Please Login to view full dashboard.

கழிவகற்றும்-கட்டமைப்பு விருத்தி

Author : Admin

5  
Topic updated on 02/15/2019 05:52am

கழிவகற்றல்

அனுசேபத்தின் போது உருவாக்கப்பட்ட கழிவு விளைவுகளை உடலில் இருந்து அகற்றுதல் கழிவகற்றல் எனப்படும்.

கழிவகற்றலின் அவசியம்

  • கழிவுகள் உடலில் தேக்கமடையுமாயின் கலங்களிற்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்.
  • கழிவுகளின் தேக்கம் உடற் பாய்பொருட்களின் PH இல் மாற்றங்களை ஏற்படுத்தும்.
  •  உடலின் அகச் சூழலின் ஓர் சீர்திடநிலையைப் பேணல்.

கழித்தல் அங்கங்கள்
அனுசேபத்தின் போது உருவாக்கப்பட்ட உபயோகமற்ற கழிவு விளைவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் கட்டமைப்பு கழித்தல் அங்கம் எனப்படும்.

உடல் மேற்பரப்பு

  • அங்கிகளது கலங்கள் சுற்றாடலுடன் நேரடியாகத் தொடர்புறும்
  • ஒப்பீட்டு ரீதியில் எளிய கட்டமைப்பு
  • உடல் மேற்பரப்பிலிருந்து கழிவுப் பதார்த்தங்கள் பரவல் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டு விடும்.

சுருங்கத்தக்க புன்வெற்றிடம்

  • நன்னீரில் வாழும் தனிக்கல அங்கிகள் சிலவற்றில் சுருங்கத்தக்க புன்வெற்றிடம் எனும் புன்னங்கம் காணப்படும்.
  •  இது குழியவுருவில் காணப்படுகின்ற மென்சவ்வினால் சூழப்பட்ட பை போன்ற அமைப்பு

சுவாலைக் கலங்கள்

  • தனிக்கலத்தாலான கழித்தல் கட்டமைப்பு ஆகும்.

கழிநீரகம்

  • பல்கலத்தாலான கழித்தல் கட்டமைப்பு ஆகும்.
  • உடலின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் திறந்த குழாயுருவான கட்டமைப்பு
  • குருதிக் கலன் தொகுதியுடன் தொடர்புடையது.

மல்பீஜியன் சிறுகுழாய்கள்

  • பூச்சிகளில் காணப்படும் கழித்தல் கட்டமைப்பு ஆகும்.
  •  இவை பூச்சிகளில் நடுக்குடலும் பின்குடலும் சந்திக்கும் பகுதியில் சிறுகட்டுக்களாகக் காணப்படும் ஒரு முனை மூடிய சிறுகுழாய்கள் போன்ற அமைப்பாகும்.

பசும் சுரப்பிகள்

  • Crustacea களில் காணப்படும் கழித்தல் கட்டமைப்பு ஆகும்.
  • இரண்டு பெரிய பசும் சுரப்பிகள் தலையின் வயிற்றுப் புறமாகவும் களத்துக்கு முற்புறமாகவும் காணப்படும்.

உப்புச் சுரப்பிகள்

  • இது கடல்வாழ் பறவைகளிலும், Reptilia களிலும் கண்களுக்கு அண்மையில் காணப்படும் சோடியான சுரப்பிகள் ஆகும்.
  • இவை கடல் நீர் வழியாக அதிகளவு உப்பை உள்ளெடுக்கின்றன.
  • இவ் உப்புச் சுரப்பிகளால் குருதியிலிருந்து மேலதிக உப்புகள் கழிக்கப்படுகின்றன.

வியர்வைச் சுரப்பிகள்

  • மனித உட்தோலில் காணப்படும் சுருளடைந்த குழாயுருவான சுரப்பி
  • இது வியர்வைக் கானிற்கு இணைக்கப்பட்டு தோலின் மேற்பரப்பிலுள்ள துவாரத்தினூடு வெளித்திறக்கும்.
கழித்தல் அங்கங்கள் உதாரணம்
உடல் மேற்பரப்பு Porifera கள், Amoeba போன்ற Protozoa கள், Hydra போன்ற Cnidaria கள்
சுருங்கத்தக்க புன்வெற்றிடம் நன்னீரில் வாழும் Amoeba, Paramecium
சுவாலைக் கலங்கள் Platyhelminthes
கழிநீரகம் மண்புழு போன்ற Annelida கள்
மல்பீசியன் சிறுகுழாய் பூச்சிகள், தரைக்குரிய Arthropoda கள்
பசும் சுரப்பிகள் Crustacea கள்
உப்புச் சுரப்பி கடல் பறவைகள், கடலில் வாழும் Reptilia கள்
சிறுநீரகம் முள்ளந்தண்டுள்ள விலங்குகள்
வியர்வைச் சுரப்பி மனிதனின் தோலில் காணப்படுகிறது
  • மனிதனில் காணப்படும் கழித்தல் அங்கங்களும் கழிவுகளும்
  •  சிறுநீரகங்கள் – யூரியா,யூரிக்கமிலம், Creatinine, கனியுப்புகள், பித்த நிறப்பொருட்கள்
  • குடல் – பித்த நிறப்பொருட்கள்
  • நுரையீரல் – CO2
  • தோல் – யூரியா, யூரிக்கமிலம், கனியுப்புகள்
RATE CONTENT 0, 0
QBANK (5 QUESTIONS)

கீழே குறிப்பிட்டனவற்றுள் ஒரு விலங்கினால் வெளி அகற்றப்படும் கழிவுப் பொருளானது முதன்மையாகத் தொடர்புபட்டிருப்பது,

Review Topic
QID: 1364
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கட்டமைப்புகளில் எது கழிவுத்தொழில்
எதுவும் புரிவதில்லை?

Review Topic
QID: 1369
Hide Comments(0)

Leave a Reply

பசுஞ்சுரப்பிகள் பின்வரும் எவற்றின் கழிவங்கங்களாகும்?

Review Topic
QID: 1414
Hide Comments(0)

Leave a Reply

விலங்கு இராச்சியத்தில் காணப்படும் சில கழிவகற்றல் கட்டமைப்புகளும் அவ்வமைப்புகளைக் கொண்டுள்ள விலங்குகளின் உதாரணங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
கழிவகற்றல் கட்டமைப்பு – உதாரணம், சேர்க்கையில் தவறானது எது?

Review Topic
QID: 1432
Hide Comments(0)

Leave a Reply

விலங்குகளின் கழித்தற் கட்டமைப்புகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 1444
Hide Comments(0)

Leave a Reply

கீழே குறிப்பிட்டனவற்றுள் ஒரு விலங்கினால் வெளி அகற்றப்படும் கழிவுப் பொருளானது முதன்மையாகத் தொடர்புபட்டிருப்பது,

Review Topic
QID: 1364

கீழ்க்காணும் கட்டமைப்புகளில் எது கழிவுத்தொழில்
எதுவும் புரிவதில்லை?

Review Topic
QID: 1369

பசுஞ்சுரப்பிகள் பின்வரும் எவற்றின் கழிவங்கங்களாகும்?

Review Topic
QID: 1414

விலங்கு இராச்சியத்தில் காணப்படும் சில கழிவகற்றல் கட்டமைப்புகளும் அவ்வமைப்புகளைக் கொண்டுள்ள விலங்குகளின் உதாரணங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
கழிவகற்றல் கட்டமைப்பு – உதாரணம், சேர்க்கையில் தவறானது எது?

Review Topic
QID: 1432

விலங்குகளின் கழித்தற் கட்டமைப்புகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 1444
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank