பிரதானமாக 3 வகை தொழில்களை ஆற்றுகிறது
1. பதார்த்த கொண்டு செல்லல்
2. பாதுகாப்பு
3. ஒரு சீர்திடனிலை பேணல்

பதார்த்த கொண்டு செல்லல்
1. சமிபாட்டின் விளைபொருட்களான கரையக்கூடிய நிலையிலுள்ள புடரஉழளநஇ யஅiழெ யஉனைள என்பவற்றை பிரதானமாக சிறுகுடலிலிருந்து ஈரலிற்கு எடுத்துச் சென்று பின்னர் ஏனைய உடற்கலங்களுக்கு எடுத்துச் செல்லும்.
2. கழிவுப் பதார்த்தங்களான ருசநயஇ ருசiஉ யுஉனைஇ கிரியற்றினைன் என்பவற்றை உடற்கலங்களிலிருந்து அழித்தல் கட்டமைப் பிற்கு கொண்டு செல்லும்
3. Hormone களை அவற்றின் அகச்சுரக்கும் சுரப்பிகளிலிருந்து அவற்றின் இலக்கு அங்கத்திற்கு கொண்டு செல்லும்.
4. O2 வினை சிற்றறையிலிருந்து உடற்கலங்களுக்கும் ஊழு2 னை உடற்கலங்கத்திலிருந்து சிற்றறைக்கும் கொண்டு செல்லும்

பாதுகாப்பு
1. குருதியிலிலுள்ள ஒற்றைக்குழியம்ää நடுநிலைநாடி என்பவற்றின் மூலம் திண்குமிழியச் செயலில் இடுபட்ட பிறபொருட் களை { நுண்ணங்கிகளை அழிக்கும்.
2. குருதியிலுள்ள நிணநீர்குழியங்கள் மூலம் பிறபொருளெதிரி உற்பத்தி செய்யப்பட்டு நோய்க்கு எதிரான நிர்ப்பீடனம்
3. காயங்கள் ஏற்படும் போது குருதி உறைதலின் மூலம் மேலதிக உடற்பாயம் இழக்கப்படாமலும் நுண்ணங்கிகள் உடலுக்குள் செல்லாமலும் தடுக்கும்.
4. குருதி உறைதல் காரணியாக தொழிற்படும்.

ஒரு சீர்திடனிலை
1. குருதியினூடாக வெப்பம் பகிந்தளிக்கப்படுவதன் மூலம் வெப்ப ஒருசீர்திடனிலை பேணப்படும்.
2. அகச் சுழலின் pர் ஒழுங்காக்கப்படும்.
3. அங்கிகளுக்கிடையில் உடற்றொழியியல் இணைப்பை ஏற்படுத்தும்.

RATE CONTENT 0, 0
QBANK (29 QUESTIONS)

ஓர் ஒளி நுணுக்குக்காட்டியினூடாக நோக்கும்போது ஒரு முலையூட்டியின் சாயமிட்ட குருதிப் பூச்சை வேறு ஏதாவதொரு கோடேற்றின் சாயமிட்ட குருதிப்பூச்சிலிருந்து எளிதாக வேறுபடுத்தி அறியக்கூடியதாக இருப்பது?

Review Topic
QID: 5116
Hide Comments(0)

Leave a Reply

பிறபொருளெதிரிகளை உண்டாக்கும் குருதிக் கலங்கள்?

Review Topic
QID: 5117
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது மனிதனின் நிணநீர்த் தொகுதி பற்றிப் பொய்யானது?

Review Topic
QID: 5124
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது சாதாரண உடனலமுள்ள நிறையுடலி மனிதனின் ஈமோகுளோபினைப் பற்றிப் பொய்யானது?

Review Topic
QID: 5566
Hide Comments(0)

Leave a Reply

குருதியினம் A யை உடைய ஒரு தந்தைக்கும் குருதியினம் B யை உடைய ஒரு தாய்க்கும் குருதியினம் O வை உடைய ஒரு குழந்தை பிறந்திருப்பின், பின்வரும்
சேர்மானங்களில் எது தந்தையினதும் தாயினதும் பிறப்புரிமையமைப்புகளைத் தருகின்றது?

Review Topic
QID: 5582
Hide Comments(0)

Leave a Reply

பிறபொருளெதிரி உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட வெண்குருதிக் கலங்கள்?

