Please Login to view full dashboard.

கருக்கட்டல்,உட்பதித்தல்,பிரசவம்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 04:22am

கருக்கட்டல்  
பெண் இனப்பெருக்க சுவட்டில் சுரக்கப்படும் சுரப்புக்களால்ää அங்கு விடப்படும் விந்துக்களின் முதலுருமென்சவ்வில் சில மூலக் கூற்றுக்குரிய மாற்றங்கள் ஏற்படும். இதனால் விந்துக்களின் இயங்கும் ஆற்றல் கூடும். (அதி உயிர்ப்பு Hyper activation). இச்செயன்முறை capacitation எனப்படும்.
அதி உயிர்ப்புக்குள்ளான விந்து ஆரைமுடியினூடாக ஊடுருவிச் சென்று தெளிவுவலயத்தை அடைந்து அங்குள்ள விந்துவாங்கி தானங்களுடன் இணைந்து கொள்ளும். இந்நிலையில் விந்தின் உச்ச மூர்த்தத்திலிருந்து hyaluronidase,protease நொதியங்கள் விடுவிக்கப்படும். இச்செயல் உச்சிமூர்த்த தாக்கம் எனப்படும்.
சூல்கலத்தின் கருவூண்மென்சவ்விலிருந்து ஊற்றப்படும். நொதியங்களும் கருவூண்மென்சவ்வுடன் விந்தின் தலை இணை வதும் வேறு விந்துக்கள் உட்புகுவதை தடைசெய்யும். இது பல்விந்து கருக்கட்டல் தடை எனப்படும்.
சூலின் குழியவுருவினுள் விந்தினது தலை உட்புகும் இதன் போது விந்தின் ஒரு புன்மையத்தியும் உட்செல்லும். சூலின் வெளிப்புறமாக காணலாம். இலைசோசோம் (மேற்பட்டைக்குரிய சிறுமணிகள்) கருவூண் மென்சவ்வின் வெளிப்புறமாக தமது நொதியங்களை வெளிவிடும். இதனால் தெளிவுவலயம் தடிப்புற்று கடினமானதாக மாறி பல்விந்துக் கருக்கட்டலை தடுக்கும். இது மெற்பட்டைக்குரிய தாக்கம் எனப்படும்.
விந்தின் உட்செல்லுகைää துணை முட்டைக்குழியத்தின் ஒடுக்கற்பிரிவு – 2 பூரணப்படுத்தி துணையான முனைவுடல் கருவூண் சுற்றுவெளிக்கு வெளியேற்றலையும் சூல் தோன்றலையும் தூண்டும். துணையான முனைவுடல் உடனடியாக சிதைவடைந்து விடும்.
விந்தினது குரோமற்றின் சுருள்களின் நெருக்கம் குறைவானதனால் விந்தின் கரு பருமனில் அதிகரிக்கும். இந்நிலையிலுள்ள துணைமுட்டைக்குழியத்தினதும் விந்தினதும் கருக்கள் முதிர்வு வழிக்கருக்கள் எனலாம்.
ஒரு மடிய ஆண் முதிர்வு வழிக்கரு ஒரு மடிய பெண் முதிர்வு வழிக்கருவுடன் இணைவதன் மூலம் இரு மடிய கரு கொண்ட நுகம் தோற்றுவிக்கப்படும். இதுவே உண்மையான கருக்கட்டல் ஆகும்.
தோன்றிய புதிய கரு விந்திலிருந்தும் சூலிலிருந்தும் பெற்ற நிறமூர்த்தங்களால் இரண்டு தொகுதி நிறமூர்த்தங்களை கொண்டிருக்கும். இப்புதிய கரு { நுகக்கரு இழையுருப்பிரிவின் மூலம் உடனடியாக பிரிவடையும்.

 

 

 

உட்பதித்தல்

பலோப்பியன் குழாயினூடாக நுகம் கீழ்நோக்கிச் செல்லும்போது அது தொடர்ச்சியான இழையுருப்பிரிவால் பிரி வடைந்து முசுவுரு நிலை தோற்றுவிக்கப்படும். இது ஏறத்தாழ 100 கலங்களை கொண்ட கருத்திணிவாக காணலாம்.
சிறிய முசுவுரு மீள ஒழுங்கமைக்கப்படுவதன் மூலம் அரும்பர்குழி எனும் பாயியினால் நிரப்பப்பட்ட உட்குழியை கொண்ட உட்குழிவான கோளமாக மாறும். இந்நிலை அரும்பர் சிறைப்பை எனலாம். இது போசணை அரும்பர் என அழைக்கப்படும் தனிக்கலப்படையால் படலிடப்பட்டுள்ளது.
போசணை அரும்பர் சடைமுளையை உருவாக்கும். இப் போசணையரும்பர் சடைமுளைகள் கருப்பை அகத்தோலுடன் இணைக்கப்படும். இச்செயன்முறை உட்பதித்தல் எனலாம்.
உட்பதித்தல் 7ஆம் நாளில் ஆரம்பித்து 14 நாளில் முடிவடையும்.
தாயின் குருதிக்குடாவிலிருந்து இச்சடைமுளைகளினூடாக போசணை அகத்துறிஞ்சப்படும். உறிஞ்சும் மேற்பரப்பின் அளவை அதிகரிப்பதற்காக, நுண்சடைமுளைகள் ஒரு மேலணியால் படலிடப்பட்டிருக்கும்.
கருக்கட்டலானது | பலோப்பியன் குழாயின் / கருப்பைக் குழாயின் சேய்மையான பகுதியில் 1ஃ3 பகுதியில் உள்ளிடத் தில் நடைபெறுகின்றது.

சூல்வித்தகம்
  • மூலையூட்டிகளில் மட்டும் காணப்படுவதும்ää இரு அங்கிகளிலிருந்து பெறப்பட்ட கலங்களால் ஆக்கப்பட்ட சூல்வித்தகம் ஆகும்.
  • இது தாயினதும் முதிர் மூலவுருவினதும் கலங்களால் ஆக்கப்பட்டது.
  • மனிதனின் சூல்வித்தகம் உதிருகின்ற அலந்தோ கோரியன் சூல் வித்தகமாகும்.
  • சூல்வித்தகம் தட்டுருவானது இது கருப்பைச் சுவர் அகத்தோல் அலந்தோயிகோரியன் மென்சவ்விலிருந்து உருவாகும்.
  • விரல் போன்ற கோரியன் சடைமுளைகள் கருப்பைச்சுவர் அகத்தோலிலுள்ள தாய்க்குரிய குருதி வெளியினுள் நீட்டப் பட்டிருக்கும்.
  • இச்சடைமுளையினுள் மயிர்த்துளைக் குழாய்களின் தடங்கள் காணப்படும்.
  • தாயின் குருதியும் முதிர்மூலவுருவின் குருதியும் கலப்பதில்லை.
  • மெல்லிய தடுப்பினூடாக பதார்த்தங்கள் பரவல் மூலமும் (மந்தமான அசைவு) உயிர்ப்பான கொண்டுசெல்லல் மூல மும் பரிமாற்றப்படுகின்றன.
  • தாயின் குருதியிலிருந்து முதிர்மூலவுருவின் குருதிக்குள் பின்வரும் பதார்த்தங்கள் கடத்தப்படும்.
    H2o குளுக்கோசு,o2,amino acids, lipids சிலproteins மருந்துப் பொருட்கள்vitamins , minerals பல்வேறு பிற பொருளெதிரிகள்Hormones,அற்ககோல், வைரசுகள் (Rubella Hepatitis B,HIV தொக்சின்கள் (toxins) புகை யிலை புகை.
  • முதிர் மூலவுருவின் குருதியிலிருந்து தாயின் குருதிக்கு பின்வரும் பதார்த்தங்கள் கடத்தப்படும்.
    H2O,co2,Urea(N கழிவுகள்) சில hormones
  • சூல்வித்தகம் ஒரு அகஞ்சுரக்கும் சுரப்பியாக தொழிற்படுகின்றது. இதன் மூலம் பல்வேறு ஓமோன்களை சுரக்கும்.
    1. hcg – ஆரம்பத்தில் இது மட்டும் சு / ம்.
    2. Oestragen
    3. progestrone
    4. சூல்வித்தக lactogen placental lactogen

சூல்வித்தகத்தின் தொழில்கள்

  1. தாய்க்கும் முதிர் மூலவுருவுக்கும் இடையே பதார்த்தப் பரிமாற்றல்
  2. தாயையும் முதிர்வுமூலவுருவையும் இணைத்தல்
  3. சில பதார்த்தங்களுக்கு தடுப்பாக செயற்படல்
  4. அகஞ்சுரக்கும் அங்கமாக தொழிற்பட்டு ஓமோன்களை சுரத்தல்
    உ – ம் :  hcg, Oestragen, progestrone, placental lactogen
  5. தாயின் குருதிச் சுற்றோட்டத்தின் உயர் குருதியழுக்கத்திலிருந்து முதிர்மூலவுருவை பாதுகாத்தல்
  6. Rh காரணி ;வேறு குருதி இனங்கள் என்பவற்றால் குருதி ஒருங்கொட்டலை தடுத்தல்.
  7. சூல்வித்தகம் முழுமையாக விருத்தியடைய 12 வாரங்கள் (3 மாதம்) எடுக்கும்.
  8. Prostoglandin எனும் பதார்த்தத்தை சுரக்கும்.
    (தூண்டல் – oxytocin hormone)

 

முளைய மென்சவ்வு
  • அரும்பர் சிறைப்பை வெளிப்புறமாகவுள்ள கலங்கள் (போசணை அரும்பர் சடைமுளை) கருப்பை அகத்தோலின் இழையங்களுக்குள் நீட்டப்பட்டிருக்கும்.
  • போசணைப்பதார்த்தங்கள் இச் சடைமுளைகளுக்கூடாக அகத்துறிஞ்சப்படும்.
    உட்புறமாகவுள்ள கலத்திணிவின் கலங்கள் பிரிவடையும். முளையம் தொடர்ச்சியாக வளர்ச்சியடையும்.
  • வெளிப்புறமாகவுள்ள கலங்களும் இழையங்களும் அமினியன் கருவூண்பை என்பவற்றை தோற்றுவிக்கும்.
  • பாயியியால் நிரப்பப்பட்ட குழி (அமினியன் குழி) சூழ அமினியன் காணலாம்.
  • அமினியன் பாயியில் முளையம் தொங்கிய நிலையில் காணப்பட்டு பொறிமுறை பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கப்படும். மேலும் உலர்தலிலிருந்தும் பாதுகாக்கப்படும்.
  • கருவூண் பைக்கு தெளிவான தொழில்கள் இல்லை. இது இறுதியில் சூல்வித்தகத்தினுள் புதைந்து காணலாம்.
  • 4ஆவது முளைய மென்சவ்வான அலந்தோயி முதிர் மூலவுருவின் பின்குடலிலிருந்து விருத்தியடையும்.
  • இது முதலில் தோன்றிய கோரியனுடன் மிக நெருக்கமாக வளர்ச்சியடைந்த சூல்வித்தகத்தின் உருவாக்கத்தில் பங் கெடுக்கும்.

 

கொப்புழ் நாண் Image Tip

  • சூல்வித்தகத்தை முதிர்மூலவுருவுடன் இணைக்கும் நாண்.
  • இதனுள் தனியான கொப்புழ்நாண் நாளமும் இரண்டு கொப்புழ்நாண் நாடிகளும் காணலாம்.

 

கர்ப்பமுறுதலும் அதன் கால எல்லையும்

சூல் கருக்கட்டப்படும் கர்ப்பமுறல் நிலை எய்தப்பட்டுவிடும். மனிதனில் கரக்கட்டலிலிருந்து பிரவசம் வரை கர்ப்பம் தரிக்கும் காலமாகும். இக்கால எல்லை ஏறத்தாழ 40 கிழமைகளாகும்.
கர்ப்பகாலத்தில் மும்மாத கால இடைவெளியில் முதிர்மூலவுருவில் நிகழும் பிரதான மாற்றங்கள்
ஒவ்வொரு 3 மாதங்களிலும் நடைபெறும் பிரதான விருத்திகள் ஆவன :

 

3 ஆம் மாத இறுதியில்

  • முதிர்மூலவுருவின் நீளம் ஏறத்தாழ 7.5 cm
  • திணிவு 25 – 30 g
  • கண்கள் ஏறத்தாழ பூரணமாக விருத்தியடைந்திருக்கும்.
  • கண்மடல் விருத்தியடைந்திருக்கும்.
  • கண்மடல் இணைந்திருக்கும்.
  • புறச்செவி விருத்தியடைந்திருக்கும்.
  • அவயவங்கள் பூரண விருத்தியடைந்திருக்கும்.
  • நகங்கள் விருத்தியடைந்திருக்கும்.
  • பிரதான இருதிக்கலன்கள் விருத்தியடைந்திருக்கும்.
  • இதய அதலையின் அளவு ஏனைய உடற்பாகங்களுடன் ஒப்பிடும் போது விகிதத்தில் பெரிதாக இருக்கும்.

 

6 ஆம் மாத இறுதியில்

  • முதிர்மூலவுருவின் நீளம் ஏறத்தாழ 25 – 35 cm
  • திணிவு 550 – 700g
  • கண்மடல்கள் பிரிந்துவிடும்
  • கண்மடலில் மயிர்கள் தோன்றியிருக்கும்.
  • தோல் சுருக்கமடைந்து காணலாம்.
  • தலை பெரியது.
  • முகம் மணித இயல்புகளை கொண்டிருக்கும்.
  • மயிர்கள் காணலாம்.
  • நுண்ணிய மயிர்கள் உடலில் சூழ்நிதிருக்கும்.
  • பல என்புகள் என்பாக்கப்பட்டிருக்கும்.
  • தலை உடலின் ஏனைய பகுதிகளுக்கு குறைந்தளவில் விகிதாசாரமற்ற நிலையில் காணலாம்.

 

9 ஆம் மாத இறுதியில்

  • முதிர்மூலவுருவின் நீளம் ஏறத்தாழ 50 cm
  • திணிவு ஏறத்தாழ 3000 g
  • தலையும் உடலும் சரியான விகிதாசாரத்தில் காணலாம்.
  • உடலைச் சூழ்ந்திருந்த நுண்ணிய மயிர்கள் உதிர்ந்துவிடும்.
  • நகங்கள் விரலின் நுனி வரை நீண்டிருக்கும்.
  • ஆண் குழந்தைகளில் விதைகள் விதைப்பையினுள் இறங்கி காணலாம்.
  • உச்சிக்குழி தவிர்ந்த தலையின் என்புகள் கடினமாக்கப்பட்டிருக்கும்.
  • எல்லா அங்கத் தொகுதிகளும் நன்கு விருத்தியடைந்திருக்கும்.
  • 40 கிழமைகளின் பின் பிரசவம் நடைபெறும்.

 

பிரசவம்

முதிர்மூலவுரு கருப்பை சார்பாக குறித்தளவை அடையும் போது பிறப்பு (பிரசவம்) நடைபெறும்.
கர்ப்பகாலத்தின் 16வது கிழமை oestragen,progestrone என்பன சூல்வித்தகத்தால் உற்பத்தியாக்கப்படும். oestrogen கருப்பைச் சுவர் தசையிலுள்ள  oxytocin வாங்கிகளின் உருவாக்கத்தை தூண்டும்.
பிறப்பு நடைபெறுவதற்கு சற்று முன்னர் Pசழபநளவநசழn மட்டத்தில் தெளிவான வீழ்ச்சி ஏற்படும்.
oxytocin முதிர் மூலவுருவினதும் தாயினதும் பரிவகக்கீழினால் சுரக்கப்படும். சுரக்கப்பட்ட oxytocin,oxytocin வாங்கிகளுடன் இணைந்து கருப்பைச் சுவர் தசையில் வலுவான தசைச்சுருக்கத்தை தூண்டும்.
oxytocin சூல்வித்தகத்தை தூண்டி Prostoglandin ஐச் சுரக்கச் செய்யும். Prostoglandin கருப்பையின் தசையில் சுருக் கத்தை ஏற்படுத்தும்.
இத்தசைச் சுருக்கத்தால் சிசு யோனிமடலை நோக்கி தள்ளப்படும். சிசுவின் தலையும் தசைச்சுருக்கமும் கருப்பைச் சுவர், கருப்பைக் கழுத்து என்பவற்றிலுள்ள இழுவை வாங்கிகளை தூண்டும்.

இத்தூண்டலால் oxytocin, Prostoglandin என்பன மேலும் சு / ம். பிறப்பு நடைபெறும் வரை மேன்மேலும் கருப்பைத் தசையில் சுருக்கத்தை ஏற்படுத்தும். இது நேர்ப்பின்னூட்டல் பொறிமுறை எனலாம்.

 

முலைச்சுரப்பிகள்

இரண்டு முலைச்சுரப்பிகள் (முலைகள்) உண்டு. ஒவ்வொரு முலைச்சுருப்பிகளும் பல பால் சுரக்கும் சுரப்பிகளை கொண்டிருக்கும். இச்சுரப்பிகள் பால் சுரக்கும் கலங்களை கொண்டுள்ளது. பால்சுரக்கும் கலங்களை கொண்ட ஏறத்தாழ 15 – 20 பால் உற்பத்தி தொகுதிகளுண்டு.
ஒவ்வொரு பால் உற்பத்தி தொகுதியும் பாலை சேமிக்கக் கூடிய ஏராளமான சிற்றறை / சிறுசோணைகளைக் கொண்டுள்ளன. சிற்றறைகளும் பாற்கான்களும் மழமழப்புத் தசையாலும் கொழுப்புக் கலங்களாலும் சூழப்பட்டுள்ளன. சிற்றறைகள் ழுசு சிறுசோணைகள் கான்களினுள் திறக்கும்.
கான்கள் குடாக்களினுள் தமது சுரப்பை விடுவிக்கும். குடாக்கள் பெரிய கான்களினூடாக தனித்தனியாக முலைக்காம்பில் திறக்கும்.
முலைக்காம்பு முலைக்காம்பை சூழவுள்ள சிற்றிடம் என்பவற்றில் தொட்டுணர வாங்கிகளுண்டு.

பால் சுரக்கும் சுரப்பிகள்
or
பால் உற்பத்தி தொகுதிகள்

சிற்றறை / சிறுசோணை

கான்

குடா

பெரிய கான்

முலைக்காம்பு

RATE CONTENT 3, 1
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(1)
Mariyathas Conistan
Mariyathas Conistan commented at 08:01 am on 12/12/2017
மிக நன்று
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank