மனித கண்ணின் விழித்துரையில் இரு வகையான ஒளி வாங்கிகளுள்ளன.
1. கோல் கலம்
2. கூம்புக் கலம்
கோல் கலம் | கூம்புக் கலம் |
---|---|
கம்ப வடிவம் / கோளுரு வடிவம் | கூம்பு வடிவம் |
அதிக எண்ணிக்கையில் காணப்படும் (120 million) | குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் (6 million) |
அவல், குருட்டிடத்தில் காணப்படுவதில்லை | அவலில் செறிவாக காணப்படும். விழித்திரையின் ஏனைய பகுதிகளில் சீராக பரவி காணப்படும். |
Rodopsin (பார்வை ஊதா) நிறப்பொருள் உடையது | Iodopsin / Photopsin நிறப்பொருள் உடையது |
குறைந்த ஒளிச் செறிவிலும் தாக்க அழுத்தத்தை உருவாக்க கூடியது | குறைந்த ஒளிச் செறிவில் தாக்க அழுத்தத்தை உருவாக்காது |
இரவுப் பார்வைக்கு பொறுப்பானது | பகல் பார்வைக்கு பொறுப்பானது |
கறுப்பு, வெள்ளை பார்வையை ஏற்படுத்தும் | நிறப்பார்வையை ஏற்படுத்தும் (சிவப்பு, பச்சை, நீல நிறங்களை வாங்கக்கூடிய 3 வகையான கூம்புக் கலங்கள் காணப்படுகின்றன) |
♦ கோல் கலத்தின் நிறப்பொருளான Rodopsin இன் உற்பத்திக்கு Vitamin – A அவசியம். எனவே Vitamin – A குறைப்பட்டால் கோல் கலங்களின் தொழிற்பாடு குறைவடையும். குறைந்த ஒளிச்செறிவில் பார்வை ஏற்படுத்தப்படாது.
கண்ணின் உடற்றொழிலியல் தொழிற்பாட்டில் இரு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. கண்மணியினூடாக உட்செல்லும் ஒளியினளவு கட்டுப்படுத்தப்படல்
2. பொருளின் தூரத்திற்கேற்ப வில்லையின் பருமன் மாற்றியமைக்கப்படல் – கண்ணின் தன்னமைவு.
கண்மணியினூடாக உட்செல்லும் ஒளியினளவு கட்டுப்படுத்தப்படல்
கண்ணின் தன்னமைவு
குறும்பார்வை
நீள்பார்வை
மனிதனின் கண்ணின் கீழ்க்காணும் கட்டமைப்புகளில் எது தனது முறிவுவலுவை மாற்றிக்கொள்ளும் ஆற்றலுடையதாகும்?
Review Topicமுள்ளந்தண்டுப் பிராணியின் கண்கள் நிறப்புலனைக்
கொண்டிருப்பதற்கு அவைக்கு வேண்டியது
மனிதனின் கண்ணின் கீழ்க்காணும் கட்டமைப்புகளில் எது தனது முறிவுவலுவை மாற்றிக்கொள்ளும் ஆற்றலுடையதாகும்?
Review Topicமுள்ளந்தண்டுப் பிராணியின் கண்கள் நிறப்புலனைக்
கொண்டிருப்பதற்கு அவைக்கு வேண்டியது