Review Topic
QID: 5819
Hide Comments(0)

Leave a Reply

ஒரு தனி மூலக்கூறு ஈமோகுளோபினுடன் சேரும் ஒட்சிசன் மூலக்கூறுகளின் எண்ணிக்கை?

Review Topic
QID: 5820
Hide Comments(0)

Leave a Reply

மனிதக் குருதிக் கலங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?

Review Topic
QID: 5823
Hide Comments(0)

Leave a Reply

ஒரு மனிதனின் குருதியினம் டீ10 எனின் அவருக்குப் பின்வரும் எக் குருதியினத்தையுடைய வழங்கியின் குருதியைப் பாய்ச்ச முடியாது?

Review Topic
QID: 5832
Hide Comments(0)

Leave a Reply

கீழ்காணும் கூற்றுக்களில் பிழையானது எது? குருதியும் நிணநீரும் ஒத்திருப்பது

Review Topic
QID: 4846

Answer: All Answers

Hide Comments(0)

Leave a Reply

உடல் நலமான முழுவுடலி மனிதனின் குருதியில் அதிக எண்ணிக்கையிற் காணப்படும் வெண்குருதிக்குழிய வகையானது?

Review Topic
QID: 4863
Hide Comments(0)

Leave a Reply

கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயர்ந்த இடங்களில் வாழ்வதற்கான ஒரு இசைவாக்கமாகää மனிதனிலே பின்வருவனவற்றில் எதன் உற்பத்தி அதிகரிக்கப்படக் கூடும்?

Review Topic
QID: 4953
Hide Comments(0)

Leave a Reply

ஓர் ஒளி நுணுக்குக்காட்டியினூடாக நோக்கும்போது ஒரு முலையூட்டியின் சாயமிட்ட குருதிப் பூச்சை வேறு ஏதாவதொரு கோடேற்றின் சாயமிட்ட குருதிப்பூச்சிலிருந்து எளிதாக வேறுபடுத்தி அறியக்கூடியதாக இருப்பது?

Review Topic
QID: 5116

பிறபொருளெதிரிகளை உண்டாக்கும் குருதிக் கலங்கள்?

Review Topic
QID: 5117

பின்வருவனவற்றில் எது மனிதனின் நிணநீர்த் தொகுதி பற்றிப் பொய்யானது?

Review Topic
QID: 5124

பின்வருவனவற்றில் எது சாதாரண உடனலமுள்ள நிறையுடலி மனிதனின் ஈமோகுளோபினைப் பற்றிப் பொய்யானது?

Review Topic
QID: 5566

குருதியினம் A யை உடைய ஒரு தந்தைக்கும் குருதியினம் B யை உடைய ஒரு தாய்க்கும் குருதியினம் O வை உடைய ஒரு குழந்தை பிறந்திருப்பின், பின்வரும்
சேர்மானங்களில் எது தந்தையினதும் தாயினதும் பிறப்புரிமையமைப்புகளைத் தருகின்றது?

Review Topic
QID: 5582

பிறபொருளெதிரி உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட வெண்குருதிக் கலங்கள்?

Review Topic
QID: 5819

ஒரு தனி மூலக்கூறு ஈமோகுளோபினுடன் சேரும் ஒட்சிசன் மூலக்கூறுகளின் எண்ணிக்கை?

Review Topic
QID: 5820

மனிதக் குருதிக் கலங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?

Review Topic
QID: 5823

ஒரு மனிதனின் குருதியினம் டீ10 எனின் அவருக்குப் பின்வரும் எக் குருதியினத்தையுடைய வழங்கியின் குருதியைப் பாய்ச்ச முடியாது?

Review Topic
QID: 5832

கீழ்காணும் கூற்றுக்களில் பிழையானது எது? குருதியும் நிணநீரும் ஒத்திருப்பது

Review Topic
QID: 4846

Answer: All Answers

உடல் நலமான முழுவுடலி மனிதனின் குருதியில் அதிக எண்ணிக்கையிற் காணப்படும் வெண்குருதிக்குழிய வகையானது?

Review Topic
QID: 4863

கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயர்ந்த இடங்களில் வாழ்வதற்கான ஒரு இசைவாக்கமாகää மனிதனிலே பின்வருவனவற்றில் எதன் உற்பத்தி அதிகரிக்கப்படக் கூடும்?

Review Topic
QID: 4953
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank